அது ஒரு கல்யாண வரவேற்பு, அபார்ட்மெண்ட்டில் இருந்த எல்லோரும் அழைக்கப்பட்டு இருந்தனர் அதில் ஒரு மனைவியை இழந்த தாத்தாவும், கணவரை இழந்த பாட்டியும் சந்தித்து கொண்டனர். இருவரும் தங்கள் நிலையை பகிர்ந்து கொண்டனர். விழா முடிந்து வெளியே வரும் போது தாத்தா கேட்டார்
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?"
கொஞ்ச நேரம் யோசித்த பாட்டி "சரி பண்ணிக்கிறேன்"
மறுநாள் காலை
"அவ என்ன சொன்னா சரின்னு சொன்னாளா இல்ல மாட்டேன்னு சொன்னாளா மறந்துட்டேனே" குழப்பத்தோடு அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார். "என்ன ஒரு ஞாபக மறதி?" தன்னைத்தானே நொந்துகொண்டே சிறிது நேரம் யோசித்தவர் பாட்டியையே கேட்டுவிடுவது என்று அவர் ஃப்ளாட் நோக்கி புறப்பட்டார்
"வாங்க வாங்க" - பாட்டி
"நேத்து நான் உங்க கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறீங்களா கேட்டப்ப சரின்னு சொன்னீங்களா இல்ல மாட்டேன்னு சொன்னீங்களா?"
"சரின்னு தானே சொன்னேன்?"
"அப்பாடி ரொம்ப நேரம் குழப்பமாவே இருந்துச்சி இப்ப சந்தோஷமா இருக்கு"
"என்னை தேடி வந்ததுக்கு தாங்க்ஸ்ங்க"
"ஏங்க?"
"இல்ல நேத்து என்கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறீங்களா கேட்டது யாருன்னு மறந்துட்டேன்"
இன்றைய சிந்தனை
1. இரண்டு முயல்களை விரட்டிச்சென்றால் இரண்டையும் இழக்க வேண்டி இருக்கும்
2. மகிழ்ச்சியாய் இருப்பது கடினம் அல்ல ஏனென்றால் மகிழ்ச்சியை உருவாக்குபவரே நீங்கள் தான்
3. நாம் வாழும் வாழ்க்கை மட்டுமே எந்த கதவை திறக்க அல்லது மூட வேண்டும் என்று முடிவு செய்யும்
4. நாம் தள்ளிப்போடும் போது வாழ்க்கை வேகமாய் நகர்கிறது
5. உங்களால் எது எல்லாம் செய்ய முடிகிறதோ அதுவே நீங்கள் ஆகிறீர்கள்
இன்றைய லொள்ளு

17 கருத்துகள்:
இன்றைய சிந்தனை சூப்பர்.,
அட.. இது நல்லா இருக்கே...
ok
இன்றைய பதிவும் கலக்கல்..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இன்றைய பதிவில் உள்ளது அனைத்தும் அருமை ,அப்ரோச்சும் அருமை ,சிந்தனையும் அருமை ,சைக்கிள் பயணமும் அருமை
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே
ஆஹா ஒரு கல்யாணம் பாதியில நின்னுருச்சே ஹே ஹே ஹே ஹே...
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் மக்கா...
பாட்டி தாத்தா கதை அருமை நகைச்சுவையாவும் இருந்துச்சு
முதல் தத்துவும் ஒரு மனதாக செயல்பட்டு அதனையே குறிக்கோளாக கொண்டு வாழ்க்கையில் பயணித்தால் முயல் என்னும் வெற்றி கிடைக்கும் என சொன்னது ரொம்பவே ரசித்தேன்
வாழ்த்துக்கள்
இதுதாங்க சூப்பர் ப்ரோபோஸல்!
அட்வான்ட்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்!அருமை!பாட்டி,தாத்தா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா இல்லியான்னு சொல்லலியே?ஹி!ஹி!ஹி!
தீபாவளி வாழ்த்துக்கள் !
100
அட நல்லா இருக்கே.... சிந்தனையும் அருமை
படித்தேன் ரசித்தேன் பாஸ்
இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
தாத்தா பாட்டி, ஞாபக மறதி நகைச்சுவை கலக்கல் பாஸ்..
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......
உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக