வெள்ளி, ஏப்ரல் 29, 2011

காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு மட்டும்

இப்ப வலைப்பூ உலகத்திலே காப்பி பேஸ்டால ஒரே குடுமி பிடி சண்டையா இருக்கு. காப்பி பேஸ்ட் பண்றது அவ்வளவு ஈசி-யா பண்ணா முடியாது. வெப்சைட் யுனிகோட் ஃபார்மட்-ல இருந்தா மட்டும் இது ஈசி.  

இப்ப எல்லாம் நிறைய வெப்சைட்-ல TSCII ஃபார்மட்ல இருக்க பாண்ட் யூஸ் பண்றாங்க இல்ல பாமினி, வானவில் மாதிரி நிறைய பாண்ட யூஸ் பண்றாங்க, இதுல என்ன பிரச்சனைன்னா இந்த பாண்ட் உங்க சிஸ்டம்-ல இல்லாட்டி வெப்சைட் சரியா (எதுவுமே) தெரியாது. அதை காப்பி பேஸ்ட் பண்றதும் கொஞ்சம் சிரமம்.

அந்த மாதிரி நேரத்தில உங்களுக்கு உபயோகப்படுறது தான் NHM Convereter என்கிற இந்த மென்பொருள். 
இதுல உங்களுக்கு வேண்டிய text -ஐ காப்பி பண்ணா அதுவே என்ன ஃபார்மட்ல இருக்குன்னு கண்டுபிடுச்சுரும் அப்புறம் நீங்க யுனிகோட் பார்மட்டுக்கு கன்வெர்ட் பண்ணி உங்க பிளாக்ல போட்டுக்காலம்.

லிங்க் இங்கே http://software.nhm.in/

இவங்க ரைட்டர் சாஃப்ட்வேர் கூட குடுக்குறாங்க, அதை பயன்படுத்தி தமிழ்ல நீங்க ஈசி-யா டைப் பண்ணிக்கலாம். எந்த ஃபார்மட் உங்களுக்கு பிடிக்குதோ அதையும் செலக்ட் பண்ணிக்கலாம்.


பேராசை..

ஒரு ஊரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.

ஒரு நாள்—

வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.

வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக் கட்டி அதைக் கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் எடுக்கத் தொடங்கினான்.

கிணற்றுக்குள் இருந்து "யார் இங்கே தண்ணீர் எடுப்பது?' என்ற பயங்கரமான குரல் கேட்டது.

அஞ்சி நடுங்கிய அவன் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நடுங்கும் குரலில், "ஐயா! நான் ஒரு ஏழை. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார்?'' என்று கேட்டான்.

"விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யார் கண்ணுக்கும் நான் தெரியமாட்டேன்,'' என்றது அந்தக் குரல்.

"மந்திரக்கிணறா! விரும்பியதை எல்லாம் தருமா?'' என்று வியப்புடன் கேட்டான் அவன்.

"உன்னிடம் பொற்காசுகள் உள்ளதா? ஒரு பொற்காசை இந்தக் கிணற்றுக்குள் போடு உன் விருப்பம் எதுவானாலும் கேள். உடனே அது நிறைவேறும். நன்றாக நினைவு வைத்துக் கொள். இரண்டு முறைதான் இந்தக் கிணறு உன் எண்ணத்தை நிறைவேற்றும்,'' என்றது அந்தக் குரல்.

"என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற எண்ணத்தில் ஒரு பொற்காசை கிணற்றுக்குள் போட்டான். "விலை உயர்ந்த நகைகளாலும் பொற்காசுகளாலும் என் வண்டி நிரம்ப வேண்டும்...'' என்றான் அவன்.

ஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும் நகைகளாலும் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து வியப்படைந்தான் அவன்.

"ஆ! ஏராளமான செல்வம் கிடைத்துவிட்டது. இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வன் நான் தான்,'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே வண்டியில் அமர்ந்தான்.

"ஐயோ! காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே! வழியில் திருடர்கள் இருப்பார்களே... அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசுகளையும் கைப்பற்றிக் கொள்வார்களே! என்ன செய்வது?' என்று சிந்தித்தான்.

நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கிணற்றருகே வந்த அவன் தன்னிடம் இருந்த இரண்டாவது பொற்காசையும் அதற்குள் போட்டான்.

"உனக்கு என்ன வேண்டும்?'' என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

"வண்டியில் இருக்கும் நகைகளும் பொற்காசுகளும் என் கண்களுக்கு மட்டும் தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக் கூடாது,'' என்று கேட்டான்.

"அப்படியே ஆகட்டும்,'' என்று குரல் வந்தது.

வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான். எதிரில் திருடர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும் பொற்காசுகளும் தெரியவில்லை. தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டான் பேராசைக்காரன். மகிழ்ச்சியுடன் தன் வீட்டை அடைந்தான்.

வீட்டுக்குள் ஓடினான். "இனி நாமோ நம் பரம்பரையோ வறுமையில் வாட வேண்டாம். அரசனைப் போலச் செல்வச் செழிப்புடன் வாழலாம். வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்!'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

வண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி திகைத்தாள். "என்னங்க! வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். எந்தப் பொருளும் இல்லையே,'' என்றாள்.

அவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான பொற்காசுகளும் நகைகளும் இருப்பது தெரிந்தது. மனைவியைப் பார்த்து, "வண்டியை நன்றாகப் பார்,'' என்றான்.

நன்றாகப் பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன் என்றாள்.

அப்பொழுதுதான் அவனுக்குத் தான் கேட்ட இரண்டாம் வரம் எவ்வளவு தவறானது என்று புரிந்தது. தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். கிடைத்த விலை மதிப்பற்ற பொருள்களைப் பயன்படுத்த முடியாத நிலையை எண்ணி வருத்தம் அடைந்த அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.

அந்த இடத்தில் மந்திரக் கிணறும் இல்லை; ஒன்றும் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப் போல் வண்டியை எட்டி உதைத்தான். அதிலிருந்து நகைகளும், பொருட்களும் கீழே கொட்டிச் சிதறின.

என்ன பிரயோஜனம். அவை இவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்தன. தன்னுடைய பேராசை குணத்திற்கு கிடைத்த பரிசு என நினைத்து மிகவும் வருந்தினான் பார்த்தசாரதி.
 

வியாழன், ஏப்ரல் 28, 2011

நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.
நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.
அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.
ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.
முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!
நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.
அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.
மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

எப்பிடி இருந்த கட்சி இப்பிடி ஆயிடுச்சே ...........


முஸ்கி: இது சற்று நீளமான பதிவு, சற்று பொறுமையாய் படிக்கவும்.  கொஞ்சம் கமெண்ட்-ம் போட்டா நல்லது  


1973-இல் தி.மு.கழகத்தின் ஆளுகையிலிருந்த சென்னை மாநகராட்சி மீது ஊழல் புகார் வந்தபோது தனது கட்சி என்று கருதாமல் மாநகராட்சியை கலைத்து கட்சியைவிட களங்கமற்ற ஆட்சிக்கே முதலிடம் அளித்தார்.

இதை இப்போது இருக்கும் சூழலில் இதை திருப்பி செய்ய கலைஞர் துணிவாரா? 

இன்னும் சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரப்போகும் சூழ்நிலையில், அவர் கட்சி உறுப்பினர்களும் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சிறை செல்லும் நிலையில் தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெற்றாலும், ஆட்சி பொறுப்புக்கு வரமாட்டேன் என்று அறிவிக்க தயாரா?
தாங்கள் ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபித்து விட்டே ஆட்சி பொறுப்புக்கு வருவேன் அதுவரை எங்கள் கூட்டணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கட்சி ஆட்சி நடத்தும்  என்று சொல்வாரா?

கொஞ்சம் தமிழக வரலாற்றை திருப்பிப்பார்த்தால் தமிழக மக்களின் வாழ்க்கைக்கு கட்சி செய்த தியாகங்களும்,  லட்சோப லட்ச தொண்டர்களின் உழைப்பையும் உணர முடியும்.

தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், சர்.பி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 1916-இல் தொடங்கிய தென் இந்திய நல உரிமைச்சங்கம், திராவிட இயக்கத்தின் கருவாகும்.

இச்சங்கம் `ஜஸ்டிஸ் (நீதி)’ என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்தியதால், நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. பிராமணர் அல்லாதாரின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாக்க நீதிக்கட்சி `திராவிடா, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு’ என்ற கொள்கையுடன் போராடியது.1920, 1923, 1929 ஆண்டுகளில் பதவி வகித்திருந்த நீதிக்கட்சியின் ஆட்சியில் கீழ்க்கண்ட வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்பட்டன.

 • நிர்வாகத்திலும், சமுதாய நிலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
 • இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
 • பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு கொள்கை அமுலாக்கப்பட்டது.
 • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.  (இதனையே பின்னால் காமராஜர், எம்.ஜி.ஆர். அரசுகள் புதுப்பித்தன)
 • இந்து கோயில்களில் தேவதாசி முறையை ஒழித்தது. 

இச்சீர்திருத்தங்கள் பிராமணர் அல்லாதவர் மத்தியில் சுயமரியாதையும் ஒற்றுமை உணர்வையும், பகுத்தறிவையும் வளர்த்தன.  காங்கிரஸ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்திலும் அவர்களின் தீவிர இந்து சனாதன கோட்பாடுகளிலும் வெறுப்புற்ற தந்தை பெரியார் என பின்னாளில் போற்றப்பட்ட ஈ.வெ.இராமசாமி அவர்கள் 1925-இல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

இவ்வியக்கம் 1941-இல் திராவிடர் கழகம் என்ற விடுதலை இயக்கமாக மாற்றப்பட்டது. அறிஞர் அண்ணா போன்ற முன்னணி தலைவர்கள் இயக்கத்தின் குறிக்கோள்களை, கொள்கைகளை அழகு தமிழில் நாடெங்கும் பரப்பினர். தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணா மற்றும் முன்னணி தலைவர்களுக்குமிடையே சில கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதால், அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17-இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினர். அறிஞர் அண்ணா, அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் கலைஞர் என போற்றப்படும் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் கொள்கை பரப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.   

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழர் எனப் போற்றப்படும். அறிஞர் அண்ணா அவர்கள் மேட்டுக்குடியில் பிறக்கவில்லை. ஆனால் கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் நாவன்மை பெற்றிருந்தார். 

``சங்கீதம் கேட்பது போல் இருக்கிறதே’’
``என்ன வளம்! என்ன அழகு!’’
 ``மடை திறந்தாற் போல பேச்சு’’
``அது குற்றாலத்து அருவி கொஞ்சு தமிழ்ச்சிந்து’’

இப்படியெல்லாம் அவர் பேச்சுக்குப் படித்தவர் மத்தியிலும் பாமரர் மத்தியிலும் பாராட்டுரைகள் குவிந்தன. மடை திறந்தாற் போல் தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளால் பண்டைய தமிழ் நாகரிகத்தின் சிறப்பினை, தமிழ் மொழியின் தொன்மையை நினைவுப்படுத்தினார்.

இலட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். சினிமா, நாடகம், பத்திரிக்கை, மேடை ஆகிய ஊடகங்களின் வழியாகச் சமுதாயத்தை தட்டி எழுப்பினார். அறிஞர் அண்ணாவின் `திராவிட நாடு’, டாக்டர் கலைஞரின் `முரசொலி’ ஆகிய ஏடுகள் மக்களிடையிலும், கட்சி தொண்டர்களிடையிலும் புதிய விழிப்புணர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி தி.மு.கழகத்தின் வாளாக கேடயமாக வலம் வந்தன.

இத்தனைக்கும் மேலாக, கழக உறுப்பினர்களிடையே `அண்ணன் - தம்பி’ என்ற பாசப்பிணைப்பை ஏற்படுத்தின. ஆலமரத்தின் சிறு விதைப்போல முளைத்தெழுந்த தி.மு.க. மாபெரும் வளர்ச்சியுற்று, மதக்கோட்டைகளை தகர்த்தது, இலட்சக்கணக்கான ஏழைகளின் நிழலாக பாதுகாப்பு அரணாக, அமைந்தது. பெரியாரை விட்டுப் பிரிந்தாலும், அவரின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் அடைய தி.மு.கழகம் அரசியலமைப்பு விதிகளுக்குட்பட்டு போராடி வந்தது.

அறிஞர் அண்ணா குறிப்பிட்டது போல், தி.மு.கழகமும், திராவிட கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக சமுதாய சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடின.  கழக இலட்சியங்களை நியாயமான, சட்டத்திற்குட்பட்ட முறையில் அடைய, போராட வேண்டும் என்ற நோக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்கள் தனது தம்பியரை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரம் மூலம் கட்டுக்கோப்பான வழியில் நடத்திச் சென்றார். இதனால் தான், தி.மு.க. ஒரு மக்கள் இயக்கமாக மாறி பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்கு வளர்ச்சிப் பெற்றது. உலகத்தில் எந்த அரசியல் இயக்கமும் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றதில்லை.   

மக்களின் நலனை பேணும் பாதுகாவலனாக, அவர் இடர் துடைக்க அறவழியில் போராட தி.மு.க. என்றுமே தயங்கியதில்லை கழகம் துவங்கிய ஐந்தாம் ஆண்டிலேயே 1953-இல் மும்முனைப் போராட்டம் நடத்தியது.

இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு முனையிலும், தமிழர்களை `முட்டாள்கள்’ என்று அவதூறு செய்த பிரதமர் பண்டித நேரு அவர்களைக் கண்டித்து இரண்டாவது முனையிலும், டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் பெயரை மாற்றிக் கல்லக்குடி எனத் தமிழ்ப் பெயரிட வேண்டும் என்று மூன்றாவது முனையிலும் தி.மு.க. போர்க்களங்களை அமைத்தது.

அந்த அறப்போரில், கல்லக்குடி களத்திற்கு, கலைஞர் படைத்தலைவர். ஜூலை 15 ஒரே நாள் போரில், ஆறு உயிர் களப்பலி, அநேகர் சித்திரவதை, 5000 பேர் சிறைக்காவல்!

சட்ட மன்றத்திற்குள் சென்றால் மட்டுமே ஜனநாயக வழியில் கழக இலட்சியங்களை நிறைவேற்ற முடியும் எனக்கருதி அறிஞர் அண்ணா, 1956-இல் திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில் அதற்கான ஒப்புதலை கட்சித் தொண்டர்களிடம் பெற்றார். 1957 பொது தேர்தலில் தி.மு.க. 15 சட்டமன்ற இடங்களிலும், 2 பாராளுமன்ற இடங்களிலும் வெற்றிப் பெற்றது. அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகிய முன்னணி தலைவர்கள் வெற்றிவாகை சூடினர். அசைக்க முடியாது என ஆணவ முரசம் கொட்டிய காங்கிரஸ் கோட்டையில் கீறல்கள் உருவாயின. இவ்வெற்றியால் தி.மு.க.விற்கு உதயசூரியன் தேர்தல் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

`உதித்து விட்டான்’ செங்கதிரோன் தென்திசையில்
கொதித்தெழுவோம் கொத்தடிமை தீர்வதற்கே'!

என தி.மு.க. வீரர்கள் பரணி பாடினர் கழகத்தின் செல்வாக்கு கோபுரம் போல உயர்ந்தெழுந்தது. 1959 சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றிப்பெற்றது. 100 பேர் கொண்ட மாநகராட்சி மன்றத்தில் தி.மு.க. 45 இடங்களை பெற்றது. தி.மு.க. உறுப்பினர் திரு. அ.பொ. அரசு. கழகத்தின் முதல் மேயராகப் பதவி ஏற்றார். தமிழகத்து அரசு கட்டிலிலும் தி.மு.கழகமே அமரப்போகின்றது என்பதற்கு இது ஓர் அறிகுறியாக அமைந்தது. 

கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிக்கவும், அத்தொழிலாளர்களின் துயர் துடைக்கவும் அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோருடன் மற்ற முன்னணி தலைவர்கள் 1953-இல் கைத்தறித் துணிகளை தோளிலே சுமந்து வீதிகளில் விற்று நிதி திரட்டினர். கழகத்தினர் அனைவரும் கைத்தறி ஆடையே அணிய முடிவு எடுக்கப்பட்டது.

தஞ்சையில் 1954-இல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் கண்ணீர் துடைக்க கழகம் நிதியும், உடையும் வழங்கியது.
1962-இல் சீனா ஆக்கிரமிப்பின் போது காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க. முழு ஆதரவு அளித்தது. மாநாடுகள் நடத்தி தேசிய பாதுகாப்பிற்கு பெரும் நிதி திரட்டி அளித்த பெருமை தி.மு.க.விற்கு மட்டுமே கிடைத்தது. இத்தனைக்கும் மேலாக கட்சியின் நலனைவிட நாட்டு நலனை முன்நிறுத்தி, அறிஞர் அண்ணா திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டார். தி.மு.க.வின் தேசியப் பார்வையில் இது ஒரு திருப்புமுனையாகும்.

1971-இல் இந்திய - பாகிஸ்தான் போரில், அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ரூ.6 கோடி அளித்தார். இந்தியாவிலேயே இந்த அளவு நிதி அளித்த ஒரே மாநிலம் தமிழகமாகும்.

இந்திய பாதுகாப்பில் மற்ற அனைத்திந்திய கட்சிகளை விட தி.மு.க.விற்கு அதிக ஆர்வமும், அக்கறையும் உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் 1999 இந்திய - பாகிஸ்தான் எல்லை, கார்கில் போருக்கு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ரூ.50.43 கோடி நிதி திரட்டி
தமிழகத்தின் தனிப்பெருமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு

என்ற உணர்வில் ஊறிப்போன தமிழர்களின் இந்தி எதிர்ப்பு, நீண்ட வரலாறு கொண்டது. இன்றைய இந்தியின் தாய் மொழியான வடமொழி (சமஸ்கிருதம்) தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தவும், அடிமைப்படுத்தவும் பலமுனைகளில் முயன்று தோல்வியையே தழுவியுள்ளது. `ஆரியம்’ நன்று தமிழ் தீது’ என உரைத்து நக்கீரனின் சாபத்திற்கு ஆளானவன் பற்றிய சங்க காலப் பாடல் தமிழ் இசையை அடிமைப்படுத்த முனைந்த `திருவிளையாடல் புராணம்’, ஹேமநாத பாகவதரின் கதை ஆகியவை இதனையே உணர்த்துவன.

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆசியுடன் இந்தி ஆதிக்கம் தமிழகத்தில் நுழைய முற்பட்டது. 1938-இல் சென்னை இராஜதானி என அன்று அழைக்கப்பட்ட தமிழகத்திலுள்ள பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக புகுத்தப்பட்டது. இதனை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும், மதத் தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி அணிவகுத்து நின்றனர். அறிஞர் அண்ணா, கி.ஆ.பெ. விசுவநாதம்

``வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!
வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்!’’
என சங்க நாதம் புரிந்தார்.

இந்திய அரசியல் சாசன விதிகள் 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் அமுலுக்கு வந்த போதிலும், இந்திக்கு உள்ள எதிர்ப்பை உணர்ந்து, இந்தி பேசாத மக்களின் பதற்றத்தை குறைக்கும் வகையில் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், விதி 343-இன் படி இந்தி ஆட்சி மொழி ஆகும் தேதியை 15 ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தனர். எனினும் தி.மு.கழகம் இந்தி என்றுமே ஆட்சி மொழி ஆகாதபடி விழிப்புடன் செயலாற்றி போராட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து மக்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருந்தது.

இதன் பயனாக 1959 ஆகஸ்ட் 7-இல் பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு, நாடாளுமன்றத்தில் இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியைத் தந்தார். 1959-இல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்திற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.கழகம் ஏற்பாடு செய்தபோதும், 1962-இல் இந்திய சீனப் போரின் போதும் ஜவகர்லால் நேரு அவர்கள் இவ்வாக்குறுதியை உறுதிப்படுத்தினார். பிரதம மந்திரியின் உத்தரவாதம் என்ற தலைப்பில், தமிழக செய்தித்தாள்கள் அனைத்திலும் மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டது. இந்தி வெறியர்களுக்கு எதிராக, நாட்டின் பிரதமர் அவர்களிடமிருந்து இவ்வாக்குறுதியை தி.மு.கழகம் பெற்றது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும்.

தமிழன் தொடுத்த இப்போரில் தாளமுத்து, நடராசன் என்ற இரு இளைஞர்கள் இந்தியை எதிர்த்து சிறை புகுந்து சிறைக்கோட்டத்தில் பிணமாயினர். தமிழன், மொழிப் போராட்டத்தின் கொடியை அந்த வீரர்களின் குறுதியிலே தோய்த்து விண்முட்ட பறக்க விட்டான்.
இந்திய சுதந்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி மறைமுகமாகவும், புறவாசல் வழியாகவும், இந்தியைப் புகுத்த முனைந்தது. தேசிய மொழி, பொதுமொழி, இணைப்பு மொழி, நிர்வாக மொழி, ஆட்சி மொழி என்ற பல்வேறு பெயர்களில் இந்தியை திணிக்க முனைந்தது. ஆனால் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.கழகம் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி இந்தியை எதிர்த்தது. தமிழைக் காத்தது.

அறிஞர் அண்ணா அவர்கள் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த போதும் கழகத்தின் நீண்ட நாள் இலட்சியங்களை நிறைவேற்றும் வகையில், சட்ட திட்டங்களை வகுத்தார்.
அவரது சாதனைகளில் சரித்திரம் படைத்தவை:

 • சென்னை மாநிலம் என அழைக்கப்பட்ட தமிழகத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றி தமிழர்களின் தன்மானத்தை உயர்த்தினார்.
 • அவர் இதயத்தில் கொண்ட பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ஏற்ப சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளித்தார்.
 • மும்மொழித் திட்டத்தை அகற்றி, தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்தி மொழியை அறவே நீக்கினார்.
 • சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு எரியாத வீடுகள் (கல்நார் கூரையுடன்) அளிக்கப்பட்டன.
 • பேருந்துகள் நாட்டுடமை ஆகிய திட்டங்கள் தொடங்கப்பெற்றது.
 • 1968 ஜனவரி முதல் வாரத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சங்ககாலம் மீண்டும் வந்ததோ! என அனைவரும் பூரித்திடும் வகையில் எழில் குலுங்கிட, தமிழன்னையின் இதயம் குளிர்ந்திட, இனிது நடத்தினார்.

ஆனால் காலதேவன் கொடுமையால் அண்ணாவின் தலைமை அதிக நாள் நீடிக்கவில்லை. 1969 பிப்ரவரி 3-இல் அறிஞர் அண்ணா மறைந்தார். தமிழகமே இருளில் மூழ்கியது.

அறிஞர் அண்ணாவின் இலட்சியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றவும், தி.மு.கழகத்தைக் கட்டி காத்திடவும், தமிழகத்தின் நலனைப் பாதுகாக்கவும், கழகத்தின் தலைமைப் பொறுப்பு டாக்டர் கலைஞரின் தோளில் சுமத்தப்பட்டது. ``டாக்டர் கலைஞர் தமிழக முதல்வராக’’ 1969-இல் பிப்ரவரி 10-இல் பதவி ஏற்றார்.

கலைஞரின் தலைமையில், தமிழ்நாடு பல துறைகளில் புதிய சாதனைகள் படைத்துள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தி.மு.கழக ஆட்சியில் - அவர் தலைமையில் நலிவுற்ற - பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் இந்தியாவிலேயே முதன் முதலாக நிறைவேற்றப்பட்டன.
அவைகளுள் சில:

 • குடிசை மாற்றுவாரியம்.(பின்னால் மற்ற மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது)
 • பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள்.
 • கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள்.
 • கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் - அவர்களுக்கு இலவச கண்ணாடிகள்.
 • பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி - ஆடைகள்.
 • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.
 • ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள்.
 • போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன் முதலாக போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.
 • தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதி.
 • விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை அனுபோக தாரர்கள் சட்டம்.
 • பேருந்துகள் நாட்டுடமை தமிழகத்தில் முழுமைப் பெற்றது.
 • அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம்.(பணியில் இறந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் வழங்கப்படுகிறது)
 • சிகப்பு நாடா முறை இரகசியக் குறிப்புமுறை ஒழிப்பு.
 • கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கியது.
 • ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம்.
 • பெண்களுக்கு சொத்துரிமை.
 • மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்.
 • ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்.
 • அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு.
 • கலப்பு குடும்பத்து பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.
 • சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.
 • புதிய பல்கலைக் கழகங்கள் - நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்.
 • மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.
 • மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை.
 • ஆதி திராவிடர்களுக்கு இலவச வீடுகள்.
 • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு.
 • மாநில திட்டக்குழு அமைத்தல்.

கலைஞரின் முற்போக்குத் திட்டங்களைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் வி.வி. கிரி அவர்கள் தமிழ்நாடு, இந்தியாவிற்கு வழி காட்டுகிறது எனப் புகழாரம் சூட்டினார். லோகநாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களும் இத்திட்டங்களைப் பாராட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி தமிழ் இனத்தின் பழைய சிறப்பை அவர்கள் நினைவு கூறும் வகையிலும், தமிழ் மொழிக்காக பாடுபட்ட பெரியோர்களின் சேவைகள் தமிழர் மனதில் என்றும் நிலை நிறுத்தும் வகையில், டாக்டர் கலைஞர் அவர்கள் பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம், கட்டபொம்மன் கோட்டை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை உருவாக்கினார்.

தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்போதும் தயங்கியதில்லை. அவ்வுரிமைகளுக்கு குந்தகம் ஏற்பட்ட போதெல்லாம், தி.மு.கழகம் சிங்கத்தைப் போல் சிலிர்த்தெழுந்திடும். 1975-இல் திருமதி இந்திராகாந்தி ஜனநாயகத்தை நசுக்கி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தபோது தி.மு.கழகம் தோழமைக் கட்சி என்று தயக்கம் காட்டியதில்லை.

நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடியது. மிரட்டியும், ஆசை காட்டியும் தி.மு.கழகத்தை பணியவைக்க மத்திய அரசு முயற்சி செய்தது. ஜனநாயகத்தின் மீதும், அடிப்படை உரிமைகள் மீதும் இலட்சிய பிடிப்பு கொண்ட கலைஞர் எந்த சக்திக்கும் அடிபணிந்ததில்லை. இதனால் 1976 ஜனவரி 31-இல் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழகத்தின் இருண்ட நாட்கள் தொடங்கின. 

திருவாளர்கள் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன், மு.க. ஸ்டாலின் ஆகிய முன்னணி தலைவர்களுடன் 500-க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் `மிசா’ சட்டத்தின்கீழ் விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர். தி.மு.கழகம் அந்த சோதனையையும். `மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ என சங்கநாதம் செய்தது. `மிசா கைதி’ என்பதை ஒரு பெருமையாகவே தி.மு.கழகம் இன்முகத்துடன் ஏற்றது. 

1980-இல் திருமதி இந்திரா காந்தி தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு இனி எப்போதும் நெருக்கடி நிலையை அமுல் செய்ய மாட்டேன் என நாட்டிற்கு உறுதி அளித்தபோது தி.மு.கழகம் அறிஞர் அண்ணா சொல்வதுபோல் ``மறப்போம் - மன்னிப்போம்’’ என்று பகைமையை மறந்து நேசக்கரம் நீட்டி காங்கிரசுடன் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டது.    

இந்தி எதிர்ப்பு வரலாறு, 1964-க்குப்பின் 1984-இல் மீண்டும் திரும்பியது ஆனால் இம்முறை போராட்டம் எதிரிகளுக்கு எதிராக அல்ல. துரோகிகளுக்கு எதிராக எனலாம். புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் இராஜீவ் காந்தி அரசு ``நவோதயா’’ பள்ளிகள் திறக்கவும் அங்கு இந்தி மட்டுமே போதனை மொழியாக அமையவும் திட்டம் வகுத்து, தாராளமான நிதி ஒதுக்கீடு செய்தது. நிதியுதவி மூலம் இந்தியை நாடெங்கும் பரப்ப முனைந்த ஆட்சியாளர் சூழ்ச்சியை தி.மு.கழகம் கண்டு கொண்டது.

எனவே 1963-இல் அண்ணா போராடிய அதே நாளில் அதவாது 1986 நவம்பர் 17-இல் அரசியல் சட்டப்பிரிவு பகுதி 17-ஐ பொது மேடைகளில் எரித்திட தீர்மானம் நிவைவேற்றியது. அன்னை தமிழுக்கு துரோகம் செய்த அரசுக்கு எதிராக தி.மு.கழகம் சிங்கம் போல் நிமிர்ந்து சீறி சிலிர்த்து எழுந்தது. 20,000-க்கு மேற்பட்ட கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.  அடுத்து வந்த 1989 பொதுத் தேர்தலில் மீண்டும் தி.மு.கழகம் அரியணை ஏறியது.

இப்படியெல்லாம் மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்திய பெருமை மிகு கழகத்தின் இன்றைய நிலை என்ன? ஏன் இவை எல்லாம் நிகழ்ந்தது. மக்கள் போராட்டம் திசை மாறி குடும்ப போராட்டமானதற்கு என்ன காரணம் அல்லது யார் காரணம். 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் ஒரு கட்சி ஒரு தனி குடும்ப சொத்தாக மாறியது எப்படி.  இன்று அந்த ஒரு குடும்ப உறுப்பினர் தவிர வேறு யாரேனும் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வர முடியுமா?

1972-இல் எம்.ஜி.ஆர். தி.மு.கழகத்தை பிளவுபடுத்தியபோது, அவர் துவளவில்லை. வெற்றியும் தோல்வியும் என்றுமே அவரைப் பாதித்தது இல்லை. பொது வாழ்வில் ஊழலுக்கு எதிராக அவர் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1969-லேயே சட்டமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் தனது ஆண்டு சொத்துக்கணக்கை சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியவர் கலைஞர்.


புதன், ஏப்ரல் 27, 2011

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம்...

 • விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.

 • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

 • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?

 • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

 • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

 • எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.

 • தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.

 • நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.

 • பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.

 • மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.

 • 'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.

 • ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவன் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவான். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.

 • எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.

 • நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன; நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.

 • நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

 • இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

 • மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள். விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளம் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?

 • ‘நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது’ என்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

 • நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.

 • பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்
-- விவேகானந்தர் மேற்கோள்கள்

நேரத்தை வெற்றிகொள்வோம்


ஒரு நாள் ஒரு நேர மேலாண்மை நிபுணர், கல்லூரி மாணவர்களோட பேசிக்கிட்டு இருந்தாரு. எப்பிடி எல்லாம் நேரத்தை கையாளணும், என்ன மாதிரி டிரிக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணலாமுன்னு சொல்லி குடுத்துக்கிட்டு இருந்தாரு. கடைசியா இது கேள்விக்கான நேரம், நான் கேட்கப்போற கேள்விக்கு நீங்க பதில் சொல்லனும் அப்பிடின்னாரு.

ஒரு பெரிய பாட்டில் ஒண்ணு எடுத்து டேபிள் மேல வச்சாரு, அதுல முதல்ல பெரிய கல்லா எடுத்து போட்டாரு கொஞ்ச நேரத்தில பாட்டில்-ல கல்லை போடுறதுக்கு இடமில்லை. இப்ப பசங்களைப்பார்த்து கேட்டாரு பாட்டில் நிறைஞ்சிருச்சா? பசங்க சொன்னாங்க ஆமான்னு.

உடனே அவரு இல்லை அப்பிடின்னு சொல்லிட்டு சின்ன கல்லா எடுத்து போட்டாரு, பெரிய கல்லுக்கு இடையில இருந்த எடத்தில சின்ன கல்லு எல்லாம் போக ஆரம்பிச்சது, இப்ப கேட்டாரு பாட்டில் நிறைஞ்சுடுச்சா? இப்ப பசங்க கொஞ்சம் உசார கொஞ்சம் நிறைஞ்ச மாதிரி இருக்கு அப்பிடின்னாங்க.

திரும்பவும் அவரு இல்லைன்னு சொல்லிட்டு இப்ப மண்ணு எடுத்து உள்ளே போட ஆரம்பிச்சாரு, மண்ணும் உள்ளே போக   ஆரம்பிச்சுச்சு கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் கேட்டாரு இப்ப பாட்டில் நிறைஞ்சுருச்சா அபபிடின்னு இப்ப பசங்க ஆமான்னு சொல்ல, அவரு திரும்பவும் தண்ணிய எடுத்து ஊத்த ஆரம்பிச்சாரு, தண்ணியும் உள்ளே போக ஆரம்பிச்சது, கொஞ்ச நேரத்தில தண்ணி வெளிய வர ஆரம்பிச்சது, உடனே அவரு இப்பதான் பாட்டில் நெறைஞ்சு இருக்கு அப்பிடின்னு சொல்லிட்டு,   இதிலிருந்து நீங்க என்ன தெரிஞ்சு கிட்டீங்க அப்பிடுன்னு கேட்டாரு.

உடனே ஒரு பையன் எந்திருச்சு, ஸார் அதுவந்து நமக்கு எவ்வளவு வேலை இருந்தாலும், நேரமே இல்லைன்னாலும் கொஞ்சம் முயற்சி செஞ்சா இன்னும் கொஞ்சம் அதிகமா அதுல சேர்த்து செயலாம் அப்பிடின்னு சொன்னான். இப்ப நம்ம நிபுணர் சொன்னாரு உண்மை அது இல்லை, நீங்க பெரிய கல்லை மொதோ போடலையின்னா, எப்பவும் போட முடியாது. இது வாழ்க்கைக்கும் பொருந்தும்,

உங்க வாழ்க்கையில பெரிய கல்லுன்னு எது எல்லாம் இருக்கோ அதுக்கு மொதோ நேரத்தை ஒதுக்குங்க, அது எதுவா வேணா இருக்கலாம், உங்களுக்கு பிடிச்சவரா இருக்கலாம், உங்க நம்பிக்கையா இருக்கலாம், உங்க கனவா இருக்கலாம், இதுக்கெல்லாம் மொதோ நேரம் ஒதுக்கலையின்னா எப்பவுமே ஒதுக்க முடியாது.

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

மேற்கோள்கள் - பிரபாகரன்

 • உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள், உயர்ந்தவர்கள்.

 •  ஒன்று நான் இலட்சியத்தில் வென்றிருக்க வேண்டும் அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?

 •  அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக்கொடு!

 •  யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான் (சீருடை). அதனால்தான் எப்பொழுதும் இதிலேயே இருக்கிறேன்.

 •  உயிர் பறிக்கும் சயனைடுதான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்.

 •  இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி!

 •  நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்க வேண்டும்.

 •  ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்!

 •  தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது.

 •  தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கருணன். அவனை எப்பொழுதும் நினைப்பேன்.

 •  தமிழீழ இலட்சியத்திலிருந்து நான் பின்வாங்கினால் என் பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்! 

மேதகு பிரபாகரன்

நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?

சிகாகோ சொற்பொழிவுகள்
செப்டம்பர் 15, 1893

ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.


ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.


ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

'நீ எங்கிருந்து வருகிறாய்?'

'கடலிலிருந்து'

'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'

'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.


காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.

(இன்னும் வரும்...)


Party Crashers

அது ஒரு பார்ட்டி, ஒரே கூட்டம் பார்ட்டிக்கு ஏற்பாடு செஞ்சவங்களுக்கு ஒரே குழப்பம். அவங்களுக்கு தெரியும் இத்தனை பேர கூப்பிடலைன்னு அது தவிர சாப்பாடு வேறே பத்தாது போல இருந்துச்சு.

சட்டுன்னு அந்த பார்ட்டியை ஏற்பாடு பண்ணியிருந்தவங்க மைக்க எடுத்து, இந்த பார்ட்டிக்கு வந்தவங்கள்ள பொண்ணு வீட்டு சார்பா வந்தவங்க எல்லாம் எந்திரிங்க அப்பிடினாங்க உடனே ஒரு 20 பேரு எந்திருச்சு நின்னாங்க,

அப்பறம் மாப்பிள்ளை வீட்டு சார்பா வந்தவங்க எல்லாம் எந்திரிங்க அப்பிடின்னு சொன்னாங்க, இப்ப ஒரு 30 பேரு எந்திருச்சு நின்னாங்க.  உடனே பார்ட்டி ஏற்பாடு செய்தவங்க சொன்னாங்க தயவு செய்து நின்னுக்கிட்டு இருக்குறவங்க எல்லாம் வெளியே போயிருங்க ஏன்னா இது பர்த்டே பார்ட்டி!!!??

திங்கள், ஏப்ரல் 25, 2011

ஆத்தி சூடி

1. அறஞ்செய விரும்பு.

2. ஆறுவது சினம்.

3. இயல்வது கரவேல்.

4. ஈவது விலக்கேல்.

5. உடையது விளம்பேல்.

6. ஊக்கமது கைவிடேல்.

7. எண்ணெழுத் திகழேல்.

8. ஏற்ப திகழ்ச்சி.

9. ஐய மிட்டுண்.

10. ஒப்புர வொழுகு.

11. ஓதுவ தொழியேல்.

12. ஒளவியம் பேசேல்.

13. அஃகஞ் சுருக்கேல்.

14. கண்டொன்று சொல்லேல்.

15. ஙப்போல் வளை.

16. சனிநீ ராடு.

17. ஞயம்பட வுரை.

18. இடம்பட வீடெடேல்.

19. இணக்கமறிந் திணங்கு.

20. தந்தைதாய்ப் பேண்.

21. நன்றி மறவேல்.

22. பருவத்தே பயிர்செய்.

23. மண்பறித் துண்ணேல்.

24. இயல்பலா தனசெயேல்.

25. அரவ மாட்டேல்.

26. இலவம்பஞ்சிற் றுயில்.

27. வஞ்சகம் பேசேல்.

28. அழகலா தனசெயேல்.

29. இளமையிற் கல்.

30. அறனை மறவேல்.

31. அனந்த லாடேல். 

வரவேற்புக்கு மறுமொழி

சிகாகோ சொற்பொழிவுகள்
செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.
இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
     இறுதியிலே கடலில் சென்று
  சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
     பின்பற்றும் தன்மை யாலே
  துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
     வளைவாயும் தோன்றி னாலும்
  அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
  அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

பலவீனத்தை பலமாக்குங்கள்

ஒரு ஜப்பானிய சிறுவனின் கதை. அந்த 10 வயது சிறுவன் ஜூடோ கற்றுக்கொள்ள விரும்பினான். ஒவ்வொரு குருவாக சென்று கற்றுத்தரும் படி கேட்டான,  யாரும் அவனுக்கு  கற்றுக்கொடுக்க முன்வரவில்லை ஏனென்றால் அவனுக்கு இடது கை இல்லை. ஒரு விபத்தில் இடது கையை பறிகொடுத்துவிட்டான்.  கடைசியாக  ஒரு வயதான குரு அவனுக்கு கற்றுக்கொடுக்க முன் வந்தார்.

பயிற்சிகள் ஆரம்பமானது, சிறுவனும் ஆர்வமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். நாட்கள் மாதங்கள் ஆனது, ஆனால் அந்த ஒரு குறிப்பிட்ட  பயிற்சியைத்தவிர குரு வேறு எதுவும் சொல்லிக்கொடுக்கவில்லை. மூன்று மாதங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் சிறுவன் குருவிடம் கேட்டான், "இதை தவிர வேறு எதுவும் கற்று தரமாட்டீர்களா?"  என்று. குரு சொன்னார், உனக்கான பயிற்சி இது மட்டுமே , இதை நன்றாக பயிற்சி செய்து கொள். 

மேலும் சில மாதங்கள் ஓடி விட்டன. இப்போது அந்த சிறுவனை போட்டிக்கு அழைத்து சென்றார் குரு. முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்று விட்டான் சிறுவன். மூன்றாவது ஆட்டம் சற்று கடினமாக இருந்தாலும் அதிலும் வெற்றி பெற்று விட்டான். சிறுவனால் நம்ப முடியவில்லை. இப்போது சிறுவன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டான்.  இறுதி போட்டியில் இவனோடு மோதப்போவது இவை விட மிக பாலசாலியான மற்றும் அனுபவம் மிக்க போட்டியாளர்.

சிறுவனும் மனம் தளராமல் போட்டியில் இறங்கினான், சில பெரிய போராட்டங்களுக்கு  பிறகு வெற்றி சிறுவனிடம் வந்தது. இப்போதும் அவனால் நம்ப முடியவில்லை. குருவிடம் கேட்டான், எப்படி என்னால் அவர்களை வெல்ல முடிந்தது. குரு அமைதியாக சொன்னார், நீ ஒரே பயிற்சியை திரும்ப திரும்ப செய்ததால் அதில் நிபுணத்துவம் பெற்று விட்டாய், மேலும் உன்னை எதிர் கொள்ள  வேண்டுமானால், உன்னுடைய இடது கையை எதிராளி பிடக்க வேண்டும், உனக்கு அது இல்லாததால், அவர்களால் உன்னை வெற்றி கொள்ள முடியவில்லை.

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

காணவில்லை கணவனை

ஒரு பொண்ணு புருஷனை காணாம்ன்னு கம்ப்ளைண்ட் குடுக்க போனாங்க

ஆய்வாளர் : சொல்லும்மா, என்னாச்சு
பெண்         : என் வீட்டுக்காரரை காணோம்
ஆய்வாளர் : அவர் பேரு என்னம்மா
பெண்        : ம்..ம்.. கணேஷுன்னு நெனைக்கிறேன்
ஆய்வாளர் : சரி ஆளு எப்பிடி இருப்பாரு கருப்பா, செவப்பா?
பெண்         : சரியா தெரியலே, கொஞ்சம் மாநிறமா இருப்பாரு
ஆய்வாளர் : ஒல்லியா இருப்பாரா
பெண்        : இல்ல கொஞ்சம் சதப்பிடிப்பாதான் இருப்பாரு
ஆய்வாளர் : உயரம் எவள்ளவு இருப்பாரு
பெண்         : சரியா தெரியலே
ஆய்வாளர் : கண்ணு என்ன கலரு
பெண்        : பார்த்ததே இல்ல அதனால சரியா தெரியல
ஆய்வாளர் : முடி என்ன கலரு?
பெண்        : கருப்பா தான் இருக்கணும்!!??
ஆய்வாளர் : என்ன டிரஸ் போட்டிருந்தாரு?
பெண்        : அதுவும் தெரியாது
ஆய்வாளர் : யாராவது அவர் கூட இருந்தாங்களா?
பெண்        : ஆமா ஸார், நான் ஆசையா வளக்குற  நாயி 30 இன்ச் உயரம், புளு கண்ணு, ப்ரௌன் முடியோட,    எங்க்கூடயே சாப்பிட்டுகிட்டு, என்கூடயே jogging பண்ணும் அதுவும் சேர்ந்து காணாம போச்சு ஸார் அப்பிடின்னு சொல்லிட்டு ஆழ ஆரம்பிச்சுருச்சி.

உடனே ஆய்வாளர் சொன்னாரு முதல்ல நாயை கண்டுபிடிப்போம்!!!!

ஹலோ ஸார்... நாங்க ......... ல இருந்து கூப்பிடுறோம்

மோகனோட ஃபோன் ரிங் ஆயிட்டு இருந்தது, நிற்க மோகன் ஒரு முன்னுரை, இவரு ஒரு பெரிய ஐ‌டி கம்பெனியில புதுசா சேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்சீனியர்.  சரி இப்ப கடைக்கு வருவோம். ஃபோன் அடிச்சுக்கிட்டே இருந்துச்சா, மோகன் ஃபோன்-எ எடுத்து காதுல வச்சாரு. அந்தப்பக்கமிருந்து

பெண்          :      ஹலோ ஸார், நான் ...... பங்க்ல இருந்து பேசுறேன்
மோகன     :      சொல்லுங்க,
பெண்          :      உங்க கிட்டே ஏதாவது கிரெடிட் கார்டு  வச்சு இருக்கீங்களா
மோகன்      :    இல்லை
பெண்         :    எங்க பாங்க்-ல புதுசா ஒரு கார்டு அறிமுகப்படுத்தி இருக்கோம், நீங்க ப்ரீ-யா இருந்தா நான் விளக்கமா சொல்லுறேன்
மோகன்     :      என்னக்கொண்ணும் இப்ப வேலை இல்லை, 5 மணிக்கு தான் மீட்டிங் இப்ப நீங்க வெளக்குங்க...

உடனே அந்த பொண்ணு கார்டைப்பத்தி வெளாவாரிய எல்லாம் விளக்குச்சு,  அப்புறமா

பெண்         :  என்ன ஸார், இந்த ஆப்பர் உங்களுக்கு பிடிச்சு இருக்கும்ன்னு நெனைக்கிறேன், இதைப்பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ஸார்?   
மோகன்    : ஆப்பர் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனாலும் எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் குடுங்க
பெண்        : நாளைக்கு கால் பண்றேன் ஸார் நன்றி

அப்பிடின்னு சொல்லிட்டு ஃபோன்-ஐ  வச்சிடுச்சு

மறுநாள்

பெண்        :  ஸார் நான் .... பாங்க்-ல இருந்து பேசுறேன்,  நேத்து பேசுனேனே
மோகன்     :  ஆங்!  ஞாபகம் இருக்கு, சொல்லுங்க.
பெண்         :  நீங்க தான் ஸார் சொல்லணும்
மோகன்    : இன்னும் கொஞ்சம் விலாவாரிய சொல்லமுடியுமா? வேற பாங்க் குடுக்கற கார்டை விட இதுல என்ன ஸ்பெஷல்ன்னு

அந்த பொண்ணும் சலிக்காம, மார்க்கெட்இல  இருக்க வேற கார்டை எல்லாம் கம்பேர் பண்ணி சொல்லுச்சி

திரும்பவும் மோகன் கொஞ்சம் யோசிக்க டைம் வேணுமின்னு சொல்லி அப்புறம் கூப்பிடச்சொன்னான்

இப்பிடியே ஒரு வாரம் போயிருச்சு

அந்த பொண்ணுக்கோ சரியான கோவம், கடைசியா கடுப்பாகி மோகன் கிட்டே கேட்டுச்சு ஸார் உங்களுக்கு கார்ட் வேணுமா  வேணாமா?

மோகன் இப்ப எனக்கு வேணாமின்னு சொன்னாரு. அந்த பொண்ணும் சரி ஸார் கடைசியா ஒரு ஃபார்ம் அனுப்பியிருக்கேன், கொஞ்சம் பில் பண்ணி   அனுப்பிடுங்க எங்க மேனேஜர்க்கு  பதில் சொல்லனும் அப்பிடின்னு சொல்லுச்சு

மோகனும் reason  for Rejction-ல எழுதினார் : ஊருக்கு போன பொண்டாட்டி வந்துட்டா. அப்பிடின்னு

அதை படிச்சு பார்த்த பொண்ணுக்கு ஒண்ணும் புரியல, உடனே ஃபோன்-ஐ போட்டு என்ன ஸார் ஒண்ணும் புரியல அப்பிடின்னா, அதுக்கு மோகன்   சொன்னாரு, என் மொபைல்-ல இன்கமிங் வந்தா நிமிசத்துக்கு 20 பைசா கிரெடிட் ஆகும், நீங்க ஒரு நாள் என்கிட்ட பேசுன 20 இல்ல 25   ரூவா கிரெடிட் ஆயிரும் அதை வச்சு என் பொண்டாட்டி கிட்ட பேசிருவேன், இப்ப அதுக்கு அவசியமில்லே அதனால இனி நீங்க எனக்கு கூப்பிட வேண்டிய அவசியமில்லைன்னு சொன்னாரு

இது எப்டி இருக்கு

திங்கள், ஏப்ரல் 18, 2011

Bijness is Bijness!!!!!!

In an English school, a teacher declared to a class of 5-year-olds, I'll give 10 pounds to the child who can tell me who was the most famous man who ever lived.

An Irish boy put his hand up and said, "It was St. Patrick." The teacher said, "Sorry Paddy, that's not correct."

Then a Scottish boy put his hand up and said, "It was St.  Andrew." The teacher replied, "I'm sorry, Hamish, that's not right either."

Then a Jewish boy put his hand up and said "David", The Buddhist boy said "Gautama Buddha" and the Muslim boy  said "Mohammed".

They all were not successful.

Finally, a Gujju boy raised his hand and said, "It was Jesus Christ."

The teacher said, "That's absolutely right, Jignesh, come up here and I'll give you the 10 pounds that I promised."

As the teacher was giving Jignesh his money, she said, "You know Jignesh, since you're a Hindu; I was very surprised you said Jesus Christ."

Jignesh replied, "Yes. In my heart I knew it was Krishna, but Bijness is Bijness!!!!!!

வெப்சைட் Block ஆகி இருக்கா?

உங்க அட்மினிஸ்டிரேட்டர் உங்களை வெப்சைட் பார்க்க விடாம பண்றாரா? கீழே ஒரு டூல் இருக்கு இது portable. சும்மா டவுண்லோட் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணுங்க போதும். புது IE ஓபன் ஆகும், அதில் ஓபன் பண்ணுண எல்லா வெப்சைட்-ம ஓபன் ஆகும்.

இங்கே பாருங்க


என்ஜாய் பண்ணுங்க   


துபாய் அன்றும் இன்றும்

பாருங்கள் துபாயின் வளர்ச்சிவெள்ளி, ஏப்ரல் 15, 2011

பொண்டாட்டிய பயமுறுத்தணுமா?

முஸ்கி :  தங்கமணிகள் மன்னிக்கவும்.....

வீட்ல அடி வாங்கி வாங்கி சலிச்சிடிச்சா, கோவம் கோவமா வருதா, கீழே ஒருத்தர் என்ன பண்றாருன்னு பாருங்க.
என்ன பண்றது கொசு கடிச்சாலும், பொண்டாட்டி கடிச்சாலும் அடிக்க முடியலையே.

டிஸ்கி : வீடியோ சரியாய் தெரியலையா? மெயில் போடுங்க அட்டாச்மென்ட்-ல அனுப்புறேன்.
புதன், ஏப்ரல் 13, 2011

எனக்கு ஒண்ணுமே புரியலேங்க

என்ன புரியலேன்னு கேட்கிறீங்களா, கீழே படிச்சு பாருங்க

    1.    100 ரூவா கோயில் உண்டியல்-ல போடும் போதும் போது பெருசா தெரியுது, ஆனா அதுவே ஷாப்பிங் பண்ணும் போது சிறுசா தெரியுதே?

    2.    கோயிலுக்கு போன 1 மணிநேரம் நீளமா இருக்கே, இதே சினிமாவுக்கு போனா கொஞ்சமா தெரியுதே?
   
    3.  பாட புத்தகத்தில தொடர்ந்து ஒரு பாடம் படிக்க முடியலை, இதே ஆனந்த விகடன்,குமுதம் இல்லை நாவல் 100 பக்கம் படிக்க முடியுதே ஏன்?
   
    4. ஒரு நல்ல விசயத தெரிஞ்சுக்க, பழக எவ்வளவு கஷ்டப்படுறோம, ஆனா கெட்ட விஷயம் எல்லாம் எவ்வளவு சீக்கிரம் பழகிக்கிறோமே எப்பிடி?
   
    5. பேப்பர்-ல வர நியூஸ் எல்லாம் உண்மைன்னு நம்புறோமே ஆனா வீட்டு பெரியவங்க சொல்றதுக்கு எல்லாம் 100 கேள்வி கேட்கிறோமே ஏன்?
   
    6. எல்லோருமே சொர்கத்திலே வாழணுமின்னு நினைக்கிறோம் ஆனா அதுக்கான எந்த முயற்சியும் பண்றதில்லையே ஏன்?

உங்களுக்கு ஏதாவது புரிஞ்சுச்சா?  எனக்கு கொஞ்சம் சொல்லுங்க

நெருப்பு நீரானால்

இந்த நெருப்பு நீரானால் என்னாகும், கீழே உள்ள படங்களை பாருங்கள்
 
இது எப்பிடி இருக்கு?


செவ்வாய், ஏப்ரல் 12, 2011

வேலை தேடுறீங்களா?

நீங்க BE / MCA படிச்சவரா, வேலை தேடுறீங்களா. அப்பிடின்னா இந்த இடுகை உங்களுக்குத்தான். கீழே இருக்க வெப்சைட்-ஐ பாருங்க இங்க உங்களுக்கு தேவையான எல்லா விஷயமும் இருக்கு. எங்கெங்கே இன்டர்வியூ இருக்கு, எங்கெங்கே வாக்-இன் நடக்குது அப்பிடின்னு சொல்றாங்க. அதவிட முக்கியம் நீங்க இங்க இன்டர்வியூக்கு தயாராக கேழ்வி பதில்களும் இருக்கு.

நல்லா தயாராகுங்க!! வெற்றி நிச்சயம்

ஓ  சொல்ல மறந்துட்டேன்

வெப்சைட் :  http://dev.fyicenter.com/interview/index.html

நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி

உலகத்திலேயே சாப்பிடுவதை கூட ஒரு கலையாக செய்வதில் நமக்கு நிகர் நாம் தான், வேறு எவரும்  நம்மை நெருங்க கூட முடியாது, கொறஞ்சது 600 கிராம்லா இருந்து 750 கிராம் வரை அசால்ட்டா உள்ள தள்ளுறோம் அதுல ஒண்ணும் தப்பு இல்லை. 

இந்த இடுகை சாப்பிடும் போது ஜில்லுனு தண்ணி இல்லாட்டி சாஃப்ட் ட்ரிங்க்ஸ் (பெப்சி/கோக்)  குடிக்கணும்னு ஆசைப்படுற எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கை.

ஜில்லுனு தண்ணி குடிச்சா என்ன ஆகும், நீங்க சாப்பிடும் போது எண்ணை-ல பொரிச்சது கூட கொஞ்சம் சேர்த்து உள்ள தள்ளி   இருப்பீங்க, அந்த எண்ணை-ஐ எல்லாம் ஐஸ் தண்ணி  கெட்டி அக்கிரும், அதனால செரிக்கிறது லேட் ஆகும்.

சமயத்தில அந்த கெட்டி கொழுப்பு உங்க இரத்தக்குழாய்-ல படிஞ்சுரும், இது இப்பிடியே ரொம்ப காலத்துக்கு நடந்தா உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் 90% வரை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.என்ன செய்யலாம்ன்ன சப்பாட்டுக்கு அப்புறம் சூடா ஒரு டீ அடிக்கலாம், விக்கிற விலைவாசில டீ அடிக்க  உங்க பட்ஜெட் இடம் கொடுக்கலைன்னா சூடா ஒரு டம்ப்ளர் தண்ணி குடிக்கலாம், அதனால கொழுப்பு எல்லாம் இரத்தக்குழாயிலே படியாம தவிர்க்கலாம். 

டிஸ்கி
என்ன இது பிடிச்சுருக்கா, பிடிச்சு இருக்கும்னு நம்புறேன், கொஞ்சம் கமெண்ட் போட்டுட்டு மறக்காம ஓட்டும் போட்டுட்டு போயிட்டா, எல்லோருக்கும் இது போயி சேரும்  

திங்கள், ஏப்ரல் 11, 2011

முடிந்தது பிரச்சாரம்

ஒரு வழியாக தேர்தல் பிரச்சாரம் முடிந்தது, இனி எல்லாம் நம்முடைய கைகளில் மட்டுமே. இதுவரை நடந்த எல்லா காட்சிகளும் இன்றோடு முடிவுக்கு வந்து விட்டது, நாம் என்ன செய்யப்போகிறோம் இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.

எல்லோரும் எல்லோரையும் திட்டி முடிந்து விட்டது. இலவசங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் கொடுப்பதாக வாக்குறுதிகளும் கொடுத்தாகி விட்டது, அவர்கள் வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டதாகவே தெரிகிறது.  இனி நம்முடைய வேலை மட்டுமே மிச்சம்.

நமக்கு பிடிக்குதோ பிடிக்கலியோ ஓட்டு சாவடிக்குச்சென்று ஓட்டு போடுவோம், இது நமது உரிமை மற்றும் கடமையும் கூட.  100% ஓட்டு பதிவு நம்முடைய நோக்கம், சிறிது குறைந்தாலும் பரவாயில்லை.  நம்முடைய ஒவ்வொரு ஓட்டும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

நம்முடைய ஓட்டை நாம் போடவில்லை என்றால் வேறு எவறேனும் போட்டுவிட வாய்ப்பு உள்ளது. ஏனெவே தாமதிக்காமல் நம்முடைய ஓட்டை போட்டு நமது பிரதிநிதியை நாமே தேர்ந்தெடுப்போம், வேறு எவரையும் இந்த வாய்ப்பை பயன்படுத்த அனுமதியோம்.

வாழ்க ஜனநாயகம் !! ஜனநாயகம் வாழ நாமும் துணை இருப்போம்

அவசரமாக இரத்தம் வேணுமா?

இந்நேரம் உங்களுக்கோ, உங்கள் உறவிவினருக்கோ, அல்லது உங்கள் நண்பர் யாருக்கேனும் அவசரமாக இரத்தம் தேவைப்படலாம். நீங்கள் கீழே உள்ள சுட்டியை பாருங்கள். இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள இரத்த தானம் செய்பவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் கொடுக்கபபட்டுள்ளன.  விருப்பமிருந்தால் நீங்கள் கூட பதிந்து கொள்ளலாம்

www.friends2support.org

இதன் மூலம் உங்களால் யாரேனும் பயனுறுவார்கள்.

டிஸ்கி  :

மேலே உள்ள இணைய தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.


அக்கவுண்டன்ட் கதைகள் - I

மூணு அக்கௌண்டண்ட்ஸ்-உம், மூணு இஞ்சீனியர்களும் ஒரு நாள் டிரைன்-ல கான்பரன்ஸ்க்கு போய்கிட்டு இருந்தாங்க. அவங்கள்ள இஞ்சீனியர் எல்லாம் அவங்கவங்களுக்கு தனித்தனியாய் டிக்கெட் எடுத்து இருந்தாங்க. ஆனா இந்த அக்கௌண்டண்ட்ஸ் மட்டும் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் வச்சுருந்தாங்க. இஞ்சீனியர்களுக்கு சந்தேகம் எப்பிடி ஒரு டிக்கெட்-ல மூணு பேரு போவீங்க செக்கர் வந்தா மாட்டிக்க மாட்டீங்களா? அப்பிடின்னு கேட்டாங்க. அதுக்கு அவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தெரியும்னு சொன்னாங்க. 

சொன்ன மாதிரியே செக்கர் வர நேரம் பார்த்து மூணு பேரும் எந்திருச்சு டாய்லெட்க்குள்ளே போயிட்டாங்க.  செக்கர் எல்லார் டிக்கெட்டையும் செக் பண்ணிட்டு, டாய்லெட் கதவ தட்டி டிக்கெட் பிளீஸ் அப்பிடின்னாரு, உள்ளே இருந்து ஒரே ஒரு கையை நீட்டி டிக்கெட்டை வெளியே குடுத்தாரு ஒரு அக்கவுண்டன்ட், செக்கர் டிக் பண்ணிட்டு போயிட்டாரு. இதை பார்த்த இஞ்சீனியர்களுக்கு இந்த ஐடியா நமக்கு தோணாம போச்சே அப்பிடினு நெனச்சுக்கிட்டு திரும்பி வரும் போது இதே டிரிக்க நாமளும் செய்வோம் பேசிக்கிட்டாங்க.

கான்பரன்ஸ் எல்லாம் முடிச்சிட்டு திரும்பி வரும் போது மூணு இஞ்சீனியர்களும் ஒரு டிக்கெட்டோட டிரைன் ஏறிட்டாங்க, ஆனா அக்கவுண்டன்ட் மூணு பேரும் இந்த தடவ டிக்கெட் எடுக்கவே இல்லை.

இப்ப  என்ன டிரிக் பண்ணிருப்பாங்க டிக்கெட் இல்லாம டிரைன்-ல போறதுக்கு?.

விடையை பின்னூட்டத்தில் இடவும் 

சில பயனுள்ள எளிய எக்ஸெல் அப்ளிகேஷன்கள்

வீடு வாங்க போறீங்களா? எவ்வளவு லோன் வாங்குனா சரியா இருக்குமினு தெரியலயா? கீழே இருக்கும் சுட்டியை  கிளிக்குங்க

HomeLoan_v20.xls


இந்த வருஷம் வருமான வரி எவ்வளவு கட்டனுமினு தெரியலையா? கீழே இருக்கும் சுட்டியை கிளிக் பண்ணி  நீங்களே  கணக்கு பண்ணிக்குங்க

ITCalc_FY-2011_v02.xls

டிஸ்கி :
இதை மெயில் அனுப்பிய நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி. இதை உருவாக்கிய நண்பர் ராஜன் அவர்களுக்கும் நன்றி 

ஊழல் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது

ஊழல் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது, இன்றைய கால கட்டத்தில் ஊழல் இல்லாமல் அரசியல் செய்வது மிகவும் கஷ்டம். தற்போதைய அரசியலில் மகாத்மா காந்தி இருந்தாலும் கூட அவரால் ஊழல் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது.

அப்படி செய்யா விட்டால் அரசியலில் இருந்து அவர் விலக வேண்டியது வரும. கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் பணிகளுக்கு ஊழல் இன்றி ஒன்றும் செய்ய முடியாது.

இப்படி சொன்னவர் முன்னாள் கர்நாடகா முதல்வர் திரு. குமாரசாமி. இதை பார்க்கும் போது, அரசியல்வாதிகள் எல்லோரும் தவறு செய்பவர்களாகவும், நாம் கண்ணிருந்தும் குருடர்களாய்,   எதுவும் கேட்க முடியாதவர்களாகவும் இருக்கிறோமா?

இப்போது என் மதில் எழும் கேள்வி? ஏன் ஊழல் இல்லாத அரசியல் செய்யமுடியாது?

உங்கள் பதில்களை பின்னூட்டதில் இடவும் .
சனி, ஏப்ரல் 09, 2011

வா சாரே ஹசாரே

ஹசாரே இந்த 71 வயது  இளைஞரின் முயற்சி வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி, நாமும் கொண்டாடுவோம் இந்த வெற்றியை. ஹசாரே ஒரு சின்ன முன்னுரை இவர் ஒரு பொது நல சமூக சேவகர், காந்தியவாதி. பிறந்தது  15 ஜனவரி 1940  இயற்பெயர்  கிசான் பாபுராவ் அசாரே.

மகாராட்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, ஓர் மாதிரி சிற்றூராக திகழ்ந்த,ராலேகாவ் சித்தி என்ற சிற்றூரின் மேம்பாட்டிற்காக இவராற்றிய பணிக்காக அறியப்பட்டார். இவரது பணிகளுக்கு அங்கீகாரமாக 1992ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியுள்ளது. நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டமாக்கலுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறப்புற பணியாற்றினார். தற்போது ஊழலுக்கு எதிராகப் போராடிவருகிறார். இவர் ஜன் லோக்பால் சட்டமாக்கலுக்காக தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அது என்ன ஜன் லோக்பால் மசோதா அப்பிடின்னா இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா ஆகும். அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், கிரண் பேடி மற்றும் சந்தோஷ் ஹெக்டே போன்ற சமூக ஆர்வலர்களால் முன்மொழியப்பட்டு இன்றளவில் அது சட்ட வரைவாகவே உள்ளது.

ஊழலுக்கு எதிரான குரல் மக்களிடமிருந்து எழவேண்டும் அதுவும் அதிகாரமிக்க அமைப்பாக ஒரு மக்கள் குழு அமைத்து அந்த குழுவின் மூலமாகவே ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்மொழியப்பட்ட சட்ட வரைவு நிலையில் உள்ள மசோதாதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.

அதெல்லாம் சரி தான் ஆனா தலைமை தப்பு செய்ய கூடாது ன்னு சொல்லறதுக்கு யாருக்குமே திராணி இல்லையே ஏன்? அவங்க தப்பு பண்ணுவாங்களாம் இவங்க கண்டு பிடிப்பாங்களாம். எதுக்குயா இதெல்லாம் எல்லாத்துக்கும் ஓட்டெடுப்பு நடத்தி பிறகு தான் முடிவு எடுக்கனுமின்னு வச்சிட்டா யாரும் ஊழல் பண்ணனுமின்னு நினைக்க மட்டாங்கல்ல!!??

 வெள்ளி, ஏப்ரல் 08, 2011

மிஸ்டர் எக்ஸ் - II

காதலி : அன்பே இன்னைக்கு நம்ம நிச்சயதார்தம், எனக்கு ஒரு ரிங்  கொடுப்பீங்களா
மிஸ்டர் எக்ஸ்: அதுக்கென்ன கொடுத்துட்டா  போச்சி,  லாண்ட்லைன் இருந்து கொடுக்கட்டா? இல்ல மொபைல்-ல இருந்து கொடுக்கணுமா?

மிஸ்டர் எக்ஸ் :  உங்க கார் பேரு என்ன?
பெண் :  எனக்கு சரியா தெரியல ஆனா அது "T" - ல ஸ்டார்ட் ஆகும்
மிஸ்டர் எக்ஸ்: நல்ல காரா இருக்கே என் காரெல்லாம் பெட்ரோல் போட்ட தான் ஸ்டார்ட் ஆகும்

ஆள் : யோவ், ஏன்யா ஆட்டோ-லரிந்து ஒரு வீல்-ல கழட்டுறே
மிஸ்டர் எக்ஸ் : அந்த போர்டு-அ கொஞ்சம் பாரு, டூ வீலர் பார்க்கிங் போட்டிருக்கா அதுக்குதான்

மிஸ்ஸஸ் எக்ஸ் :  யோவ் நீ பாம்-அ மாட்டிக்கிட்டு இருக்கும் போது வெடிச்சிட்டா என்னய்யா பண்ணுவே
மிஸ்டர் எக்ஸ் : அதுக்குத்தான் இன்னொன்னு வச்சிரிக்கேன்

மேனேஜர் : என்ன எக்ஸ் காலையிலிரிந்து ரொம்ப பிசியா இருக்கீங்களே என்ன விஷயம்
மிஸ்டர் எக்ஸ் : இன்னைக்கு காலைலே ஒரு கம்ப்யூட்டர் கொண்டு வந்து டேபிள்-ல வச்சிட்டு போயிட்டாங்க, அதுலா எல்லாம் சரியா இருக்கு ஆனா கீ போர்டு-ல மட்டும் abc  வரிசையா இல்லாம மாறி மாறி கிடக்கு அதான் சரி பண்ணிக்கிட்டு இருந்தேன்

மிஸ்டர் எக்ஸ் :  (ஒரு அழகான பொண்ணபார்த்து கிஸ் அடிச்சுட்டாறு அந்த பொண்ணு கடுப்பாகி)
பெண் : என்னய்யா பண்றே
மிஸ்டர் எக்ஸ் : பி.காம் ஃபைனல் இயர் பண்றேன்.

4 பேரு பேசிக்கிட்டு இருந்தாங்க
ஒருத்தர் ஒக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி-ல  படிச்சவரு
ஒருத்தர் ஹார்வர்ட யூனிவர்சிட்டி-ல  படிச்சவரு
ஒருத்தர் டெக்சாஸ் யூனிவர்சிட்டி-ல  படிச்சவரு
அப்புறம் நம்ம எக்ஸ்

கேள்வி என்னான
உலகத்திலேயே வேகமான விஷயம் என்ன?
ஒக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி-ல  படிச்சவரு சொன்னாரு Light-ன்னு
ஹார்வர்ட யூனிவர்சிட்டி-ல  படிச்சவரு சொன்னாரு thought-ன்னு
டெக்சாஸ் யூனிவர்சிட்டி-ல  படிச்சவரு சொன்னாரு கண்ணு முழிச்சு  மூடுறது-ன்னு
அப்ப நம்ம எக்ஸ் சொன்னாரு அட போங்கப்பா, எல்லாத்தையும் விட லூஸ் மோஷன் தான் பாஸ்ட்
ஏன்னா நேத்து ராத்திரி கண்ண முழிச்சு பாக்கிறதுக்குள்ள, லைட்-அ போடுறதுக்குள்ள, என்ன நடக்குதுன்னு நினைக்கிறதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சு போச்சு

வாத்தியார் : பேரியம்-க்கு கெமிக்கல் சிம்பல் என்ன
மிஸ்டர் எக்ஸ் : BA
வாத்தியார் : அப்ப சோடியம்-க்கு கெமிக்கல் சிம்பல் என்ன
மிஸ்டர் எக்ஸ் : NA
வாத்தியார் : அப்ப ஒரு பேரியம் அணுவும், ரெண்டு சோடியம் அணுவும் சேர்ந்தா
மிஸ்டர் எக்ஸ் : BANANA

வாத்தியார் : நீங்க காது கேக்காதவங்கள எப்பிடி  கூப்பிடுவீங்க
மிஸ்டர் எக்ஸ் : எப்பிடி வேணா கூப்பிடலாம் ஏன்னா அவங்களால கேட்க முடியாதே

இன்னும் குறட்டையா??

குறட்டையா?? தவிர்க்க சில வழிமுறைகள்

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது.

குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது

தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர். குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்த குறட்டையை தவிர்ப்பது எவ்வாறு என பார்ப்போம்.


1. குறட்டையை தவிர்ப்பதற்கு என ஒரு கருவி வந்துள்ளது. இது சி.பி.ஏ.பி. என அழைக்கப்படுகிறது. இந்த கருவி தொடர்ச்சியாக காற்றினை சுவாசத்தில் பங்கு பெற செய்கிறது. காற்று எளிதாகவும், தொடர்ந்தும் உட்செல்வதற்கு ஏற்ற வகையில் செயல்படுகிறது. அதனால் தூக்கம் தடைபடுவதில்லை. எனினும் இத்தகைய கருவிகள் சற்று விலை அதிகம் கொண்டவை.

2. சிலர் தூங்கும் போது வாய் திறந்த நிலையில் இருக்கும். இது ஏனெனில் அவர்கள் காற்றினை வாய் வழியாகவும் சுவாசத்திற்கு எடுத்து கொள்வதால் நடைபெறும் ஒன்று. இதற்கென கவசம் போன்ற கருவி ஒன்று உள்ளது. இதனை பொருத்தி கொள்வதால் தூங்கும் போதும் வாயானது திறந்த நிலையில் இருக்கும். இதனால் சுவாசம் நன்கு நடைபெறும்.

3. உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும். எனவே தூங்கும்போது கைகளை முகத்திற்கு எதிராக வைத்து கொள்ளவும். பின்னர் தலையினை கையின் உதவியால் எதிர்புறம் திருப்பவும். இந்த முறையை தலையின் இருபுறமும் செய்யவும். சிறிது நேர இடைவெளி விட்டு இதனை தொடரவும். இதேபோல் தலையை மேல் மற்றும் கீழ் திசைகளில் திருப்பவும். இதற்கும் சற்று இடைவெளி விடுதல் அவசியம். இவ்வாறு தூங்கும் முன் படுக்கையறையில் சிறிது நேரம் தொடர்ந்து செய்து வரவும்.

4. நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.

5. சிலர் மூக்கின் வழியாக குறட்டை விடுவதும் உண்டு. இவர்கள் தூங்கும்போது வாய் வழியாக காற்றை சுவாசிக்க கற்றுகொண்டால் குறட்டையானது தவிர்க்கப்படும். அதற்கு உதவியாக மூக்கை கெட்டியாக பிடித்து கொள்ளும் கிளிப் போன்றவற்றை உபயோகிப்பதால் எளிதாக தூங்க இயலும்.

6. இந்த குறட்டையினை தவிர்ப்பதற்கு உகந்ததாக தற்போது பல சுவாச தைலங்கள் (வேப்பரப்) சந்தையில் வந்துள்ளன. இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதால் சுவாசம் மேற்கொள்ளும்போது காற்றானது எளிதில் மூக்கினுள் சென்று வரும். மேலும் இது மூக்கில் தடையேற்படுத்தும் கோழை போன்றவற்றை இளகச்செய்து விடும். இதனால் சுவாசம் அமைதியாகவும், எளிதாகவும் நடைபெறும்.

7. குறட்டை விடுவதில் மூக்கின் உட்புறம் அமைந்துள்ள எலும்பு பகுதியும், சதை பகுதியும் ஒழுங்காக அது அமைய வேண்டிய இடத்தில் இல்லாமல் சிலருக்கு இடம் மாறி அமைந்திருக்கும். இதனை சிறிய அறுவை சிகிச்சையின் உதவியால் எளிதில் சரி செய்து விடலாம். குறட்டையையும் தவிர்த்து விடலாம்.

இவ்வாறு குறட்டையை தடுப்பதற்கு பல வழிகள் உள்ள போதிலும் அவரவர்களுக்கு எது சரியாக அமையும் என்பதை மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின் பேரில் கடைபிடித்து வருவது மிக்க நன்மை பயக்கும்.

சனி, ஏப்ரல் 02, 2011

உங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா?

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

உங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா-? அப்படியென்றால் தொடர்ந்து படிக்கவும். பெண்கள் சாப்பிடும் உணவு வகைகளை பொறுத்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணா அல்லது பெண்ணா என நிர்ணயிக்கப்படுகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் 80 சதவீதம் பேர் பெருமளவில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். கர்ப்பம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய சத்துகள் நிறைந்த பச்சை காய்கறிகளை தங்களது உணவில் எடுத்து கொண்ட பெண்கள் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதே வேளையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்துகள் நிறைந்த வாழைப்பழம் மற்றும் உருளை கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வருகிறது.


உங்கள் கண் பார்வை திறனை சோதித்துக்கொள்ளுங்கள்

இது ஒரு கண் பார்வை திறனறியும் சோதனை

கீழே இருப்பது ஒரு முப்பரிமாண படம் நன்கு உற்று பாருங்கள் உள்ளே ஒரு ஆண் நீந்தி கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறதா?

இல்லையா விடையை கீழே காணுங்கள்  

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


அவரு தண்ணிக்குள்ளே நீந்திக்கிட்டு இருக்காரு  ஹி ஹி ஹி ஹி ஹி...

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள்
உலகின் மகிழ்ச்சியான 10  நாடுகள்.

மகிழ்ச்சியை எப்பிடி அளவிடுவது
    மகிழ்ச்சி என்பது அவ்வளவு எளிதாக அளவிட முடியாதது,  ஆளுக்கு ஆள் மாறக்கூடியது. சிலருக்கு மழை பெய்தால் மகிழ்ச்சி ஆனால் சிலருக்கு வெயில் மகிழ்ச்சி தரும்.  இங்கே பல விசயங்கள் கருத்தில் கொண்டு "வேர்ல்டு டேட்டாபேஸ்" என்ற கம்பெனி ஆய்வுகள் மேற்கொண்டு நாடுகளை வரிசை படுத்தி இருக்கிறார்கள்

10. Luxembourg – 7.6 புள்ளிகள்

பணக்கார நாடுகளில் வாழுவது என்பது எல்லோருக்கும் ஒரு வித பெருமை அளிக்கும் விஷயம்.  இது ஒரு மிகச்சிறிய ஐரோப்பிய நாடு, மிக சிறிய ராணுவம் மோதம் 800 பேர் மட்டுமே.  மேலும் ஒரு உலக சாதனை தனி நபர் ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் விகிதம் அதிகம் உடைய நாடு.

9. Guatemala – 7.6 points

         இது ஒரு மத்திய அமெரிக்க நாடு,  அதிகளவு புயலாலும், நிலநடுக்கத்தாலும் பாதிப்படையக்கூடிய நாடு. எனினும் இங்கு காஃபி மற்றும் வாழை ஏற்றுமதி அதிகம். மிக குறைந்த விலையில் வாழை கிடைக்கும்

8. Canada – 7.6 points

மகிழ்ச்சியான மக்கள்,  மகிழ்ச்சியான நாட்டை உருவாக்குகிறார்கள் என்ற உண்மை இவர்களை பார்த்தால் தெரியும். இதுவரை 1.5 மில்லியன் மக்கள் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், இதன் மூலம் வறுமை நாடுகளில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் நோய்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்

7. Sweden – 7.7 points
  உலகிலேயே அதிக வரி விதிப்பு உடைய நாடு ஏறக்குறைய 80% வரை வரிகள் உண்டு, ஆனால் அங்கு கிடைக்கும் சலுகைகள் அதிகம். குழந்தை முதல்  நாளை இறக்கப்போகும் பெரியவர் வரை எல்லோரும் சலுகைகள் உண்டு.

6. Australia – 7.7 points

  ஆறாவது இடத்தில் இருப்பது ஆஸ்ட்ரேலியா, இதன் பெயர் "Australis"  என்ற பெயரில் இருந்து வந்தது, இதற்கு தெற்கு பகுதி என்று அர்த்தம்.  பிரிட்டிஷ் இந்த நாட்டை காலனியக 1788 முதல் 1868 வரை வைத்து இருந்தனர்

5. Finland – 7.7 points

    இந்த நாட்டில் இருந்து தான் நோக்கியா மொபைல் வந்தது, உலகில் மொபைல் போன் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு மற்றும் அதிக ஏற்றுமதி செய்யும் நாடு.

4. Iceland – 7.8 points

    இது வட துருவத்திற்கு அருகில் இருக்கும் நாடு. வட  துருவதிற்கு அருகில் இருந்தாலும் எரிமலைகள் மற்றும் வெப்ப நீர் ஊற்றுகள் அதிகம் இருக்கும் நாடு, அவர்கள் இதிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள் மிக குறைந்த விலையில், இதன் மூலம் அவர்கள் இரும்பு பதப்படுத்தும் துறையில் கோலோச்சுகிறார்கள். ஆஸ்ட்ரேலியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து  இரும்பை பதப்படுத்த இங்கே தான் அனுப்புகிறார்கள்

3. Austria – 8.0 points

    இவர்களும் Iceland போலவே மின்சார உற்பத்தி 80% வரை காற்று, நீர் மற்றும் சூரிய சக்தி மூலமே. இங்கே 16 வயதில் ஓட்டு போடலாம் 18 வயதானால் கட்டாய ராணுவ பயிற்சி உண்டு. கல்வி முழுவதும் இலவசம். (செமஸ்டர் கட்டணம் தவிர)

2. Switzerland – 8.1 points
    உலகில் சீஸ் மற்றும் சாக்லேட் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு, இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. உலகிலேயே அதிக குப்பைகளை மறுசுழற்சி செய்யும் ஒரே நாடு.

1. Denmark – 8.2 points

    இங்கும் வரிகள் அதிகம் ஆனால் சலுகைகள் அதிகம் கிடைக்கும் நாடு. கார்களுக்கு இங்குதான் அதிக வரி விதிக்கப்டுகிறது அதிகபட்சம் 180% வரை, அதனால் இங்கே எல்லோரும் இருசக்கர வாகனங்களையே அதிகம் உபயோகிக்கின்றனர்.
   
   இந்த பட்டியலில் இருக்கும் பிற நாடுகள் 

    அமெரிக்கா      - 7.4 புள்ளிகள்       -  17வது இடம்
    பிரிட்டன்          - 7.1 புள்ளிகள்       -  22வது இடம்
    ஃபிரான்ஸ்       - 6.5 புள்ளிகள்       -  39வது இடம் 
    சீனா                   - 6.3 புள்ளிகள்       -   44வது இடம் 
    இந்தியா            -6.3 புள்ளிகள்        -   45வது இடம்
    ஜப்பான்            - 6.3 புள்ளிகள்        -  46வது இடம்