சனி, ஆகஸ்ட் 06, 2011

கேர்ள் ஃப்ரெண்டுக்கும் டூத் பிரஷுக்கும் என்ன சம்மந்தம்

# வாய்ப்புகள் உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பது இல்லை, அது நீங்கள் என்ன தேர்ந்து எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தே தலைவிதி இருக்கும் மேலும் அது அடைய வேண்டிய ஒரு விஷயம், காத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் அல்ல

# பிரச்சனை எல்லாம் பிரச்சனை இருப்பது இல்லை, ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று சிந்தித்து கொண்டு இருப்பது தான் பிரச்சனை 

# உங்கள் முகத்தில் பயம் தெரிய வைக்கும் அனுபவம் உங்களுக்கு பலம், தைரியம் தரும் எனவே நீங்கள் செய்ய முடியாது என்று எண்ணியதை செய்து பார்த்துவிடுங்கள் 

# அறிந்திருந்தால் மட்டும் போதாது, உபயோகப்படுத்த வேண்டும், விரும்பினால் மட்டும் போதாது செய்து பார்க்க வேண்டும்  

# உங்கள் மதிப்பு வாய்ந்த சொத்து உங்கள் சுயவிருப்பம் மட்டுமே

# நாம் காணும் பல கனவுகள் பொருத்தம் இல்லாதவைகள், நடக்க இயலாதவைகள் ஆனாலும் கனவு தவிர்க்க முடியாதது 

# கனவு உறக்கத்தில நாம் காணுவது அல்ல, நம்மை உறங்க விடாதவைகளே கனவுகள்

# உங்கள் எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியாது ஆனால் உங்கள் பழக்கங்களை மாற்ற முடியும் பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும் சக்தி கொண்டவை..

# கதைகள் நிறைந்த கட்டிடம் நூல்நிலையம்

# உங்கள் டூத் பிரஷ்ஐ உங்கள் பெண் நண்பியை போல் பாவியுங்கள், வேறு யாரும் உபயோகபடுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் இன்னொன்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள்

======================================================================

பிச்சைக்காரன்     :     சார் ஒரு 12 ரூவா குடுத்தா கொஞ்சம் காஃபி குடிச்சுக்குவேன்

இவர்            :    ஆனா காஃபி 6 ரூவா தானே

பிச்சைக்காரன்    :    இல்லை என் கூட என் காதலி இருக்கா

இவர்            :    பிச்சைக்காரங்க எல்லாம் காதலி வச்சுக்க ஆரம்பிச்சுட்டீங்களா

பிச்சைக்காரன்    :    இல்ல சார் அவ தான் என்னை பிச்சைக்காரன் ஆக்குனது


5 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

முதல் வருகை..
அந்த நகைச்சுவை அருமை..

கோகுல் சொன்னது…

வலைச்சரம் இந்த வார ஆசிரியர். வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

ஐயா!
வணக்கம்!

நல்லபதிவு நகைச் சுவை அருமை, சிந்தனைத் துளிகள் சிறப்பு!
ஆனால் ஓர் ஐயம் மூன்று மாதங்களுக்கு மாற்ற வேண்டியது
இரண்டா ஒன்றா இரண்டுமா..?

வலைச் சரத்தில் ஒரு வார பணி
ஏற்றதற்கு வாழ்த்துக்கள்!

என் வலைப் பக்கமும்
வாருங்கள்

புலவர் சா இராமாநுசம்

சத்ரியன் சொன்னது…

ரமேஷ்,

சிந்தனைக்குரிய பத்தும் முத்துக்கள்.

//ஓர் ஐயம் மூன்று மாதங்களுக்கு மாற்ற வேண்டியது இரண்டையுமா..?//

எனக்கும் ஐயம்.

நிரூபன் சொன்னது…

அடடா, இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களா. ரசித்தேன் பாஸ்,.