வியாழன், ஆகஸ்ட் 25, 2011

'C' - எழுத்து வராத ஒரு லட்சம் இங்கிலீஷ் வார்த்தைகள் உங்களுக்கு தெரியுமா?


1) 'a', 'b', 'c' & 'd'   இந்த நாலு எழுத்தும் 1 to 99 (ONE TO NINTY NINE அப்பிடி எழுதுனா)  வரை வராது

'd'  வர்ற மொதோ எடம் Hundred

'a', 'b' & 'c'  இந்த மூணு எழுத்தும் 1 to 999 (ONE TO NINE NINTY NINE) வரை வராது

'a'  வர்ற மொதோ எடம் Thousand

'b' & 'c'  ரெண்டு எழுத்தும் 1 to 999,999,999 (மேலே சொன்ன ஃபார்மட்-ல எழுதுங்க எனக்கு கை வலிக்கும்) வரை வராது  

'b'  வர்ற மொதோ இடம் Billion

கடைசியா

'c'  எங்கயுமே வராது இங்கிலீஷ் நம்பர்கள்-ல

யாராவது கொஞ்சம் எழுதி பார்த்து செக் பண்ணி சொல்லுங்களேன்.......
======================================================================
2) உலகின் நீளமான பேர் உள்ள மலை Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukup okaiwe-nuakit natahu, இது நியூசிலாந்து-இல  இருக்க மலையோட பேரு

3 ) லாஸ் ஏஞ்ஜல்ஸ் - இந்த  ஊரோட முழு பேரு "El Pueblo de Nuestra Senora la Reinade los Angeles de Porciuncula"  இதை சுருக்கமா L.A அப்பிடின்னு   கூப்பிடுறாங்க

4) 15 தனித்த எழுத்துக்களை கொண்ட வார்த்தை uncopyrightable.

5) 4 வார்த்தைங்க -dous ல முடியும் tremendous, horrendous, stupendous, and hazardous.

6) UND ல ஆரம்பிச்சு UND-ல முடியிர ஒரு வார்த்தை UNDERGROUND

7) THEREIN இந்த ஒரு வார்த்தையில இருந்து 10 வார்த்தைகளை உருவாக்கலாம், இதுல என்ன ஆச்சரியம்ன்ன எழுத்தை மாத்தி போட வேண்டியது இல்லை.   the,there, he, in, rein, her, here, ere, therein, herein.

==========================================================================


ஒரு நாள் ஒரு ஆள் கடவுள் கிட்ட கேட்டானாம் "அன்பு அப்பிடின்னா என்ன கடவுளே" ன்னு,

கடவுள் "அந்த தோட்டத்தில இருக்கிறதுலயே அழகான பூவை எடுத்துட்டு வா" அப்பிடின்னாரு   

போனவன் ரொம்ப நேரம் கழிச்சு திரும்பி வந்தான் வெறும் கையோட

"என்ன ஆச்சு ஒரு அழகான பூ கூட கிடைக்கலையா" கடவுள் கேட்டாரு

"இல்ல கடவுளே மொதோ ஒரு பூவை பார்த்தேன், அதவிட அழகா வேற எதுவும் இருக்கான்னு தேடிக்கிட்டு போனேன், ரொம்ப தூரம் போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அழகான பூவை அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்னு, திரும்ப வந்து பார்த்தேன் அந்த பூவை காணோம்" அப்பிடின்னான்

கடவுள் சிரிச்சுக்கிட்டே - "அன்பு கூட அப்பிடித்தான் எப்ப கிடைக்கும்ன்னு தெரியாது ஆனா கிடைக்கும் போது பத்திரமா வச்சுக்கிடணும், ஒரு தடவை விட்டுட்டா அது திரும்ப கிடைக்காது" 

உடலை ஊடுருவும் குளிரில்
உடலே போர்வையாய்
ரோட்டோரத்தில்
புதிதாய் ஈன்ற
குட்டிகளுடன் உறங்கும்
தெருநாய் !!


25 கருத்துகள்:

கோவை நேரம் சொன்னது…

ஆச்சர்ய மான விஷயம்...

rajamelaiyur சொன்னது…

பல புதிய விஷயங்கள் .. நன்றி

Unknown சொன்னது…

அடங்கப்பா என்னா மாதிரி யோசிக்கறாங்க....அன்பு மேட்டர் நச் மாப்ள நன்றி!

சக்தி கல்வி மையம் சொன்னது…

புதுமையான தகவல்..
நன்றி..

Chitra சொன்னது…

நல்ல தொகுப்பு.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

super. Arumai

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல்

N.H. Narasimma Prasad சொன்னது…

ஆங்கிலம் பற்றிய விஷயங்கள் சூப்பர், குட்டி கதை சூப்பர் மற்றும் கடைசியாக அந்த கவிதை ரொம்ப சூப்பர்.

மகேந்திரன் சொன்னது…

புதுமைத் தகவல்கள்
நன்றி நண்பரே.

பெயரில்லா சொன்னது…

நல்ல தொகுப்பு...நன்றி நண்பரே...

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் பாஉ - இதுவரை கேள்விப்ப்டாத தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கோகுல் சொன்னது…

நீளமான மலை கேள்விப்பட்டிருக்கேன்.
நீளமான பேர் உள்ள மலை புதுசு.
வாய் சுளுக்கிகிச்சு போங்க!@

பெயரில்லா சொன்னது…

c comes in crore

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அரிய தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள் .

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

நல்ல தகவல்கள்.மலைக்கு இவ்ளோ பெரிய பேரா?

பெயரில்லா சொன்னது…

My friend, Crore and Lakh are not English terms. They were derived from Hindi words Karode and Laakh for 10 million and 1 million respectively. Crore and Lakh are used only India, Pakistan and Bangladesh.

Philosophy Prabhakaran சொன்னது…

ஆகவே இன்றைக்கு மெயில்கள் சில பதிவாகிவிட்டது போல...

உணவு உலகம் சொன்னது…

வித்யாசமான தகவல்கள். பகிர்விற்கு நன்றி.

மாய உலகம் சொன்னது…

நாற்று தளத்தில் அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள் நண்பரே

மாய உலகம் சொன்னது…

abcd வராத எழுத்துக்களை அறிந்தோம் இதை வைத்து எனது வட்டத்தில் சீன போடுவோம்ல ஹி ஹி ...சூப்பர் பாஸ்

Mathuran சொன்னது…

ஆச்சரியமான விடயங்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பார்ய்யா

ராஜி சொன்னது…

a,b,c,d பற்றி தெரியாத தகவல்களை தெரிந்துக் கொண்டேன் சகோ. பிள்ளைகளுக்கும் சொல்லி குடுப்பேன். நன்றி சகோ!ஆனால், இந்த அன்பு மேட்டருக்கு பதில் மனைவினு எங்கேயோ படித்ததா நினைவு....,

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அன்பின் விளக்கம் அருமை