திங்கள், மே 16, 2011

கடவுளும் நானும்

கடவுளிடம் நான் சக்தி கொடு என்றேன்
அவரோ கஷ்டங்களை கொடுத்தார், நான் பலம் பெற

கடவுளிடம் நான் ஞானம் கொடு என்றேன்
அவரோ பிரச்சனைகளை கொடுத்தார், நான் அனுபவம் பெற

கடவுளிடம் நான் வாழ்வில் வளமை கொடு என்றேன்
அவரோ நல்ல மூளையையும் உழைக்க நல்ல ஆரோக்கியத்தையும் கொடுத்தார்

கடவுளிடம் நான் வீரம் கொடு என்றேன்
அவரோ இடர்கள் தந்து மீண்டு வர வைத்தார்

கடவுளிடம் நான் அன்பை கொடு என்றேன்
அவரோ துன்பப்பட்ட மக்களை அனுப்பி அவர்களுக்கு உதவு என்றார்

கடவுளிடம் நான் நன்மைகளை கொடு என்றேன்
அவரோ எனக்கு வாய்ப்புகள் கொடுத்தார்

நான் வேண்டியது எதுவும் கிடைக்கவில்லை ஆனால்
எனக்கு வேண்டியது எல்லாம் கிடைத்துவிட்டது

7 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

எப்படியோ உங்களுக்கு வேண்டியது கிடைத்தால் சரி...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாழ்க்கையை அனுபவித்தே அறிய வேண்டும்...
அதற்கு உதாரணம் க்டவுள்...

கவிதைக்கு ஒரு வாழ்த்து...

Unknown சொன்னது…

@Philosophy Prabhakaran

ரொம்ப சரி, நன்றி நண்பரே தொடர்ந்து அதரவு அளிப்பதற்கு.

Unknown சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி நண்பரே, இதை மேலும் மெருகூட்டி உங்கள் ஸ்டைல்-லில் சொல்றீங்களா?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடடடடடடா அட்டகாசமா இருக்கே...!!!

பனித்துளி சங்கர் சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் சிந்தனைகளை விதைத்திருக்கிறது

பாலா சொன்னது…

கடைசி வரிகளை உணர்ந்தவர்கள் கடவுளை திட்டமாட்டார்கள்.