வெள்ளி, செப்டம்பர் 23, 2011

டேமேஜர் சாரி மேனேஜர் குப்பண்ணா

இந்த பதிவு புதுசா வேலைக்கு சேர்ந்தவங்களுக்கு

உங்க ஆஃபிஸ்-ல மேனேஜர் சொல்லுறதுக்கு வேற உள்ளர்த்தம் இருக்கும் அது என்னானு சொல்லுறது தான் இந்த பதிவு

1. "நாம செய்யலாம்" ன்னு சொன்னா "நீ செஞ்சு முடிச்சுடு" அப்பிடின்னு அர்த்தம்

2. "நீங்க நல்ல வேலை செஞ்சு இருக்கீங்க" ன்னு சொன்னா "இன்னும் உங்களுக்கு நெறைய வேலை குடுக்கப்போறேன்" ன்னு அர்த்தம்

3. "நாங்க அதுல தான் வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்" ன்னு சொன்னா "இன்னும் அதை பார்க்கவே இல்லை இனிமே தான் ஆரம்பிக்கப்போறோம்" ன்னு அர்த்தம்

4. "நாளைக்கு காலையில மொதோ வேலை இதுதான்"ன்னு சொன்னா "குறைந்த பட்சம் நாளைக்கு நைட் தான் வேலை முடியும்" ன்னு அர்த்தம்

5. "இன்னும் கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணிட்டு முடிவு பண்ணலாம்" - னா " ஏற்கனவே முடிவு எடுத்தாச்சு என்ன செய்யணும்ன்னு அப்பறம் சொல்றேன்" ன்னு அர்த்தம்

6. "இங்கே கொஞ்சம் குளறுபடி ஆயிடுச்சு"ன்னு சொன்னா "பொய் சொல்லுறோம்" ன்னு அர்த்தம்

7. "மீட்டிங் வச்சு முடிவு பண்ணிக்கலாம்" -ன்னு சொன்னா "இப்ப எனக்கு டைம் இல்லை" ன்னு அர்த்தம்

8. "நாம எப்பவேனாலும் பண்ணலாம்" - ன்னு சொன்னா "சொன்ன நேரத்துக்கு பண்ண முடியாது" ன்னு அர்த்தம்

9. "எங்களுக்குள்ள கொஞ்சம் மாற்று கருத்து இருக்கு" ன்னு சொன்னா "இரண்டு பேரும் அடிச்சுக்கிட்டோம்" ன்னு அர்த்தம்

10. "உங்க வேலை எல்லாம் லிஸ்ட் எடுங்க நான் எப்பிடி உதவ முடியும்னு பார்க்குறேன்" - ன்னு சொன்னா "நீ உன் வேலையை எப்பிடி முடிக்கமுடியும்ன்னு பாரு என்கிட்ட வராதே" ன்னு அர்த்தம்



 
11. "நாம தப்பு எங்கேன்னு கண்டு பிடிக்கணும்" ன்னு சொன்னா "உன் தப்பு எங்கேன்னு இன்னும் கொஞ்ச நேரத்தில சொல்லுறேன்" ன்னு அர்த்தம்

12. "நாம எல்லாம் ஒரே டீம்" - ன்னு சொன்னா "என்னைய மட்டும் நீங்க திட்ட முடியாது"ன்னு அர்த்தம்

13. "இது நல்ல கேள்வி" - ன்னு சொன்னா "இது வரைக்கும் இதைப்பத்தி தெரியாது" ன்னு அர்த்தம்

14. "குடும்பம் முக்கியம் எப்ப வேணுமினாலும் லீவு எடுத்துக்குங்க, ஆனா வேலை மட்டும் நிக்காம பார்த்துக்குங்க" அப்பிடின்னா உங்களுக்கே தெரியும் இதுக்கு என்ன அர்த்தம்ன்னு

15. "ALL THE BSET" அப்பிடின்னா "உங்களுக்கு ஆப்பு ரெடி" ன்னு அர்த்தம்


இன்றைய சிந்தனை

  • உங்கள் வாழ்வில் சிறந்த நாள் - இன்று
  • சிரமமான ஒரே வேலை - ஒரு வேலையை ஆரம்பிப்பது
  • எளிதான ஒரே வேலை - பிறரிடம் குற்றங்களை காண்பது
  • உபயோகம் இல்லாத சொத்து - கௌரவம்
  • உபயோகமான ஒரே சொத்து - பணிவு
  • மிகவும் தேவையான ஒன்று - நுண்ணறிவு
  • கடினமான செயல் - தோல்வியை ஒப்புக்கொள்வது
  • சிறந்த பரிசு - மன்னிப்பு
  • சிறந்த ஞானம் - அனுபவம்

இன்றைய லொள்ளு







21 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இன்றைய சிந்தனை அருமை நண்பா..

கோகுல் சொன்னது…

எனக்கு தெரிஞ்ச ஒண்ணு
நான் உங்க மேல தப்பு சொல்லல'ன்னா
நீதான் தப்பு செஞ்சுருக்கேன்னு அர்த்தம!

ஆமா!நீங்க எங்க வேலை பாக்குறிங்க?

Unknown சொன்னது…

@கோகுல்

நன்றி கோகுல்..

நானும் ஒரு டேமேஜர் சாரி மேனேஜர் தான் நண்பா..

SURYAJEEVA சொன்னது…

அது தான் மேனேஜர்...

Riyas சொன்னது…

ஆஹா அசத்தல்,,

எல்லாம் அனுபவங்களா,,

இதில் சிலது எனக்கும் அனுபவம் உண்டு,,

அம்பலத்தார் சொன்னது…

ம்.... அனுபவம் பேசுதோ. அருமையான பதிவு

M.R சொன்னது…

ரொம்ப அனுபவம் போல் இருக்கிறது
ஹா ஹா

M.R சொன்னது…

tamil manam -4

indli 5

voted

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்..

மனேஜர் ஆளுங்களை நன்றாகத் தான் புரிந்து வைத்திருக்கிறீங்க.

நிரூபன் சொன்னது…

இன்றைய சிந்தனை மூலம் குட்டி வாழ்வியலைச் சொல்லியிருக்கிறீங்க.
அருமை.

குறையொன்றுமில்லை. சொன்னது…

இன்றைய சிந்தனைகள் எல்லாமே நல்லா இருக்கு. எல்லா மேனேஜர்களுமே இப்படியா?

rajamelaiyur சொன்னது…

Today Lollu super . . .

சக்தி கல்வி மையம் சொன்னது…

இன்றைய சிந்தனை அசத்தல்...

நன்றி...

மகேந்திரன் சொன்னது…

இன்றைய சிந்தனைகள் சிந்தையில் பதிந்தது....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா ஹா செமையா சொல்லி இருக்கீங்க, நடைமுறையில் இது உண்மைதான்...!!!

N.H. Narasimma Prasad சொன்னது…

அருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி நண்பா.

dondu(#11168674346665545885) சொன்னது…

இது பற்றி நான் இட்ட மொக்கை, பார்க்கவும் http://dondu.blogspot.com/2008/03/blog-post_06.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

செம செம..... சான்சே இல்ல.....!

Unknown சொன்னது…

கலக்கல் விளக்கமுங்க மாப்ள ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

எல்லாமே சூப்பரு

Philosophy Prabhakaran சொன்னது…

இந்த பொண்ணுங்களும் டேமேஜரும் ஒரே மாதிரி ரெண்டு பேரையும் புரிஞ்சிக்கவே முடியல...