திங்கள், ஏப்ரல் 11, 2011

முடிந்தது பிரச்சாரம்

ஒரு வழியாக தேர்தல் பிரச்சாரம் முடிந்தது, இனி எல்லாம் நம்முடைய கைகளில் மட்டுமே. இதுவரை நடந்த எல்லா காட்சிகளும் இன்றோடு முடிவுக்கு வந்து விட்டது, நாம் என்ன செய்யப்போகிறோம் இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.

எல்லோரும் எல்லோரையும் திட்டி முடிந்து விட்டது. இலவசங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் கொடுப்பதாக வாக்குறுதிகளும் கொடுத்தாகி விட்டது, அவர்கள் வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டதாகவே தெரிகிறது.  இனி நம்முடைய வேலை மட்டுமே மிச்சம்.

நமக்கு பிடிக்குதோ பிடிக்கலியோ ஓட்டு சாவடிக்குச்சென்று ஓட்டு போடுவோம், இது நமது உரிமை மற்றும் கடமையும் கூட.  100% ஓட்டு பதிவு நம்முடைய நோக்கம், சிறிது குறைந்தாலும் பரவாயில்லை.  நம்முடைய ஒவ்வொரு ஓட்டும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

நம்முடைய ஓட்டை நாம் போடவில்லை என்றால் வேறு எவறேனும் போட்டுவிட வாய்ப்பு உள்ளது. ஏனெவே தாமதிக்காமல் நம்முடைய ஓட்டை போட்டு நமது பிரதிநிதியை நாமே தேர்ந்தெடுப்போம், வேறு எவரையும் இந்த வாய்ப்பை பயன்படுத்த அனுமதியோம்.

வாழ்க ஜனநாயகம் !! ஜனநாயகம் வாழ நாமும் துணை இருப்போம்

3 கருத்துகள்:

கீற்று சொன்னது…

நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ ஓட்டுப் போடனுமா? ஓட்டு போட்டு யாருக்கு விடிய போகுது. எத்தனையோ தேர்தலை பார்த்தாச்சி, கட்சிகள் மாத்தி மாத்தி ஓட்டுப் போட்டாச்சி. இன்னுமா இந்த போலி ஜனநாயகத்தை நம்புரிங்க? இந்தியா-வை ஆளும் அமெரிக்கா தேர்தல்ல வேணா ஓட்டு போடுவோம். சரியா?

Unknown சொன்னது…

@கீற்று
என்ன தல, இப்பிடி வெறுத்து போயிடீங்க? நம்ம வீட்டு சமையல் பிடிக்கலேன்னா சாப்பிடாம விட்ருவோமா என்ன? பிடிக்கிறதோ இல்லையோ சாப்பிடுறது இல்லையா? அப்பிடித்தான் இதுவும், நம்ம முழிக்கிற வரைக்கும் எதுவும் மாறாது.

இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

2000 வருசத்துக்கு முன்னாடி நம்ம தாத்தா சொன்னது

நன்றிகளுடன்

Unknown சொன்னது…

@கீற்று
தலைவருங்க தப்பா இருக்கலாம், ஆனா அவங்கள அப்பிடி ஆக்கினது நாம, இப்ப வேணாமுன்னு மாத்தனுமுனாலும் நாம தானே மாத்தனும். வெண்ணை தின்கிறது ஒருத்தன், விரல் சூப்புறது இன்னொருதனா? கொஞ்சம் யோசிங்க பாஸு.