இப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத பல நிகழ்வுகளின் கோர்வையாய் நம்மை பிரிய இருக்கிறது 2011. பல சுகமான நிகழ்வுகள், பல சோகமான நிகழ்வுகள், எல்லாம் முடிஞ்சு போனது ஆனாலும் நம் தவறுகளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம், இல்லேன்னா ஒரு தடவை செய்த தவறுகளை மீண்டும் செய்ய நேரிடலாம்.
இந்த உலகில் நாம் அடிமையான விஷயங்கள் நிறைய உள்ளன மது, நிகோடின், ஹெராயின், பாலியல், மற்றும் ஐபோன்கள். இதை எல்லாம் விட மிக பெரிய போதை நமது சொந்த கருத்துக்களுக்கு நாமே அடிமையாகி உள்ளது. நாம் சொல்வது தான் சரி என்று நினைக்க ஆரம்பிக்கும் போதே இந்த போதை துவங்குகிறது.
சிறந்த உதாரணம் அன்னா ஹசாரேன்னு ஒரு பெரிய மனுஷன் பண்ணுற வேலை. இதுவரை அவர் இந்த வருஷம் நிறைய வாட்டி உண்ணாவிரதம் இருந்துட்டார், நாளைக்கு கூட உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்போறார், அவர் நினைக்கிறது எல்லாம் நடக்கணும்ன்னு அவர் நினைக்கிறது அவருக்கு சரியா இருக்கலாம் ஆனா நடைமுறைக்கு சாத்தியம் தானான்னு யோசிச்சா அது என்னவோ ஒத்து வராதுன்னு தோணுது.
லஞ்சம் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்ன்னு சொல்றாரு, ஆனா அதுக்கு லஞ்சம் வாங்காம இருந்தாலோ இல்ல நாம லஞ்சம் குடுக்கமா இருந்தாலோ மட்டும் முடியுமா? இந்த பிரச்சனையோட ஆணிவேர் வேற, வேர்ல இருக்க கோளாரை சரி செய்யாம கிளையில இருக்கிற பிரச்சனைக்கு மருந்து தேடுவது புத்திசாலித்தனமா செயலா இருக்காதுங்கிறது என்னோட எண்ணம்.
சின்ன உதாரணம் சொல்றேனே, இப்போ எல்லாம் டியூஷனுக்கு வர்ற பசங்களுக்கு நிறைய மார்க் போடுற ஆசிரியர்கள் எத்தனை பேர்? ஏன் பண்ணுறாங்கன்னு யோசிச்சா அப்படி செஞ்சா தானே பசங்க டியூசனுக்கு வருவாங்க? அப்போ தானே வருமானம் வரும். இது அந்த குறிப்பிட்ட ஆசிரியரோட பொருளாதார சூழ்நிலையே நிர்ணையிக்குது. சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு புரிஞ்சு இருக்கும். அதாவது ஒருவருடைய பொருளாதார சூழ்நிலையே இதுக்கு எல்லாம் ஆரம்ப புள்ளி,
இதுக்கு தீர்வு தான் என்ன, ஒண்ணும் கிடையாது, நான் யோசிச்ச வரையில. அல்லது அது நடைமுறைக்கு ஒத்து வராது. ஏன்னா நம்ம மக்கள் தொகை அப்பிடி, எல்லோருக்கும் கல்வி இலவசமா கொடுக்கணும், மருத்துவம் இலவசமா கொடுக்கணும் இது ரெண்டு தான் நம்ம கிட்ட ஒரே வழி. இது இரண்டுக்கும் தான் வாழ்நாள் சேமிப்பை கரைக்கும் சக்தி உண்டு. இதை எல்லாம் அரசு செய்ய முடியாதான்னு கேக்குறீங்களா? செய்யுறதுக்கும் பணம் வேணுமே? வரி அப்பிடின்கிற பேர்-ல அதுவும் நம்ம தலை மேலே தானே விழும். இப்பயும் நான் எஜுகேஷன் செஸ்ன்னு வரி கட்டுறேனேன்னு கேக்குறீங்களா? அதுவும் பத்தாமா தானே அரசு பள்ளி எல்லாம் நலிவடைஞ்ச நிலையில இருக்கு?
அப்ப இந்தியாவுல லஞ்சம் ஊழல் ரெண்டையும் ஒழிக்க முடியாதான்னு கேக்குறீங்களா? அது தொட்டில் பழக்கம் நீங்க அதை குற்றம்ன்னு பார்க்காம நீங்க கொடுக்கிற 100 ரூவா ஒரு குடும்பத்தை சந்தோஷமா வாழவைக்கிற உதவின்னு வச்சுக்கோங்களேன் என்ன கெட்டுப்போச்சி. இல்லை உங்களுக்கு ஆக வேண்டிய வேலைய முடிச்சு குடுக்குறதுக்கு குடுக்குற சர்வீஸ் சார்ஜ்ன்னு நெனைச்சுக்கோங்க தப்பா தெரியாது!!
நீங்க சொல்லுறது கேக்குறது, 50 / 100 வாங்குனா பரவாயில்லை அது அவன் பொருளாதார சிக்கல் எல்லாம் ஒத்துகிறோம் ஆனா கோடிக்கணக்கில வாங்குறாங்களே சிலர் அதுக்கு என்ன சொல்றீங்கன்னு தானே கேக்குறீங்க? பேராசைன்னு ஒரே வார்த்தையில சொல்லிடலாம். விரலுக்கு ஏத்த வீக்கம் இருக்கிறது சகஜம் தானே, அதை விட முக்கியம் அதையும் செய்ய துணியிறான்னா அதுக்கு மேலேயும் ஏதோ ஒண்ணு கிடைக்குதுன்னு அர்த்தம். அதுவும் இல்லாம அவங்க பக்கம் ஏதோ தப்பு இருக்குனு தானே அர்த்தம், அப்படி இருக்குறப்ப இந்த லஞ்சம் ஊழல் எல்லாத்தையும் ஒழிப்பேன்ன்னு சொல்லுறது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு பேச்சு தானே. மலிவான புகழுக்கு ஆசைப்பட்டு செய்யுற வேலை தானே?? உங்களுக்கு என்ன தோணுதுன்னு கொஞ்சம் சொன்னா தேவலை....
டிஸ்கி : ரொம்ப நாளா பதிவு பக்கம் வார முடியல கொஞ்சம் வேலை பளு அதிகம். நண்பர்கள் மன்னிக்கவும், முடிந்த வரை தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன். நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! வரும் ஆண்டு எல்லா நல்லவைகளும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
இன்றைய லொள்ளு
15 கருத்துகள்:
லஞ்சத்தை ஒழிப்பேன்னு சொல்றது நடைமுறைக்கு ஒத்து வராதுதானே..?
யதார்த்தமான கருத்து... வாழ்த்துகள்..
http://jayarajanpr.blogspot.com/2011/12/34.html
http://sattaparvai.blogspot.com/
ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் சிந்திக்க வைக்குற மாதிரி பதிவு போட்டிருக்கீங்க சகோ
லஞ்சம் லாவண்யத்தை ஒழிப்பது என்பது இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில் சாத்தியமில்லை...
ஹசாரே போன்றே ஆளாளுக்கு ஒரு கருத்தை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்க தொடங்கி விட்டால் நம் அரசியலமைப்பு அர்த்தமற்றதாக ஆகிவிடும்...
இது என்னுடைய கருத்து
லஞ்சம் எல்லா மட்டத்திலுமே ஆழமாக ஊடுருவிவிட்டது.. லோக்பல் சட்டம் நிறைவேற்றியதும்.. நாடு ஒரேயடியாக திருந்திவிடுமா என்ன? கீழ்பட்டத்தில் இருந்து.. ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும்.
அவரு காங்கிரசை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போறேன்னு சொன்னதும் அவர் மேல கொஞ்சம் நம்பிக்கையின்மை வந்தது.
நடைமுறைக்கு சாத்தியப்படாத விசயமாயிருந்தாலும் ,இது போன்ற போராட்டங்கள் கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாய் இருக்குமென நினைக்கிறேன்.
ஆனால் அதுவும் நிச்சயம் காலப்போக்கில் காற்றில் கரைந்த கற்பூரமாகி விடும் என்பதும் உண்மை.
இரவு வணக்கம்,சார்!லொள்ளு சூப்பர்!!!!
வித்யாசமா சிந்திச்சிருக்கீங்க.
மாப்ள ஒழிக்க முடியும் நான் அரசியல் வாதி ஆயிட்டா எப்பிடி...ஹிஹி!
லஞ்சத்தை ஒழிக்க முடியாமுனு தெரியலைங்க :))
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...
ஏதாவது பறவைக்கு சிறு அடிபட்டு ரத்தம் வந்தாலும் துடித்து போய் ... இன்று எல்லோருமே சிந்திக்க வேண்டிய பதிவு. ... ரொம்ப நாள் கழிச்சு உங்களை இங்கே சந்திக்கிறேன்.
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper
I feel very thankful that I could read that awesome article. Thanks for sharing. Keep posting.
We also provide hotmail and hotline customer care services in USA & Canada. Feel free to
Hotmail Tech Support
thanks for sharing this wonderful article. We are the best At&t support,at&t wirless support, Contact at&t helpline,at&t customer care How to Contact at&t wirless support
கருத்துரையிடுக