செவ்வாய், மே 31, 2011

ஒரு தேவதை கதை

ஒரு தடவை ஒரு குழந்தை பூமியில பிறக்குறதுக்கு முன்னாடி கடவுள் கிட்ட போச்சு

"எல்லோரும் சொல்றாங்க நாளைக்கு என்னை பூமிக்கு அனுப்ப போறீங்களாமே? எப்பிடி நான் அங்கே வாழுறது, நான் ரொம்ப சின்னவன்"    அப்பிடின்னுச்சாம்

உடனே கடவுள் " இங்க இருக்க தேவதைகள்ல நான் ஏற்கனவே ஒரு தேவதையை தேர்ந்தெடுத்துட்டேன், அவங்க உனக்காக பூமியில காத்து இருக்காங்க உன்னை பத்திரமா பார்த்துக்க"

"ஆனா கடவுளே இங்க நான் ஒண்ணுமே செய்யுறது இல்ல, சந்தோஷமா பாட்டு பாடிக்கிட்டு இருக்கேன் அங்கே போயி எப்பிடி பாடுறது"   அப்பிடின்னுச்சு

கடவுளும் "அந்த தேவதை உனக்காக பாட்டு பாடுவாங்க, உன்னைய சிர்க்க வச்சு சந்தோஷமா வச்சுக்குவாங்க, நீயும் அந்த தேவதையோட அன்பால சந்தோஷமா இருப்ப"    அப்பிடின்னாரு

"அவங்க பேசுற பாஷை எப்பிடி இருக்கும், நான் எப்பிடி அதை கத்துகிறது எப்பிடி புரிஞ்சுகிறது " அப்பிடின்னுச்சு குழந்தை

கடவுள் "உன்னோட தேவதை உனக்கு சொல்லிதருவாங்க, நீ சுலபமா புரிஞ்சுக்கலாம்" அப்பிடின்னாரு

குழந்தை "நான் அங்க போயிட்டா உங்க கிட்ட பேச முடியாதே" அப்பிடின்னுச்சு

கடவுள் சொன்னார் "உன் தேவதை உனக்கு ரெண்டு கையையும் குவிச்சு என்னை எப்பிடி கும்புடுறதுன்னா சொல்லித்தருவாங்க"

"பூமியில நிறைய கெட்ட மனுசனுங்க இருப்பாங்களே? அவங்கள எப்பிடி சமாளிக்கிறது"

"உன் தேவதை தன் உயிரையும் பத்தி கவலைபடாம உன்னை கெட்டவங்க கிட்ட இருந்து காப்பாத்துவாங்க" அப்பிடின்னாரு கடவுள்

"நான் உங்களை பார்க்காம கவலையா இருப்பேனே" அப்ப்டின்னுச்சு குழந்தை

"உன் தேவதை எப்பவும் என்னை பத்தி உன் கிட்ட பேசிக்கிட்டு இருப்பாங்க அது தான் நீ திரும்ப என்கிட்ட வரும் வழி"  அப்பிடின்னாரு கடவுள்

"சரி கடவுளே நான் பூமிக்கு போற நேரம் வந்துருச்சு, அந்த தேவதையோட பேரு என்ன கொஞ்சம் சொல்லுங்க" அப்பிடின்னுச்சு

"தேவதையோட பேரு முக்கியமில்லை, நீ எப்பவுமே அவங்கள அம்மான்னு தான் கூப்பிடப்போறே" அப்பிடின்னாரு கடவுள்

6 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நெகிழ வைக்ககூடிய அம்மா பற்றிய கதை இல்லை கவிதை...

உண்மைதான் ஒவ்வோர் உயிரும் பெற்றிருக்கும் தேவதைதான் அம்மா...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எனக்கு பிடித்த பரவசமடைந்த கதை..

மற்றும் தங்களின் நயமான சிந்தனையை, திறனை இத்கதை எடுத்துக்காட்டுகிறது...

தொடருங்கள் வாழ்த்துக்கள்..
மற்றும் வாக்குகள்...

Unknown சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி சௌந்தர்...

aruna சொன்னது…

மிகவும் அருமையான பதிவு,இதை ஒரு அம்மவாக படிகும் போது மிக சந்தோசமாக இருகிறது நன்றி

Unknown சொன்னது…

@aruna

நன்றி அருணா.

N.H. Narasimma Prasad சொன்னது…

'அம்மா' என்கிற சொல்லுக்கு பெரும் அங்கீகாரம் கொடுத்திருக்கும் கதை இது. அருமை.