செவ்வாய், மே 31, 2011

நீங்கள் நீங்களாகவே இருங்கள்

ஒரு நாளு ஒரு 40 வயசு பெண்ணுக்கு ஹார்ட் அட்டாக்ன்னு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க, சாகுற நிலைமை அந்த அம்மா கடவுளை பார்த்துச்சு, உடனே அவர் கிட்ட "என் ஆயுசு அவ்வளவுதானான்னு?" கேட்டுச்சு,

கடவுளும்  "இல்லயே இன்னும் 43  வருஷம் 8 மாசம் 27 நாள் நீ உயிரோட இருப்பே"     அப்பிடின்னாரு 

ஆஸ்பத்திரியில அந்த அம்மாவ காப்பாத்திட்டாங்க

இருந்தாலும் அந்த ஆஸ்பத்திரிய விட்டு போகாம,  அது இதுன்னு தன்னை அழகாகிக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செஞ்சுகிச்சு, தலைக்கு டை கூட போட்டுகிச்சு, அதன் கடவுளே சொல்லிட்டாரே இன்னும் 40 வருஷம் உயிரோட இருப்பேன்னு அந்த தைரியத்தில தான்.

எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வர்ற வழியில ஆக்சிடென்ட் ஆயி செத்துப்போச்சாம், நேரா கடவுள் கிட்ட போயி என்னய்யா இன்னும் 40 வருஷம் உயிரோட இருப்பேன்னு நீ தானே சொன்னே அதுக்குள்ள சாக வச்சுட்டியே அப்பிடின்னு கேட்டுச்சாம்,

அதுக்கு கடவுளும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, நீ யாருன்னு எனக்கு தெரியலயேம்மா அப்பிடின்னாராம்

நீதி :

அதான் தலைப்புலேயே குடுத்திட்டேனே

ஒரு தேவதை கதை

ஒரு தடவை ஒரு குழந்தை பூமியில பிறக்குறதுக்கு முன்னாடி கடவுள் கிட்ட போச்சு

"எல்லோரும் சொல்றாங்க நாளைக்கு என்னை பூமிக்கு அனுப்ப போறீங்களாமே? எப்பிடி நான் அங்கே வாழுறது, நான் ரொம்ப சின்னவன்"    அப்பிடின்னுச்சாம்

உடனே கடவுள் " இங்க இருக்க தேவதைகள்ல நான் ஏற்கனவே ஒரு தேவதையை தேர்ந்தெடுத்துட்டேன், அவங்க உனக்காக பூமியில காத்து இருக்காங்க உன்னை பத்திரமா பார்த்துக்க"

"ஆனா கடவுளே இங்க நான் ஒண்ணுமே செய்யுறது இல்ல, சந்தோஷமா பாட்டு பாடிக்கிட்டு இருக்கேன் அங்கே போயி எப்பிடி பாடுறது"   அப்பிடின்னுச்சு

கடவுளும் "அந்த தேவதை உனக்காக பாட்டு பாடுவாங்க, உன்னைய சிர்க்க வச்சு சந்தோஷமா வச்சுக்குவாங்க, நீயும் அந்த தேவதையோட அன்பால சந்தோஷமா இருப்ப"    அப்பிடின்னாரு

"அவங்க பேசுற பாஷை எப்பிடி இருக்கும், நான் எப்பிடி அதை கத்துகிறது எப்பிடி புரிஞ்சுகிறது " அப்பிடின்னுச்சு குழந்தை

கடவுள் "உன்னோட தேவதை உனக்கு சொல்லிதருவாங்க, நீ சுலபமா புரிஞ்சுக்கலாம்" அப்பிடின்னாரு

குழந்தை "நான் அங்க போயிட்டா உங்க கிட்ட பேச முடியாதே" அப்பிடின்னுச்சு

கடவுள் சொன்னார் "உன் தேவதை உனக்கு ரெண்டு கையையும் குவிச்சு என்னை எப்பிடி கும்புடுறதுன்னா சொல்லித்தருவாங்க"

"பூமியில நிறைய கெட்ட மனுசனுங்க இருப்பாங்களே? அவங்கள எப்பிடி சமாளிக்கிறது"

"உன் தேவதை தன் உயிரையும் பத்தி கவலைபடாம உன்னை கெட்டவங்க கிட்ட இருந்து காப்பாத்துவாங்க" அப்பிடின்னாரு கடவுள்

"நான் உங்களை பார்க்காம கவலையா இருப்பேனே" அப்ப்டின்னுச்சு குழந்தை

"உன் தேவதை எப்பவும் என்னை பத்தி உன் கிட்ட பேசிக்கிட்டு இருப்பாங்க அது தான் நீ திரும்ப என்கிட்ட வரும் வழி"  அப்பிடின்னாரு கடவுள்

"சரி கடவுளே நான் பூமிக்கு போற நேரம் வந்துருச்சு, அந்த தேவதையோட பேரு என்ன கொஞ்சம் சொல்லுங்க" அப்பிடின்னுச்சு

"தேவதையோட பேரு முக்கியமில்லை, நீ எப்பவுமே அவங்கள அம்மான்னு தான் கூப்பிடப்போறே" அப்பிடின்னாரு கடவுள்

நெஞ்சை உருக்கும் குறும்படம்


டிஸ்கி :

இந்த படத்த பார்த்ததுக்கு அப்பறம் எதையும் டைப் பண்ண தோணல, உங்களுக்கு என்ன தோணுதோ  கொஞ்சம் கமெண்ட்-ல போடுங்க.
நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது மட்டும் புரியுது 

திங்கள், மே 30, 2011

கொஞ்சம் நொறுக்ஸ்

மனைவி     : என்னங்க ரெண்டு நாளு என்னை பார்க்க முடியலேன்னா என்ன பண்ணுவீங்க
கணவர்        : ரொம்ப சந்தோஷபடுவேன்
திங்களகிழமை பார்க்க முடியல
அப்பிடியே செவ்வாய், புதன் கிழமையும் போச்சு
வியாழக்கிழமை லேசா வீக்கம் வத்தி ஒர கண்ணால வீட்டுக்காரம்மாவ பார்க்க முடிஞ்சது

மனைவி    : என்னங்க ஏதாவது தேடிக்கிட்டு இருக்கீங்களா?
கணவர்        : இல்லையே ஏன் கேட்குறே?
மனைவி     : அப்ப நம்ம மேரேஜ் சர்டிபிகேட்-அ வச்சுக்கிட்டு என்ன பண்றீங்க?
கணவர்        : எங்கயாவது எக்ஸ்பைரி டேட் இருக்கான்னு பார்த்துகிட்டு இருக்கேன்!!??

ஒருவர்            : சார் என் பொண்டாடிய காணோம்
இன்னொருவர்    : யோவ் இது போஸ்ட் ஆஃபிஸ், போலீஸ் ஸ்டேஷன் போயி கம்ப்ளைண்ட் குடு
ஒருவர்            : சே சந்தோசத்தில எங்க இருக்கேன்னு தெரியலே!!!??

வக்கீல்     : உங்க வீட்டுக்காரரை ஏம்மா இப்பிடி அடிச்சீங்க
பெண்        : காலையில எழுந்த உடனே நான் எங்கே இருக்கேன் சாந்தின்னு கேட்டாரு
வக்கீல்     : அதுல என்னம்மா தப்பு
பெண்        : நாசமா போச்சு என் பேரு சாந்தி இல்ல சார், சுமதி

வக்கீல்     : ஏன்யா, அந்த ஆள விட்டுட்டு உன் பொண்டாட்டிய சுட்டே
ஆண்        : என்னால வாரத்துக்கு ஒரு ஆள சுட முடியாது சார்

ஒருவர்               : பொம்பளைங்க மட்டும் எப்பிடி, ரொம்ப நாள் சந்தோஷமா, ஆரோக்யமா வாழுறாங்க?
இன்னொருவர்    : அவங்களுக்குதான் பொண்டாட்டி     கிடையாதே!!??

ஆண்     :     எம ராஜாவே என் மனைவிக்கிட்ட பேசணும் இந்த ஃபோன்-ல பேசிக்கவா?
எமன்    :     சரி பேசிக்க
ஆண்    :     எவ்வளவு சார்ஜ் பண்ணுவீங்க
எமன்    :     நரகம் டூ நரகம் ஃப்ரீ

உன்னால் முடியும்

கடவுள்
உன் வேண்டுதலுக்கு பதில் தந்தால்
     உன் நம்பிக்கையை அதிகரிக்கிறார் என்று பொருள் கொள்

உன் வேண்டுதலுக்கு பதில் தர நேரம் எடுக்கிறார் என்றால்
     உன் பொறுமையை அதிகரிக்கிறார் என்று பொருள் கொள்

உன் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை என்றால்
     உன்னால் முடியும் என்று அவருக்கு தெரியும் என்று பொருள் கொள்


கடவுளை நம்பு

வாழ்வின் விளிம்பில் நிற்கும் போது கடவுளை நம்பு
ஒன்று அவர் நீ கீழே விழும் போது பிடித்துக்கொள்வார்
இல்லை உனக்கு பறக்க கற்றுத்தருவார்

வியாழன், மே 26, 2011

உறவுகளின் மேல் நம்பிக்கை வையுங்கள்

ஒரு தடவ ஒரு அப்பாவும், மகளும் ஆத்தை கடந்து போயிக்கிட்டு இருந்தாங்க,
அப்பா சொன்னாரு "மகளே என் கையை நல்லா பிடிச்சுக்கோம்மா" இல்ல ஆத்துல விழுந்துடுவே
மகளோ "நீங்க என் கையை பிடிச்சுக்கோங்க டாடி" அப்பிடின்னா,
"ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்" அப்பிடினு அப்பா கேட்டாரு
"நான் உங்க கைய பிடிச்சுகிட்டா விட்டாலும் விட்டுடுவேன், ஆனா நீங்க என் கைய பிடிச்சு இருந்தா எப்பயுமே விட மாட்டீங்கள்ள" அப்பிடின்னா


நீதி :
உறவுகளில் முக்கியமானது நம்பிக்கை, எனவே நீங்கள் விரும்புபவரின் கைகளை பற்றிக்கொளுங்கள் அவர்கள் பற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்

அம்மா..........


இன்று என் கண்கள்
    உன்னை காண இயலும்

இன்று என் இதயம்
    உன்னை உணர இயலும்

இன்று என் சுவாசம்
    உன்னை பகுத்தறிய இயலும்

எனக்கு தெரியும்  உன்னை விரும்புகிறேன்,
      உன்னை சந்திக்கும் முன்பிருந்தே


புதன், மே 25, 2011

கருணாநிதி பேட்டியும் பின்னே என்னோட டவுட்டும்

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?

பதில்: சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

டவுட்டு :  இதுவரை படிச்சா மாணவர்கள் எல்லாம் என்ன நடுத்தெருவிலயா நிக்கிறாங்க?

கேள்வி: டெல்லி சென்ற நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லையே?

பதில்: டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.

டவுட்டு :  அப்புறம் என்னாத்துக்கு மத்தவங்கள மட்டும் சந்திச்சாராமா?கேள்வி: சட்ட மேலவை வராது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதும், மேலவை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.

டவுட்டு :  வேற என்னன்ன எதிர்பார்த்துக்கிட்டு இருக்காறோ? 


கேள்வி: திமுக ஆட்சியின் போது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. அப்படி சொத்து அபகரிக்கப்பட்டிருந்தால், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

டவுட்டு :  ரைட்டு,  ஆனா கேட்கும் போது கரெக்ட்-அ குடுத்துடுவீங்களா?கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?

பதில்: இப்போது என்ன அவசரம்.

டவுட்டு :  இன்னும் 4 வருஷம் கழிச்சு பண்ணலாம், இப்போ செய்ய வேண்டிய வேலை வேற இருக்குனு சொல்றாரோ?  


கேள்வி: திமுக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?

பதில்: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

டவுட்டு :  எது உங்க பிறந்தநாளை சிறப்பா கொண்டாடுறதா? கேள்வி: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தலையிடுங்கள்.

டவுட்டு :  என்ன பிரயோஜனம், ஏற்கனவே முழி பிதுங்குற அளவுக்கு பீஸ ஏத்தி  விட்டுட்டீங்க


கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி ரத்து செய்துள்ளதே?

பதில்: தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.

டவுட்டு :  புரியலியே, அப்ப உங்களுக்கு ஓட்டு போட்டவங்களுக்கு மட்டும் ஏதாவது நலத்திட்டம் கட்சியில இருந்து செய்ய போறீங்களா? 

நாம் எப்படியோ உலகம் அப்படியே

அது ஒரு ஊருக்கு ஒதுக்குபுறமான இடம், அங்கே ஒரு ஞானி குடிசை போட்டுகிட்டு வாழ்ந்து கிட்டு இருந்தாரு. அந்த ஊருக்குள்ள போகணும்ன்ன அந்த குடிசை வழியே தான் போகணும்.

ஒரு நாளு அந்த பக்கமா ஒரு ஆளு வந்தான், வந்தவன் அந்த ஞானி கிட்ட
"இந்த ஊர்ல இருக்குறவங்க எல்லாம் எப்பிடி ?"ன்னு கேட்டான்,
அவரும் "இதுக்கு முன்னாடி நீ எந்த ஊர்ல இருந்தியோ அங்கே எல்லோரும் எப்பிடி இருந்தாங்க?" அப்பிடின்னு திருப்பி கேட்டாரு    

"அந்த ஊர்ல ஒருத்தன் கூட நல்லவன் இல்ல, எல்லோரும் திருட்டுப்பசங்க, இரக்கம் கிஞ்சித்துக்கும் கிடையாது" அப்பிடின்னான்

உடனே ஞானியும் இந்த ஊர்லயும் எல்லோரும் அப்பிடிதான் ரொம்ப மோசமானவங்க அப்பிடின்னாரு. அவனும் இந்த ஊர் நமக்கு  சரிப்படாதுன்னு திரும்பி போயிட்டான்

கொஞ்ச நாள் போச்சு, இன்னொருத்தான் அந்த ஊருக்கு வந்துகிட்டு இருந்தான், அவனும் பழைய ஆள் மாதிரியே ஞானி கிட்ட

"இந்த ஊர்ல இருக்குறவங்க எல்லாம் எப்பிடி ?"ன்னு கேட்டான்,

அவரும் அதே பழைய கேள்வியை "இதுக்கு முன்னாடி நீ எந்த ஊர்ல இருந்தியோ அங்கே எல்லோரும் எப்பிடி இருந்தாங்க?" அப்பிடின்னு திருப்பி கேட்டாரு    

"அந்த ஊர்ல இருந்தவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க, ரொம்ப அனுசரணையா இருப்பாங்க. ஒருத்தருக்கு பிரச்சனைன்னு வந்தா எல்லோரும் சேர்ந்து அதை தீர்த்து வைப்பாங்க"  அப்பிடினு  சொன்னான்

உடனே ஞானியும் இந்த ஊர்லயும் எல்லோரும் அப்பிடிதான் ரொம்ப நல்லவங்க அப்பிடின்னாரு.

நீதி

இந்த உலகம் எப்பிடி இருக்கிறதோ நாம் அப்படி பார்ப்பதில்லை, நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே பார்க்கிறோம், பல நேரங்களில் நம்மை  சுற்றி இருப்பவர்கள் செய்வது நாம்  என்ன செய்தோமோ  அதன் விளைவுகளாகவே இருக்கும்.

செவ்வாய், மே 24, 2011

எளிதெலாம் எளிது அல்லஒரு நாளு ஒரு ஆளு கூடை நிறைய புழுக்களோட நடந்து போய்க்கிட்டு இருந்தாறு, வழியில ஒரு புறா அவர நிப்பாட்டி எங்கே போறீங்க, கூடையில என்ன இருக்கு அப்பிடின்னு கேட்டுச்சு, அந்த ஆளும் கூடையில புழு இருக்கு, சந்தையில போயி வித்துட்டு இறகு வாங்கப்போறேன்ன்னு சொன்னாரு.

புறாவும் எனக்கும் புழு தேவைப்படுது, என்கிட்ட அந்த புழுவை குடுங்க, நான் உங்களுக்கு இறகு தாரேன் அப்பிடின்னுச்சு, அவரும் சரின்னு சொல்லிட்டு புழுவை குடுத்துட்டு புறா கிட்ட இறகை வாங்கிக்கிட்டு போயிட்டாரு.  இதே மாதிரி தெனமும் நடக்க ஆரம்பிச்சது

நாளடைவுல புறவோட இறகெல்லாம் காணாம போச்சு, புறா இப்ப பார்க்கவே அசிங்கமா ஆயிடுச்சு, அதுக்கிட்ட இறகுகள் இல்லாததால புழுவை வாங்க முடியல.  பறக்கவும் முடியாம, இரையும் கிடைக்காம புறா செத்துப்போச்சி


நீதி

புறா மாதிரி நாம கூட எல்லாத்துக்கும் எளிதான வழி தேடுறோம், ஆனா சில நேரம் அந்த புறா மாதிரி ஆயிடுறோம்.

 

வடைய சுட்டுட்டு போனது யாரு?


இங்க நான் வடைன்னு சொன்னது, நாம வாழ்க்கையில என்ன வேணும்னு விரும்புறோமோ அதைத்தான், அது வேலையா இருக்கலாம், பணமா இருக்கலாம், உறவு முறையா இருக்கலாம், சுதந்திரமா இருக்கலாம், வீடா இருக்கலாம், காரா இருக்கலாம் இப்பிடி எதுவா வேணா இருக்கலாம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க் இருக்கும் வடைய பத்தி, நாம அது கிடைக்கணும்ன்னு ரொம்ப பிரயத்தனம் பண்ணுவோம், ஏன்னா அது நமக்கு சந்தோஷம் தரும்ன்னு நம்புறோம்.  ஒரு தடவை வடை உங்களுக்கு கிடைச்சுடிச்சுன்னா அதோடைய ஒண்ணாயிருவோம், அது தொலைந்து போனாலோ அல்லது நம்மள விட்டு போற சூழ்நிலையில கொஞ்சம் ஆடித்தான் போயிறோம். 

உங்க வடைய யாரும் சுடாம இருக்க சில விஷயங்கள் செய்யனும், அது கீழே

உங்க வடை உங்களுக்கு முக்கியம், உங்களுக்கு அதிகம் வேண்டுமென்றால் நீங்கள் அதில்  தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும்

உங்களை சூழ்நிலைக்கு தகுந்த படி மாற்றிக்கொள்ள தயங்கினால் உங்கள் வடை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்

உங்கள் வடையை அடிக்கடி சோதித்துக்கொளுங்கள், அது பழசாகிவிட்டதா என்று

புதிய வழிகளில் முயற்சித்தால் புது வடைகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு

உங்கள் பயங்களை தாண்டி வாருங்கள், புதிய வடைகளை அடையாளம் காணும் வாய்ப்புகள் கிடைக்கும்

புதிய வடையை பற்றி நினைப்பதே உங்களை வடையை நோக்கி முன்னேற வைக்கும்

எவ்வளவு வேகமாக பழைய வடையை விட்டு விட நினைக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக புதிய வடையை கண்டடைவீர்கள்

பழைய வடை கிடைக்காத சூழ்நிலையில் அதற்காக கலங்காமல்,   புதிய வடையை தேடுவது நல்லது

பழைய நம்பிக்கைகள், புதிய வடைகளை நோக்கி முன்னேற்றாது

சிறிய மாற்றங்களை முன்கூட்டியே அனுமானிப்பது அதற்கேற்ப மாற்றிக்கொள்ளுவது உங்களுக்கு பெரிய வடை கிடைக்க வாய்ப்பளிக்கும்

மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், அதை எதிர்பார்த்து காத்திருங்கள்.

மாற்றங்கள் நிகழும் போது வேகமாக பற்றிக்கொள்ளுங்கள் அதன் மூலம் புதிய வடைக்கான வாய்ப்புகள் கிடைக்கும்

உங்கள் வடையை எடுங்கள் கொண்டாடுங்கள்


திங்கள், மே 23, 2011

குளம் போல் இரு

குளம் போல் இரு

ஒரு குரு தன்னுடைய சீடன் எப்போதும் கவலையோடு இருப்பதை கண்டார். அவனை பக்கத்தில் அழைத்து ஏன் எப்போதும் கவலையுடன் இருக்கிறாய்? என்று கேட்டார், சீடனோ பதிலேதும் சொல்லவில்லை. சரி அவனுக்கு விருப்பமில்லை போலும் என்று அவனை வற்புறுத்தவில்லை, ஆனாலும் அவனை அப்படியே விட்டு விடவும் மனமில்லை.

அவனை மாலை நேரம் தன் அறைக்கு வரச்சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். மாலை அந்த சீடன் குருவின் அறைக்கு சென்றான். குரு ஒரு கை நிறைய உப்பை அள்ளி ஒரு குவளை நீரில் கரைத்து குடிக்கச்சொன்னார்.  சீடனால் குடிக்க முடியவில்லை, எப்பிடி இருக்கிறது என்று கேட்டார், குடிக்க முடியவில்லை என்றான் சீடன்

சரி என்னோடு வா என்று அழைத்தார் குரு,  சீடனும் குழப்பத்துடன் அவரோடு சென்றான்.   சற்று தூரத்தில் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு கை உப்பை கரைத்தார் குரு, சீடனிடம் இந்த நீரை எடுத்து குடி என்றார். சீடனும் கொஞ்சம் குடித்தான், இப்போது எப்பிடி இருக்கிறது என்று குரு கேட்டார். நன்றாய் இருப்பதாய் சீடன் சொன்னான்.

இப்போது குரு சொன்னார், இந்த உப்பை போலத்தான் உன்னுடைய கவலைகளும், வலிகளும் கூடுவதும் குறைவதும் அது கரைக்கப்படும் இடத்தை பொறுத்து,  எனவே உன் சிந்தனைகளை மாற்று உன் வலிகள் குறையும் அப்பிடின்னாரு


நீதி :
குவளை போல் இல்லாமல் குளம் போல் இரு

முத்தான மூன்றுகள்

காத்திருக்காத மூன்று    
    காலம், மரணம், வாடிக்கையாளர்

ஒரு முறை மட்டும் கிடைக்கும் மூன்று
    அம்மா, அப்பா, இளமை

புறப்பட்டால் திரும்பாத மூன்று   
    அம்பு, சொல், ஆன்மா

அடக்க வேண்டிய மூன்று
    சொத்து,  உணவு, உடல்
   
மறக்க வேண்டிய மூன்று
    கூடா நட்பு, சுயநலம், வதந்தி
   
நினைவில் கொள்ள வேண்டிய மூன்று   
    கடவுள், கடினஉழைப்பு,    கல்வி

மறக்க கூடாத மூன்று
    கடன்,கடமை, நோய் 

மதிக்க வேண்டிய மூன்று
    மாதா, பிதா, குரு

கட்டுக்குள் இருக்க வேண்டிய மூன்று
    காமம், பேராசை, மனோபலம்
   
இரக்கம் காட்ட வேண்டிய மூன்று
    குழந்தைகள், பசியுடையோர்,   முதியோர்

சனி, மே 21, 2011

ஒரு பித்தன் பேசுகிறேன்

மகிழ்ச்சி ஒரு பயணம், சேருமிடம் அல்ல.  அதனால் மகிழ்ச்சிக்காக காத்திருக்காதீர்கள், இப்போது இருப்பதை விட மகிழ்ச்சியான தருணம் எப்போதும் வராது

எல்லோரையும் எல்லா தவறுகளுக்கும் மன்னியுங்கள்

வாழ்க்கை அழகா இல்லாமல் இருக்கலாம் ஆனாலும் அது நல்லது

யாரோடும் உங்களை பொருத்தி பார்க்காதீர்கள், ஏனென்றால் அவர்கள் கடந்து வந்த பாதைகள் உங்களுக்கு தெரியாது

ஒரு நாளைக்கு மூன்று பேரையாவது சிரிக்கவையுங்கள்

விழித்து இருக்கும் போது நிறைய கனவு காணுங்கள்

உங்கள் மகிழ்ச்சியை உங்களை தவிர யாரும் அதிகரிக்க முடியாது

வாழ்க்கை சிறியது அதை பிறரை வெறுப்பதற்கு விரயமாக்காதீர்கள்

இறந்த காலத்துடன் சமரசம் செய்து கொள்ளுங்கள், இல்லையேல் இறந்த காலம்  உங்கள்  நிகழ்காலத்தை பாழாக்கி விடும்


இன்றைய சிரிப்பு 

ஒரு போதகர் இறக்கும் சமயத்தில அவரோட டாக்டரையும்,  வக்கீலையும் வீட்டுக்கு வரச்சொல்லி செய்தி அனுப்புனார். ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தாங்க. போதகர் அமைதியா படுத்து இருந்தாரா, இவங்க வந்த உடனே ரெண்டு பக்கமும் ஒவ்வொருதரா நிக்க வச்சுகிட்டாரு. எதுவுமே பேசல உத்திரத்தையே பார்த்துக்கிட்டு படுத்து இருந்தாரு.

கொஞ்ச நேரம் ஒரு சத்தமும் இல்லை, பொறுமை  இழந்த டாக்டர் எங்களை ஏன் இங்க வரச்சொன்னீங்க, ஏதாவது ஆசை இருக்கா நாங்க என்ன செய்யணும் சொல்லுங்க? அப்பிடின்னு கேட்டாரு.

உடம்புல இருந்த கொஞ்ச நஞ்ச சக்தியெல்லாம் திரட்டி போதகர் பேச ஆரம்பிச்சாரு, எனக்கு ஒரே ஒரு ஆசை, அதான் உங்களை வரச்சொன்னேன். உடனே டாக்டர் சொல்லுங்க, நாங்க என்ன செய்யணும்? உடனே அந்த போதகர் என் பக்கத்தில இருந்தா போதும்.  அப்பிடின்னாரு. அவங்களுக்கு ஒண்ணும் புரியல, ரெண்டு பேரும் முழிச்சிக்கிட்டே இருந்தாங்க, அப்ப போதகர் சொன்னாரு யேசு ரெண்டு திருடனுங்க நடுவில தான் செத்தாரு, நானும் அப்பிடி சாகணும்ன்னு தான் உங்கள வரச்சொன்னேன்.வெள்ளி, மே 20, 2011

நெகட்டிவ் (மைனஸ்) ஓட்டு பெறுவது எப்பிடி

உங்க பதிவுகளுக்கு எப்படி நெகட்டிவ் (மைனஸ்) ஓட்டுகள் வாங்குவது எப்படின்னு சொல்லித்தர போறேன்.  ஏன்னா நெகட்டிவ் ஓட்டு வாங்குறவாங்க தான் இப்ப பிரபல பதிவராம் அப்பிடின்னு ஒரு வதந்தி பரவி கிட்டு இருக்கு.  அதனால கீழே இருக்க ஸ்டெப்ஸ்-அ ஃபாலோ பண்ணுங்க நீங்களும் பிரபல பதிவர் ஆகிடுங்க

ஸ்டெப் 1    :    மொதோ நீங்க நிறைய கமெண்ட் போட பழகிக்கிடுங்க

ஸ்டெப் 2     :     நிறைய வலைப்பூக்களுக்கு ரெகுலரா போங்க

ஸ்டெப் 3    :     இப்ப உங்களுக்கு ஒரு ஐடியா கெடைக்கும் யாரெல்லாம் தாதா* பதிவர் அப்பிடின்னு

ஸ்டெப் 4     :    இங்கிருந்து தான் உங்க உண்மையான வேலை ஆரம்பிக்குது

ஸ்டெப் 5    :    உங்க லிஸ்ட்ல இருக்குற தாதா பதிவர்கள்ல யாரு ரொம்ப உணர்ச்சி வசப்படுறாரு அப்பிடின்னு பாருங்க

ஸ்டெப் 6    :    அவரு என்ன பதிவு போட்டாலும் கமெண்ட்-ல கொஞ்சம் அவர உசுப்பேத்தி விடுங்க,

ஸ்டெப்    7    :    உதாரணத்திற்கு  இதெல்லாம் ஒரு விஷயமா?  , இது ஏற்கனவே தெரியும், உங்களுக்கு வேற வேலை இல்லயா?

அவளவு தான் நீங்க பண்ண வேண்டியது, மிச்சத்த அந்த தாதா பதிவர் பார்த்துக்கிடுவார்.   அவர் மட்டுமா நெகட்டிவ் ஓட்டு போடுவாரு அவர் பதிவுக்கு வர்ற  போறவங்களையெல்லாம் இப்பிடி ஒருத்தன் இருக்கான் (உங்களைத்தான்), அவன் அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டான்  அப்பிடின்னு இன்ஃபர்மேஷன் குடுத்துடுவாரு.

அப்பறமென்ன நீங்க என்ன பதிவு போட்டாலும் ஹிட்ஸ் நிறைய இருக்கும் ஆனா உங்க ஒரு ஓட்டை தவிர வேற வோட்டை எத்தனை  வருசமானாலும் பார்க்கமுடியாது. நீங்க தான் அப்புறம் ஓட்டு No. 1 பதிவர்.

தாதா பதிவர் = குறைந்த பட்சம் 200 followers இருக்கணும், பதிவு போட்ட 1 மணி நேரத்தில 20 ஓட்டு அப்புறம் 40 கமெண்ட்-ஸும் இருக்கணும்.

அப்பதான் நான் மேல சொன்னது எல்லாம் நடக்கும், நீங்க பாட்டுக்கு நான் ஏதாவது செய்வேன்னு நம்பி ஏதாவது முயற்சி செஞ்சா எதுவும் நடக்காது ஏன்னா நான் ரொம்ப நல்லவன் அப்பறம் நான் தாதா பதிவர் அல்ல 
வியாழன், மே 19, 2011

கொஞ்சம் சிரிங்க பிளீஸ்

பெண்             :    சார், நேத்து காய் வாங்க போன என் வீட்டுக்காரர் இன்னும் வீட்டுக்கு வரலை
போலீஸ்        :     நீங்க வேற எதுனா சமைச்சு சாப்பிட வேண்டியது தானே, அவருக்காக ஏன் காத்துக்கிட்டு  இருக்கீங்க
***************************************************************

மனைவி        :    நீங்க இந்த கண்ணாடிய கழட்டி வச்சுட்டா,  20 வருசத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியே ரொம்ப அழகா இருக்கீங்க
கணவர்            :     நான் இந்த கண்ணாடிய கழட்டி வச்சதுக்கு அப்புறம் தான் நீ கூட அழகா தான் தெரியிர!!?
***************************************************************

மனைவி        :     என்னங்க நான் செத்து போயிட்டா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்க தானே?
கணவர்            :     இல்லம்மா
மனைவி        :     இல்ல நீங்க பண்ணிக்குவீங்க, இப்ப பொய் சொல்றீங்க
கணவர்            :     (கடுப்பாகி) சரி பண்ணிக்குவேன்னு வச்சுக்க
மனைவி        :     புதுசா வரவ இந்த பெட்ல தானே படுப்பா
கணவர்            :    ஆமா
மனைவி        :     அவளுக்கு என்னோட டிரஸ் எல்லாம் போட்டுக்கிட குடுப்பீங்க தானே
கணவர்            :     இல்ல, அவ உன்ன விட ஹைட்டு ஜாஸ்தி
***************************************************************

ஒருவர்                :     ஏன்யா செத்த? ஏன் செத்த? நீ செத்ததால என் வாழ்க்கையே கேள்விக்குறியாயிருச்சே?
இன்னொருவர்     :     யாருக்காகங்க இப்பிடி வருத்தப்படுறீங்க
ஒருவர்         :      எல்லாம் என் பொண்டாட்டியோட மொதோ புருசன பத்தி தான்
***************************************************************

கணவர்         :     ஏம்மா நான் செத்து போயிட்டா நீ  இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியா?
மனைவி        :     என்னங்க இப்பிடி கேட்டுட்டீங்க? நீங்க செத்து போயிட்டா என் தங்கச்சி கூட இருந்துக்குவேன், ஆமா நான்
                    செத்துட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?
கணவர்            :     நானும் உன்னை மாதிரி தான், உன் தங்கச்சி கூட இருந்துக்குவேன்
***************************************************************

கணவர்            :     இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை,  நான் சந்தோஷமா இருக்கணும் அதுக்காக மூணு சினிமா டிக்கெட் வாங்கிட்டு    
                    வந்து இருக்கேன்
மனைவி        :     எதுக்கு மூணு டிக்கெட்?
கணவர்            :     உனக்கும் உன் அப்பா, அம்மாக்கும்
***************************************************************

மனைவி        :     என்னாங்க, எவனோ  கிச்சன்-ல புகுந்து நான் பண்ணி வச்சு இருந்த கேக்கை தின்னுட்டான்
கணவர்            :    இப்ப யாருக்கு ஃபோன் பண்ணனும் போலீசுக்கா இல்ல ஆம்புலன்சுக்கா?

ஒரு டாக்டரும்,  புரோகிதரும் ஒரே பொண்ணே லவ் பண்ணாங்க? இந்த புரோகிதர் அந்த பொண்ணுக்கு தினமும் ஆப்பிள் குடுக்க ஆரம்பிச்சாரு 

டாக்டர்            :  ஏன் டெய்லி ஆப்பிள் குடுக்கிறே
புரோகிதர்        :  தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை பார்க்க வேண்டியது இல்லையில
***************************************************************

ஒரு பெண்        : தண்ணி அடிச்சுகிட்டு இருந்த உன் வீட்டுக்காரரை யோகா பண்ண அனுப்பிச்சியே ஏதாவது மாற்றம் தெரியுதா
மற்றொருவர்    : என்னாத்த சொல்ல, இப்ப எல்லாம் தல கீழா இருந்தே தண்ணி அடிக்குறாரு.
***************************************************************

இப்படியும் சில காதல்

திருமணத்திற்கு முன்

உன்னை சந்தித்த போது
பேச பயந்தேன்

பேச ஆரம்பித்த போது
கைகள் பற்ற பயந்தேன்

கைகள் பற்றிய போதோ
உன்னை காதலித்து விடுவேனோ என்று பயந்தேன்

இப்போது உன்னை காதலிக்கிறேன்
ஆனால் உன்னை இழந்துவிடுவேனோ என்று பயப்படுகிறேன்


திருமணமான சில மாதங்களுக்கு பின் 

காதல் இடும்பை தரும் சில நேரம்
இடும்பை தராவிட்டால் அது காதல் இல்லை என்று உணர்ந்தேன்பிரிந்து சென்ற பின்

எனக்கு தெரியும் இன்று நீ என்னுடன் இல்லை
தனிமையின் துணையோடு இரவில்
உறங்காமல் காத்து இருக்கிறேன்
என்றேனும் நீ திரும்பி வருவாயென

புதன், மே 18, 2011

சுலபம் கடினம்

கெட்டது சுலபம், நல்லது கடினம்
தோற்பது சுலபம், வெல்வது கடினம்

பேசுவது சுலபம், கேட்பது கடினம்
முடிப்பது சுலபம், தொடங்குவது கடினம்

அழுக்கு சுலபம், சுத்தம் கடினம்
கனவு சுலபம், அதை மெய்ப்படுத்துவது கடினம்

பொய் சுலபம், மெய் கடினம்
விழுவது சுலபம், எழுவது கடினம் 

சந்தேகம் சுலபம், நம்பிக்கை கடினம்
சிரிப்பு சுலபம், கண்ணீர் கடினம்

விமர்சனம் செய்வது சுலபம், அதை எடுத்துக்கொள்வது கடினம்
போர் சுலபம், அமைதியாய் இருப்பது கடினம்

முட்டாளாய் வாழ்வது சுலபம், மேதாவியாய் வாழ்வது கடினம்
கோழையாய் இருப்பது சுலபம், வீரனாய் இருப்பது கடினம்

விருந்து சுலபம், பட்டினி கடினம்
உறக்கம் சுலபம், விழித்து இருத்தல் கடினம் 

வீழ்வது சுலபம், வாழ்வது கடினம்
நண்பனை பெறுவது சுலபம், நண்பனாய் இருப்பது கடினம்


மன அழுத்தத்தை சமாளிப்பது எப்பிடி

ஒரு நாளு ஒரு தத்துவ பேராசிரியர் அவரோட மாணவர்களைப்பார்த்து, இந்த தண்ணீர் டம்ப்ளர் எவ்வளவு எடை இருக்கும் அப்பிடின்னு கேட்டாரு. பசங்க எல்லாம் ஒரு 50 கிராம்லா இருந்து 100 கிராம் இருக்கும் அப்பிடின்னு சொன்னாங்க. இதை உங்களால் தூக்க முடியுமா? அப்பிடினு அடுத்த கேள்வியா கேட்டாரு, உடனே ஒரு பையன் நான் ரெடி அப்பிடினு, உடனே அந்த பையன் உள்ளங்கையில  எடுத்து வச்சுட்டு நான் சொல்ற வரைக்கும் இதை கீழே வைக்காதேன்னு சொல்லிட்டாரு.

கொஞ்ச நேரம் ஆச்சு பையன் கை லேசா நடுங்க ஆரம்பிச்சது, பையன் பொறுத்துக்கிட்டு டம்ப்ளரா கையில வச்சுக்கிட்டு இருந்தான்.   ஒரு மணி நேரம் ஆச்சு இப்ப பையனோட தோள்பட்டை வலிக்க ஆரம்பிச்சது, அதையும் பொறுத்துகிட்டான்.  கொஞ்ச நேரம் கழிச்சு அவனால சமாளிக்க முடியல, சார் இதுக்கு மேல முடியாது கீழே வச்சிரவா அப்பின்னு கேட்டான்.

இப்ப அந்த ஆசிரியர் சொன்னாரு, ஒரு பொருளோட எடை எப்பவும் அதை எவ்வளவு நேரம் வச்சுருக்கிறோம் என்பதை பொறுத்தே இருக்கும், அது மாதிரி தான் நம்முடைய மனஅழுத்தமும் எப்பயுமே மனசுக்குள்ளேயே வச்சுகிட்டு இருந்தா பிரச்சனை தான். எப்ப எல்லாம் முடியுதோ அப்பவெல்லாம் அதை கீழே வச்சுடணும்.  எப்ப தேவையோ அப்ப மட்டும் அதை தூக்கிக்கிட்டா போதும்.

எனவே மக்களே, ஆஃபிஸ் டென்சனெல்லாம் ஆஃபிஸ்-லயே விட்டுவிட்டு வீட்டுக்கு போவோம், மறுநாள் ஆஃபிஸ் வந்து அதை திரும்பவும் தூக்கிவோம்.

செவ்வாய், மே 17, 2011

அன்பிற்கு மட்டுமல்ல கோபத்திற்கும் எல்லை இல்லை

ஒரு நாள் ஒரு தந்தை, தன்னுடைய காரை துடைத்துக்கொண்டு இருக்கும் போது அவருடைய நான்கு வயது மகன் காரில் ஏதோ கிறுக்கிக்கொண்டு இருப்பதை பார்த்தார்.   அவருடைய கோபம் தலைக்கு ஏறி வண்டியில கிறுக்காதேன்னு எத்தன தடவை சொல்லீருக்கேன்னு சொல்லி தள்ளிவிட்டாரு, பையன் பக்கத்தில இருந்த கல்லு மேல விழுந்து விரல்ல அடி பட்டுடுச்சு.

ஆஸ்பத்ரிக்கு எடுத்துட்டு போனா 2 விரல எடுக்கணும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க, எல்லாம் முடிஞ்ச பின்னாடி பையன் கையில கட்டோட உட்கார்ந்து இருந்தான். அப்பா கிட்ட வந்தாரு, அவர் கிட்ட பையன் "என் விரல் எப்ப டாடி வளரும்" அப்பிடின்னு கேட்டான். அப்பாவால தாங்க முடியலே. 

அப்பறம் வீட்டுக்கு வந்த பின்னாடி கார் கிட்ட போயி பார்த்தாரு, பையன் காருக்கு பின்னாடி "Dad I Love You" ன்னு எழுதி வச்சு இருந்தான்.

நீதி:  அன்பிற்கு மட்டுமல்ல கோபத்திற்கும் எல்லை இல்லை

வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடு

ஒரு விவசாயி தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரரை திட்டிவிட்டார், பின்னர் தவறை உணர்ந்த அவர் பாவமன்னிப்பு கேட்க  அருகில் இருக்கும் தேவாலயத்திருக்கு சென்றார். அங்கிருந்த போதகரிடம் விஷயத்தை கூறி பாவமன்னிப்பு கோரினார். போதகர் அவரிடம் ஒரு கூடை நிறைய கோழியின் இறகுகளை கொடுத்து ஊரின் நடுவில் சென்று கொட்டிவிட்டு  வரச்சொன்னார்.  விவசாயியும் போதகர் சொன்னபடி கொட்டி விட்டு வந்தார்.

போதகர் கொட்டியதை மீண்டும் அள்ளிக்கொண்டு வரச்சொன்னார்.  விவசாயியும் தன்னால் முடிந்த வரை அதை அள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை காலி பையுடன் திரும்பி வந்தார்.  இப்போது போதகர் சொன்னார், இந்த உண்மை உன் வார்த்தைகளுக்கும் பொருந்தும்,

"ஒரு முறை கொட்டி விட்டால் மறுமுறை உன்னால் அள்ள முடியாது. எனவே வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடு"

டிஸ்கி :  வடிவேலுவுக்கும் இந்த இடுகைக்கும் எந்த தொடர்பும் இல்லை 

திங்கள், மே 16, 2011

கடவுளும் நானும்

கடவுளிடம் நான் சக்தி கொடு என்றேன்
அவரோ கஷ்டங்களை கொடுத்தார், நான் பலம் பெற

கடவுளிடம் நான் ஞானம் கொடு என்றேன்
அவரோ பிரச்சனைகளை கொடுத்தார், நான் அனுபவம் பெற

கடவுளிடம் நான் வாழ்வில் வளமை கொடு என்றேன்
அவரோ நல்ல மூளையையும் உழைக்க நல்ல ஆரோக்கியத்தையும் கொடுத்தார்

கடவுளிடம் நான் வீரம் கொடு என்றேன்
அவரோ இடர்கள் தந்து மீண்டு வர வைத்தார்

கடவுளிடம் நான் அன்பை கொடு என்றேன்
அவரோ துன்பப்பட்ட மக்களை அனுப்பி அவர்களுக்கு உதவு என்றார்

கடவுளிடம் நான் நன்மைகளை கொடு என்றேன்
அவரோ எனக்கு வாய்ப்புகள் கொடுத்தார்

நான் வேண்டியது எதுவும் கிடைக்கவில்லை ஆனால்
எனக்கு வேண்டியது எல்லாம் கிடைத்துவிட்டது

உங்களை நீங்களே துன்புறுத்திக்கொள்ளாதீர்கள்

உங்களை  நீங்களே துன்புறுத்திக்கொள்ளாதீர்கள்

ஒரு நாள் இரவு, ஒரு பாம்பு இரை தேடி ஒரு தச்சரின் அறைக்குள் நுழைந்தது.  அந்த அறைக்குள் தச்சு வேலைக்கு தேவைப்படும் ஆயுதங்கள் இருந்தன, அவற்றில் ஒன்று ரம்பம். இரை தேடி வந்த பாம்பு அந்த ரம்பத்தின் மெதுவாக ஏறியது, ரம்பம் கூர்மையாக இருந்ததால் சிறு காயம் ஏற்பட்டுவிட்டது. அதை கண்ட பாம்பு, ரம்பம் தன்னை தாக்குவதாக எண்ணிக்கொண்டு ரம்பத்தை கொத்தியது.

இப்போது வாயிலிருந்தும் ரத்தம் வழியத்தொடங்கியது, இதனால் அதிக  கோபமுற்ற பாம்பு மேலும் வேகமாக தாக்க தொடங்கியது. இதனால் உடல் முழுவதும் கிழிந்து ரத்தம் கொட்டியது. அந்த ரத்தம் ரம்பத்தையும் சிவப்பாக மாற்றிவிட்டது, இதை கண்ட பாம்பு   கடைசியாக ஒரு கொத்து கொத்திவிட்டு திரும்பி விடலாம் என்று எண்ணி வேகமாக கொத்தியது. கொத்திய வேகத்தில் பாம்பின் தலை தனியாக பிய்த்துக்கொண்டு விழுந்தது. 

மறுநாள் அந்த தச்சர் தன்னுடைய அறையில் ஒரு செத்த பாம்பை பார்த்தார். 

நீதி :  சில நேரங்களில் பிறரை துன்புறத்த நினைத்து, நம்மை நாமே துன்புறுத்திக்கொள்ளுகிறோம்

-------------------------------------------------------------------------

ஒரு முட்டாளிடம் முத்தம் பெறலாம் தவறில்லை
ஒரு முட்டாளுக்கு முத்தம் கொடுக்கலாம் தவறில்லை
ஆனால் ஒரு முத்தம் உங்களை முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்

உங்கள் வாழ்க்கையில் யார் வரவேண்டும் என்று விதி நிர்ணயிக்கலாம், ஆனால்
யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது உங்கள் மனம் மட்டுமே 

செவ்வாய், மே 10, 2011

கடவுளுடன் ஒரு சிறப்பு பேட்டி

கடவுள் : உள்ளே வாங்க, நீங்க என்கிட்ட பேட்டி எடுக்கணும்-ன்னு விரும்புறீங்க இல்லயா?   
நான்    :  ஆமா சாமி, உங்களுக்கு நேரம் இருந்தா (பணிவா)
கடவுள்    : எனக்கு எல்லா வேலையும் செய்ய நேரம் இருக்கு,  சரி கேட்க்க வேண்டியத கேளு
நான்    :  உங்களை ஆச்சரிய படுத்துற மனித பண்புகளை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா
கடவுள்    : ஒண்ணா ரெண்டா நெறைய இருக்கு, சொல்லுறேன் கேளு
"குழந்தையாய் இருக்கும் போது சீக்கிரம் பெரியவங்களா வளரனும்-ன்னு நினைக்கிறங்க, ஆனா வளர்ந்த பின்னாடி இன்னும் குழந்தையாய் இருந்திருக்கலாமே அப்பிடின்னு நினைக்கிறங்க"
"உடல் நலத்தை இழந்து பணம் சேக்குறாங்க, ஆனா கொஞ்ச வருஷம் கழிச்சு உடல் நலத்தை சரி பண்றதுக்கு சேத்த பணத்தை எல்லாம் இழக்குறாங்க"
"எதிர்காலத்தை பத்தி நெனச்சு நிகழ்காலத்தை மறந்துராங்க, அதனால நிகழ்காலத்திலையும் வாழாம எதிர்காலத்திலயும் வாழ முடியாம போயிருது"
"எப்பயுமே சாவு வராத மாதிரியே வாழணும்-ன்னு  நினைக்கிறாங்க, ஆனா வாழாமலேயே சாகுறாங்க"
அப்பிடின்னு சொல்லிட்டு என்னை பார்த்தாரு, கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசலை, அப்பறம் நான் மெதுவா

நான்    : வாழ்க்கையில நாங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது அப்பிடின்னு என்ன இருக்கு சாமி?

கடவுள்    : இன்னும் நிறைய இருக்கு சொல்றேன் கேளு

"பிறரை உங்கள் மீது அன்பு செலுத்த வைக்க முடியாது, அதனால் உங்கள் மீது நீங்களே அன்பை வைக்க பழக வேண்டும்"
"விலை மதிக்க முடியாதது என்பது அவர்கள் வாழ்க்கையில் என்ன பெற்று இருக்கிறார்கள், அது அவர்கள் யாரை பெற்று இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்"
"உலகில் பணக்காரர்கள் என்பவர்கள் சிறந்த எல்லாவற்றையும் பெற்றவக்ரல் அல்லர், தனக்கு தேவையானதை எல்லாம் பெற்றவர்கள் மட்டுமே" 
"தன்னோடு பிறரை ஒப்பிடுவது நல்லது அல்ல என்பதை அறிய வேண்டும்"
"நம்முடைய பிரியத்துக்குரிவர்களின் மானக்காயங்களை அறிய சில நொடிகளாவது ஒதுக்க வேண்டும், காயங்களை ஆற்ற பல வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை"
"பணத்தால் எதையும் வாங்க முடியும், நிம்மதி மற்றும் சந்தோஷத்தை தவிர"
"இரண்டு பேர்கள் ஒரே பொருளைப்பார்த்தாலும், பார்வைகள் வேறு வேறாக இருக்கும் என்பதை அறிய வேண்டும்"
"நல்ல நண்பர் என்பவர் உங்களைப்பற்றி எல்லாம் தெரிந்து இருந்தும் உங்களை விரும்புபவர்களாக இருப்பார்கள்"
"பிறர் உங்களை மன்னிப்பதை விட உங்களை நீங்கள் மன்னிக்க பழக வேண்டும்"

அப்பிடின்னு சொல்லிக்கிட்டு இருந்தாரா, திடீர்ன்னு மழை என்னடான்னு பார்த்தா என் தர்ம பத்தினி கையில பக்கெட்டோட, மணி இப்ப 8 இன்னும் என்ன தூக்கம், அப்புறமா ஆஃபிஸ்க்கு லேட் அய்டுச்சுன்னு கத்தக்கூடாதுன்னு வார்னிங்க் குடுத்துட்டு அவங்க வேலைய பாக்கப்போயிட்டாங்க.   சே அப்ப நான் கண்டதெல்லாம் கனவா

பாவம் நாங்கள் விட்டுவிடுங்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே எங்களை போன்ற மக்களை வருத்திக்கொண்டு இருப்பது, விலைவாசி உயர்வு மட்டுமே.  எல்லாம் விண்ணை முட்டிக்கொண்டு இருக்கும் இந்த நேரம், எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறோம். இதில் மிக முக்கியமானது பெட்ரோல் மற்றும் டீசெல் விலை ஏற்றம், எல்லா பொருட்களின் விலையிலும் இது எதிரொலிக்கிறது. மறை முகமாக. 

கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடப்பதால் இவற்றின் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஆறுதல், எனினும் இன்று இறுதி கட்ட தேர்தல் தேர்தல் முடியும் தருவாயில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் விலை ஏற்றம் பற்றிய அறிவிப்புகள் வரலாம்.  ஐந்து மாநில தேர்தல்கள் ஒவ்வொரு மாதம் ஒரு மாநிலம் என்று நடத்தி இருந்தால், இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் விலை ஏற்றம் இல்லாமல் இருந்திருக்கும்.   என்ன செய்வது 

மண்ணெண்ணை மற்றும் எல்‌பி‌ஜி எனப்படும் சமையல் எரிவாயு அரசின் நேரடி கட்டுபாட்டில் இருப்பதால் இதன் விலையில் குறிப்பிட தகுந்த மாற்றங்கள் இல்லை இதுவரை, இனி இது கூட அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கபடலாம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இதனால் சமையல் எரிவாயுக்கு அரசு வழங்கும் மானியங்கள்  நிறுத்தப்படலாம்.

எனவே அந்த விலையும் எங்கள் தலை மீதே விழும், குறைந்தது 700 வரை விலை ஏறக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏற்றினால் மக்களும் பழகி விடுவார்கள் என்பதே அரசின் நோக்கமாக இருந்து இருக்கிறது இதுவரை. ஆனால் சமையல் எரிவாயு விலை ஏற்றம்  குருவி தலையில் பனங்காய் என்பது போல் மிக அதிகம். 

இதன் மூலம் அரசுக்கு 11,000 கோடி மிச்சப்படும் என்று புள்ளி விவரங்கள் சொல்லப்படுகிறது. மேலும் ஏழை மக்களுக்கு மட்டும் மானியம் தொடர்வது என்பதை பற்றி ஆராயப்படுகிறது என்கிறது ஒரு தகவல் அதுவும் நேரடியாக இல்லாமல் வருடத்திற்கு 6 அல்லது 7 சிலிண்டர்களுக்கு மட்டும் இது பொருந்தும் அதுவும் மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிகிறது. எதுவும் எதுவரை சாத்தியம் என்று தெரியவில்லை.    

தேவை இல்லாத  எவ்வளோ விசயங்களுக்கு செய்யப்படும் செலவுகளை முறைப்படுத்தி இந்த மாதிரியான தேவையான மானியங்களை தொடர அரசு முன் வரவேண்டும். பள்ளிகள்  திறக்கப்போகும் இந்த தருணத்தில் கல்விக்கட்டணம் என்கிற பெரிய பூதம் காத்து இருக்கிறது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இது போன்ற தவிர்க்க கூடிய விலை ஏற்றங்களைபற்றி யோசனை செய்ய வேண்டும் அரசு.

இது எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு மேலும் பொருளாதார சிக்கலையே உருவாக்கும்.  பாவம் நாங்கள் எங்களை விட்டுவிடுங்கள்  

திங்கள், மே 09, 2011

ஆங்கில சுவாரசியங்கள்


1.    மிக நீளமான ஆங்கில வார்த்தை PRAETERTRANSSUBSTANTIATIONALISTICALLY மொத்தம் 37 எழுத்துகள்

2.    "GADFY" இந்த புத்தகத்தில் "e" என்கிற எழுத்து வரும் ஒரு வார்த்தயை உபயோகிக்கவில்லை, இந்த  புத்தகத்தில் உள்ள வார்தைகளின் எண்ணிக்கை 50000+

3. உயிரெழுத்து இல்லாத ஒரு வார்த்தை "RHYTHAM"

4. வார்த்தைகள் போல ஒலி கொடுக்கும் எழுத்துகள்
B     BEE
C     SEA
G     ZEE
I     EYE
Q     QUEUE
R     ARE
S     YES
T     TEA
U     YOU
Y     WHY

5. MUMMY ன்னு சொன்னா உதடுகள் ஒட்டும், DADDY ஈனு சொன்னா உதடுகள் ஒட்டாது

இது சும்மா

உங்களுடைய ஒண்ணு, உங்க நண்பர்களால் அதிகம்  உபயோகிக்கபடுகிறது அது என்ன ? - வேறென்ன உங்க பேரு

வெள்ளி, மே 06, 2011

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணம் சொர்க்த்தில நிச்சயிக்கபடுதுன்னா நரகத்தில என்ன நிச்சயிக்கப்படுகிறது?
கல்யாணதுக்கு அப்புறம் வரும் நாட்கள்

கல்யாணத்துக்கு முன்னாடி காசி யாத்திரை அப்பிடின்னு ஒரு சம்பிரதாயம் பண்ணுவாங்க ஏன்னு தெரியுமா?
மாப்பிள்ளை தப்பிச்சு போறதுக்கு கடைசியா ஒரு சான்ஸ் தறாங்க

ஒரு சிகரட் உங்க வாழ்நாளில் 2 நிமிடம் குறைக்கும்
ஒரு பியர் உங்க வாழ்நாளில் 4 நிமிடம் குறைக்கும்
ஒரு வேலை நாள் உங்க வாழ்நாளில் 8 மணி நேரம் குறைக்கும்

எல்லா ஆண்களும் ஒரு தடவையாவது கல்யாணம் செய்யணும் ஏன்னா சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை ஆயிடாது

கல்யாணம் பண்ணாத ஆம்பளைங்களுக்கு நிறைய TAX போடணும், ஏன்னா கொஞ்ச பயலுக மட்டும் எப்பிடி சந்தோஷமா இருக்கலாம்?

நான் தீவிரவாதத்தை கண்டு அஞ்சுவதில்லை, ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. 

புதுசா கல்யாணம் பண்ணவங்க ஒரு மாதிரி சிரிச்சா எல்லோருக்கும் தெரியும் ஏன்னு!
கல்யாணமாகி 10 வருஷம் ஆனவங்க ஒரு மாதிரி சிரிச்சா சிரிச்சா எல்லோரும் கேட்ப்பாங்க ஏன்னு?

காதலுக்கு கண் தெரியாது, கண்ணு தொறக்கணுமின்னா கல்யாணம் பண்ணுங்க

ஒரு ஆண் அவன் பொண்டாட்டிக்கு கார் கதவை தொறந்து விடுறான்ன,  ஒண்ணு கார் புதுசா இருக்கணும், இல்லை பொண்டாட்டி புதுசா இருக்கணும்

கணவன் : நம்ம கல்யாண நாளுக்கு எங்கே போகலாம்?
மனைவி : இதுவரைக்கும் நான் போகாத எடத்துக்கு கூட்டிட்டு போவீங்களா?
கணவன் : அப்ப வா சமையல் கட்டுக்கு போகலாம். 

ஒரு புருசனும் பொண்டாட்டியும் ஒரு மாய கிணறு முன்னாடி வந்து நின்னாங்க, மொதோ புருஷன் மனசுக்குள்ளே அவனோட ஆசையா நினைச்சுக்கிட்டு காசை தூக்கி போட்டான், அப்புறம் பொண்டாட்டி கிணத்துக்கிட்டே வந்தவ கால் தடுக்கி கிணத்துக்குள்ளே விழுந்து முங்கிடிச்சு, ஒரு நிமிஷம் அதிர்ச்சியான புருஷன் சிரிச்சுக்கிட்டே இது நிஜமாவே வேலை செய்யுது அப்பிடின்னான்

வியாழன், மே 05, 2011

இந்திய அழகி

இவர் இந்தியாவின் முதல் அழகி (மிஸ் இந்தியா)


இவர் மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஆண்டு 1949 பெயர் பிரமிளா
.
.
.
.
.
.
.
.
.
.
.

இப்போது அவர்


காலம் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து சென்று விடும். 

அழகும், ஆளுமையும் நிரந்தரமில்லை, உழைப்பும், பண்பும் மட்டுமே நிலையானது, அதனால் நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்.

   

பேஸ்ட் செய்ய தெரியாவிட்டால் காப்பி செய்யாதீர்கள்

ஒரு கோவில்ல ஒரு உபாசகர் பேசிக்கிட்டு இருந்தாரு, பேசிக்கிட்டு இருக்கும் போது அவர் சொன்னாரு "என் வாழ்க்கையின் வசந்த காலம் என்பது என் மனைவி அல்லாத ஒரு பெண்ணின் தோளில் கிடந்தது தான்"  அப்பிடின்னாரு. கேட்டு கிட்டு இருந்தவங்களுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன ஒரு உபாசகர் இப்பிடி  பேசுறாரே அப்பிடியின்னு. கொஞ்ச நேரம் அங்கே ஒரே மௌனம், அப்புறம் உபாசகரே தொடர்ந்தாரு .
.
.
.
.
.
.
.
.
.
.
அந்த பெண் வேறு யாருமல்ல, என்னுடைய தாய் அப்பிடினு, அதை கேட்டவுடனே ஒரே கரகோஷம் அது அடங்க கொஞ்ச நேரம் ஆச்சு, 

இதை கேட்டுகிட்டு இருந்த ஒருத்தரு இதை வீட்டுல பேசி அசத்திரலாம், அப்பிடின்னு நெனைச்சுக்கிட்டாரு. வீட்டுக்கு வந்த பின்னாடி ஒரு 4 ரவுண்ட் போட்ட அப்புறமா, சத்தமா "என் வாழ்க்கையின் வசந்த காலம் என்பது என் மனைவி அல்லாத ஒரு பெண்ணின் தோளில் கிடந்தது தான்" அப்பிடின்னு சொன்னாரு (அவங்க வீட்டுக்காரம்மா சமையல் கட்டுல இருந்தாங்க),

இத கேட்ட அவங்க எட்டி பத்தாங்களா, நம்ம ஆளுக்கு, அடுத்து என்ன பேசணுமின்னு மறந்து போச்சு.  என்னமோ யோசிச்சு பார்த்தாரு ஹுஹூம் வரலை. கடைசியா என்ன பண்றதுன்னு தெரியாம
.
.
.
.
.
.
.
.
.
.
அது யாருன்னு மறந்துட்டேன், அவ யாருன்னு எனக்கு தெரியாது அப்பிடின்னாரு.

அவரு கண்ணு முழிச்சி பாக்கும் போது ஆஸ்பத்திரில இருந்தாரு உடம்பெல்லாம் கட்டு போட்டு. என்ன நடந்ததுங்கறது நீங்களே ஊகிச்சுக்குங்கக


கதையின் நீதி:

பேஸ்ட் செய்ய தெரியாவிட்டால் காப்பி செய்யாதீர்கள்

உங்க ரோல் மாடல் யாரு?

இதை கண்டு பிடிக்கணுமின்னா கொஞ்சம் கணக்கு பண்ணனும். கால்குலேட்டர் எடுத்து பக்கத்துல வச்சுக்குங்க.

இப்ப நான் சொல்லுறதை செஞ்சுகிட்டே வாங்க

1.    1-லயிருந்து 9-வரைக்கும் ஏதாவது ஒரு நம்பரை எடுத்துக்குங்க
2.    அந்த நம்பரை 3-ஆல் பெருக்குங்க
3.    வந்த ரிசல்டோட 3 ஐ கூட்டுங்க
4.    வந்த ரிசல்டை 3 ஆல் பெருக்குங்க
5.    இப்ப உங்க கிட்டே ஒரு 2 டிஜிட் நம்பர் வந்து இருக்கும். அதையெல்லாம் கூட்டி சிங்கிள் டிஜிட்க்கு மாத்திக்குங்க
6.    இப்ப அந்த நம்பரோட 1 ஐ கூட்டிக்குங்க,


இப்ப வந்த நம்பருக்கு நேர இருக்குற பேரு தான் உங்க ரோல் மாடல்

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.

1. ஐன்ஸ்டீன்

2. எடிசன்

3. நெல்சன் மண்டேலா

4. மகாத்மா காந்தி

5. பில் கேட்ஸ்

6. அப்துல் கலாம்

7. ஒபாமா

8. எம்.ஜி‌.ஆர்

9. கருணாநிதி

10 ஜ.ரா. ரமேஷ் பாபுஹா ஹா ஹா எனக்கு தெரியும், நான் நெறைய பேருக்கு ரோல் மாடல்ன்னு.


என்னங்க பண்றீங்க வேற நம்பர் மாத்தி பாக்குறீங்களா !??!,  எப்பிடியோ உங்களுக்கும் நான் ரோல் மாடல் ஆயிட்டேன்.

வாழ நினைத்தால் வாழலாம்

இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.

நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

புதன், மே 04, 2011

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.


நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.


செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.


அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.

பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.

ஊக்கமூட்டும் சில பழமொழிகள்

 • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
 • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
 • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
 • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
 • ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
 • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
 • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
 • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
 • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
 • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
 • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
 • காய்த்த மரம் கல் அடிபடும்.
 • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
 • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
 • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
 • செய்வன திருந்தச் செய்.
 • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
 • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
 • பதறாத காரியம் சிதறாது.
 • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
 • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
 • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
 • வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
 • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
 • வாழ்வும் தாழ்வும் சில காலம்.

வாழ்க்கை ஒரு போர்க்களம்

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிடமிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை'‘என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

- சுவாமி சுகபோதானந்தா.

செவ்வாய், மே 03, 2011

பணியிடத்தில் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள்

1. பிறரைப்பற்றி புறம் பேசாதீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.  புறம் பேசினால் உங்களுடன் பணிபுரிபவர்கள் உங்களை நம்ப மாட்டார்கள்.

2. உங்களுக்கு சவாலான வேலைகளை தேடிச்செய்யுங்கள், இதனால் அதிகம் கற்றுக்கொள்ள முடியும்

3. உங்கள் தலைவர் விரும்பும் வகையில் வேலை செய்யுங்கள், இது முகஸ்துதி அல்ல.

4. ஆட்குறைப்பு சமயங்களில் முதலில் வெளியேற்றப்படுபவர்கள் எல்லாம் குறைந்த நண்பர்களை கொண்டவர்களாகவே இருப்பர், பாஸ் எப்போதும் மரியாதைக்குரியவர்களை நீக்க துணிவதில்லை

5. வேலைக்கு தகுந்த உடை அணிய மறக்காதீர்கள், அதில் கூட உங்கள் திறம் மிளிரட்டும்.

6. உடலை சீராக வைத்திருங்கள், நீங்கள் மிக திறமையாய் இல்லாவிடில் உங்கள் உடல் உங்களுக்கு பாதகமாக அமையலாம்

7. சுய ஒழுக்கம் மிக முக்கியம், உங்க தலைவர் நீங்க செஞ்ச தப்பை கூட மன்னிக்கலாம், ஆனால் பொய் சொல்லி மாட்டிவிட்டீர்களானால் உங்கள் கதி அதோ கதி

8. நேரம் தவறாமை கடைபிடியுங்கள், இதனால் நீங்கள் தேவை இல்லாத மன அழுத்ததிலிருந்து விடுபடலாம், உங்கள் வேலையை சிறப்பாக செய்யவும் முடியும்

9. குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள், முடியாத பட்சத்தில் மன்னிப்பு கோர தயங்காதீர்கள், இது மேலும் கால நீட்டிப்பை பெற்றுதரும்.

10. எதையும் அகங்காரமாக (EGO)  எடுத்துக்கொள்ள வேண்டாம்,  பிறருக்கு உங்கள் மேல் கோபம் இருந்தால் அது அவர் பிரச்சனை தானே தவிர உங்களுடையது அல்ல.

11. நீங்கள் பிறரை திருத்த வேண்டியது இருந்தால், எல்லோர் முன்னிலையிலும் செய்ய வேண்டாம்

12. வெற்றியின் ரகசியம் என்பது பேரார்வம் (passion)  என்பதை மறக்காதீர்கள்,  எப்போதும் பெரிதாய் திட்டமிடுங்கள், இது உங்கள் முன்னேறத்திற்கான வழி

காப்பி பேஸ்ட் பண்ண தெரியாதவர்களுக்கு மட்டும்....

நீங்க ஒரு வெப் பேஜ்-ஐ படிச்சு கிட்டு இருக்கீங்க, அதுல இருக்க கன்டன்ட் உங்களுக்கு ரொம்ப பிடுச்சு இருக்கு, அதை அப்பிடியே காப்பி பண்ணி உங்க ஃபிரண்ட்ஸ்களுக்கு  மெயில்-ல போடணும், இல்லை நீங்க எழுதுன மாதிரி பிளாக்-ல போடணும் ஆனா வெப் பேஜ் கன்டன்ட்-ஐ செலக்ட் பண்ண முடியல (அதுக்கெல்லாம் ஸ்கிரிப்ட் இருக்கு ஆனா நிறைய வேலை செய்யாது) ஏன்னா வெப்சைட் அட்மினிஸ்டிரேட்டர் ஸ்கிரிப்ட் எழுதி வெப் பேஜ் கன்டன்ட் எல்லாம் பாதுகாப்பா வச்சு இருப்பாரு.

சரி நம்ம எப்பிடி காப்பி பண்றதுன்னு சொல்லுறேன். இதுக்கு நிறைய வழி இருக்கு. அதுல எனக்கு தெரிஞ்ச கொஞ்சம்

1. Opera அப்பிடினு ஒரு பிரவுசர் இருக்கு மானங்கெட்ட பிரவுசர் அது, டெவலப்பர் எல்லாம் எங்கெங்கயோ காப்பி பண்ணி  ஸ்கிரிப்ட்-ஐ திருடி வெப்பகே-ல சேர்த்து இருப்பான், ஆனா 99% இந்த பிரவுசர்-ல வேலை செய்யாது. அதை நம்ம யூஸ் பண்ணிக்கிவோம், அந்த பிரவுசர்-ல வெப்பேஜ்-ஐ ஓபன் பண்ணுங்க. அப்புறம் எது எது வேணுமோ அந்த பேஜ்-ல இருந்து எப்பயும் போல காப்பி பேஸ்ட் பண்ணிக்குங்க.

2. இது எந்த பிரவுசர்-ல இருந்து வேணுமினாலும் பண்ணலாம், எல்லா பிரவுசர்-லயும் File menu இருக்கும். அங்கே போயி "save web page as" அப்பிடின்னு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க. சிஸ்டம் எங்க இந்த file-எ save பண்ணணுமின்னு கேட்க்கும் நீங்க location செலக்ட் பண்ணிட்டு, file name குடுத்துட்டு, அதுக்கு கீழே Save Type As அப்பிடின்னு வரும் அதுல "webpage complete" செலக்ட் பண்ணிட்டு சேவ் பட்டன்-ஐ கிளிக் பண்ணுங்க. இப்ப அந்த பேஜ் உங்க சிஸ்டம்-ல ஸ்டோர் ஆயிரும். அப்புறம் அதை உங்க பிரவுசர்-ல ஓபன் பண்ணுனா,  பேஜ் ஓபன் ஆகும் எல்லா கன்டன்டுக்கு மேல ஒரு மஞ்ச கலர் பார் வரும், கீழே படத்துல பாருங்க, அங்கே "Allow Blocked Content"   அப்பிடின்னு ஒரு ஆப்ஷன் வரும் அதை கண்டிப்பா செலக்ட் பண்ணக்கூடாது. இப்ப உங்க பிரவுசர்-ல இருக்க கன்டன்ட்-ஐ அப்பிடியே காப்பி பேஸ்ட் பண்ணிக்கலாம்.

3. இது இன்னொரு டிரிக், பேஜ் ஓபன் ஆகிக்கிட்டே இருக்கும் போது ரைட் கிளிக் பண்ணுங்க அங்கே நார்மல் கான்டெக்ஸ்ட் மெனு ஓபன் ஆகும், (பேஜ் ஃபுல்-லா லோட் ஆயிட்டா சில நேரம் மெனு வராது)   பேஜ் ஃபுல்-லா லோட் ஆகுற வரை வெயிட் பண்ணுங்க, அப்புறம் அந்த மெனு லிஸ்ட்ல "Select All" அப்பிடின்னு ஒரு ஆப்ஷன் வரும், அதை கிளிக் பண்ணுங்க. அப்புறம் உங்க கீபோர்ட்-ல கண்ட்ரோல் கீ பிரஸ் பண்ணிக்கிட்டே சி பிரஸ் பண்ணுங்க (Ctrl + C), இப்ப அந்த பேஜ்-ல இருக்க எல்லா கன்டன்ட்-வும் காப்பி ஆயிடும். இப்ப notepad-ல பேஸ்ட் பண்ணிக்கிட்டு உங்களுக்கு வேண்டிய கன்டன்ட்-ஐ எடிட் பண்ணிக்குங்க.

டிஸ்கி: வேற ஏதாவது வழி இருந்தா, இதை படிக்கிறவங்க கமெண்ட்-ல போடுங்க, எல்லோருக்கும் பயன்படும்   

திங்கள், மே 02, 2011

வெள்ளை சாத்தான்.........

போதை பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இவற்றின் ஒரே வித்தியாசம் சர்க்கரை அங்கீகரிக்கப்பட்ட பொருளாக உள்ளது.

சர்க்கரை உடலில் அதிகமாக சேர்ந்து பின்னர் இன்சுலின் சுரப்பு பாதிப்பால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த சர்க்கரை வியாதி 2000 ஆம் ஆண்டில் உலகளவில் 17 கோடி பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் என எச்சரிக்கப்படுகிறது. இதுவே இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் 3 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 2030 ஆம் ஆண்டில் 8 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதன் வருடம் ஒன்றிற்கு 80 கிலோ அளவிற்கு சர்க்கரையை எடுத்து கொள்கிறான். மனிதனின் வாழ்க்கையில் மெல்ல ஆக்ரமிக்கும் இந்த சர்க்கரை எவ்வாறு ஹெராயின் போன்ற போதைபொருளோடு ஒத்து போகிறது என பார்ப்போம்.

பாப்பி என்ற ஒரு வகை செடியில் இருந்து ஓபியம் என்ற பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. அது பின்னர் மார்பின் ஆக மாற்றப்படுகிறது. மேலும் அது சுத்திகரிக்கப்பட்டு ஹெராயின் என்ற போதைபொருளாக மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் இது வலி நிவாரணி ஆக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் அது படிப்படியாக போதைபொருள் பயன்பாட்டுக்கு உலகை கொண்டு சென்று விட்டது.

சர்க்கரையும் அதுபோல தான். கரும்பில் இருந்து பெறப்படும் சாறு பின்னர் மொலஸ்ஸஸ் என்ற பொருளாக மாற்றப்படுகிறது. பின்னர் மேலும் மேம்படுத்தப்பட்டு பிரவுன் சுகர் மற்றும் வொய்ட் சுகர் என்ற இரு வேறு பொருள்களாக பெறப்படுகிறது. இந்த வெண்மை நிற படிக வடிவம் பெற்ற சர்க்கரை (வொய்ட் சுகர்) மனிதனுக்கு வேண்டிய எந்தவித சத்துள்ள பொருளையும் தன்னுள் கொண்டிருப்பதில்லை. இது உடலுக்குள் செல்லும் போது அதனை எவ்வாறு எடுத்து கொள்வது என்பதில் வயிற்றுக்குள் சிக்கலான போராட்டமே நடைபெறுகிறது.

பழக்கவழக்கத்திற்கு அடிமையாதல்

போதை பொருளான ஹெராயின் எடுத்து கொள்ளப்பட்ட உடனேயே அது தீவிரமாக செயல்பட ஆரம்பிக்கிறது. அதன் துகள்கள் உட்கொண்ட பின் விரைவாக செயல்புரிந்து கிளர்ச்சி நிலையினை அடைய செய்கிறது.

சர்க்கரை உட்கொள்ளும் போது அது மெதுவாகவே செயல்புரிகிறது. உடலில் கொழுப்பு சத்து தேவைப்படும் வரை கல்லீரலில் சர்க்கரை பொருள் சேமித்து வைக்கப்படுகிறது. மற்ற போதைபொருள் போன்றே இதுவும் நம்மை அந்த பழக்கத்திற்கு அடிமையாக செய்கிறது. சுமார் 95 சதவீத மக்கள் சர்க்கரை பயன்பாட்டில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் என திட்டமதிப்பீடு செய்துள்ளனர்.

உறுப்புகளின் பாதிப்பு

ஹெராயின் போதைபொருள் நுரையீரல் மற்றும் இதயம் ஆகியவற்றை விட மூளையையே அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. பெரும்பாலானவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயன்று மேலும் அதிகமாக அடிமையாகும் நிலையே காணப்படுகிறது.

சர்க்கரை மெதுவாகவே தன் வேலையை செய்கிறது. ஆனால் அதன் பாதிப்பின் தன்மை மிக அதிகமாகவே காணப்படுகிறது. சற்று அதிகமாக எடுத்து கொண்டால் அதன் பாதிப்பு உடலில் பலமாகவே எதிரொலிக்கிறது. இத்தகைய தன்மையினால் ஹெராயினை காட்டிலும் அதிக தீமை வாய்ந்ததாகவே இது கருதப்படுகிறது.

மிக அதிக அளவாக 8 தேக்கரண்டி சர்க்கரை எடுத்து கொள்ளுதல் போதுமானது என பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் சர்க்கரையின் அளவு எப்பொழுதும் அதிகமாகவே காணப்படுகிறது. காலையில் குடிக்கும் காபி, மதியம் எடுத்து கொள்ளும் சாக்லேட் மற்றும் இரவில் ஒரு வெண்ணிலா ஐஸ் கிரீம் என நம்மை அறியாமலேயே அளவுக்கதிகமான சர்க்கரையை மறைமுகமாக எடுத்து கொள்கிறோம்.பதப்படுத்தப்பட்ட சர்க்கரையில் சுக்ரோஸ் என்ற வேதிபொருள் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. இந்த சர்க்கரை பொருள் உடலின் செயல்பாட்டுக்கு அவசியமில்லாத போது வயிறு, தொடை, மார்பு போன்ற இடங்களில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் அந்த இடங்கள் நிரப்பப்படும் போது அவை கல்லீரல் மற்றும் இதயம் போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளில் சேர ஆரம்பிக்கின்றன. மேலும் அது இரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.

எனவே இன்சுலின் சுரப்பு அதிகரிக்கப்படுகிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடலின் பி.எச். சமன்பாட்டினை (அமில மற்றும் கார நிலைகளின் சமன்பாடு) வெகுவாக பாதிக்கிறது. மேலும் அமில நிலையை உடலில் அதிகரிக்கிறது. குறிப்பாக உற்பத்தி செய்யப்படும் பைருவிக் அமிலம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாகும். இது நம் உடலின் அடிப்படை அமைப்பான செல் அமைப்பை பாதிக்கிறது.

அளவுக்கதிகமான அமில தன்மை உடலின் எடையை அதிகரிக்க செய்கிறது. மற்றும் உடலில் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்த அமில தன்மையை சமன் செய்ய உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம் என்ற வேதிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பற்களில் பாதிப்பு, வலு குறைந்த பற்கள் மற்றும் எலும்பு தொடர்பான ஆஸ்டியோபோரசிஸ் போன்ற வியாதிகள் ஏற்பட ஏதுவாகின்றன.

இத்தகைய தன்மை வாய்ந்த சுக்ரோஸ் மிகுந்த மேம்படுத்தப்பட்ட சர்க்கரையின் பாதிப்பை தவிர்க்கும் வழிகள் பற்றி பார்ப்போம்.

1) ஒழுங்கான உணவு முறை

உணவு உட்கொள்ளுதலை சீராக வைத்திருத்தல் அவசியம். தினமும் மூன்று வேளை உணவு மற்றும் இரு முறை நொறுக்கு தீனி என எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் ஐந்து வேளைகள் சிறு சிறு அளவாக உணவினை எடுத்து கொள்வதும் நலம் தரும். ஒழுங்கான முறையில் உணவு எடுத்து கொள்ளாவிடில் அது இரத்தத்தில் சர்க்கரை அளவினை பாதிக்கும். அவர்களுக்கு பசி எடுப்பது போன்ற உணர்வு இருக்கும். எனவே இனிப்பான பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு தோன்றும்.

2) முழு உணவினை தேர்ந்தெடுத்தல்

சாப்பிடும் பொழுது சர்க்கரை அளவு குறைவான உணவை தேர்ந்தெடுங்கள். பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் கனிகள் ஆகியவற்றை அதன் இயற்கையான நிலையிலேயே உட்கொள்ளுங்கள். அது நமது உடலுக்கு ஊறு விளைவிப்பதில்¬¬. மேலும் அவற்றின் முழு பயனும் நமக்கு கிடைக்கின்றன.

3) ஊட்டசத்துள்ள காலை உணவு

காலையில் உண்ணும் உணவு ஆரோக்கியமான புரதம், கொழுப்பு மற்றும் ஊட்டசத்து மிகுந்தவையாக இருப்பது நல்லது. மாறாக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவு பொருள் தவிர்க்கப்படல் வேண்டும்.

4) எல்லா வேளைகளிலும் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு அவசியம்

ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த பதார்த்தங்கள் இருப்பது போல் சாப்பிடுவது அவசியம். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அவை ஆரோக்கியத்திற்கு அவசியமானதும் ஆகும்.

5) நறுமண பொருள்களின் பயன்பாடு

கொத்தமல்லி, ஏலக்காய், இலவங்கம், கிராம்பு மற்றும் இதுபோன்ற இயற்கையான நறுமண பொருள்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் உணவினை இயற்கையாகவே இனிப்புள்ளளதாக மாற்றுகிறது. மேலும் பசியையும் குறைக்கிறது.

6) தாதுபொருள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவு

அன்றாட உணவில் தாதுபொருள்கள் மற்றும் அனைத்து வைட்டமின்களும் நிறைந்து காணப்படுவது மிக சிறந்தது. குறிப்பாக குரோமியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி3 ஆகியவை இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியினை நன்றாக செய்கிறது.

7) உடலினை அசையுங்கள்

உடற்பயிற்சி, நடனம் மற்றும் யோகா ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். எந்த செயலையும் மகிழ்வுடன் செய்யுங்கள். அது உங்களது மன இறுக்கத்தை போக்குகிறது. ஆற்றலை பெருக்குகிறது. மேலும் சர்க்கரை பொருள் தேவையினை வெகுவாக குறைக்கிறது.

8) போதிய தூக்கம் அவசியம்9) டிடாக்ஸ் முறை

தற்போதுள்ள உணவு பழக்கத்தில் ஏற்படும் நச்சுகளை முற்றிலும் களைவதற்காக டிடாக்ஸ் என்ற முறை உள்ளது. இதனை எடுத்து கொண்டவர்கள் தங்களது சுவை விசயத்தில் பழைய நிலைக்கு மாற்றி கொள்கின்றனர். மேலும் இனிப்பு பொருள்களின் மீது உள்ள தாகத்தினையும் அது வெகுவாக குறைக்கிறது. பின்னர் சர்க்கரை பொருளின் மீதான ஆர்வம் குறைந்து முற்றிலும் மறைந்து விடுகிறது.

10) சர்க்கரை பயன்பாட்டில் கவனம் தேவை

சர்க்கரை பொருள் மீதான விருப்பத்தை எப்பொழுதும் ஒரு கட்டுபாட்டிற்குள் வைத்து இருந்தால் அது நன்மை தருவதாக அமையும்.

11) கூடுமானவரை தவிர்த்தல் நலம்

உங்களது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இனிப்பினால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

12) செயற்கை சர்க்கரை பயன்பாட்டினை தவிருங்கள்

செயற்கை சர்க்கரை பயன்பாடு தவிர்க்க வேண்டியவற்றுள் ஒன்று. இல்லையென்றால் அது இனிப்பின் மீதான தாகத்தை அதிகரிக்க மட்டுமே செய்யும்.

13) பொருட்களின் லேபிளை பாருங்கள்

ஏதேனும் ஒரு உணவு பொருளை வாங்கும் பொழுது அதனுடைய லேபிள் பகுதியை பார்த்து வாங்குங்கள். ஏனென்றால் அதில் சர்க்கரை பொருளின் அளவு அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே குறைவான சர்க்கரை கலந்த உணவு பொருளை பார்த்து வாங்குவது சிறந்தது.

14) சர்க்கரை பொருளின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்

இனிப்பூட்டிகளான கார்ன் சிரப், பிரக்டோஸ் நிறைந்த கார்ன் சிரப், சுக்ரோஸ், டெக்ஸ்ட்ரோஸ், தேன், மொலஸ்ஸஸ், டர்பினடோ சர்க்கரை மற்றும் பிரவுன் சுகர் போன்றவற்றை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

15) மறைமுகமான பயன்பாட்டினை தவிர்த்தல்

சிக்கலான கார்போஹைட்ரேட் பொருள் கொண்டதென நாம் கருதும் பிரெட், பாஸ்தா மற்றும் பேஜல்ஸ் போன்றவை உண்மையில் கார்போஹைட்ரேட் நிறைந்தவை அல்ல. அவை மறைமுகமாக தம்முள் அதிகமான சர்க்கரை பொருள் மட்டுமே கொண்டவை. அவை நன்கு பதப்படுத்தப்பட்டவை. அதனால் அவை சர்க்கரை போன்று தான் நம் உடலில் செயல்படும். எனவே அவற்றை தவிர்த்திடல் வேண்டும்.

16) எல்&குளுடமின் பயன்பாடு

எல்&குளுடமின் 1000&2000 மி.கி. அளவிற்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை என எடுத்து கொள்வது அவசியம். இதனால் மூளை அதற்கு தேவையான ஆற்றலை இதிலிருந்து பெற்று கொள்கிறது. மேலும் சர்க்கரை பயன்பாடு பெருமளவில் தவிர்க்கப்படுகிறது.

17) மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள்

அமைதியான இடம் ஒன்றை தேர்ந்தெடுங்கள். பின்னர் நல்ல முறையில் அமர்ந்து சில நிமிடங்கள் சீரான சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சிறிது நேரத்திற்கு பின்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தானாகவே மறைந்து விடும்.

18) உற்சாகமாக இருங்கள்

அடிக்கடி உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். முடிந்தால் இயல்பாக நடை பழகுங்கள். 10&20 நிமிடங்கள் இவ்வாறு நடை பயிற்சி மேற்கொண்டால் உங்களது எண்ணம் சீர்படும். பின்னர் தேவையில்லாத நொறுக்கு தீனிகளை உண்ண வேண்டும் என்ற எண்ணம் எழாது.

19) அதிகமான நீர் அருந்துங்கள்

அதிகமான அளவிற்கு நீர் அருந்துதல் அவசியம். சில சமயங்களில் உண்ணும் உணவே அதிக தாகத்தை ஏற்படுத்தி பின்னர் மேலும் அதுபோன்ற உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தேவையான அளவில் நீர் அருந்துவது நன்மை பயக்கும்.

20) பழங்களை உண்ணுங்கள்

ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அப்பொழுது பழங்களை சிறு துண்டுகளாக எடுத்து கொள்ளுங்கள். இதனால் இனிப்பு பதார்த்தங்கள் உண்டது போன்ற நிறைவும் ஏற்படும். உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.

இவ்வாறு நமக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும் சர்க்கரை பொருளை அளவுக்கதிகமாக பயன்பாட்டில் எடுத்து கொள்ளாமல் நம்முடைய உடலினை பாதுகாத்து கொள்வோமாக.