திங்கள், ஜூலை 18, 2011

மூன்றில் அடங்குகிறது என் வாழ்க்கை (தொடரும் பதிவு)

என்னை தொடர் பதிவு எழுத அழைத்த நண்பர்  கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கு நன்றி.  உங்கள் பதிவை தொடர்ந்து இந்த பதிவு ஆகவே கேள்விகள் உங்களுடையது பதில் என்னுடையது.   தலைப்பை கூட அப்பிடியே வச்சுக்கிட்டேன் (என்ன ஒரு சோம்பேறித்தனம் மைண்ட் வாய்ஸ்)

1) நான் விருப்பும் மூன்று விஷயங்கள்...?

    * நல்ல சாப்பாடு எனக்கு மட்டும் இல்லை உலகில் இருக்கும் எல்லா ஜீவனுக்கும் (இந்த நிமிடம் எத்தனை ஜீவன்களுக்கு உணவு கனவாய் இருக்கிறதோ)
    * சுதந்திரம்
    * நேர்மை/உண்மை 


2) நான் விருப்பாத மூன்று விஷயங்கள்

    * துரோகம்
    * சமூக அக்கறை இன்மை (எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என இருப்பது)
    * பொறாமை


3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்

    * வாழ்க்கை - பயம் மட்டுமே நேரான வாழ்க்கை வாழ வைக்கும்
    * நண்பர்கள் - எப்போதும் நண்பர்களாகவே இருக்க வேண்டுமே!!??
    *  ஒழுக்கம் - எப்போது எங்கே தவறும் யாருக்கும் தெரியாது, ஏன் என்றும் சில நேரம் தெரியாது 


4) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?

    * அஞ்சலி
    * ஆயிரத்தில் ஒருவன் - பழையது
    * நான் சிவப்பு மனிதன்


5) நான் விருப்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?

    * சாரை காத்து வீசும் போது சாரை பார்த்து பேசும் போது சாரைப்பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே (வாகை சூட வா) 
    * அவனை பத்தி நான் பாட போறேன் (அவன் இவன்)
    * திமு திமு தீம் தீம் தினம் அல்லாடும் மனம் (எங்கேயும் காதல்)


6) எனக்கு பிடித்த மூன்று உணவுகள்...?

    * சூடாய் இட்லி +  நெய்பொடி 
    * கருவாட்டு குழம்பு வித் ஃபுல் மீல்ஸ்
    * சப்பாத்தி + உருளை குருமா 


7) இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?

    * சிகரட்
    * வேலை
    * நொறுக்கு தீனி (1 மணி நேரத்துக்கு ஒரு தடவை ஏதாவது உள்ள போயி கிட்டே இருக்கணும் ஹி ஹி ஹி)


8) கற்று கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்..?

    * ரௌத்திரம்
    * பொய் (உண்மை பேசியதால் நிறைய எதிரிகள் உண்டு)
    *  நல்லா எழுத


9) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்....?

    * மன்னிப்பு
    * பிச்சை - நான் மட்டும் அல்ல யாரும்
    * அழுகை

10) நான் பெருமையாய் நினைக்கும் மூன்று ...?

    * உயிர் நண்பர்கள் - துவண்ட போது எல்லாம் தோள் குடுத்தவர்கள், தவறுகளை சுட்டி காட்டி திருத்தியவர்கள் 
    * என் குடும்பம் - (எவ்வளவு அலும்பு பண்ணாலும் பொறுத்துக்கொள்கிறார்களே!!!)
    *என் பணி


11) எனக்கு புரியாத மூன்று விஷயம்...?

    * உலகம்
    * பணம்
    * மனிதம்


12) வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயம்...?

    * ஒரு மரம் நட வேண்டும்
    * ஒரு 100 பேருக்காவது ஒரு வேலை.
    * உலகம் என் பெயர் சொல்ல வேண்டும் - காந்தி மாதிரி (என்ன ஒரு பேராசை ராஸ்கல்)  


13) மறக்க முடியாத(கூடாத) மூன்று நண்பர்கள்...?

    * என்னை பிளாக் எழுத தூண்டிய பதிவர்கள் பாமரன்/சேட்டைக்காரன்/சி‌பிசெந்தில்குமார்/ பிலோசபி பிரபாகரன் (என்னை பிறருக்கு அறிமுகம் செய்த நண்பர்) /நாஞ்சில் மனோ. இவர்களின் எழுத்துக்கள் என்னையும் எழுத தூண்டியது

    *  இந்த தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்த மேலும் என்னை வலைசரம் மூலம் பலருக்கும அறிமுகம் செய்த நண்பர் கவிதை வீதி சௌந்தர்

    *  என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் கருத்துக்களை சொல்லி தொடர்ந்து உற்சாகப்படுத்தும் நண்பர் நிரூபன் (நேற்று முன்தினம் என் பிளாகில் உள்ள குறைகளை சொல்லி திருத்த வைத்த பெருமையும் இவரை சேரும்)

14) இதை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..?

    * பாலா பக்கங்கள் - பாலா
    * என் ராஜபாட்டை - ராஜா
    * மகேந்திரன்

24 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இந்தப்பய புள்ள சவுந்தர் கம்முனே இருக்க மாட்டார் போல.. ஹா ஹா

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்

நன்றி அண்ணா

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

என் அழைப்பை ஏற்று தங்களின் உணர்வுகளை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தலைப்பை இன்னும் அழகாக வித்தியாசமாக முயற்ச்சித்திருக்கலாம் ஒரே மாதிரியான தலைப்பிட்டால் இது முந்தயைது என்று படிக்காமல் சென்று விடுவார்கள்....

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

////////
இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?

* சிகரட் ////////

இது எப்படி வாழ வைக்கும்
தயவு செய்து குறைத்துக் கொள்ளுங்கள்...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

/////
வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயம்...?

* ஒரு மரம் நட வேண்டும் //////


இதற்க்கு எதற்க்கு வாழ்நாள்..
இன்றே அந்த வேலையை செய்துவிடுங்கள்...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தாங்கள் அழைத்ததில் ராஜபாட்டை ராஜா இந்த பதிவை போட்டுவிட்டார்....

சுவாரஸ்யமான அழகிய ரசனை
வாழ்த்துக்கள்...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

வாழ்த்துக்கள்...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்
/* ////////
இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?

* சிகரட் ////////
இது எப்படி வாழ வைக்கும்
தயவு செய்து குறைத்துக் கொள்ளுங்கள்... */

நன்றி சௌந்தர்

அறுபதில் இருந்து ஆறுக்கு வந்து இருக்கிறது (மனைவியின் கைங்கரியம்) ...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

/*
/////
வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயம்...?

* ஒரு மரம் நட வேண்டும் //////


இதற்க்கு எதற்க்கு வாழ்நாள்..
இன்றே அந்த வேலையை செய்துவிடுங்கள்...
*/

மரம் மட்டும் நடுவதாய் இருந்தால் இப்போதே செய்து விடலாம்

வீடு வாங்கணுமே!!?? எங்க ஹவுஸ் ஒனர் செடிய பார்த்தாலே டென்ஷன் ஆயிடுவாரு....

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர்
/*
தலைப்பை இன்னும் அழகாக வித்தியாசமாக முயற்ச்சித்திருக்கலாம் ஒரே மாதிரியான தலைப்பிட்டால் இது முந்தயைது என்று படிக்காமல் சென்று விடுவார்கள்.... */

யோசிக்கவில்லை நண்பரே மன்னிக்கவும்.

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

//////
சி.பி.செந்தில்குமார் கூறியது...

இந்தப்பய புள்ள சவுந்தர் கம்முனே இருக்க மாட்டார் போல.. ஹா ஹா
////////

உறுப்படியா ஒரு பதிவு போட்டா உனக்கு பிடிக்காதே...

மகேந்திரன் சொன்னது…

அன்பு நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு

என்னைத் தங்களினிடையில் ஒரு பதிவாலானாக
அங்கீகரித்து என்னைத் தொடர்கட்டுரை எழுத
அழைத்தமைக்கு மிக்க நன்றி.
நிச்சயம் எழுதுகிறேன் நண்பரே.

அன்பன்
மகேந்திரன்

பாலா சொன்னது…

நண்பா என்னையும் அழைத்ததற்கு நன்றி விரைவில் எழுதுகிறேன்.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@மகேந்திரன்

நன்றி மகேந்திரன்

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@பாலா

நன்றி பாலா

சீக்கிரம் எதிர்பார்க்கிறேன் உங்க தொடர் பதிவை

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சுவாரஸ்யமான அழகிய ரசனை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@இராஜராஜேஸ்வரி

நன்றி ராஜி...

நிரூபன் சொன்னது…

என்னை தொடர் பதிவு எழுத அழைத்த நண்பர் கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கு நன்றி.//

இது தான் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று சொல்லுவாங்களோ.

நிரூபன் சொன்னது…

2) நான் விருப்பாத மூன்று விஷயங்கள்

* துரோகம்
* சமூக அக்கறை இன்மை (எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என இருப்பது)
* பொறாமை//

உங்கள் பதிவுகளில் சமூகத்தின் மீதான கரிசனை இருக்கும் போதே நினைத்தேன். அதனை மெச்சும் வகையில் பதிலினைத் தந்திருக்கிறீங்க.

நிரூபன் சொன்னது…

* என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் கருத்துக்களை சொல்லி தொடர்ந்து உற்சாகப்படுத்தும் நண்பர் நிரூபன் (நேற்று முன்தினம் என் பிளாகில் உள்ள குறைகளை சொல்லி திருத்த வைத்த பெருமையும் இவரை சேரும்)//

பாஸ், சாக்கிலேட் இல்லையா.

நிரூபன் சொன்னது…

முத்தான மூன்று விடயங்கள் பற்றித் தித்திப்பாய் எழுதியிருக்கிறீங்க. ரசித்தேன்.

பதில்களிலும், ரசனைகளிலும் சமூகத்தின் மீதான கரிசனை தெரிகிறது. வாழ்த்துக்கள் பாஸ்.

r.v.saravanan சொன்னது…

அழகிய ரசனை பகிர்வு வாழ்த்துக்கள்

இடுகைகளை இ-மெயிலில் பெற