வியாழன், டிசம்பர் 01, 2011

தண்ணீர் தண்ணீர்

இன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர்.  தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்கும் போது எங்கோ படித்த கவிதை வரி ஞாபகம் வருகிறது "என் தாத்தா தண்ணீரை ஆற்றில் கண்டார். என் அப்பா கிணற்றில் பார்த்தார், நான் குழாயில் கண்டேன். என் மகன் பாட்டிலில் பார்க்கிறான், என் பேரன் பார்ப்பதற்கு என்ன இருக்கும்?".  இதுவரை சும்மா இருந்த கேரளாவும்,  வேற அணை கட்டியே தீருவோம்ன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு போராட்டம் உண்ணாவிரதம்ன்னு  ஆரம்பிச்சுட்டாங்க.

அவங்க சொன்ன மாதிரி செஞ்சுட்டாங்கன்னா கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நடைபெறும் விவசாயம் நக்கிக்கிட்டு போயிடும். குடிநீருக்கு அவதிப்படும் நிலையும் வரும்.  இன்னைக்கு இந்த பிரச்சனை மிகவும் தீவிரமா அணுகப்படுவதால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத சூழல் இருக்கவே செய்கிறது. 

இதுவரை காவேரியும்,பாலாறும்  மட்டுமே பிரச்சனையாய் இருந்தது, இனி முல்லைபெரியாறும். இனியும் மௌனமாய் இருந்தால் தமிழ்நிலம் பாலைநிலமாய் மாறும் என்பது கண்கூடு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை போர்த்தி இருந்த பூமி இப்போது பொட்டல் காடாய் கிடக்கிறது, ஆடுகளும் மாடுகளும் ரசாயன தீவனங்களை தின்பதால் பாலில் கூட அமிலத்தின் அளவும் அதிகமாகி விட்டன.

இனி குடிநீர் கூட சில பல மைல்கள் நடந்து சென்று எடுத்துவரும் கொடூர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் சில கிராம மக்கள். மரங்கள் நிறைந்து இருந்த தமிழக வனங்கள் இன்று வெறும் முட்புதர்களால் மூடிக்கிடப்பது வேதனை.   அந்த காலத்தில் கோயில் கட்டும் போது குளத்தையும் சேர்த்தே வெட்டினார்கள், அது  கடவுளுக்கு அபிஷேகம் செய்ய என்று புரிந்து கொண்டது நம் முட்டாள்தனம் என்றால் மிகையில்லைதானே. 

இன்று அந்த குளங்களின் நிலைதான் என்ன? கடவுள் கூட ஓடி விடுவார் ஒரு முறை அந்த நீரை வைத்து அபிஷேகம் செய்தால். குளங்கள் எல்லாம் குப்பைமேடானதிற்கும், மணல் மூடி போனதிற்கும் யார் பொறுப்பு நாம் தானே?  நம்முடைய பொறுப்பற்ற தன்மைதானே?? இனி எந்த அசோகர் வரவேண்டும் என்று நாம் காத்துக்கொண்டு இருக்கிறோம்? நம்மை சுற்றி உள்ள நீர்நிலைகளை நாம் அசுத்தம் செய்யாமல் இருந்தாலே அல்லது பாதுகாத்து வந்தாலே நமக்கு தேவையான நீர் கிடைக்குமே? 

சரி என்ன தான் பண்ணுறதுன்னு கேக்குறீங்களா? நீராதாரங்களை பெருக்குவதிலும் அதை முறையாய் பராமரித்தாலும் ஒரே தீர்வு. யாருடைய தயவும் இல்லாமல் தமிழகத்தின் நீராதாரம் இருக்க வேண்டுமானால்,  ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தமிழகத்தின் பிரதான பாசன வசதிகளான 35 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரப் பகுதிகள் பல ஆண்டுகளாகப் பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி, அவற்றை தூர் வாராமல், பல ஏரிகள் காணாமல் போய்விட்டன. பல ஏரிகளின் கரைகள் மட்டும் உள்ளன. இதன் விளைவாக, அண்மைக் காலங்களில் பெரிய அளவில் மழை பெய்தாலும், முறையாக தேக்கி வைக்க வாய்ப்பு இல்லாமல் கடலுக்குச் சென்றுவிட்டது.

ஏரி,  குளங்களை குடியிருப்பு நிலங்களாக மாற்றி வெளிநாட்டினரும், வெளிமாநிலத்தவரும் வாங்குவதைத் தடுக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்

அடுத்து முக்கியமான விஷயம் மணற்கொள்ளை, ஏறக்குறைய தமிழகத்தில் இருக்கும் எல்லா ஆறுகளிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது, இன்னும் சட்டங்கள் கடமையாக்கப்பட்டு மணற்கொள்ளை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். தொழில்வளம், வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர்கள் நிலை இவைகள் பாதிக்கப்படாமல், நிலம் மற்றும் நீர் மாசுபடுவதைத் தடுத்தல் மற்றும் மாசுபடுவதைத் தடுக்க அரசு ஆவண செய்யவேண்டும். 

மழைநீர் சேகரிப்பு, நீரைப் பயன்படுத்தும் முறையில் விழிப்புணர்வு போன்றவைகளில் அரசும் தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை செயல்படுத்தவில்லை. அவைகளும் சரிசெய்யப்பட்டு சரியான திட்டங்களும் வகுக்கப்படவேண்டும்.

காத்திருப்போம் எம் தாகம் தீரும் நாளுக்காய் !!

இன்றைய லொள்ளு

இப்பிடி ஒரு ப்ராடக்ட் வந்தா நல்லா தான் இருக்கும்


21 கருத்துகள்:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

மழை நீர் சேகரிப்பில் நாம் தான் விழிப்புனர்வுடன் இருக்க வேண்டும். நமது வீட்டில் மழை நீர் சேகரிக்க நாம் தான் பொறுப்பு. அரசு பொறுப்பாகாது.


எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

கோகுல் சொன்னது…

அசோகர் மரம நட்டார்னு வரலாற்றுல வைச்சு சொல்லி குடுக்கறது நம்மையும் அது போல நட சொல்லின்னு யாருக்கும் புரிஞ்ச மாதிரி தெரியல.
ம்.காத்திருப்போம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முல்லைப்பெரியாரில் புதிய அணை கட்டுவது கேரளாவுக்கு மின்சாரம் தயாரிப்பதற்காக என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!!

Unknown சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ அப்பறம் ஏன் இருக்குற அணை உடைஞ்சுடும்ன்னு பூச்சாண்டி காட்டுறாங்க??

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பதிவு. பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

மகேந்திரன் சொன்னது…

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்.....

அம்பாளடியாள் சொன்னது…

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்.....

இன்னும் சரியான தண்ணீர்த் தாகம் ஆரம்பிக்கவே இல்லை சகோ .
இனிமேல்தான் தெரியும் தண்ணீரின் அருமை.மிக்க நன்றி அருமையான
பகிர்வுக்கு ....

தினேஷ்குமார் சொன்னது…

தாகம்...

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நன்றி.

ராஜி சொன்னது…

காத்திருப்போம் சகோ

N.H. Narasimma Prasad சொன்னது…

நான் எனது நண்பனிடம் மழை வரும்போதெல்லாம் சொல்லும் ஒரே விஷயம், 'நீரை சேகரிக்காமல் விட்டால் என்னாகும்?' என்பது தான். உங்கள் பதிவில் இன்று அதைப் பற்றியே பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பார்ப்போம். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

கோவை நேரம் சொன்னது…

சமூக பார்வையில் நல்ல பதிவு

Yoga.S. சொன்னது…

நீர்ப் பிரச்சினை தீர ஒரே வழி நதிகள் அனைத்தும் தேசியமாவதே!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

காலத்துக்கு ஏற்ற இடுகை நண்பா.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீராதாரம் வாழ்வாதாரம்..

பாலா சொன்னது…

அரசாங்கத்தின் மெத்தனப் போக்கே இதன் காரணம். இந்த விஷயத்தில் கேரளா அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை பாருங்கள். இங்கே நடப்பதையும் பாருங்கள்.

Unknown சொன்னது…

இன்னும் என்னெல்லாம் பாக்க வேண்டி இருக்கோ சர்வேசா!

chicha.in சொன்னது…

hii.. Nice Post

For latest stills videos visit ..

www.chicha.in

www.chicha.in

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,
நல்லா இருக்கீங்களா?

தண்ணீர் பிரச்சினை தமிழகத்தில் கேரள மக்களின் புரிந்துணர்வு மூலம் இல்லாது போக வேண்டும் என்பது தான் என் ஆசை.

மணற் கொள்ளையினைத் தடுக்க அரசு தான் முழு மூச்சுடன் காவற் துறையினைச் செயற்பட வைக்க வேண்டும்!

இறுதியில் போட்டிருக்கும் காமெடி ரிமோட் சூப்பர்.

M.R சொன்னது…

சிந்திக்க வைக்கும் பதிவு

Learn online சொன்னது…

thanks for sharing this wonderful article. We are the best At&t support,at&t wirless support, Contact at&t helpline,at&t customer care How to Contact at&t wirless support