புதன், ஜூலை 06, 2011

அச்சம் தவிர்

ஒரு நாளு சாத்தானுக்கு பணக்கஷ்டம் அங்கயும் விலைவாசி எல்லாம் எறிப்போச்சு, சாத்தானுக்கு அதுக்கு கீழே வேலை பாக்குறவங்களுக்கு சம்பளம் குடுக்க காசு பத்தலை.   அதனால வாழ்க்கையே வெறுத்துப்போய் இனி இந்த வேலையை செய்யுறது இல்லைன்னு முடிவு பண்ணிச்சு.   அதனால தான் கிட்ட இருக்க பொருளையெல்லாம் விக்கலாம்ன்னு சந்தைக்கு போச்சு.

சந்தையில எல்லா பொருளுக்கும் ஒரு விலை போட்டு பரப்பி வச்சுச்சி

விலைபட்டியல் கீழே இருக்குற மாதிரி

வன்மம்              ரூ.    500.00

பகைமை        ரூ.     520.00

பொறாமை        ரூ.     530.00

காழ்ப்புணர்ச்சி    ரூ.     575.00

வஞ்சம்            ரூ.     700.00

********        ரூ.100000.00 

நெறைய பேரு பார்த்துக்கிட்டே போனாங்க, ஒருத்தரும் வாங்குரா மாதிரி தெரியல

கீழே 50% தள்ளுபடி (selected items) ன்னு வேற எழுதி வச்சுச்சு, அதை பார்த்த ஒருத்தரு கிட்ட வந்து சாத்தான் கிட்ட எல்லா பொருளும் சீப்பா தான் இருக்கு,    ஆனா கடைசியா ஒரு ஒண்ணு பேரு இல்லாம இருக்கே அதுவும் இல்லாம விலையும் ஜாஸ்தியா இருக்கே அப்பிடி என்ன அது

அதுவா, அதுக்கு பேரு அதைரியம், இது தான் நான் பயன்படுத்துறதுல ரொம்ப வலிமையான ஆயுதம். மத்த எதுவும் சிலர் கிட்ட எடு படாம போயிடும் ஆனா எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவங்க தைரியத்தை கெடுத்து விட்டுட்டா அந்த ஆளு அவ்வளவு தான், அப்பறம் என் விருப்பப்படி அவங்கள என்னால ஆட்டி வைக்க முடியும்.

எல்லோருடைய பக்கத்துலையும் இதை நான் வச்சு இருப்பேன், ஆனா ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும் இது என்னோட வேலைன்னு..



6 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தைரியம் இருந்தால் உலகில் எதையும் வெற்றி கொள்ளலாம்...

அருமையான சிந்தனை கதை..

Unknown சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி சௌந்தர்...

rajamelaiyur சொன்னது…

அருமையான தன்னம்பிக்கை கதை ... நன்றி


வலைசரத்தில் இன்று

வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நீதான்யா பதிவன், உண்மையான பதிவன், பின்னே மிகவும் அருமையாக மக்களுக்கு பிரயோசனமா எழுதுறதுக்கு ஒரு ராயல் சல்யூட் மக்கா, வாழ்த்துக்கள்...!!!

Unknown சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ

ரொம்ப நன்றி அண்ணே,

ஆமா என்னை வச்சு காமெடி கிமெடி எதுவும் பண்ணலையே!!??

Unknown சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி நண்பரே