வெள்ளி, செப்டம்பர் 30, 2011

இந்த பசி தீர்க்க வழி சொல்ல மறந்தாயோ காளி

இன்றைய கவிதை

இயலாமை

பிறக்கும் போது
வெறும் வயிற்று பசியுடன்
படைத்தாய் காளி!! 


நான் வளர என்னோடு
சேர்ந்தது ஆசை எனும் பல பசிகள் காளி !!
ஒவ்வொரு நிலையிலும்
ஆசை பசியின் வீரியம் கூடியதே
ஒழிய குறையவில்லை காளி !!

எதை கண்ட போதும்
கண்கள் விரிந்தே தவிர
அறிவு விரியவில்லை
அறிய விடாமல் கெடுத்தாயோ காளி!!

கண்ணீரை எல்லாம் தன்
கருவிழியின் பின் மறைத்து நான்
விரும்பியதை எல்லாம் வாங்கி
என் ஆசை பசி ஆற்றிய தந்தையின்
வலி தெரியாமல் மறைத்தாய் காளி !!

இன்று உணர்கிறேன் என் தந்தையின் வலி
நான் தந்தையான பின்னே
இன்னும் நீ காட்டவில்லை காளி
என் குழந்தையின் ஆசை எனும் பசி
எல்லாம் தீர்க்கும் வழி !!


இன்றைய சிந்தனை

ஒரு நாளு ஒரு முயல் அதோட வீட்டுக்கு வெளியே உக்காந்து லேப்டாப்-ல ஏதோ டைப் பண்ணிக்கிட்டு இருந்துச்சு, அங்க வந்த நரி முயலைப்பார்த்து

"என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"

"முயல் எப்பிடி நரிய வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்"

"நீ என்ன லூசா எந்த ஊருல முயல் நரிய வேட்டையாடி இருக்கு?"

"நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்"

கொஞ்ச நேரம் கழிச்சி நரியோட எலும்போட வெளியே வந்த முயல் திரும்ப டைப் பண்ண ஆரம்பிச்சுச்சு, கொஞ்ச நேரத்தில ஒரு ஓநாய் அந்த பக்கம் வந்தது

"முயலாரே என்ன பண்றீங்க?"

"முயல் எப்பிடி ஓநாயை வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்"

"ஹே ஹே இது எங்கேயாவது நடக்குமா?"

"நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்"

கொஞ்ச நேரம் கழிச்சி ஓநாயோட எலும்போட வெளியே வந்த முயல் திரும்ப டைப் பண்ண ஆரம்பிச்சுச்சு, கொஞ்ச நேரத்தில ஒரு கரடி அந்த பக்கம் வந்தது

"முயலாரே என்ன பண்றீங்க?"

"முயல் எப்பிடி கரடியை வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்"

"நம்ப முடியலையே?"

"நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்"

வீட்டின் உள்ளே : முயல் உள்ள இருந்த சிங்கத்துக்கிட்ட கரடியை அறிமுகப்படுத்திக்கிட்டு இருந்துச்சு

நீதி :  நீங்க எவ்வளவு கேவலமா வேலை செய்யுறீங்க என்பது முக்கியம் இல்லை உங்க பாஸ்-க்கு உங்களை பிடிச்சு இருக்கா இல்லையாங்குறது தான் முக்கியம்.


இன்றைய லொள்ளு

---- பசங்க



18 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அனைத்தும்... சூப்பர்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எவ்வளவு கேள்விகள் கேட்டாலும் இன்றைய காளிகள் வாய்திறப்பதில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்றைய லொள்ளு...

உண்மையில் இவங்க விளையாட்டு பசங்கதாங்க...

2ஜி-யில் இவர்கள் அடிக்கும் கூத்து நகைச்சுவையானதுதான்...

K சொன்னது…

எல்லாமே அசத்தல் அண்ணே! இன்றைய லொல்லு கலக்கலோ கலக்கல்!!

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான கவிதை..
லொள்ளு சூப்பர்..

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்ல கவிதை. லொள்ளு எப்பவும் போல அசத்தல்

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

ஜெ தான் சூப்பர்

பெயரில்லா சொன்னது…

கலக்கல் X கலக்கல்...

படம்..கவிதை..நச்...

கோகுல் சொன்னது…

ஆசை எனும் பசிதீர்க்கும் வழி
இன்னும் அந்த காளிக்கே தெரியவில்லை போலும்!

//
உங்க பாஸுக்கு உங்கள பிடிச்சுருக்கா?//

அட சூப்பர் பசங்களா இருக்காங்களே!இவங்கலாவது சொன்ன பேச்சு கேப்பாங்களா?

Philosophy Prabhakaran சொன்னது…

உங்களுடைய நீதி நூறு சதவிகிதம் உண்மை... அந்த வரிகளை என்னுடைய வலைப்பூவில் பயன்படுத்திக் கொள்கிறேன்...

Unknown சொன்னது…

மாப்ள பாஸ் கிட்ட லெக் பீசா வேணா இரு மாசா இருக்காதேங்கறீங்க ஹிஹி....அந்த கடைசி போட்டோல இருக்கற ஆளுங்கள எங்கயோ பாத்தாப்போல இருக்கே!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

150க்கு வாழ்த்துக்கள்

தனிமரம் சொன்னது…

கவிதையுடன் வந்து குட்டிக்கதை சொல்லி கடைசியில் விளையாட்டுச் சிறுவர்களில் சிரித்தே விட்டேன் அதுவும் சோனியா+ஜெ கற்பனை ரியலி சூப்பர் !

குறையொன்றுமில்லை. சொன்னது…

வாழ்த்துக்கள்

SURYAJEEVA சொன்னது…

வயிறு வலிக்குது... அழுதுடுவேன்

நிரூபன் சொன்னது…

இயலாமை: நிறைவேறாது தொடரும் மனித ஆசைகளை நிறைவேற்றும் வண்ணம், வாழ்வில் நிம்மதியினைத் தரும் வண்ணம் காளியிடம் வரம் கேட்டு நிற்கின்றது.

இன்றைய சிந்தனை அருமை...

இன்றைய லொள்ளு...

ஹா...ஹா...ஆடையோடு நிற்கும் குட்டி அரசியல்வாதிகள்...
செம காமெடி பாஸ்.

ராஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராஜி சொன்னது…

ஆசை பசியின் வீரியம் கூடியதே
ஒழிய குறையவில்லை காளி
>>
அது குறைந்துவிட்டால் நாம் ஏன் இந்த பாடு பட வேண்டி இருக்கிறது சகோ?
150க்கு வாழ்த்துக்கள் சகோ