சனி, ஜூன் 18, 2011

சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பர்

சுப்பு ஒரு  பெரிய பறவை வேட்டைக்காரர். சுப்புவிடம் ஒரு பறக்கும் நாய் கெடைச்சது, அந்த நாய் தண்ணி மேலயும் நடக்குற சக்தி இருந்தது.

அந்த நாயை எல்லா நண்பர்களுக்கும் காட்டணும்ன்னு சுப்புக்கு ஆசை, அவரும் எல்லா நண்பர்களுக்கும் விஷயத்தை சொல்லி தினமும் பறவை வேட்டைக்கு போற குளத்துக்கு வரச்சொன்னார்.

வேட்டை ஆரம்பிச்சது, சுப்பு சுட்ட வாத்தை எல்லாம் நாய் தண்ணி மேல நடந்து போயி எடுத்துட்டு வந்தது. இதை பர்த்த எல்லோருக்கும் ஆச்சரியம் அன்னைக்கு பூரா வேட்டை ஆடிட்டு எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க

சுப்புவும், குப்புவும் வீட்டுக்கு திரும்பி வந்துட்டு இருந்தாங்க.

"இந்த நாய்கிட்ட ஏதாவது வித்தியாசம் இருந்துச்சா?"   சுப்பு கேட்டார்

"ஆமா .. "  குப்பு சொன்னார்

"என்ன கவனிச்ச?"  இது சுப்பு

"உன் நாய்க்கு தண்ணியில நீச்சல் அடிக்க தெரியல" ன்னு சுப்பு சொன்னார் 

நீதி
எவ்வளவு நல்லது இருந்தாலும் சிலர் எதிர்மறையாவே யோசிப்பாங்க, அதனால உங்களைப்பத்தி எல்லாத்தையும் எப்பயும் வெளியே சொல்லாதீர்கள், சில நேரம் உங்கள் மனம் நோகும் படி சிலர் நடந்து விடலாம்.  

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பகிர்வுக்கு நன்றிகள் சகோ. !

பெயரில்லா சொன்னது…

ஒரு நல்ல விசயத்தை ரசனையுடன் நகைச்சுவை தேன் தடவி சொல்லியிருக்கிறீர்கள்

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்குறவனையும் இது மாதிரி ஆளுங்க பார்த்தா ஏன் டல்லா இருக்கீங்கன்னு கேட்பாங்க..

மதுரை சரவணன் சொன்னது…

nalla karuththu... vaalththukkal

Unknown சொன்னது…

@இக்பால் செல்வன்

நன்றி சகோ..

Unknown சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி அண்ணே...

Unknown சொன்னது…

@மதுரை சரவணன்

நன்றி நண்பரே... தொடர்ந்து பயணிப்போம்

சாகம்பரி சொன்னது…

நல்ல கதை. இது ஒருவித பர்சனாலிட்டிதான், புதுசா ஒரு கிரியேட்டிவ் வேலைசெய்யறப்ப குறைகள் கண்டுபிடிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

rajamelaiyur சொன்னது…

Good story

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹெச் ஐ வி ல மட்டும் பாசிட்டிவ் வேணாம் ஹி ஹி

நிரூபன் சொன்னது…

குதர்க்கமா யோசிக்கிறவங்க பற்றிய தத்துவக் கதை அருமை சகோ.