வெள்ளி, ஜூலை 15, 2011

நீங்கள் உங்கள் மதிப்பை எப்போதும் இழப்பது இல்லை.

சுப்பு, பேராசிரியர் மாணவர்கள் முன்னே நின்று கொண்டு இருந்தார். ஒரு ஆயிரம் ரூபாய் தாளை காட்டி

"இதன் மதிப்பு என்ன?" கேட்டார் சுப்பு

"ஆயிரம் ரூபாய், எந்த கடையில் சென்று கொடுத்தாலும் ஆயிரம் ரூபாய்க்கான பொருளை வாங்கலாம்" - மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்

"சரியாய் சொன்னீர்கள்" என்று சொல்லிவிட்டு அந்த ஆயிரம் ரூபாயை கசக்கினார், பிறகு "இதன் மதிப்பு என்ன?" திரும்பவும் கேட்டார்.

"அதே ஆயிரம் தான்" மாணவர்கள் சொன்னார்கள்

கீழே போட்டு மிதித்தார், மீண்டும் கைகளால் நன்கு உருட்டி எடுத்தார்

"இப்போது ?" திரும்ப கேட்டார் 

"இப்போதும் இது ஆயிரம் ரூபாய் தான் இதன் மதிப்பில் மாற்றம் இல்லை"  -  மாணவர்கள் சொன்னார்கள்

இப்போது சுப்பு பேச துவங்கினார்

"இது தான் இன்றைய பாடம், நான் எவ்வளவு தான் கசக்கினாலும் இதன் மதிப்பு குறைவது இல்லை. அது போல் தான் நம் வாழ்க்கையும் நம் வாழ்வில் பல முறை, நாம் கசங்கியிருக்க, நாம் கைவிடப்பட்டது உள்ளது போல் உணர்கிறோம், சில சமயங்களில் நாம் எதற்கும் பயனற்ற ஜடம் போல உணர்கிறோம். நாம் செய்யும் முடிவுகள் நம்மை குப்பைமேட்டில் கூட தள்ளி விடலாம். எதற்கும் கலங்க வேண்டாம். 

எது எப்பிடி இருந்தாலும் நீங்கள் அந்த ஆயிரம் ரூபாய் போல உங்கள் மதிப்பை இழப்பது இல்லை.  உங்களுடைய மதிப்பு எப்போதும் உங்களுடையதே. "

13 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

இனி நான் எதற்க்கும் கலங்க மாட்டேன்...


சிறந்த அறிவுரைக்கதை...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி சௌந்தர்

நிரூபன் சொன்னது…

பாஸ், நைட் படிச்சு கமெண்ட் போடுறேன். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன்,

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உருப்படியான தன்னம்பிக்கை பதிவு மக்கா சூப்பர்ப்...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நிரூபன் கூறியது...
பாஸ், நைட் படிச்சு கமெண்ட் போடுறேன். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன்,//

என்ன சொல்லி திட்ட போறீங்கன்னு எனக்கும் மின்னஞ்சல் அனுப்புங்க ஹி ஹி...

Karikal@ன் - கரிகாலன் சொன்னது…

நல்ல பதிவு
பகிர்ந்தமைக்கு் நன்றி

Karikal@ன் - கரிகாலன் சொன்னது…

+

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ

நன்றி அண்ணா

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@Karikal@ன் - கரிகாலன்

நன்றி நண்பரே...

மைந்தன் சிவா சொன்னது…

முதலில் தெரிந்திருந்தாலும் பகிர்வுக்கு நன்றி பாஸ்!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kut sheer குட் ஷேர்

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்

நன்றி அண்ணா

நிரூபன் சொன்னது…

இது தான் இன்றைய பாடம், நான் எவ்வளவு தான் கசக்கினாலும் இதன் மதிப்பு குறைவது இல்லை. அது போல் தான் நம் வாழ்க்கையும் நம் வாழ்வில் பல முறை, நாம் கசங்கியிருக்க, நாம் கைவிடப்பட்டது உள்ளது போல் உணர்கிறோம்//

ஆகா..எவ்வளவு அருமையான ஒப்பீடும், எளிமையான உதாரண விளக்கமும்.

மனிதர்களின் வாழ்க்கையின் மதிப்பினை மிகவும் எளிமையான உதாரணம் மூலம் விளங்கப்படுத்தியிருக்கிறீங்க. கலக்கல் கதை பாஸ்.

இடுகைகளை இ-மெயிலில் பெற