திங்கள், மே 23, 2011

குளம் போல் இரு

குளம் போல் இரு

ஒரு குரு தன்னுடைய சீடன் எப்போதும் கவலையோடு இருப்பதை கண்டார். அவனை பக்கத்தில் அழைத்து ஏன் எப்போதும் கவலையுடன் இருக்கிறாய்? என்று கேட்டார், சீடனோ பதிலேதும் சொல்லவில்லை. சரி அவனுக்கு விருப்பமில்லை போலும் என்று அவனை வற்புறுத்தவில்லை, ஆனாலும் அவனை அப்படியே விட்டு விடவும் மனமில்லை.

அவனை மாலை நேரம் தன் அறைக்கு வரச்சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். மாலை அந்த சீடன் குருவின் அறைக்கு சென்றான். குரு ஒரு கை நிறைய உப்பை அள்ளி ஒரு குவளை நீரில் கரைத்து குடிக்கச்சொன்னார்.  சீடனால் குடிக்க முடியவில்லை, எப்பிடி இருக்கிறது என்று கேட்டார், குடிக்க முடியவில்லை என்றான் சீடன்

சரி என்னோடு வா என்று அழைத்தார் குரு,  சீடனும் குழப்பத்துடன் அவரோடு சென்றான்.   சற்று தூரத்தில் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு கை உப்பை கரைத்தார் குரு, சீடனிடம் இந்த நீரை எடுத்து குடி என்றார். சீடனும் கொஞ்சம் குடித்தான், இப்போது எப்பிடி இருக்கிறது என்று குரு கேட்டார். நன்றாய் இருப்பதாய் சீடன் சொன்னான்.

இப்போது குரு சொன்னார், இந்த உப்பை போலத்தான் உன்னுடைய கவலைகளும், வலிகளும் கூடுவதும் குறைவதும் அது கரைக்கப்படும் இடத்தை பொறுத்து,  எனவே உன் சிந்தனைகளை மாற்று உன் வலிகள் குறையும் அப்பிடின்னாரு


நீதி :
குவளை போல் இல்லாமல் குளம் போல் இரு

5 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் பாபு - குளம் போல இருக்கலாம் - ஆனால் கடலளவு கவலைகள் இருக்கும் போது ஒன்றும் செய்ய இயலாது. நல்ல கர்த்து. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

mani சொன்னது…

பிரமாதம்... எனக்கு ரொம்ப பிடிச்சிருந்த்து.

Unknown சொன்னது…

@maniநன்றி மணி, இதை இதை இதைத்தான் எதிர் பார்த்தேன்

Unknown சொன்னது…

@cheena (சீனா) ஆண்டவன் நமக்கு தாங்க முடியாத அளவு துன்பத்தை எப்போதும் குடுக்க மாட்டார்.

N.H. Narasimma Prasad சொன்னது…

குட்டி கதை அருமை.