விதி 1:
வாழ்க்கை எப்போதும் சிறப்பானது இல்லை, முடிந்தவரை அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்
விதி 2:
உலகம் உங்கள் சுய மரியாதையை பற்றி கவலைப்படுவது இல்லை உங்களை பற்றி நீங்கள் அறியும் முன் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும்.
விதி 3:
நீங்கள் உங்கள் உயர் பள்ளி கல்வி முடித்தவுடன் ஆண்டுக்கு 60,000 சம்பாதிக்க முடியாது, நீங்கள் ஒரு காரும் போனும் சம்பாதிக்கும் வரை நீங்கள் ஒரு துணை தலைவராக கூட முடியாது.
விதி 4:
நீங்கள் உங்கள் ஆசிரியர் கடினமானவர் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு முதலாளி வரும் வரை காத்திருக்க.
விதி 5:
வாழ்க்கையில் திருப்பங்கள் வரலாம் அது உங்கள் கண்ணியத்தை கீழே தள்ளுவது போலும் இருக்கலாம், நம் மூதாதையர் அதை வாய்ப்பு என்றே அழைத்தனர்.
விதி 6:
இனி என்ன செய்வது என்று நீங்கள் குழம்புகிறீர்கள் என்றால், அது உங்கள் பெற்றோர்கள் தவறு இல்லை, எனவே உங்கள் தவறுகளை பற்றி புலம்ப தேவை இல்லை, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.
விதி 7:
உங்கள் பள்ளி வென்றவர்கள் தோல்வியாளர்களையும் கடந்து இருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் அப்படி இல்லை. சில பள்ளிகளில், அவர்கள் தோல்வியாளர்களை நீக்கி இருக்கலாம் மேலும் வெற்றியாளர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கி இருக்கலாம். இது நிஜ வாழ்க்கையில் நிகழுவதில்லை, எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது, அதை சரியாக பயன்படுத்தியவர்கள் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள், எனவே வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்
விதி 8:
வாழ்க்கை செமஸ்டர்கள் போல பிரிக்கப்பட்டுள்ளது அல்ல. இங்கு கோடை விடுமுறை இல்லை, வெகு சில முதலாளிகளே உங்களுக்கான நேரத்தை அறிய உதவி செய்கிறார்கள், அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
விதி 9:
அறிவார்ந்தவர்களோடு அன்பாய் இருங்கள். வாய்ப்புகள் நீங்கள் ஒருவரின் கீழ் பணிபுரியும் போது முடிந்து போகிறது.
விதி 10 :
வாழ்க்கை ஒரு தொலைக்காட்சி பெட்டி போல அல்ல உண்மையில் நாம் ஓய்வைப்பற்றி சிந்திக்காமல் உழைப்பை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டியிருக்கிறது
பின்குறிப்பு :
மேலே சொன்னது எல்லாம் நான் சொன்னது இல்லீங்க, பில்கேட்ஸ் சமீபத்தில் ஒரு பள்ளியில் ஆற்றிய உரை. பள்ளிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி பற்றி பேசி இருக்கிறார்.
20 கருத்துகள்:
லஞ்ச் டைம்ல பதிவா?
@சி.பி.செந்தில்குமார்
நன்றி அண்ணா
எப்ப எல்லாம் மேட்டர் சிக்குதோ உடனே பதிவு போட்டுடுவேன் அண்ணா...
எல்லாமே சூப்பர் கருத்துக்கள். இரண்டாவது மிக அருமை.
இந்த விதிகளை பயன்படுத்தினால் றாமுடும் புகழின் உச்சிக்கு செல்லலாம் போல.....
அற்புதான நம்பிக்கையூட்டும் வரிகள்...
@பாலா
நன்றி பாலா..
@# கவிதை வீதி # சௌந்தர்
நன்றி சௌந்தர்...
அது அவர் அனுபவம் நண்பா
புகழின் உச்சிக்கு போறது நம்ம கையில இருக்கு முயல்வோம்...
கருத்துக்கள் அருமை!
@விக்கியுலகம்
நன்றி அண்ணா
பில் கேட்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்,ஏன்னா அவர் வெற்றி பெற்றவர்
வாழ்கையை வெற்றி கொள்ள 10 கட்டளைகள் ; நல்லது ; பகிர்வுக்கு நன்றி சகோ
@நாய்க்குட்டி மனசு
சரியா சொன்னீங்க சகோ..
நன்றி
@Mahan.Thamesh
வருகைக்கு நன்றி சகோ
வெற்றிக்கு வகுத்த விதிகள்
வெகு அருமை.
>>ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
@சி.பி.செந்தில்குமார்
நன்றி அண்ணா
எப்ப எல்லாம் மேட்டர் சிக்குதோ உடனே பதிவு போட்டுடுவேன் அண்ணா...
எனி டபுள் மீனிங்க்?
அனைத்தும் அருமையான உரைகற்கள்.
வணக்கம் பாஸ், தற்போது உங்கள் டெம்பிளேட் முன்னரை விடச் சிறப்பாக இருக்கிறது, வெகு விரைவாக ஓப்பினாகிறது.
பில்கேட்ஸ் சொன்ன விடயத்தை சிறிய சிறிய தத்துவமாக்கி, உங்களது எழுத்து நடையில் சஸ்பென்ஸ் வைத்து எழுதியிருக்கிறீங்க. அருமையாக இருக்கிறது.
@சி.பி.செந்தில்குமார்
அண்ணா தப்பா எதுவும் எடுத்துக்காதீங்க.. அப்பிடி எதுவும் இல்லை
@நிரூபன்
நன்றி நிரூ
@SANKARALINGAM
நன்றி சார்..
பள்ளிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி பற்றி பேசி இருக்கிறார். //
இரண்டுக்கும் இடைவெளி அதிகம் தான்...
கருத்துரையிடுக