1) பிறரை தோல்வி அடைய செய்வது எளிது ஆனால் பிறரை வெற்றி கொள்வது கடினம்
2) பிறரின் உணர்ச்சிகளோடு விளையாடாதீர்கள் நீங்கள் வென்றாலும் நிச்சயம் உங்கள் வாழ்நாள் முழுமையும் விரயமாகும்
3) இந்த உலகம் அவதிப்படுவது கெட்டவர்களின் செய்கையால் அல்ல நல்லவர்கள் கண்டும் காணாதது போல் இருப்பதாலே தான்
4) முடியாது என்று சொன்ன எல்லோருக்கும் நன்றி அதனால் தான் எல்லாவற்றையும் நானே செய்து பார்த்தேன்
5) நட்பு உங்கள் பலகீனமாக உணர்ந்தால் நீங்கள் பலவான் என்று பொருள்
6) சிரிப்பவர்கள் எல்லாம் கவலைகள் இல்லாதவர்கள் இல்லை அதை வெற்றி கொள்ள தெரிந்தவர்கள்
7) வாய்ப்புகள் சூரியோதயம் போலே நீண்ட நேரம் காத்து இருந்தால் காணாமல் போய்விடும்
8) நீ வெளிச்சத்தில் இருந்தால் உலகம் உன் பின் வரும் நீ இருட்டுக்குள் சென்று விட்டால் உன் நிழல் கூட பின் வராது
9) சில்லறை காசு எப்போதும் சத்தம் வரும் ரூபாய் நோட்டு அமைதியாய் இருக்கும் உன் மதிப்பு உயரும் போது அமைதியாய் இருக்க கற்றுக்கொள்
மூளை உலகில் மிகச்சிறந்த ஆயுதம் - சிறுகதை
================================
ஒரு விவசாயி தன்னோட பண்ணையில 25 கோழியும் 1 சேவலும் வளர்த்துகிட்டு இருந்தாரு. சேவலுக்கு வயசாயிடிச்சுன்னு புது சேவல் ஒண்ணு வாங்குனாறு.
புதுசா வந்த சேவல் கிட்ட பழைய சேவல் "வா பங்காளி இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து உற்பத்திய அதிகப்படுத்தலாம்" அப்பிடின்னுச்சு
புது சேவலோ "உனக்கு வயசாயிடுச்சு, அதனால எனக்கு வழிய விட்டுட்டு நீ ரிட்டையர் ஆயிடு" ன்னு திமிரா சொல்லுச்சு
"இங்க 25 கோழிகள் இருக்கு எல்லாத்தையும் உன்னால சமாளிக்க முடியுமா" பழைய சேவல் கேட்டுச்சு
"எல்லாத்தையும் நானே பார்த்துகிறேன் உன் உதவி தேவை இல்லை" புது சேவல் சொல்லுச்சு
"உன் திறமைக்கு ஒரு சவால் அதுல நீ ஜெயிச்சுட்டா நீ சமாளிச்சுடுவேன்னு நான் ஒத்துக்கிறேன் அப்பிடியே நான் ஒதுங்கிக்கிறேன்" இது பழைய சேவல்
"என்ன செய்யணும்"
"உனக்கும் எனக்கும் ஓட்டப்பந்தயம் வைப்போம், அதுல தெரிஞ்சுடும்"
"சரி"
"ஒரு கண்டிஷன்"
"என்ன?"
"எனக்கு வயசாயிடுச்சு அதனால நான் ஒரு 10 மீட்டர் முன்னால நின்னுக்குவேன் சரியா?"
"சரி எதுவும் பிரச்சனை இல்லை போட்டியில நீ தோத்துட்டா நீ சொன்ன மாதிரி என் வழிக்கு வரக்கூடாது எல்லா கோழியும் என்னோடது"
"சரி நாளைக்கு காலையில போட்டிய வச்சுக்கலாம்"
மறுநாள், போட்டி ஆரம்பம் ஆச்சு பழைய சேவல் சொன்ன மாதிரி 10 மீட்டர் முன்னாடி நின்னுக்கிச்சு.
புது சேவல் தெம்பை எல்லாம் தெரட்டி ஓட்டம் பழைய சேவலை முந்த போற நேரம்
"டுமீல்" - ன்னு சத்தம். புது சேவலை விவசாயி சுட்டுட்டார்,
இதுக்கு எது சேவல் எது கோழின்னே தெரியலையேன்னு இதை வச்சு என்ன பண்றதுன்னு சலிச்சுக்கிட்டாரு.
நீதி : மூளை உலகில் மிகச்சிறந்த ஆயுதம் ...

9 கருத்துகள்:
பாவம் அந்த சேவல் .....செய்யாத தப்புக்கு தண்டனை !
ட்வீடகள் அனைத்தும் அருமை !
ஒரே தத்துவ மழையா இருக்கே? இன்னா மேட்டரு?
அனைத்தும் அருமை.
மூளை உலகின் சிறந்த ஆயுதம்,
சிறுகதை அருமை.
துணுக்குகள் குறித்துவைக்கப்படவேண்டியவை.
All points are super . . . And small story also super
அசத்தலான பதிவு....
சிறுகதையும் அருமை...
வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்...
சிறுகதையும் அருமை. தன்னம்பிக்கை துணுக்குகளும் அருமை.
துணுக்குகளும், சிறு கதையும் நல்லா
இருக்கு. வாழ்த்துக்கள்.
nice blog. Follow பண்றேன்
:-)
கருத்துரையிடுக