வெள்ளி, ஜூன் 10, 2011

அந்த ஐந்து நிமிடம்

"ரமேஷ் போதும் வா வீட்டுக்கு போகலாம்" பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த தன் மகனை அழைத்தார் சுப்பு

"இன்னொரு அஞ்சு நிமிஷம் டாடி" சொல்லிவிட்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்தான்

சிறிது நேரம் கழித்து திரும்பவும் "ரமேஷ் போகலாமா" கேட்டார் சுப்பு

"இன்னொரு அஞ்சு நிமிஷம் டாடி" ரமேஷ் ஊஞ்சலை விட்டு இறங்கவில்லை

இப்படியே இன்னும் சிலமுறை சுப்பு அழைக்க, ரமேஷ் அதே பதிலை தந்து கொண்டு இருந்தானே ஒழிய ஊஞ்சலை விட்டு வரவில்லை

பக்கத்தில் இதை பார்த்துக்கொண்டு இருந்த குப்பு, "எப்பிடி ஒரு அப்பா நீங்க, இவ்வளவு பொறுமையா இருக்கீங்க? நானா இருந்தா இந்நேரம் பயல அடிச்சி இழுத்துட்டு போயி இருப்பேன்" ன்னு சொன்னார்

சுப்பு "அப்பிடியில்லே இதுவரைக்கும் நான் வேலை வேலைன்னு என் பசங்கள கவனிக்காம விட்டுட்டேன், பெரிய பையன் கொஞ்ச நாளைக்கு முன்னால விபத்தில இறந்துட்டான் அவன் கூட அஞ்சு நிமிஷம் கூட நான் இருக்கலை, அதே தப்ப இவன் கிட்ட பண்ண கூடாதுன்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். அது மட்டும் இல்லாம இந்த அஞ்சு நிமிஷம் அவன் விளையாடுறதுக்கு குடுக்கலை, அவன் விளையாடுறதை பாக்குறதுக்கு நான் எடுத்துக்கிட்டேன்"

13 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அனுபவப்பட்ட பின் வந்த ஞானம்.

ASHROFF SHIHABDEEN சொன்னது…

ஆங்கிலத்திலே இரண்டு மூன்று தளங்களில் இந்தக் கதையைப் படித்திருக்கிறேன்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அழகானதும் அருமையானதுமான குட்டிக்கதை! வாழ்த்துக்கள் நண்பரே!

vidivelli சொன்னது…

நல்லாயிருக்குங்க...

!!!!நம்ம பக்கமும் காத்திருக்கிறேன்!!!!

நிரூபன் சொன்னது…

பொறுமையின் அவசியத்தை உணர்த்தும் அருமையான கதை சகோ.

Unknown சொன்னது…

@முனைவர்.இரா.குணசீலன்

நன்றி நண்பரே

Unknown சொன்னது…

@vidivelli

வருகைக்கு நன்றி நண்பரே, தொடர்ந்து கருத்துகளை சொல்லுங்கள்

Unknown சொன்னது…

@நிரூபன்

நன்றி சகோ

Unknown சொன்னது…

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வருகைக்கு நன்றி நண்பரே

rajamelaiyur சொன்னது…

நல்ல கருத்து

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாவ்...

டச்சிங்.. டச்சிங்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எல்லாத்திலும் ஓட்டு போட்டாச்சிப்பா..

கிருபா சொன்னது…

நன்றாக உள்ளது சகோ.வாழ்க்கை வேகத்தில் அனவரும் மறந்த ஒன்று இது