செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

அவளின் நினைப்பில் அவனின் பிரச்சனைகள்

இது ஒரு பொண்ணோட அட்வைஸ்.  ஒரு பொண்ணு தன்னோட தோழிக்கு செய்யுற அட்வைஸ்.. 

1.    நீ அவனிடம் அன்பாய் நடந்து கொண்டால், நீ அவனை காதலிக்கிறாய் என்பான், அவ்வாறு நீ நடந்து கொள்ளாத பட்சத்தில் உன்னை கர்வி என்பான்

2.    நீ அழகாய் உடை அணிந்தால் அவனை கவரவே உடை அணிகிறாய் என்பான், அவ்வாறு இல்லாத பட்சத்தில் உன்னை பட்டிக்காடு என்பான்

3.    நீ அவனிடம் விவாதம் செய்தால் உன்னை பிடிவாதாக்காரி என்பான், நீ அமைதியாய் இருந்தாலோ உன்னை மூளை அற்றவள் என்பான்

4.    நீ உன் பிரச்சனைகளை அவனிடம் சொன்னால் உன்னை இடைஞ்சல் என்பான், எதுவும் நீ சொல்லவில்லை என்றால் நீ அவனை நம்பவில்லை என்பான் 

5.    நீ அவனை திட்டினால் உன்னை ஆயா மாதிரி திட்டாதே என்பான், அவன் திட்டினால் உன்னை பராமரிக்கிறானாம்

6.    நீ சத்தியத்தை மீறினால் உன்னை நம்பிக்கை இல்லாதவள் என்பான், அவன் மீறினால் வேறு வழி இல்லாமல் மீறினேன் என்பான்

7.    நீ அதிகம் மதிப்பெண் வாங்கினால் அது உன் அதிர்ஷ்டம் என்பான், அவன் வாங்கினால் அவன் அறிவாளி என்பான்

8.    நீ அவனை காயப்படுத்தினால் உன்னை கருணை இல்லாதவள் என்பான், அவன் உன்னை காயப்படுத்தினால் உன்னை கூர்  உணர்வுடயவள் (sensitive) என்பான் 

9.    நீ அவனை விரும்பவில்லை என்றால் நீ அவனை காதலிக்கவில்லை என்பான், நீ விரும்பினால் உன்னை மலிவானவள் என்பான் 

10 . நீ அவனை காதலிக்கவில்லை என்றால் உன்னை சொந்தமாக்கி கொள்ள முயற்சிப்பான், நீ காதலித்தால் உன்னை விட்டு விலக நினைப்பான்

8 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் மழை

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அழகான பெண்மொழிகள்

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

எப்படிங்க இப்படியெல்லாம்...

ஆற்காடு குதிரை மாதிரி...
அது முன்னே சென்றால் கடிக்கும்..
பின்னே சென்றால் உதைக்கும்...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

பெண்களின் மனநிலையில் அழகாக சொல்லியிருக்கீறிர்கள்...

வாழ்த்துக்கள்...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அட, அற்புதமான பொன்மொழிகள்..
அதுவும் பெண்களின் மனநிலையில்..
பாராட்டுகள்..

பாலா சொன்னது…

சரியாத்தாங்க இருக்கு. பெண்ணியம் வாழ்க. ஆணாதிக்க சமூகம் ஒழிக.

தமிழ்வாசி - Prakash சொன்னது…

சூப்பரு...

நிரூபன் சொன்னது…

காதலில் புரிந்துணர்வற்ற, புரிதலுடன் கூடிய மொழிகளை அருமையாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

இடுகைகளை இ-மெயிலில் பெற