செவ்வாய், ஜூன் 21, 2011

எங்கே மகிழ்ச்சி

சுப்பு ஒரு கல்லூரி பேராசிரியர், மனைவியை இழந்தவர். வேலையில் இருந்து  ஓய்வு பெற்றதும் தனியாக வாழ்ந்து வருகிறார்
பழைய மாணவர்கள் எல்லாம் தங்களுடைய ஆசிரியர் சுப்புவை பார்க்க அவர் வீட்டிற்கு வந்து இருந்தனர்.

அவர்கள் எல்லோரும் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள், நல்ல வேலை, நல்ல அந்தஸ்த்து.  அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது பேச்சு அவர்களின் வேலை மற்றும் பிரச்சனைகளின் பக்கம் திரும்பியது.

அவர்களின் பேச்சின் ஊடே அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பது சுப்புவுக்கு புரிந்தது, அவர்கள் செயல்களாலேயே அவர்களுக்கு சில விஷயங்களை புரிய வைக்க சுப்பு விரும்பினார்.

"நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வர்றேன்" சுப்பு  சமையல்கட்டுக்குள் சென்றார். 

ஒரு ஜாடி நிறைய காஃபியும், கொஞ்சம் கோப்பைகளையும்  எடுத்து வந்தார்.  கோப்பைகளில் சில உயர் ரகமாகவும், சில கொஞ்சம்   சுமாராயும், சில நெளிந்தும் இருந்தது

"எல்லோரும் காஃபி எடுத்துக்குங்க .." சுப்பு சொன்னார்

எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக்கொண்டு தங்களுக்கு தேவையான காஃபியை ஊற்றிக்கொண்டனர்

இப்போது சுப்பு பேச ஆரம்பித்தார்

"உங்க கையில இருக்குற கோப்பையை எல்லாம் கொஞ்சம் கவனிங்க, எல்லாம் விலை உயர்ந்த அழகான கோப்பையை எடுத்துக்கிட்டு இருக்கீங்க, சுமாரான கோப்பையெல்லாம் கீழே இருக்கு, இது தான் ஒரு சாதாரண நிகழ்வுன்னாலும் இதுதான் உங்க பிரச்சனைகளுக்கு எல்லாம் மூலகாரணம். "

பசங்களுக்கு கொஞ்சம் குழப்பமா பார்த்தாங்க சுப்பு தொடர்ந்தார்

"நீங்க காஃபிய தான் குடிக்கபோறீங்க கோப்பையை அல்ல,  இந்த கோப்பைகள் காஃபிக்கு புது ருசிய குடுக்கபோறது இல்ல, இது அந்த காஃபியை வச்சுக்கப்போறது மட்டும் தான். ஆனாலும் எல்லோரும் நல்லா அழகா இருந்த கோப்பையை மட்டும் எடுத்துகிட்டீங்க அதுமட்டும் இல்லாம அடுத்தவங்க கோப்பையையும் கவனிச்சீங்க ஏன்னா வேற யாரும் உங்களுடையதை விட நல்லா இருக்கோன்னு உங்களுக்கு சந்தேகம் சரியா?" ன்னு கேட்டார்  

"வாழ்க்கை கூட இந்த காஃபி மாதிரி தான் உங்க வேலை,அந்தஸ்த்து எல்லாம் அந்த வாழ்க்கையை தாங்கி பிடிக்க மட்டும் தான். சில நேரங்களில் கோப்பை மேல கவனம் வச்சு காஃபியோட ருசியை மறந்துடுறோம்.    அது மாதிரி மற்றவர்களின் வேலை, அந்தஸ்தை ஒப்பிட்டு  நம்முடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியை மறந்துடுறோம். என்ன புரிஞ்சதா?" சுப்பு கேட்டார்

ஏதோ புரிந்தது போல எல்லோரும் தலை அசைத்தனர்


நீதி
மகிழ்ச்சியானவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்று இருப்பது இல்லை, பெற்றதை எல்லாம் சிறந்ததாக மாற்றிக்கொள்பவர்களே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் 

5 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

நல்லதொரு நீதி

கிடைத்ததை ஏற்றுக்கொள்வதோடு நில்லாமல்
அதை சிறந்தவையாக மாற்றிக்கொள்ளவேண்டும்
என உணர்த்தும் அழகு அருமை.

அன்பன்
மகேந்திரன்

http://ilavenirkaalam.blogspot.com/

Unknown சொன்னது…

@மகேந்திரன்

வருகைக்கு நன்றி நண்பரே..

நிரூபன் சொன்னது…

பாஸ், தங்கள் தளப் பதிவுகளைத் தவற விட்டு விட்டேன்,
மன்னிக்கவும்,

நிரூபன் சொன்னது…

மகிழ்ச்சி மன நிறைவு கொள்ளும் வகையில் அருமையான ஒரு தத்துவக் கதையினைத் தந்திருக்கிறீங்க சகோ.

Unknown சொன்னது…

@நிரூபன்

பரவாயில்லை நண்பரே,

கருத்துக்கும் நன்றி