வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

குப்பைத்தொட்டி - வரலாற்றுப்பக்கங்களில் இருந்து சிறுதுளி


நாம் மறந்த வரலாற்றை நினைவு படுத்தும் சிறு முயற்சி

பசி தீர்த்தல் இலக்கு
வழி ஒன்றே அது உழைப்பு
மூன்றுவேளை
முழுவயிறு லட்சியம்
ஒருவேளை
முழுவயிறு நிச்சயம்

இந்தியா
மூன்று பக்கம் கடல்
ஒரு பக்கம் மலை
எங்க பார்த்தாலும் தலை!

நான் அஜித் சொல்லலைங்கோ ஜனத்தொகையை பத்தி சொல்லுறேன் அதுவும் அடிப்படை வசதிகள் சரியா கிடைக்காம இருக்குற மக்களோட வாழ்க்கை இப்பிடி தான் இருக்கு. இத்தனை மனித வளங்கள் இருந்தும் ஏன் இந்தியா இன்னும் இப்பிடியே இருக்கு?, மனித வளத்தை இன்னும் சரியான வழியில் நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதை இது காட்டுகிறது.

இதை சரி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு, ஆனா இது வரை போட்ட திட்டங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாரருக்கு மட்டுமே பயன்பட்டு இருக்கு அதற்கு ஆதாயமா அவங்களும் நிறைய வாங்கி அனுபவிச்சாச்சு.. நீங்க எந்த பேரு வேணா வச்சுக்கிடலாம், லஞ்சம் இல்லை அன்பளிப்பு இல்ல எதுவோ உங்களுக்கு புடிச்சது     

சமீபத்தில ஒரு பாட்டு வாகை சூடவா படத்தில் இருந்து ஒரு வரி சொல்லுறேன்

"அய்யனாரு சாமி
அழுது தீர்த்து பார்த்தோம்
சொரணை கெட்ட சாமி
சோத்த தானே கேட்டோம்"

இப்பிடி கஷ்ட ஜீவனம் நடத்துற மக்கள் இங்கே அதிகம்.. 

இன்னைக்கு தான் இது எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒரு பெருசு உண்ணாவிரதம் உக்காந்துகிட்டு இருக்காரு, இன்னும் நெறைய பெருசுங்க சுத்தி கத்தி திட்டிக்கிட்டு இருக்காங்க,  இன்னொரு பெருசு எல்லாத்தையும் மௌனமா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கு. நாட்டுல சில பெருசுங்க தொல்லை ஜாஸ்தியாயிட்டே வருது.  இது கூட பிசிபிசித்து போய்விடும்ன்னு தான் எனக்கு தோணுது.  இது எல்லாம் புதுசு இல்லை, என்னைக்கு வெள்ளைக்காரன் நம்ம கிட்ட இந்த நாட்டை விட்டுட்டு போனானோ அப்ப இருந்தே இருக்கு இதுக்கு முன்னாடி நடந்த போராட்டங்கள் எதுக்காக நடந்துச்சு அதன் முடிவு என்னாச்சு அதைப்பத்தி தான் இன்றைய குப்பைதொட்டியில தேடப்போறோம்.. 

காலிஸ்தான் கோரிக்கை

நோக்கம் :    இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் இருக்கும் பஞ்சாப் பகுதியை பிரித்து ஒரு தனி சீக்கிய அரசை உருவாக்க சீக்கிய இன மக்களால் தொடங்கப்பட்ட முயற்சி.  18 ஆம் நூற்றாண்டுக்கு பின் சீக்கிய பேரரசு மீண்டும் உருவாக்க வேண்டும்  நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த இயக்கம் 1970 மற்றும் 1980 களில் அதன் உச்சநிலையை அடைந்தது. இப்போதெல்லாம், அது பரவலாக ஒரு சிறிய அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டு சீக்கிய ஆதரவாளர்கள் நன்கொடைகள் மூலம் ஒரு சுதந்திர சீக்கிய நாடு பெற இந்த போராளி குழுக்கள் முயற்சிகள் செய்து வருகின்றன, இன்னும் இளைஞர்களை ஈர்க்க மற்ற நாடுகளில் இருந்து நிதி உதவிகளையும் பெற்று வருகின்றன. 

1971 இல், காலிஸ்தான் ஆதரவாளராக ஜக்ஜித் சிங் செளகான், அமெரிக்கா பயணித்தது. அவர் காலிஸ்தான் உருவாவதை பிரகடனம் செய்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விளம்பரம் அளித்தார் அதன் மூலம் மில்லியன் டாலர்களை சேகரிக்க முடிந்தது.

ஏப்ரல் 12, 1980 இல்,  அனந்தபூர் சாஹிப் அவர்கள் இந்திரா காந்தியோடு  ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி பின் "காலிஸ்தான் தேசிய கவுன்சில்"  உருவாக்கம் பற்றி அறிவித்தார். அவர் தன்னை அதன் ஜனாதிபதி என்றும் மற்றும் பல்பிர் சிங் சாந்து பொது செயலாளர் என்று அறிவித்தார். மே 1980 இல், ஜக்ஜித் சிங் செளகான் லண்டன் பயணித்தது மற்றும் காலிஸ்தான் உருவாவதை அறிவித்தார். இதே போன்ற ஒரு அறிவிப்பு பல்பிர் சிங் வெளியிட்டார் மேலும் அதை தொடர்ந்து காலிஸ்தான் நாணயம் வெளியிடப்பட்டது.   அமிர்தசரஸ் மற்றும் பிற இடங்களில் அதிகாரிகள் செயலற்று போனனர்.   இதை ஒரு காங்கிரஸ் கட்சியின்  அரசியல் ஸ்டண்ட் என்று லோங்வால் தலைமையிலான அகாலி தளம் எதிர்த்து குரல் எழுப்பியது. 

1980 இல், சில காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் இந்திய இராணுவத்திற்கு சாதகமாக நடக்க ஆரம்பித்ததால் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.  அதில் ஒன்று புளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star)

புளூஸ்டார் நடவடிக்கை என்பது சூன் 3-6, 1984-ல் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை ஆகும். அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, அப்போதைய இந்திய பிரதமரான இந்திரா காந்தியின்  ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே-வால் தலைமை தாங்கப்பட்ட பிரிவினைவாதிகள் பெருமளவில் ஆயுதங்களை சீக்கிய கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த நடவடிக்கை இந்திய இராணுவத்தினால் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாதத்துக்குள்ளானது, குற்றம் சாட்டப்பட்டது.  அரசு அளித்த நியாயப்படுத்தும் விவரங்கள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்தியா டுடே பத்திரிகையால் "புளூஸ்டார் நடவடிக்கை" முதல் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.

அரசுத் தரப்பில், சாவு எண்ணிக்கை ராணுவத்தில் 83 ஆகவும் பொதுமக்கள் தரப்பில் 492 ஆகவும் கூறப்படினும் சில தன்னிச்சையான மதிப்பீடுகள் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்குமென கூறுகின்றன.

இந்த ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலுமுள்ள சீக்கியர்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மேலும் இந்தியாவிலும் பதட்ட நிலையால் சீக்கியர் மேல் பல இடங்களில் தாக்குதலும் நடைபெற்றது. ராணுவத்தில் இருந்த சீக்கியர் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். இந்திய அரசு குடியாண்மை பணிகளிலும் ராணுவத்திலும் இருந்த பல சீக்கியர் பணிகளைத் துறந்தனர். மேலும் சில சீக்கியர்கள் இந்திய அரசால் அளிக்கப்பட விருதுகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் அரசிடம் திரும்பக் கொடுத்தனர்.

ராணுவ நடவடிக்கை நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு பிறகு, அதாவது 31 அக்டோபர் 1984 அன்று, இந்திரா காந்தி அவர்கள் இரண்டு சீக்கிய மெயக்காப்பாலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது ஒரு பழிவாங்கிய நிகழ்வாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. தான் கொல்லப்படுவதற்கு முதல் நாளிரவு ஒரு அரசியல் கூட்டத்தில், "இந்தியாவுக்காக என் உயிர் போனால் நான் வருத்தப்படமாட்டேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலமிக்க நாடாக்கும்", என்று

இந்திரா காந்தி பேசினார். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 5000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சீக்கிய-எதிர்ப்பு கலகங்களில் கொல்லப்பட்டனர். சீக்கிய இனத்தவரிடையே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.சீக்கியரால் 'பெரும் படுகொலை' எனக் கருதப்படும், 1761-ல் ஆப்கானிய அகமது ஷா அப்தாலி-யின் சீக்கிய இனப் படுகொலையோடு இந்நிகழ்வு ஒப்பு நோக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பின் கீழ் தனிநாடு கோரிக்கை தடை செய்யப்பட்டு உள்ளது, மேலும் காலிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராடி உள்ளது. இந்திய பாதுகாப்பு படைகள் 1990 களின் ஆரம்பத்தில் பஞ்சாப் முக்கிய பிரிவினைவாத கிளர்ச்சியை அடக்கிவிட்டது, ஆனாலும் பல இந்திய சீக்கிய அரசியல் கட்சிகள் இன்னும் இந்திய உள்ளே அமைதியான முறையில் சுதந்திர காலிஸ்தானுக்கு போராடிக்கொண்டு இருக்கிறது.  இன்னும் தள் கல்சா போன்ற இயக்கங்கள்   சர்வதேச அளவில் காலிஸ்தானுக்கு போராடி வருகிறது இன்னும் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் இந்தியாவிற்கு வெளியே இன்னும் தீவிரமாக உள்ளன.

பஞ்சாப் தற்போதைய நிலைமையில் அமைதியான உள்ளது.   தேசப்பற்று, இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இடையே புதுப்பிக்கப்பட்ட மரியாதை உயர் நிலை எல்லாம் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள். சீக்கியர்கள்  இன்னும் தங்களின் தனித்துவத்தை சமூகத்தில் பராமரித்து வருகிறார்கள். இந்தியாவில் தற்போது ஒரு சீக்கியர் (மன்மோகன் சிங்) பிரதமராக வரமுடிந்தது மனமாற்றங்கள் மூலமே.

 இது போலே உலகில் தமிழர் அதிகம் உள்ள பிற நாடுகளில் தமிழர்கள் தலைமை ஏற்கும் நாள் தொலைவில் இல்லை.  நான் இறப்பதற்குள் உலகமே ஒரு தமிழன் தலைமையில் நடைபோடுவதை பார்த்துவிட்டு சாக வேண்டும்

இன்னும் குப்பையை கிளறுவோம் - அடுத்த வெள்ளிக்கிழமை

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

'C' - எழுத்து வராத ஒரு லட்சம் இங்கிலீஷ் வார்த்தைகள் உங்களுக்கு தெரியுமா?


1) 'a', 'b', 'c' & 'd'   இந்த நாலு எழுத்தும் 1 to 99 (ONE TO NINTY NINE அப்பிடி எழுதுனா)  வரை வராது

'd'  வர்ற மொதோ எடம் Hundred

'a', 'b' & 'c'  இந்த மூணு எழுத்தும் 1 to 999 (ONE TO NINE NINTY NINE) வரை வராது

'a'  வர்ற மொதோ எடம் Thousand

'b' & 'c'  ரெண்டு எழுத்தும் 1 to 999,999,999 (மேலே சொன்ன ஃபார்மட்-ல எழுதுங்க எனக்கு கை வலிக்கும்) வரை வராது  

'b'  வர்ற மொதோ இடம் Billion

கடைசியா

'c'  எங்கயுமே வராது இங்கிலீஷ் நம்பர்கள்-ல

யாராவது கொஞ்சம் எழுதி பார்த்து செக் பண்ணி சொல்லுங்களேன்.......
======================================================================
2) உலகின் நீளமான பேர் உள்ள மலை Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukup okaiwe-nuakit natahu, இது நியூசிலாந்து-இல  இருக்க மலையோட பேரு

3 ) லாஸ் ஏஞ்ஜல்ஸ் - இந்த  ஊரோட முழு பேரு "El Pueblo de Nuestra Senora la Reinade los Angeles de Porciuncula"  இதை சுருக்கமா L.A அப்பிடின்னு   கூப்பிடுறாங்க

4) 15 தனித்த எழுத்துக்களை கொண்ட வார்த்தை uncopyrightable.

5) 4 வார்த்தைங்க -dous ல முடியும் tremendous, horrendous, stupendous, and hazardous.

6) UND ல ஆரம்பிச்சு UND-ல முடியிர ஒரு வார்த்தை UNDERGROUND

7) THEREIN இந்த ஒரு வார்த்தையில இருந்து 10 வார்த்தைகளை உருவாக்கலாம், இதுல என்ன ஆச்சரியம்ன்ன எழுத்தை மாத்தி போட வேண்டியது இல்லை.   the,there, he, in, rein, her, here, ere, therein, herein.

==========================================================================


ஒரு நாள் ஒரு ஆள் கடவுள் கிட்ட கேட்டானாம் "அன்பு அப்பிடின்னா என்ன கடவுளே" ன்னு,

கடவுள் "அந்த தோட்டத்தில இருக்கிறதுலயே அழகான பூவை எடுத்துட்டு வா" அப்பிடின்னாரு   

போனவன் ரொம்ப நேரம் கழிச்சு திரும்பி வந்தான் வெறும் கையோட

"என்ன ஆச்சு ஒரு அழகான பூ கூட கிடைக்கலையா" கடவுள் கேட்டாரு

"இல்ல கடவுளே மொதோ ஒரு பூவை பார்த்தேன், அதவிட அழகா வேற எதுவும் இருக்கான்னு தேடிக்கிட்டு போனேன், ரொம்ப தூரம் போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அழகான பூவை அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்னு, திரும்ப வந்து பார்த்தேன் அந்த பூவை காணோம்" அப்பிடின்னான்

கடவுள் சிரிச்சுக்கிட்டே - "அன்பு கூட அப்பிடித்தான் எப்ப கிடைக்கும்ன்னு தெரியாது ஆனா கிடைக்கும் போது பத்திரமா வச்சுக்கிடணும், ஒரு தடவை விட்டுட்டா அது திரும்ப கிடைக்காது" 

உடலை ஊடுருவும் குளிரில்
உடலே போர்வையாய்
ரோட்டோரத்தில்
புதிதாய் ஈன்ற
குட்டிகளுடன் உறங்கும்
தெருநாய் !!


புதன், ஆகஸ்ட் 24, 2011

நாளை இது நிகழாமலே போகலாம்

நீங்கள் யாரோடும் சண்டையிட்டு விட்டால்
இன்றே சரி செய்து விடுங்கள்
இன்று அவர் உங்கள் நண்பராக இருக்கவே
விரும்பிக்கொண்டு இருக்கலாம்
நாளை இது நிகழாமலே போகலாம்

நீங்கள் யாரையேனும் காதலித்துக்கொண்டு இருந்தால்
இன்றே சொல்லி விடுங்கள்
இன்று அவர் உங்களை
காதலித்துக்கொண்டு இருக்கலாம்
நாளை இது நிகழாமலே போகலாம்

நீங்கள் உங்கள் நண்பரை பாராட்ட விரும்பினால்
இன்றே பாராட்டிவிடுங்கள்
அவரும் உங்களை பாராட்ட
காத்துக்கொண்டு இருக்கலாம்
இன்று இல்லாவிடில்
நாளை இது நிகழாமலே போகலாம்

=================================================================

ஒரு நாள் விடியற்காலை இன்னும் இருள் சூழ்ந்த அந்த நேரம், சுந்தர் கடற்கரை வழியே நடந்து கொண்டு இருந்தார். வருகிறேன் என்று சொன்ன நண்பருக்காக காத்துக்கொண்டு இருந்தார்.

பொழுது போகவில்லை என்று கடற்கரையில் இருந்த கற்களை அலைக்குள் போட்டபடி இருந்தார், வெளிச்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது, ஆம் சூரியன் மெல்ல கடலுக்குள் இருந்து வெளியே வர ஆரம்பித்து இருந்தது,

வெளிச்சம் பட்டவுடன் கையில் இருந்த கல் பளபளக்க ஆரம்பித்தது. அப்போது தான் சுந்தர் கவனித்தார் அது வெறும் கல் அல்ல வைரம் என்று, அவருடைய துரதிர்ஷ்டம் ஒரு கல்லை தவிர எல்லாவற்றையும் கடலுக்குள் எறிந்து விட்டு இருந்தார்..

மொக்கை நீதி :  காலையில் வெளிச்சம் வருவதற்கு முன் எழக்கூடாது...

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

நீங்க கம்ப்யூட்டர்க்கு அடிமையா அண்ணே?

நீங்கள் வாழ்க்கையை ஒரு ஜால விளையாட்டாய் (juggling)   கற்பனை செய்து கொள்ளுங்கள்

காற்றில் ஐந்து பந்துகள் ஆடிக்கொண்டு இருக்கிறது.  அவைகளுக்கு வேலை, குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் சக்தி என்று பெயர்.  வேலை ஒரு ரப்பர் பந்து போலே ஒருமுறை தவறவிட்டாலும் திரும்பவும் உங்களிடம் திரும்ப வரும், ஆனால் மற்ற நான்கும் (குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் சக்தி)  கண்ணாடியால் செய்யப்பட்டு இருக்கின்றன.

நீங்கள் இதில் எதை தவறவிட்டாலும் சில நேரம் கீறல் விழலாம், சில நேரம் திரும்ப பெற முடியாமல் நொறுங்கியும் போகலாம்...  எப்படியும் அதை பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது..  நாம் (என்னையும் சேர்த்து தான்) அதை உணர வேண்டும்

அலுவலகம் நேரங்களில் நன்றாக வேலை செய்வோம், சரியான நேரத்திற்கு வீட்டுக்கு போவோம் குடும்பத்திற்கு தேவையான நேரம் ஒதுக்குவோம்..

மதிப்பிற்கு ஒரு மதிப்பு உண்டு அதை மதிக்கும் போது மட்டும்..

====================================================================

நீங்க கம்ப்யூட்டர்க்கு அடிமையான்னு எப்பிடி கண்டு பிடிக்கிறது? கீழே இருக்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டா தெரிஞ்சுடும்.  

1.    உங்களுக்கு எத்தனை கால்கள் இருக்கிறது?

விடை தெரிந்துகொள்ள கீழே பார்க்கவும்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்ன ரொம்ப தூரம் கீழே வந்தீங்களா அப்ப நீங்க நிச்சயம் கம்ப்யூட்டர்க்கு அடிமை அண்ணே ஏன்னா நான் உங்களை பாக்கச்சொன்னது உங்க காலை ஹி ஹி ஹி 

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

என்னத்தை சொல்ல இங்கே எல்லாம் டிவோர்ஸ்க்கு பின்னாடி தான் மேரேஜாம்

கருத்தரங்கு

ஒருவரின் குழப்பம்
எல்லோரின் குழப்பமாய்
பெருகும் அரங்கு

சமரசம்

தனக்கு தான் பெரிய பங்கு
கிடைத்து இருக்கிறது என்று எல்லோரையும்
நம்ப வைக்கும் வித்தை

கண்ணீர்

ஆணின் பலத்தை வீழ்த்தும்
தாரத்தின் நீராதாரம்

அகராதி - (DICTIONARY)

மேரேஜ்க்கு பின் டிவோர்ஸ் வந்தால்
அது வாழ்க்கை
டிவோர்ஸ் பின் மேரேஜ் வந்தால்
அது தான் அகராதி

கருத்தரங்கு அறை 

எல்லோரும் பேசுவார்கள்
யாரையும் கவனிக்க மாட்டார்கள்
கடைசியில் எதையும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்

பரவசம் 

ஒரு உணர்வு
இனி உணரப்போவது
இதற்குமுன் உணர்ந்திராறது

பழைமை 

ஒரு புத்தகம்
எல்லோரும் போற்றுவார்
ஒருவரும் வாசித்து இருக்கமாட்டர்

அலுவலகம் 

உங்கள் பரபரப்பான
வாழ்க்கைக்கிடையே ஓய்வு
எடுக்கும் ஒரு இடம்

புன்னகை

ஒரு வளைவான ஆயுதம்
பல விஷயங்களை நேராக்கும்

கொட்டாவி

கல்யாணமான ஆண்கள்
வாய் திறக்க ஒரு காரணம்

சிகரெட் 

புகையிலை சுற்றப்பட்ட சிறுகாகிதம்
ஒரு பக்கம் நெருப்பு
இன்னொரு பக்கம் முட்டாள்

அணுகுண்டு 


ஒரு கண்டுபிடிப்பு
எல்லா கண்டுபிடிப்புகளையும்
பயன் இல்லாமல் செய்யும்

வேதாந்தி 

வாழுமட்டும் மௌனமாய்
இருந்து விட்டு
சாகும் போது பேச நினைப்பவன்

முதலாளி
நரகத்திற்கு போ
என்பதைக்கூட
பயணத்திற்கு தயாராக சொல்வது போல
சொல்பவர்

கருமி

சாகும் போது பணக்காரனாய்
சாவோம் என்று நம்பி
வாழும் போதெல்லாம்
ஏழையாய் வாழ்பவன்

விரிவுரை 

ஆசிரியரின் குறிப்பில் இருந்து
மாணவரின் குறிப்பிற்கு பாடங்களை
கடத்தும் ஒரு கலை
மூளைக்கு இங்கு வேலை இல்லை

குற்றவாளி 

எல்லோரும் போல
சாதாரணமாய் இருப்பான்
பிடிபடும் வரை

அரசியல்வாதி 

முதலில் உங்கள் கையை குலுக்குவார்
பிறகு உங்கள் நம்பிக்கையை
வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

குப்பைத்தொட்டி - (19-08-2011)


முஸ்கி : பதிவு கொஞ்சம் பெருசு, டைம் இல்லாதவங்க ஃப்ரீயா இருக்குறப்ப வந்து படிங்க  

"படிக்காத முட்டாளுன்னு பல பேரு சொன்னனுங்க
அதனால குத்தம் என்ன அண்ணாச்சி
படிச்சாலும் வேலை வெட்டி கெடைக்காத தேசத்தில
அறிவாளி ஆனா மட்டும் என்னாச்சு"

இது ரஜினி நடிச்ச படிக்காதவன் படத்துல வந்த பாட்டு, அப்ப இந்தியால இருந்த  நிலைமைய பட்டவர்த்தனமா தெரிஞ்சுக்கலாம். இன்னும் கமல் நடிச்ச வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா போன்ற படங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் வேலை இல்லா திண்டாட்டம் பத்தி சொல்லி இருப்பாங்க.

என் சொல்றேன் தெரியுமா, இன்னைக்கு நாம பாக்குற இந்தியா வேற, அன்னைக்கு இருந்த இந்தியா வேற. நமக்கு முந்தைய தலைமுறை அதாவது நம்ம அப்பாக்கள் ரூ. 3000   சம்பாதிச்சா பெரிய விஷயம்.  அதிகபட்சம் 25  ஆண்டுகள் வேலை செஞ்ச ஒருத்தர் கடைசி மாச சம்பளமே ரூ 15,000 தாண்டாது அதுவும் ஜி‌எம் லெவல்-ல.   இது எல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி இல்லை 1990 வரை இது தான் நிலைமை. 

இன்னைக்கு என்ன நெலைமை படிச்சு முடிச்சு டிகிரி வாங்குறோமோ இல்லையோ வேலை வாங்கிட முடியுது..   சம்பளம் குறைந்தது ரூ. 10000 கெடைக்குது. எப்பயுமே ரூ 2000 வரை பர்ஸ்-ல வச்சுக்கிட்டு சுத்த முடியுது, வாரம் ஒரு முறை பெரிய ஹோட்டல் போயி ரூ 1000 மொய் வச்சுட்டு வர முடியுது.  இப்பிடி நாம சொகுசா வாழ்ந்து கொண்டு இருக்கோமே எப்பிடி? 

கொஞ்சம் யோசிச்சு பாருங்க உங்க அப்பா நீங்க கேட்ட எத்தனை விஷயத்தை மறுக்கமா செஞ்சு குடுத்து இருந்தாரு உங்க சின்ன வயசுல. இன்னைக்கு எத்தனை விஷயங்களை நீங்க உங்க குழந்தை கேட்டப்ப மறுத்து இருக்கீங்க. பிள்ளை கேக்குறதுக்கு முன்னாடியே செஞ்சு குடுக்குற பெத்தவங்க எத்தனை பேரு இங்கே?

எங்கே லஞ்சம் ஊழல் ஆரம்பிக்குது தெரியுமா?  நான் என்ன குழந்தைன்னு தெரிஞ்சுக்க நர்ஸுக்கு எங்கப்பா குடுத்தாறே ரூ 100 அங்கே இருந்து தான்.  அதாவது நாம பொறக்கும் போதே ஆரம்பிச்சுடுதுன்னு சொல்ல வர்றேன். அப்பறம் பெர்த் சர்டிபிகேட் வாங்க, கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்க, அப்பறம் ஸ்கூல்-ல சீட் வாங்க, காலேஜ்-ல  சீட் வாங்க அப்பிடின்னு நாம வளர வளர அதுவும் வளர்ந்து கிட்டே வருதே.   எல்லா வேலைக்கும் ஒரு அமெளண்ட் வெட்ட வேண்டி இருக்கே!!?

ஏதோ கொஞ்ச பேரு மட்டும் லஞ்சம் வாங்குற மாதிரியும், ஊழல் பண்ற மாதிரியும் சிலர் போராட்டம் பண்றது தான் இன்னைக்கு ட்ரெண்ட். எல்லாம் ஒரு விளம்பரம் தான். நேத்து ஒரு மெயில் வந்துச்சு அதை அப்பிடியே காப்பி பண்ணி இருக்கேன்

Please FORWARD to save ourselves

Anna Hazare says bring back the Black Money.

Do u know what will happen if 1,456 Lac Crores comes back.

1. India Financially No.1
2. Each district will get 60000 crores & each village will get 100 Crores
3. No need to pay taxes for next 20 yrs.
4. Petrol 25 Rs, Diesel 15 Rs, Milk 8 Rs.
5. No need to pay electricity bill.
6. Indian borders will become more stronger than the China Wall.
7. 1500 Oxford like Universities can be opened.
8. 28,000 kms Rubber road (like in Paris) can be made.
9. 2,000 hospitals (with all facilities) all medicine Free.
10. 95 crore people will have their own house.

Support Anna Hazare by forwarding this message to atleast 10 Indians.

10 things to know about Anna Hazare 'n Jan Lok Pal Bill.. !

1. Who is Anna Hazare?
An ex-army man. Fought 1965 Indo-Pak War

2. What's so special about him?
He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra

3. So what?
This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills. In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.

4. Ok,...?
This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.

5. Really, what is he fighting for?
He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.

6. How that can be possible?
He is advocating for a Bil, The Jan Lokpal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.

7. It's an entirely new thing right..?
In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit thier theft (corruption).

8. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?
The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed. Next, they make a joint committee to DRAFT the JAN LOKPAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them.

9. Fine, What will happen when this bill is passed?
A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result.

10. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?
Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more. Prominent personalities like Aamir Khan is supporting his cause.

என்ன படிச்சாச்சா, மொதோ இவ்வளவு கருப்பு பணம் இருக்கா தெரியல, அப்பிடியே இருந்தாலும் எந்த நாட்டுல இருக்கோ அந்த நாடு அவ்வளத்தையும் தர சம்மதிக்குமா இல்லையோ தெரியல ஏன்னா அவங்க நாட்டு பொருளாதாரம் குடை சாஞ்சுடுமே. அப்பிடியே தர சம்மதிச்சாலும் அங்கே வரி காட்டாம பணத்தை இந்தியாக்கு எடுத்துட்டு வர முடியாது. அவனுங்க 40% வரி போட்டா என்ன ஆகும்? முக்கா காசு அவனுங்களுக்கு அழ வேண்டி இருக்கும். 

அவ்வளவு ஏங்க இவ்வளவு பணத்தை வச்சு என்ன பண்றதுன்னு யாருக்கும் தெரியாது. ஆனா ஒரு சந்தோஷம் இவ்வளவு காசு வருதேன்னு. சும்மா வந்தா யாரு தான் சந்தோஷப்பட மாட்டாங்க.  வழக்கம் போல ஏதாவது கோவில்ல கொண்டு போயி பொக்கிஷ அறையில பத்திரமா வச்சுடுவாங்களோ!!? சரி விசயத்துக்கு வர்றேன்   

இன்னைக்கு இந்தியால சுயஅதிகாரம் உள்ள அமைப்புகள் எத்தனை தெரியுமா?  இத்தனை இருக்கும் போது புதுசா எதுக்கு இன்னொன்னு எனக்கு தெரியல?  இது வரைக்கும் எத்தனையோ ஊழல் வெளியே வந்து இருக்கு. எத்தனை பேர் கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க உங்களுக்கே தெரியும்.  அப்ப என்ன அர்த்தம் இங்க இருக்கிற சட்டம் எல்லாம் சரியா தான் இருக்கு ஆனா செயல்படுத்துற ஆளுங்க தான் சரியில்லை அப்பிடித்தானே.

ஒரு உதாரணம் சொல்றேன் தேர்தல் ஆணையம் இந்தியா குடியரசு ஆனதில இருந்தே இருக்கு.  ஆனா டி.என். சேசன் என்கிறவர் வந்த பின்னாடி தான் அதன் மேல மரியாதையே வந்துச்சு ஏன்னா அவர் செய்த மாற்றங்கள், அதாவது அவங்கவங்க வேலையை சரியா செஞ்சா இந்தியால பாதி பிரச்சனைகள் குறைஞ்சுடும். கேக்குறதுக்கு ஆள் இல்லாம நீ ரொம்ப கெட்டுப்போயிட்ட மாப்ளே அப்பிடினு கவுண்டமணி பேசுவாறு அது மாதிரி இங்கயும் யாரும் கேக்கமாட்டாங்கன்கிற தைரியத்தில நிறையா பேரு அலும்பிக்கிட்டு இருக்காங்க.. 

இன்னைக்கும் கூட ஒரு சாதாரண வருமான வரி தணிக்கை அலுவலர் பிரதமரின் வருமானவரி சரிபார்த்து தவறு இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் உண்டு.  யாராவது செய்யுறாங்களா? எத்தனை பேரோட வருமான வரி படிவம் சரிபார்க்கப்படுகிறதோ தெரியாது, வந்த வரை வரவுன்னு வாங்கி போட்டுக்கிற மாதிரி தெரியுது, யாராவது போட்டுக்குடுத்தா மட்டுமே இன்ஸ்பெக்ஷன்,சோதனை எல்லாம்.. 

இந்தியாவோட இன்னொரு பக்கமும் இருக்கு ஒரு நாளைக்கு ரூ 20 சம்பாதிக்க முடியாத ஆளுங்களும் இங்கே இருக்க தானே செய்யுறாங்க, எங்கேன்னு கேக்குறீங்களா கிராமத்தில விவசாய கூலிகளா இல்ல செங்க சூலையில் கொத்தடிமைகளா இல்ல மிச்சர் கம்பெனியில முறுக்கு பிழியிறாங்க.  இப்பிடி விதம் விதமா இருக்காங்க.

ஏன் இந்த ஏற்ற தாழ்வு? இன்னும் மலம் அள்ளும் மனிதர்கள் இங்கு இருக்கத்தானே செய்கிறார்கள் 

சட்டம் இயற்றும் உரிமை எங்களுக்கு மட்டுமேன்னு திமிரா பேசிக்கிட்டு திரியிறாங்களே ஏன்?

எல்லாத்துக்கும் பதில் ஒண்ணு தான் அது நாம, ஆமா நாம மட்டும் தான்... தப்பான தலைமைகளை தேர்ந்து எடுப்பது அவர்களை தொடர்ந்து ஊக்குவிப்பதும் நாம தானே. 

ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார்

காந்தியவாதி அன்னா ஹசாரே, இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை துவக்குகிறார். 15 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

வலுவான லோக்பால் மசோதா அமைய தனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திகார் சிறையில் உள்ள அவர் கூறியுள்ளதாவது, இன்று, தான் பொதுமக்களை சந்திக்க உள்ளேன். எனது உடல்நிலையில் எவ்வித குறைபாடுமில்லை. நான் நலமாகவே உள்ளேன். என் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். வலுவான லோக்பால் மசோதா அமையும் வரை எனது போராட்டம் தொடரும். எனக்கு ஆதரவாக நிற்கும் மக்களை பார்த்து நான் உளமகிழந்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் : அரசின் அணுகுமுறையைப்பொறுத்து, அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் 15 நாட்களுக்கு மேலும் செல்லலாம் என அவரது ஆதரவாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், மிக நீண்ட போராட்டம் நடத்த தாங்கள் முதலில் முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் சட்ட பிரச்னைகள் காரணமாக 15 நாட்கள் போராட்டம் நடத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதே சமயம் எங்கள் போராட்டம் குறித்த அரசின் அணுகுமுறையைப் பொறுத்து இந்த போராட்டம் மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கிரண் பேடி: "உடல் நிலை ஒத்துழைக்கும் வரை ஹசாரே உண்ணாவிரதத்தை தொடர்வார்' என, அவரது குழுவில் உள்ள கிரண் பேடி தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஹசாரேயின் உண்ணாவிரதம் காலவரையற்றது. சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் அல்ல. அவர் உடல்நிலை ஒத்துழைக்கும்வரை நீண்ட காலம் உண்ணாவிரதத்தை தொடர்வார். அவரது உடல் நிலை மோசமடைய அனுமதிக்கக்கூடாது' என்றார். "ஹசாரேவுக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால், அதை கொடுக்கவேண்டும்' என, டாக்டர் நரேஷ் தெரஹான் குழுவினர் தெரிவித்தனர்.

மேல சொன்னது எல்லாம் இன்னைக்கு பேப்பர்-ல வந்த செய்திகள் எல்லோரும் படிச்சு இருப்பீங்க. எனக்கு என்ன தோணுதுன்னா இவர் உண்ணாவிரதத்தை விட்டுட்டு மௌனவிரதம் இருந்தா அவருக்கும் நல்லது அப்புறம் நாட்டுல தேவை இல்லாத குழப்பங்கள் குறையும்.   ஒரு குடிமகனா ஒரு நாட்டு முன்னேறத்துக்கு என்ன செய்யணுமோ அதை செய்யாம ஒரு நாட்டை முடக்க செய்கிறேன் பார்ன்னு வீரம் பேசிக்கிட்டு திரியிறது சரியா? 

டிஸ்கி :  இது என்னோட கருத்து மட்டுமே.  நல்லா யோசிங்க இவர் சரியான தலைமைன்னு உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சா மட்டும் ஆதரவு குடுங்க..  இல்லாட்டி வேலை அற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தையை வேடிக்கையாக கூட நம்பி விடாதேன்னு எம்‌ஜி‌ஆர் சொன்னரே அது மாதிரி வருத்தப்பட வேண்டி இருக்கும். 


செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

அவளின் நினைப்பில் அவனின் பிரச்சனைகள்

இது ஒரு பொண்ணோட அட்வைஸ்.  ஒரு பொண்ணு தன்னோட தோழிக்கு செய்யுற அட்வைஸ்.. 

1.    நீ அவனிடம் அன்பாய் நடந்து கொண்டால், நீ அவனை காதலிக்கிறாய் என்பான், அவ்வாறு நீ நடந்து கொள்ளாத பட்சத்தில் உன்னை கர்வி என்பான்

2.    நீ அழகாய் உடை அணிந்தால் அவனை கவரவே உடை அணிகிறாய் என்பான், அவ்வாறு இல்லாத பட்சத்தில் உன்னை பட்டிக்காடு என்பான்

3.    நீ அவனிடம் விவாதம் செய்தால் உன்னை பிடிவாதாக்காரி என்பான், நீ அமைதியாய் இருந்தாலோ உன்னை மூளை அற்றவள் என்பான்

4.    நீ உன் பிரச்சனைகளை அவனிடம் சொன்னால் உன்னை இடைஞ்சல் என்பான், எதுவும் நீ சொல்லவில்லை என்றால் நீ அவனை நம்பவில்லை என்பான் 

5.    நீ அவனை திட்டினால் உன்னை ஆயா மாதிரி திட்டாதே என்பான், அவன் திட்டினால் உன்னை பராமரிக்கிறானாம்

6.    நீ சத்தியத்தை மீறினால் உன்னை நம்பிக்கை இல்லாதவள் என்பான், அவன் மீறினால் வேறு வழி இல்லாமல் மீறினேன் என்பான்

7.    நீ அதிகம் மதிப்பெண் வாங்கினால் அது உன் அதிர்ஷ்டம் என்பான், அவன் வாங்கினால் அவன் அறிவாளி என்பான்

8.    நீ அவனை காயப்படுத்தினால் உன்னை கருணை இல்லாதவள் என்பான், அவன் உன்னை காயப்படுத்தினால் உன்னை கூர்  உணர்வுடயவள் (sensitive) என்பான் 

9.    நீ அவனை விரும்பவில்லை என்றால் நீ அவனை காதலிக்கவில்லை என்பான், நீ விரும்பினால் உன்னை மலிவானவள் என்பான் 

10 . நீ அவனை காதலிக்கவில்லை என்றால் உன்னை சொந்தமாக்கி கொள்ள முயற்சிப்பான், நீ காதலித்தால் உன்னை விட்டு விலக நினைப்பான்

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

இது தாண்டா அரசியல்

அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் அர்விந்த் கிஜ்ரிவல் சென்னை IIT - யில் அவர் பேசியது உங்களுக்காக

பாகம் - I
 


பாகம் - II பாகம் - III 


பாகம் - IV


இந்த பன்ச் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

  • உங்கள் வெற்றி  நீங்கள் செய்யும்  தியாகத்தை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது
  • வெற்றி மகிழ்ச்சிக்கான வழி அல்ல, ஆனால் மகிழ்ச்சி வெற்றிக்கான வழி
  • அன்பு ஒரு பரிசு போல உங்களுக்கு கிடைத்தால் அனுபவியுங்கள் போற்றுங்கள் கிடைக்கவில்லையா கவலைப்படாதீர்கள் யாரேனும் உங்களுக்காய் கட்டிக்கொண்டு இருப்பார்கள்
  • தவிர்க்க முயற்சிக்கும் போது தான் விதி வந்து முன் நிற்கும்
  • பொய்யை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னால் போகலாம் ஆனால் திரும்பி வரமுடியாது
  • உண்மை நிர்வாணமாய் போகும் பொய் எப்போதும் உடை தேடும்
  • என்ன செய்யப்போகிறோம் என்று யாருக்கும் தெரியாது முயற்சியை தொடங்கும் வரை
  • சிறு குழந்தைக்கு சிறிய சந்தோஷம், பெரிய குழந்தைக்கு பெரிய சோகம்
  • நம் சந்தோசங்களையும் துக்கங்களையும் நாம் அனுபவிக்கும் முன்னமே தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிறோம்


கடைசியா

தவறு செய்த போது சரணடைபவன் நேர்மையானவன்
தெரியாத போது சரணடைபவன் புத்திசாலி
தவறேதும் செய்யாத போதும் சரணடைபவன் கணவன்

இன்று வலைச்சரத்தில் காகிதப்பூக்கள் கொஞ்சம் படிங்களேன்

ஜ.ரா.வின் தத்துபித்துவம்

# இறைவனுக்கு நன்றி சொந்தங்களை நீ கொடுத்துவிட்டு நண்பர்களை தேர்தெடுக்க அனுமதித்து இருக்கிறாய், நல்ல சொந்தங்களை விட நிறைய நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டேன்

# வாய்ப்புகள் உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பது இல்லை, அது நீங்கள் என்ன தேர்ந்து எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தே இருக்கும் மேலும் அது அடைய வேண்டிய ஒரு விஷயம், காத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் அல்ல

# பிரச்சனை எல்லாம் பிரச்சனை இருப்பது இல்லை, ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று சிந்தித்து கொண்டு இருப்பது தான் பிரச்சனை 

# உங்கள் முகத்தில் பயம் தெரிய வைக்கும் அனுபவம் உங்களுக்கு பலம், தைரியம் தரும் எனவே நீங்கள் செய்ய முடியாது என்று எண்ணியதை செய்து பார்த்துவிடுங்கள் 

# அறிந்திருந்தால் மட்டும் போதாது, உபயோகப்படுத்த வேண்டும், விரும்பினால் மட்டும் போதாது செய்து பார்க்க வேண்டும்  

# நாம் காணும் பல கனவுகள் பொருத்தம் இல்லாதவைகள், நடக்க இயலாதவைகள் ஆனாலும் கனவு தவிர்க்க முடியாதது 

# கனவு உறக்கத்தில நாம் காணுவது அல்ல, நம்மை உறங்க விடாதவைகளே கனவுகள்

வலைச்சரத்தில் இன்று காகிதப்பூக்கள்...

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

இது மரண நீதி

ஒரு நாள் ஒரு கழுகு மரத்து மேல சும்மா உக்காந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்துச்சு

இதை பார்த்த சின்ன முயல் ஒண்ணு, 

"நானும் உங்களை மாதிரி சும்மா உக்கார முடியுமா?"

"என் முடியாது நீ வேணும்னா சும்மா உக்காரு"

தூரத்துல இருந்து பார்த்துக்கிட்டே இருந்த நரி டபக்குன்னு முயலை பிடிச்சு தின்னுடுச்சு

நீதி 1 :    நீங்கள் சும்மா உக்கார்ந்து இருக்கணும்ன்னா ரொம்ப உயரத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டும்

==================================================================

ஒரு குருவி வானத்தில பறந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரே குளிர் அதுவும் கடும் குளிர், கொஞ்ச நேரத்துக்கு மேல குருவியாலே தாக்கு பிடிக்க முடியல, கீழே விழுந்துடுச்சு. அது ஒரு பொட்டல் கொஞ்சம் மாடுகள் அங்கே இங்கே மேஞ்சுக்கிட்டு இருந்தது. குருவி கீழே விழுந்ததை பார்த்த ஒரு மாடு அது குளிர் தாங்க முடியாம தான் கீழே விழுந்துடுச்சுன்னு புரிஞ்சுக்கிடுச்சு.

அதுக்கு உதவலாம்ன்னு அந்த குருவி மேல கொஞ்சம் சாணி போட்டுச்சு, குருவிக்கு அது கொஞ்சம் குளிருக்கு கதகதப்பா இருந்துச்சா அது கொஞ்சம் கம்முனு  இருந்துச்சு, கோணஜா நேரம் கழிச்சு குளிர் சுத்தமா குறைஞ்சுடுச்சு

குருவி குஜால் ஆயிட்டு பாட ஆரம்பிச்சது அதை தூரத்துல இருந்து கேட்ட காட்டுப்பூனை சாணிகிட்ட வந்து பார்த்துச்சு, உள்ள இருந்து தான் சத்தம் வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை தோண்டி உள்ள இருந்த குருவியை பிடிச்சு தின்றுச்சு..

நீதி 1 :  நம் மீது சேற்றை வாரி எல்லாம் வீசுபவர்கள் நம் எதிரிகள் அல்லர் 

நீதி 2 :  நம்மை இக்கட்டில் இருந்து காப்பாற்றுபவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் அல்லர்

நீதி 3 : இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்


இன்று வலைச்சரத்தில் ஹோட்டல் எம விலாஸ் - சைவம்


புதன், ஆகஸ்ட் 10, 2011

ஐயோ வடை போச்சே...

சுந்தர் அந்த ஊர்லயே ஒரு பெரிய பிசினஸ்மேன், ஒரு மீட்டிங் விசயமாய் கார்ல தன் பி‌ஏ வோட போயிக்கிட்டு இருந்தார்.  வழியில போர் அடிக்கமா இருக்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்தாங்க,  காரை  வேகமா ஒட்டிக்கிட்டு இருந்தார் சுந்தர்.

"சார் நீங்க கோவிலுக்கும் போறீங்க சர்ச்க்கும் போறீங்க, நீங்க இந்துவா இல்ல கிறிஸ்டியனா?"

"நான் பிறப்பால் இந்து, கிறிஸ்டியன் ஸ்கூல்-ல படிச்சாதால சுர்ச்க்கும் போற பழக்கம் இருக்கு"

பேசிக்கிட்டே இருக்கும் போதே நடுவழியில மாடு வார சடன் பிரேக் போட்டார்,  சுந்தர் கொஞ்சம் தடுமாறிட்டார்,   தவறுதலா அவர் கை பி‌ஏ வோட கால்ல பட்டுடுச்சு

"மன்னிச்சுடும்மா " அவசரமாக மன்னிப்பு கேட்டார்

அத பொருட்படுத்தாத பி‌ஏ "நீங்க பைபிள் படிச்சு இருக்கீங்களா? சார்" கேட்டாங்க

"உம் படிச்சு இருக்கேன்"

"Luke 14:10 அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் -ல என்ன சொல்லி இருக்குனு தெரியுமா சார்?"

அவருக்கு தெரியல, சமாளிக்கறதுக்கு

"இப்பிடி டக்குன்னு கேட்டா எப்பிடிம்மா? ஞாபகம் வரலை, கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்"

மீட்டிங் முடிச்சு வீட்டுக்கு வந்துட்டார் சுந்தர், அவரு மனசுல ஒரு ஆர்வம் அதுல என்ன சொல்லி இருக்கு, வேகமா பைபிள்-ஐ தொறந்து தேடி பார்த்தார். அதுல "இன்னும் முன்னே போ, உனக்காக சொர்க்கம் காத்து இருக்கிறது"


நீதி : நீங்கள் உங்கள் வேலையை பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை என்றால் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்


இன்று வலைச்சரத்தில் மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு  இதையும் கொஞ்சம் படிங்களேன்..


செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

இது பொம்பளைங்க சமாச்சாரம்

1)    எல்லா பெண்களும் எதிர்பார்ப்பது பொருளாதார பாதுகாப்பு

2)    எல்லோரும் பாதுகாப்பை எதிர்பார்த்தாலும், அவர்கள் அதிகம் செலவு செய்து ஆடைகள் வாங்க தயங்குவதில்லை

3)    அதிக செலவு செய்து ஆடைகள் வாங்கினாலும், அவர்களுக்கு உடுத்துவதற்கு எதுவும் நல்ல ஆடைகள் இல்லை என சலித்துக்கொள்வார்கள்

4)    நல்ல ஆடைகள் இல்லாத போதும் அவர்கள் அழகாய் ஆடை அணிகிறார்கள்

5)    அவர்கள் அழகாய் ஆடை அணிந்தாலும் அது கந்தல் துணி போல தெரியும்

6)    கந்தல் துணியாய் இருந்தாலும், அதை பரிசாய் நீங்கள் தர வேண்டும் என்று விரும்புவார்கள்

7)    நீங்கள் பரிசாய் தந்தாலும் உங்களை நம்ப மாட்டார்கள்

இன்று வலைச்சரத்தில் இது ஆம்பளைங்க சமாச்சாரம் 

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

ஒரு வாரம் வலைச்சர வாரம்

அன்பார்ந்த நண்பர்களே, சக பதிவர்களே இன்னும் ஒருவாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்று வேலை செய்து வருவதால் பதிவுகள் எல்லாம் வலைச்சரத்தில் மட்டும் பதிவேற்றப்படும.

உங்களின் ஆதரவை தொடர்ந்து அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

சனி, ஆகஸ்ட் 06, 2011

கேர்ள் ஃப்ரெண்டுக்கும் டூத் பிரஷுக்கும் என்ன சம்மந்தம்

# வாய்ப்புகள் உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பது இல்லை, அது நீங்கள் என்ன தேர்ந்து எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தே தலைவிதி இருக்கும் மேலும் அது அடைய வேண்டிய ஒரு விஷயம், காத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் அல்ல

# பிரச்சனை எல்லாம் பிரச்சனை இருப்பது இல்லை, ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று சிந்தித்து கொண்டு இருப்பது தான் பிரச்சனை 

# உங்கள் முகத்தில் பயம் தெரிய வைக்கும் அனுபவம் உங்களுக்கு பலம், தைரியம் தரும் எனவே நீங்கள் செய்ய முடியாது என்று எண்ணியதை செய்து பார்த்துவிடுங்கள் 

# அறிந்திருந்தால் மட்டும் போதாது, உபயோகப்படுத்த வேண்டும், விரும்பினால் மட்டும் போதாது செய்து பார்க்க வேண்டும்  

# உங்கள் மதிப்பு வாய்ந்த சொத்து உங்கள் சுயவிருப்பம் மட்டுமே

# நாம் காணும் பல கனவுகள் பொருத்தம் இல்லாதவைகள், நடக்க இயலாதவைகள் ஆனாலும் கனவு தவிர்க்க முடியாதது 

# கனவு உறக்கத்தில நாம் காணுவது அல்ல, நம்மை உறங்க விடாதவைகளே கனவுகள்

# உங்கள் எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியாது ஆனால் உங்கள் பழக்கங்களை மாற்ற முடியும் பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும் சக்தி கொண்டவை..

# கதைகள் நிறைந்த கட்டிடம் நூல்நிலையம்

# உங்கள் டூத் பிரஷ்ஐ உங்கள் பெண் நண்பியை போல் பாவியுங்கள், வேறு யாரும் உபயோகபடுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் இன்னொன்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள்

======================================================================

பிச்சைக்காரன்     :     சார் ஒரு 12 ரூவா குடுத்தா கொஞ்சம் காஃபி குடிச்சுக்குவேன்

இவர்            :    ஆனா காஃபி 6 ரூவா தானே

பிச்சைக்காரன்    :    இல்லை என் கூட என் காதலி இருக்கா

இவர்            :    பிச்சைக்காரங்க எல்லாம் காதலி வச்சுக்க ஆரம்பிச்சுட்டீங்களா

பிச்சைக்காரன்    :    இல்ல சார் அவ தான் என்னை பிச்சைக்காரன் ஆக்குனது


வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

இது ஒரு மாதிரியான அந்த மாதிரி பதிவு

-மனித உடலின் மிக பெரிய செல் பெண் முட்டை சிறிய செல் ஆண் விந்து.

- உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா உங்களுக்கு IQ அதிகம்

-நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகளை பயன்படுத்துகிறீர்கள்.

-சராசரி பெண்ணின் உயரம் சராசரி மனிதனை விட 5 அங்குலம் குறைவு.

- ஒரு ஜோடி மனித கால்கள் 250,000 வியர்வை சுரப்பிகள் கொண்டிருக்கிறது.

-உங்கள் வயிற்றில் அமிலம் ஒரு பிளேட் (blade)   ஐ கரைக்கும் அளவு சக்தி வாய்ந்தது

- மனித மூளை செல் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா போல் 5 மடங்கு தகவல்களை  சேமித்து வைத்திருக்க முடியும்.

- உணவு உங்கள் வாயில் இருந்து உங்கள் வயிறு வரை செல்ல ஏழு விநாடிகள் எடுக்கிறது.

-சராசரி மனித கனவு 2-3 வினாடிகள் நீடிக்கிறது ..

- தங்கள் மார்பில் முடி இல்லாமல் அல்லது மென் முடி கொண்ட ஆண்களுக்கு இரைப்பை நோய்கள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

-ஒவ்வொரு கால்களிலும் டிரில்லியன் பாக்டீரியாக்கள் வரை உள்ளன.

-30 நிமிடங்கள் உங்கள் உடல் கொடுக்கும் வெப்பம் 4 லிட்டர் நீரை கொதிக்க வைப்பதற்கு சமம்.

- உடலின் கடினமான தசை ஈறு (enamel)

-உங்கள் பற்கள் நீ பிறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன் வளர துவக்குகின்றன.

-உங்கள் மூக்கின் நீளம் உங்கள் கட்டை விரலுக்கு நீளத்திற்கு சமம்

Bovine spongiform encephalopathy (BSE), என்னடா வாயில நொளையாத பேர் எல்லாம் சொல்ல்றானேன்னு நெனைக்கிறவங்களுக்கு சுருக்கமா mad-cow disease இது ஒரு கொடூரமான நரம்பு சிதைவு நோய்.. மாட்டுல இருந்து மனுசனுக்கு பரவும். நோய் தாக்குன மாடு கூட பழகுறவங்களுக்கும், இந்த நோய் தாக்குன மாட்டுக்கறி சாப்பிடுறவங்களுக்கும் எளிதா பரவுறதா சொல்றாங்க. இது வரைக்கும்  3000 பேர் இறந்தும் போயிருக்காங்க.

முன்குறிப்பு :  தலைப்பை நம்பி உள்ளே வந்த நண்பர்கள் மட்டும் கீழே தொடரவும்

mad-cow disease பத்தி பேட்டி எடுக்க ஒரு நிருபர் விவசாயி கிட்ட வந்தாங்க, அவருக்கோ அந்த நோயை பத்தி எதுவும் தெரியாது ஆனாலும் அவரு தெரியலேன்னு சொல்ல விரும்பலை எப்பிடி சமாளிக்கிறார்ன்னு பாருங்க..   

பெண் நிருபர் :  mad-cow disease - அப்பிடின்னா என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா

விவசாயி        :  மாட்டை சினை பிடிக்க வருசத்துக்கு ஒரு வாட்டி தான் அனுப்புவோம்

பெண் நிருபர் : இந்த நோய்க்கும் சினை பிடிக்க அனுப்புறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ?

விவசாயி        : ஒரு நாளைக்கு நாலு வாட்டி பால் கறக்குறோம் அப்ப வருசத்துக்கு 1460 வாட்டி

பெண் நிருபர் : (ரொம்ப கடுப்பாகி) அதுக்கும் இதுக்கும் என்ன சமந்தம்??

விவசாயி         : இல்லை, இதே மாதிரி உங்களுக்கும் பண்ணா நீங்க பைத்தியம் ஆயிட மாட்டீங்களா!!?? அது மாதிரி தான் மாடும் பைத்தியம் ஆயிடும்

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

முன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்க்காது

1)    பிறரை தோல்வி அடைய செய்வது எளிது ஆனால் பிறரை வெற்றி கொள்வது கடினம்

2)    பிறரின் உணர்ச்சிகளோடு விளையாடாதீர்கள் நீங்கள் வென்றாலும் நிச்சயம் உங்கள் வாழ்நாள் முழுமையும் விரயமாகும்

3)    இந்த உலகம் அவதிப்படுவது கெட்டவர்களின் செய்கையால் அல்ல  நல்லவர்கள் கண்டும் காணாதது போல் இருப்பதாலே தான்

4)    முடியாது என்று சொன்ன எல்லோருக்கும் நன்றி அதனால் தான் எல்லாவற்றையும் நானே செய்து பார்த்தேன்

5)    நட்பு உங்கள் பலகீனமாக உணர்ந்தால் நீங்கள் பலவான் என்று பொருள்

6)     சிரிப்பவர்கள் எல்லாம் கவலைகள் இல்லாதவர்கள் இல்லை அதை வெற்றி கொள்ள தெரிந்தவர்கள்

7)     வாய்ப்புகள் சூரியோதயம் போலே நீண்ட நேரம் காத்து இருந்தால் காணாமல் போய்விடும்

8)     நீ வெளிச்சத்தில் இருந்தால் உலகம் உன் பின் வரும் நீ இருட்டுக்குள் சென்று விட்டால் உன் நிழல் கூட பின் வராது

9)    சில்லறை காசு எப்போதும் சத்தம் வரும் ரூபாய் நோட்டு அமைதியாய் இருக்கும் உன் மதிப்பு உயரும் போது அமைதியாய் இருக்க கற்றுக்கொள்


மூளை உலகில் மிகச்சிறந்த ஆயுதம்  -  சிறுகதை
================================
ஒரு விவசாயி தன்னோட பண்ணையில 25 கோழியும் 1 சேவலும் வளர்த்துகிட்டு இருந்தாரு. சேவலுக்கு வயசாயிடிச்சுன்னு புது சேவல் ஒண்ணு வாங்குனாறு.

புதுசா வந்த சேவல் கிட்ட பழைய சேவல் "வா பங்காளி இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து உற்பத்திய அதிகப்படுத்தலாம்" அப்பிடின்னுச்சு

புது சேவலோ "உனக்கு வயசாயிடுச்சு, அதனால எனக்கு வழிய விட்டுட்டு நீ ரிட்டையர் ஆயிடு" ன்னு திமிரா சொல்லுச்சு

"இங்க 25 கோழிகள் இருக்கு எல்லாத்தையும் உன்னால சமாளிக்க முடியுமா"  பழைய சேவல் கேட்டுச்சு

"எல்லாத்தையும் நானே பார்த்துகிறேன் உன் உதவி தேவை இல்லை" புது சேவல் சொல்லுச்சு

"உன் திறமைக்கு ஒரு சவால் அதுல நீ ஜெயிச்சுட்டா நீ சமாளிச்சுடுவேன்னு நான் ஒத்துக்கிறேன் அப்பிடியே நான் ஒதுங்கிக்கிறேன்" இது பழைய சேவல்

"என்ன செய்யணும்"

"உனக்கும் எனக்கும் ஓட்டப்பந்தயம் வைப்போம், அதுல தெரிஞ்சுடும்"

"சரி"

"ஒரு கண்டிஷன்"

"என்ன?"

"எனக்கு வயசாயிடுச்சு அதனால நான் ஒரு 10 மீட்டர் முன்னால நின்னுக்குவேன் சரியா?"

"சரி எதுவும் பிரச்சனை இல்லை போட்டியில நீ தோத்துட்டா நீ சொன்ன மாதிரி என் வழிக்கு வரக்கூடாது எல்லா கோழியும் என்னோடது"

"சரி நாளைக்கு காலையில போட்டிய வச்சுக்கலாம்"

மறுநாள், போட்டி ஆரம்பம் ஆச்சு பழைய சேவல் சொன்ன மாதிரி 10 மீட்டர் முன்னாடி நின்னுக்கிச்சு. 

புது சேவல் தெம்பை எல்லாம் தெரட்டி ஓட்டம் பழைய சேவலை முந்த போற நேரம்

"டுமீல்" -  ன்னு சத்தம்.   புது சேவலை விவசாயி சுட்டுட்டார்,

இதுக்கு எது சேவல் எது கோழின்னே தெரியலையேன்னு இதை வச்சு என்ன பண்றதுன்னு சலிச்சுக்கிட்டாரு. 

நீதி : மூளை உலகில் மிகச்சிறந்த ஆயுதம் ...

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே

முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள், முதல் உடற்கூறியல் வகுப்பு. மேஜையின் மீது இருந்த இறந்த நாயின் உடலை சுற்றி மாணவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்

"இன்று உங்களுக்கு இரண்டு முக்கிய பண்புகளை பற்றி சொல்லித்தர போறேன்" - சொன்னார் சுப்பு

"இறந்த உடலைபார்த்து எப்போதும் அருவருப்பு அடையக்கூடாது" - இது தான் முதல் பண்பு

"இப்ப நான் செய்யுற மாதிரி செய்யுங்க" என்று சொல்லிவிட்டு நாயின் வாயில் விரலை வைத்து விட்டு அதை எடுத்து தன்னுடைய வாயில் வைத்து கொண்டார்

எல்லோருக்கும் அருவருப்பு ஆனாலும் வேறு வழி இல்லை சொல்லுவது ஆசிரியர் எல்லோரும் அதே போல செய்தனர். எல்லோரும் முடித்த பின்னர்

"இரண்டாவது பண்பு கவனிப்பு, ஆனா நீங்க யாரும் சரியா கவனிச்ச மாதிரி தெரியல ஏன்னா நான் நாயின் வாயில் வச்சது நடு விரல், ஆனால் என் வாயில் வைத்தது ஆட்காட்டி விரல் ஆனா எல்லோரும் நாயின் வாயில் வைத்த விரலையே உங்களின் வாயிலும் வைத்தீர்கள். இனியாவது நன்றாக கவனிக்க கற்றுக்கொள்ளுங்கள்"