புதன், செப்டம்பர் 14, 2011

நீங்க ஆளு எப்பிடி கண்டு பிடிக்கலாம் வாங்க!!

எனதருமை சகோதர சகோதரிகளே,

வணக்கம்

என்ன எல்லோரும் இன்னைக்கு நலம் தானே!!. இன்னைக்கும் சில விசயங்களை உங்க கிட்ட பகிர்ந்து இருக்கேன். படிச்சு பார்த்துட்டு உங்க கருத்தையும் கொஞ்சம் சொல்லுங்க.

ஒரே நேரத்தில கீழே வர்ற சம்பவங்கள் நடக்குது

1. தொலைபேசி அழைப்பு வருகிறது
2. உங்கள் குழந்தை அழுகிறது
3. உங்கள் வீட்டு கதவை யாரோ தட்டுகிறார்கள்
4. துணி மாடியில் காயப்போட்டு இருக்கீங்க மழை தூறல் போட ஆரம்பிக்கிறது
5. குடிதண்ணி பிடிக்க வைத்த குடம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது

வீட்டுல வேற பெரியவங்க யாரும் இல்ல  நீங்க மட்டும் தான் இருக்கீங்க..

இப்போ நீங்க இதை வரிசை படுத்துங்க பார்க்கலாம் எதுக்கு நீங்க முக்கியத்துவம் குடுக்குறீங்கன்னு..

பதில் அப்புறமா கமெண்ட்-ல போடுறேன்

இன்றைய க(டி)விதை

திருமணத்திற்கு முன்
மகிழ்ச்சி என்றால்
என்னவென்று உணரவில்லை!!
உணரும் போது
நேரம் கடந்துவிட்டது

குடுக்கல் வாங்கல்
உங்கள் திருமண வாழ்வை
மகிழ்ச்சியாய் வைத்து இருக்கும்
எப்போதும்
கணவன்  குடுப்பதும்
மனைவி வாங்குவதும்!!

லவ் மேரேஜ்
அரேஞ்சுடு மேரேஜ்
என்ன நல்லது?
கேட்டேன் நண்பனிடம்
நண்பன் சொன்னேன்
ஒண்ணு தற்கொலை
இன்னொன்னு கொலை
உனக்கு எது வேண்டுமோ
எடுத்துக்கோ மச்சி

விவாகரத்து ஏன் நிறையா ஆயுடுச்சு தெரியுமா?
கல்யாணம் நெறைய பண்ணிக்குறாங்க அதான்
 
"அன்பே நீ இல்லாமல் எப்பிடி நான் வாழுவேன்"
சரக்கு அடித்துக்கொண்டு சொன்ன புருஷனை பார்த்து
"பேசுறது நீங்களா இல்ல சரக்கா?" கேட்டாள் மனைவி
"நான்தான் சரக்குகிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்"

இன்றைய லொள்ளு 

எப்பிடி எல்லாம் வேலைய புடிக்கிறாங்க பாருங்க



இவரு தான் மேல இருக்க அப்ளிகேஷன்-ஐ ஃபில்-அப்  பண்ண புண்ணியவான், இவருக்கும் வேலை குடுத்து இருக்காங்க வால்மார்ட் - கலிபோர்னியால


16 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பிள்ளையை பொண்டாட்டிகிட்டே எடுக்கசொல்லுவேன், துணியை வேலைகாரிகிட்டே எடுக்க சொல்லுவேன், போனை என் பையனை எடுக்க சொல்லிட்டு தண்ணி பைப்பை திருக்கி வச்சிட்டு போயி கதவை திறப்பேன் ஹி ஹி எப்பிடி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முதல்ல குழந்தையைத்தான் தூக்குவேன்...

Unknown சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ
நன்றி அண்ணே

சொல்ல மறந்துட்டேன் வீட்டுல பெரிய ஆளு நீங்க மட்டும் தான் வேற யாரும் இல்ல...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

குழந்தையைத் தூக்கிக்கொண்டு
கதவைத் திறந்துவிட்டு
உள்ளே வந்து தொலைபேசியில் பேசிவிட்டு
நீர்க்குழாயை மூடிவிட்டு
காயப்போட்ட துணியை எடுக்கச் செல்வேன் நண்பா..

Unknown சொன்னது…

மாப்ள இது எதுக்கும் நான் சரிப்பட்டு வர மாட்டேன்....ஹிஹி!

Unknown சொன்னது…

அந்த வாலிபரின் குறும்புக்கு ஒரு ஹிஹி!

Unknown சொன்னது…

மேலே கேட்ட கேள்விக்கான விளக்கம்

1. தொலைபேசி அழைப்பு - வேலை
2. குழந்தை - உங்கள் குடும்பம்
3. கதவை தட்டுதல் - உங்கள் நண்பர்
4. துணி - உங்க பணம்
5. தண்ணீர் - உங்கள் வாழ்க்கை

என்னுடையது 2,3,1,5,4

CS. Mohan Kumar சொன்னது…

Arumai, My choice will be 5,2,3,1, 4.

Simple reason: I cant bear wastage of water any time and will close that first.

ராஜி சொன்னது…

ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

மேலே கேட்ட கேள்விக்கான விளக்கம்

1. தொலைபேசி அழைப்பு - வேலை
2. குழந்தை - உங்கள் குடும்பம்
3. கதவை தட்டுதல் - உங்கள் நண்பர்
4. துணி - உங்க பணம்
5. தண்ணீர் - உங்கள் வாழ்க்கை
>>
என் சாய்ஸ்
5,2,3,1,5 சகோ

தனிமரம் சொன்னது…

தொலைபேசி அழைப்பு -வேலை இதுதான் என் முதல் தேர்வு!

bandhu சொன்னது…

என் சாய்ஸ் 2,5,1,3,4

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாஸ்,
அதான் வந்துட்டோமில்லே...

நிரூபன் சொன்னது…

பாஸ்...எல்லாமே ஒன்னுக்கொன்று விட்டுக் கொடுக்காத விடயங்கள்..

இதில....
முதலாவது,

குழந்தை அழுதல்,
குடி தன்ணி பிடிக்க வைத்த குடம்....
வீட்டுக் கதவை தட்டுதல்
தொலைபேசி அழைப்பு,
மாடியில் காயப் போட்டு இருக்கும் துணி...

நிரூபன் சொன்னது…

இன்றைய கவிதையின் கடைசி வரிகளில்
தத்துவம் யதார்த்தமாய் வந்து விழுந்திருக்கிறது.

நிரூபன் சொன்னது…

இன்றைய லொள்ளு சூப்பர் பாஸ்..

Unknown சொன்னது…

@நிரூபன்

வணக்கம் நிரூபன் வாங்க வாங்க

வருகைக்கு நன்றி..