திங்கள், செப்டம்பர் 26, 2011

தோல்வியின் ரணங்கள் வெற்றியின் தளங்கள்


இன்றைய கவிதை

கழுத்து அறுபட்டு 

துடித்துக்கொண்டு 


இருப்பதைக் கண்டும் 


மனம் பதறவில்லை 


துடிப்படங்கிய பின் 


கேட்டேன் 


எனக்கு ஒரு அரைக்கிலோ குடு 


அதுல ரெண்டு லெக் பீஸ்


உங்களோடு வாழ்வதை விட 


சாவதே மேல் என்று 


சொல்வது போல் 


கூண்டில் இருந்த 


கோழியின் கண்கள் !!





இன்றைய சிந்தனை

தோல்வி என்று நீங்கள் நினைப்பது எல்லாம் தோல்விகள் அல்ல.

வெற்றி பெற்ற எல்லோருக்கும் பொதுவான ஒரு விஷயம் அவர்கள் தோல்விகளை எல்லாம் ஒரு பொருட்டாக மதித்தது இல்லை. தோல்விகள் பற்றிய அவர்களது பார்வை வேறு மாதிரி இருந்தது அவர்களை வெற்றியாளர்களாக மாற்றியது. 999 முறை தோற்றாலும் 1000 வது முறை அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்துபவன் எப்போதும் முந்தைய தோல்விகளை முயற்சியாகவே  பார்ப்பான், அயர்ச்சி கொள்ளுவதில்லை. அதுவே அவனுக்கு வெற்றியை தேடிதரும்.


   



1.    வெற்றி வேகமாக வேண்டுமானால் உங்கள் தோல்வியின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்

2.    தோல்வி ஒரு வாய்ப்பு அடுத்த முயற்சியை இன்னும் புத்திசாலித்தனமாய் துவங்க

3.    கீழே விழாமல் இருப்பது நம்முடைய சிறப்பு அல்ல கீழே விழுந்தாலும் எழுவதே சிறப்பு

4.    தோற்க பயந்தவர்கள் என்றுமே வெற்றியை ருசித்தது இல்லை.

5.    எப்படி செய்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல எப்போதும் நினைப்பதை விட புத்திசாலித்தனமான கருத்துக்கள் இருக்கும்.

6.    தோல்வி என்பதும் வெற்றியே நாம் அதில் இருந்து கற்றுக்கொள்ளும் போது

7.     முதல் தோல்வியே முடிவான தோல்வி என்று முடிவு செய்யாதீர்

8.    தடைகள் தோல்விகள் ஆகாது

இன்றைய லொள்ளு 





19 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தன்னம்பிக்கையுடன் எடுத்து வைக்கு ஒவ்வொறு அடியும் முதலில் தோல்வியை கொடுத்தாலும் அவைதான் வெற்றிக்கான அஸ்திவாரங்கள...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தோல்விகள் என்பது களத்தில் கிடைப்பது அல்ல... அதில் களந்துக்கொள்ளாமலே ஒதுங்குவதுதான்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தன்னமிக்கையூட்டும் பதிவு...
வாழ்த்துக்கள்...

பாலா சொன்னது…

நீங்க என்ன சொன்னாலும், சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தப்போவதில்லை.

அப்புறம் தன்னம்பிக்கை தரும் வரிகள் அருமை.

SURYAJEEVA சொன்னது…

தான் ஊன் பெருக்க தான் பிரித்து ஊனுண்பான் எங்கனம் வந்தாளும் அருள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தன்னம்பிக்கை என்னும் தும்பிக்கையே சால சிறந்தது....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அந்த கோழி மேட்டர் சூப்பர்...

Unknown சொன்னது…

மாப்ள கலக்கல் பதிவு...அதுவும் அந்த கோழி கால் தான் டாப்பு!

M.R சொன்னது…

அழகான கவிதை அருமையான தத்துவம்

பகிர்வுக்கு நன்றி நண்பா

நிரூபன் சொன்னது…

இனிய மாலை வணக்கம் பாஸ்,

மனிதர்களுக்கு உணவாகும் கோழியின் நிலையினை, நாமெல்லோரும் ஒரு கணம் சிந்திக்கும் வண்ணம் கவிதை அமைந்துள்ளது.

வெற்றி தோல்வி பற்றிய சிந்தனையினைச் சொல்லும் தத்துவம் கலக்கல்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

இன்றைய அனைத்துமே அசத்தல்..

சக்தி கல்வி மையம் சொன்னது…

கவிதை சூப்பர்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

கீழே விழாமல் இருப்பது நம்முடைய சிறப்பு அல்ல, கீழே விழுந்தாலும் எழுவதே சிறப்பு.
எனக்கு ப்பிடித்தவரிகள்

பெயரில்லா சொன்னது…

தன்னம்பிக்கை தரும் வரிகள்...நண்பா

கோகுல் சொன்னது…

கோழியின் கண்களை படித்தது அசத்தல்.
தடைகள் தோல்வி ஆகாது .
தூண்டும் வரிகள்!

Philosophy Prabhakaran சொன்னது…

தலைவரே இந்த மாதிரி எல்லாம் சென்டிமென்ட் பேசி சிக்கன் மீதுக்கொண்ட காதலை கெடுக்காதீர்கள்...

தனிமரம் சொன்னது…

தோல்வியின் வெற்றியைப் பற்றி அழகான தத்துவங்கலையும் தந்து இனிய கோழியைப் பற்றிய கவிதையும் சிறப்பானது இனி கோழி சாப்பிடும்போதெல்லாம் உங்கள் கவிதை ஞாபகம் வரும் லெக்பீஸ் சூப்பர்!
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் சகோதரா!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தன்னம்பிக்கை கொடுக்கும் வரிகள்.. இன்றைய லொள்ளு அருமை

ஆனந்தி.. சொன்னது…

NICE