புதன், ஆகஸ்ட் 10, 2011

ஐயோ வடை போச்சே...

சுந்தர் அந்த ஊர்லயே ஒரு பெரிய பிசினஸ்மேன், ஒரு மீட்டிங் விசயமாய் கார்ல தன் பி‌ஏ வோட போயிக்கிட்டு இருந்தார்.  வழியில போர் அடிக்கமா இருக்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்தாங்க,  காரை  வேகமா ஒட்டிக்கிட்டு இருந்தார் சுந்தர்.

"சார் நீங்க கோவிலுக்கும் போறீங்க சர்ச்க்கும் போறீங்க, நீங்க இந்துவா இல்ல கிறிஸ்டியனா?"

"நான் பிறப்பால் இந்து, கிறிஸ்டியன் ஸ்கூல்-ல படிச்சாதால சுர்ச்க்கும் போற பழக்கம் இருக்கு"

பேசிக்கிட்டே இருக்கும் போதே நடுவழியில மாடு வார சடன் பிரேக் போட்டார்,  சுந்தர் கொஞ்சம் தடுமாறிட்டார்,   தவறுதலா அவர் கை பி‌ஏ வோட கால்ல பட்டுடுச்சு

"மன்னிச்சுடும்மா " அவசரமாக மன்னிப்பு கேட்டார்

அத பொருட்படுத்தாத பி‌ஏ "நீங்க பைபிள் படிச்சு இருக்கீங்களா? சார்" கேட்டாங்க

"உம் படிச்சு இருக்கேன்"

"Luke 14:10 அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் -ல என்ன சொல்லி இருக்குனு தெரியுமா சார்?"

அவருக்கு தெரியல, சமாளிக்கறதுக்கு

"இப்பிடி டக்குன்னு கேட்டா எப்பிடிம்மா? ஞாபகம் வரலை, கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்"

மீட்டிங் முடிச்சு வீட்டுக்கு வந்துட்டார் சுந்தர், அவரு மனசுல ஒரு ஆர்வம் அதுல என்ன சொல்லி இருக்கு, வேகமா பைபிள்-ஐ தொறந்து தேடி பார்த்தார். அதுல "இன்னும் முன்னே போ, உனக்காக சொர்க்கம் காத்து இருக்கிறது"


நீதி : நீங்கள் உங்கள் வேலையை பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை என்றால் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்


இன்று வலைச்சரத்தில் மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு  இதையும் கொஞ்சம் படிங்களேன்..


14 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள்.
நாம் செய்யும் பணியின் தன்மையை
முதலில் புரிந்துகொண்டால்
பின்னர் கிடைக்கும் விளைவு
விளைச்சல்தான்.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல கருத்து

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்


இது என்ன தெரியுமா?

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நல்ல நீதி.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

நல்ல கருத்து..
அருமையா சொல்லி இருக்கீங்க..
பாராட்டுகள்,,,

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வலைச்சர வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வலைசரத்துல கலக்குறீங்க...!

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அழகிய கருத்துக்கள்...

வாழ்த்துக்கள்...
வலைச்சரத்தில் கலக்க...

விக்கியுலகம் சொன்னது…

வலைச்சரத்துக்கும்...இங்கு பகிரும் விஷ்யங்களும்ம் டபுள் வாழ்துக்கள்யா மாப்ள!

கோகுல் சொன்னது…

நல்லா சொன்னீங்க போங்க

கோகுல் சொன்னது…

உண்மையிலேயே சிக்கன் பிரியாணிதான்

தமிழ்வாசி - Prakash சொன்னது…

கதை நல்ல கதைங்கோ

நிரூபன் சொன்னது…

புரிந்துணர்வு இல்லையேல் வாழ்வில் துன்பப்பட நேரும் என்பதனை அழகாக விளக்கியுள்ளீர்கள்.

கோவை நேரம் சொன்னது…

ஹி ..ஹி ஹி..இதுல உள்குத்து இருக்குதானே.?

இடுகைகளை இ-மெயிலில் பெற