வெள்ளி, ஜூலை 29, 2011

விடையில்லா வினாக்கள்

இன்னும் எத்தனை
அடிகள் முன் வைக்க வேண்டுமோ
வாழ்க்கை பாதையை கடக்க?

இன்னும் எத்தனை
வினாடிகள் தேவைப்படுமோ
காத்திருப்பு முடிய ?


இன்னும் எத்தனை
போர்கள் சந்திக்க வேண்டுமோ
வெற்றி பெற ?

இன்னும் எத்தனை
கடவுள்கள் தேவையோ
பாவங்களை மன்னிக்க ?

இன்னும் எத்தனை
துரோகம் செய்ய வேண்டி இருக்குமோ
தன்னம்பிக்கைக்கு ?

இன்னும் எத்தனை முறை
கட்டுபடுத்த வேண்டி இருக்குமோ
முன்கோபத்தை ?

இன்னும் எத்தனை முறை
சகிக்க வேண்டுமோ
நீதியின் அநீதிகளை ?

இன்னும் எத்தனை பாதைகளை
தேட வேண்டி இருக்குமோ
வெற்றியின் வாசல் தொட ?

இன்னும் எங்கெல்லாம்
தேடவேண்டுமோ உண்மையான
அக்கறை உள்ள மனிதர்களை ?

இன்னும் எங்கெல்லாம்
தேட வேண்டுமோ
விடியலுக்கான கீற்று ?

கிழக்கு, மேற்கு
தெற்கு, வடக்கு
வேறு எங்கும் காண கிடைக்கவில்லை
பிறருக்கு கண்ணீர் சிந்தும் கண்களை

உலகம் தேடிக்கொண்டே
இருக்கும் இந்த கேள்விகளுக்கான
விடைகள் கிடைக்கும் வரை...

12 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

இவற்றிக்கெல்லாம் விடைக்கிடைத்து விட்டால் அவர்தான் உலகின் அதிஷ்டசாலி....

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தேடிக்கொண்டே இருப்போம்...
அதுதான் வாழ்க்கை...

சாகம்பரி சொன்னது…

இதற்கெல்லாம் விடை கிடைத்துவிட்டால், அப்புறம் ........ இன்னும் பத்து கேள்வி வரும்.

மகேந்திரன் சொன்னது…

முடிவில்லா தேடல் தான்
ஆயினும் தேடவேண்டிய
வினாக்கள்

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

தேடல் தானே வாழ்க்கை..

N.H.பிரசாத் சொன்னது…

நல்ல, அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

FARHAN சொன்னது…

விடைகளில்லா கேள்விகள்
இதற்கு விடை கிடைத்தால்
இந்த உலகில் மனிதனுக்கு என்ன வேலை

நவ்ஸாத் சொன்னது…

தேடுவோம் சகா தேடுவோம் கிடைக்குற வரைக்கும் தேடுவோம் தேடுனா கிடைக்காதது எதுவும் இல்ல.....

நிரூபன் சொன்னது…

உங்களிடமிருந்து, கவி நடையில் வித்தியாசமான ஒரு படைப்பு. வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் சொன்னது…

வாழ்க்கையின் ஒவ்வோர் படி நிலைகளையும்,
ஒவ்வோர் அடிகளையும் நான் முன் வைக்கும் போது, எவ்வாறான பாதைகளைக் கடந்து செல்ல வேண்டும், மனதில் எத்தகைய சிந்தனைகளைக் கருத்திற் கொள்ள வேண்டுமென்பதனைத் தத்துவக் கவியாக உங்கள் கவிதை சொல்லி நிற்கிறது.

thanigai சொன்னது…

good lead to lead life; good thought to replay of life; totally good light to travel in dark

kavithai சொன்னது…

விடையில்லா வினா தானே வாழ்வும். அதற்குத்தானே இத்தனை தேடலும்! ...நல்ல சிந்தனையுடன் கவிதை ....
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

இடுகைகளை இ-மெயிலில் பெற