வியாழன், ஜூலை 07, 2011

ஆண்மை தவறேல்

கல்யாணி தன் கணவருடன் அவசரமாக அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டு இருந்தாள். அது ஒரு சிறிய மருத்துவமனை, ஆனால் எப்போதும் பரப்பாக இருக்கும்.  டாக்டர். சுப்பு IN  என்று இருந்ததை பார்த்து கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.  தன் பெயரை வரவேற்பறையில் இருந்த நர்சிடம் பதிந்து விட்டு டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் அமர்ந்தாள்.

கல்யாணி 26 வயது, கையில் ஒண்ணரை வயது மகள். வீட்டில் வேறு யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து இருக்கிறார்கள்.   யாரும் வீட்டிற்கு திரும்பி வருவதற்குள் வீட்டிற்கு போக வேண்டும் என்ற பதற்றம் வேறு எல்லாமும் சேர்ந்து முகம் வேர்த்து கிடத்தது.

அவர்கள் முறை வந்ததும் உள்ளே சென்றாள்.

"சொல்லும்மா என்ன பிரச்சனை"

"நீங்க எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணனும் டாக்டர்"

"சொல்லும்மா நிச்சயமா என்னால முடிஞ்சதை பண்றேன்"

"எனக்கு ரெண்டாவதா குழந்தை உண்டாயிருக்கு டாக்டர், அபார்ஷன் பண்ணனும்"

"ஏம்மா வீட்டில ஏதாவது பிரச்சனையா?"

"அது வந்து டாக்டர் ஏற்கனவே ஒரு பொண்ணு அதுவும் ஒண்ணரை வயசு தான் ஆகுது, இதை பார்த்துக்கவே கொஞ்சம் கஷ்டமா இருக்கு, அதுவும் இல்லாம ரெண்டாவதும் பொண்ணா பொறந்துட்டா இன்னும் பிரச்சனை ஆயிடும் ஸார், எங்க மாமியாரை கன்வின்ஷ் பண்றது கஷ்டம் டாக்டர். உங்களை தான் மலை போல நம்பி இருக்கோம்"

கொஞ்ச நேரம் அமைதி

"சரிம்மா உனக்கு இன்னொரு வழி சொல்றேன் கேப்பியா? " 

இருவருக்கும் உள்ளூர சந்தோஷம், டாக்டர் அபார்ஷன் பண்ண ஒத்துகிட்டார்ன்னு.

"ரெண்டு கொழந்தயையும் பார்த்துக்க முடியாதுன்னு நீ சொன்னதால, உன் கையில இருக்க கொழந்தையை கொன்னுடு. அப்புறம் உன் பிரச்சனை தீர்ந்துடும் அதுவும் இல்லாம அடுத்து பொறக்கபோறது பையனா இருந்துட்டா உங்க மாமியார் சந்தோஷப்படுவாங்களே?" 

கொஞ்சம் அதிர்ச்சியான கல்யாணி

"அது எப்பிடி டாக்டர் பெத்த புள்ளைய என் கையால கொல்றது, என் மனசு என்ன கல்லுன்னு நெனைச்சுட்டீங்களா?"

"எப்பிடியும் நீ ஒரு பிள்ளயை கொல்லனும்ன்னு தான் இங்க வந்து இருக்க, அது எந்த பிள்ளையாய் இருந்தா என்ன?"

"இல்ல டாக்டர் அது மட்டும் என்னால முடியாது",

"கையில இருந்தா மட்டும் இல்ல வயித்தில இருந்தாலும் அதுவும் குழந்தைன்னு புரிஞ்சுக்கிட்டேன் டாக்டர். இனி இப்பிடி ஒரு முடிவு எப்பவும் எடுக்க மாட்டேன். ரொம்ப நன்றி டாக்டர்"  சந்தோசமாய் சொன்னார் கல்யாணியின் கணவர். 

மனதில் இருந்த பாரம் இறங்கியது போல இருந்தது கல்யாணிக்கு, சந்தோசத்துடன் வேகநடை போட்டாள் வீடு நோக்கி.

11 கருத்துகள்:

Niroo சொன்னது…

புரிஞ்சிகிட்டா சரி

Unknown சொன்னது…

@Niroo
நன்றி நிரூ

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ, எதனை நாம் அழித்தாலும் அது உயிர் தானே என்பதனையும்,
கருக்கலைப்பின் பின்னால் உள்ள வேதனை மிகுந்த விடயத்தினையும் விழிப்புணர்வுக் கதையாக உங்களின் இச் சிறுகதை சொல்லி நிற்கிறது.

Unknown சொன்னது…

@நிரூபன்
நன்றி சகோ...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லா சொன்னீங்க..
அழகிய கருத்துள்ள கதை..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

3 மாதம்தான் ஆனாலும் அது குழந்தைதான்...
அருமையான விஷயம்..

Unknown சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி சௌந்தர்...

N.H. Narasimma Prasad சொன்னது…

சிசு கொலை பற்றிய விழிப்புணர்வு கதை அருமை.

Unknown சொன்னது…

@N.H.பிரசாத்

நன்றி பிரசாத்..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் பாபு - நல்ல கதை - நடை இயல்பாக இருந்தது - கருவிலேயே சிசுக் கொலை தவிர்க்க மருத்துவர் கையாளும் முறை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

@cheena (சீனா)
ரொம்ப நன்றி ஐயா, எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம். இன்னும் நல்லா எழுத முயற்சி பண்றேன் ஐயா.