புதன், ஆகஸ்ட் 24, 2011

நாளை இது நிகழாமலே போகலாம்

நீங்கள் யாரோடும் சண்டையிட்டு விட்டால்
இன்றே சரி செய்து விடுங்கள்
இன்று அவர் உங்கள் நண்பராக இருக்கவே
விரும்பிக்கொண்டு இருக்கலாம்
நாளை இது நிகழாமலே போகலாம்

நீங்கள் யாரையேனும் காதலித்துக்கொண்டு இருந்தால்
இன்றே சொல்லி விடுங்கள்
இன்று அவர் உங்களை
காதலித்துக்கொண்டு இருக்கலாம்
நாளை இது நிகழாமலே போகலாம்

நீங்கள் உங்கள் நண்பரை பாராட்ட விரும்பினால்
இன்றே பாராட்டிவிடுங்கள்
அவரும் உங்களை பாராட்ட
காத்துக்கொண்டு இருக்கலாம்
இன்று இல்லாவிடில்
நாளை இது நிகழாமலே போகலாம்

=================================================================

ஒரு நாள் விடியற்காலை இன்னும் இருள் சூழ்ந்த அந்த நேரம், சுந்தர் கடற்கரை வழியே நடந்து கொண்டு இருந்தார். வருகிறேன் என்று சொன்ன நண்பருக்காக காத்துக்கொண்டு இருந்தார்.

பொழுது போகவில்லை என்று கடற்கரையில் இருந்த கற்களை அலைக்குள் போட்டபடி இருந்தார், வெளிச்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது, ஆம் சூரியன் மெல்ல கடலுக்குள் இருந்து வெளியே வர ஆரம்பித்து இருந்தது,

வெளிச்சம் பட்டவுடன் கையில் இருந்த கல் பளபளக்க ஆரம்பித்தது. அப்போது தான் சுந்தர் கவனித்தார் அது வெறும் கல் அல்ல வைரம் என்று, அவருடைய துரதிர்ஷ்டம் ஒரு கல்லை தவிர எல்லாவற்றையும் கடலுக்குள் எறிந்து விட்டு இருந்தார்..

மொக்கை நீதி :  காலையில் வெளிச்சம் வருவதற்கு முன் எழக்கூடாது...

13 கருத்துகள்:

Chitra சொன்னது…

மொக்கை நீதி - தத்துவம் # 10821 :-)))

சக்தி கல்வி மையம் சொன்னது…

இப்படியும் நீதி சொல்லலாமோ?

Unknown சொன்னது…

நாளை என்பது பொய்
இன்று என்பதே உண்மை!

நல்ல கவிதை நண்பரே!

புலவர் சா இராமாநுசம்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பாராட்டுக்கள் .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பாராட்டுக்கள் .

பெயரில்லா சொன்னது…

கவிதை நல்லாயிருந்திச்சு...ரசித்தேன்

மகேந்திரன் சொன்னது…

நல்ல கவிதை நண்பரே!

Philosophy Prabhakaran சொன்னது…

நீங்கள் இன்றே பிராந்தி வாங்கி அடித்துவிடுங்கள்
இல்லையேல் நாளை டாஸ்மாக்கில் ஸ்டாக் காலியாகிவிடலாம்
அல்லது
நாளை காந்தி ஜெயந்தியாக இருக்கலாம்...

குடந்தை அன்புமணி சொன்னது…

பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html (இந்த செய்தி அனைவருக்கும் சேரவேண்டும் என்ற நோக்கிலேயே இக்கருத்துரை. நன்றி)

ராஜி சொன்னது…

நாளை இது நிகழாமலே போகலாம். எனவே இன்றே இப்போதே பின்னூட்டம் இட்டு விடுகிறேன். கவிதையும், மொக்கையும் சூப்பர் சகோ

தினேஷ்குமார் சொன்னது…

நல்லா சொல்லுங்க ... மொக்கை நீதி சூப்பர் ...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

hi hi hi

நிரூபன் சொன்னது…

வாழ்வில் எவற்றையும் நாம் தீவிரமாக ஆராந்து செய்வதே நன்மை பயக்கும் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.