வியாழன், அக்டோபர் 20, 2011

இங்கே காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறது தப்பா?

பொண்டாட்டிங்க அடிக்கடி மாடிக்கிட்டே இருக்குற என்னைப்போல அப்பாவிகளுக்கு இது சமர்ப்பணம்

உங்க வீட்டுல எப்ப பார்த்தாலும் சண்டையா இருக்கா?  எங்க வீட்டுல அப்படித்தான் ரெண்டு பேரும் சேர்ந்து முழிச்சுக்கிட்டு இருக்க 2 மணி நேரத்துல முக்காமணி நேரம் சண்டை போடவும் மிச்சம் இருக்க நேரம் சமாதானப்படுத்தவும் சரியா போயிடுதே என்ன பண்றதுன்னு யோசிச்சேன், எங்கே சண்டை ஆரம்பிக்குதுன்னு ஒரு பட்டியல் போட்டேன். அவங்க அதிகமா கேக்குறது எல்லாம்

1.    என்ன யோசனையில இருக்கீங்க ?

2.    என் மேல நெஜமாவே பாசம் இருக்கா?

3.    நான் குண்டாயிட்டேனா?

4.    அந்த பொண்ணு என்ன விட அழகா இருக்காளா?

5.    நான் செத்துப்போயிட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா? 





சரி இப்ப என்ன பதில் சொன்ன எஸ்கேப் ஆகலாம்ன்னு யோசிச்சதுல கிடைச்சது தான் இது

1.    என்ன யோசனையில இருக்கீங்க ?

என்ன தான் நாம நூறு யோசனையில இருந்தாலும் "உன்னை பத்தி தான், இந்த வாரம் எங்கே வெளியே கூட்டிக்கிட்டு போகலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்". அதே மாதிரி அவங்களை கூட்டிக்கிட்டு பார்க்குக்கோ இல்ல காய் வாங்கிட்டு வராவோ செய்யுங்க அப்பறம் இந்த கேள்வி உங்களை கேக்க மாட்டாங்க.  (நாம என்ன பொய் சொல்லிட்டு தண்ணி அடிக்க போகலாம்னு அவங்க இல்லாத நேரம் யோசிக்கலாம்)

2.    என் மேல நெஜமாவே பாசம் இருக்கா?

பிடிக்கவே இல்லைன்னாலும் ஆமான்னு அடிச்சு (அவங்களை இல்லை) சொல்லிடுங்க, அப்பிடித்தான் நினைக்கிறேன் இல்ல ஆமான்னு சொன்னதான் ஒத்துக்குவியா இப்பிடி எல்லாம் பேசிடாதீங்க, அதே மாதிரி சொல்லுறப்ப கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்க சலிப்புல பேசுற மாதிரி இருந்தாலும் பாணால்


3.    நான் குண்டாயிட்டேனா?

அப்பிடி எல்லாம் இல்லம்மா அப்பிடின்னு சொல்லணும் அப்பிடி இல்லாம கொஞ்சம் குண்டு ஆயிட்டே இல்ல எத வச்சு கேக்குறே இப்பிடி எல்லாம் கேட்டா உங்க இன்சூரன்ஸ் பணம் பட்டுவாடா பண்ணுறத்துக்கு நீங்களே தேதி குறிச்சிட்டீங்கன்னு அர்த்தம்


4.    அந்த பொண்ணு என்ன விட அழகா இருக்காளா?

இந்த கேள்வி ரோட்ல போகும் போது வரும் இல்ல யாராவது புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காங்கன்னு வீட்டுல ஒளரும் போது வரும் தயவு செஞ்சு இல்லவே இல்லைன்னு தலையில அடிச்சு சத்தியம் பண்ணிடுங்க, அத விட்டுட்டு உன்னை விட அழகா இல்லைன்னு சொல்லிடாதீங்க விளைவு விபரீதமா இருக்கும் !!

5.    நான் செத்துப்போயிட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

பதில் சொல்ல முடியாத கேள்வி என்ன பதில் சொன்னாலும் ஒத்துக்க மாட்டாங்க ஹூம் அதனால வேற ஏதாவது கேள்வி கேட்டு அவங்கள திசை திருப்புறது மட்டும் தான் உங்களை காப்பாத்தும். உண்மையிலேயே உங்க மனசுல ஒரு தடவை பண்ணுண தப்பை இன்னொரு வாட்டி பண்ண மாட்டேன்ன்னு நினைக்குறது எனக்கு தெரியுது ஆனாலும் அதையும் சொல்லிதொலைச்சுடாதீங்க..  


எது எதுக்கோ நாம நம்மள / நம்ம கொள்கைகளை அட்ஜஸ்ட் பண்ணி போறோம் இல்ல காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறோம்.  பொண்டாட்டி நம்ம கூடவே இருக்கிற ஜீவன் நாளைக்கு நம்மளால எழுந்து நடக்க முடியாத போது நம்ம பீயை அள்ளி போட்டு சுத்தம் பண்ணப்போறதும் அவங்க தான் அவங்களுக்காகவும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணுறதுல தப்பு ஒண்ணும் இல்லையே??







எப்பிடி அடிச்சுக்கிறாங்க பாருங்க



17 கருத்துகள்:

Avani Shiva சொன்னது…

நல்லாத்தான் இருக்கு ஆனா சண்டை அங்கிருந்து மட்டும் தான் ஆரம்பிக்குதா

SURYAJEEVA சொன்னது…

கடைசி கேள்விய திருப்பி அவங்க கிட்டவே கேட்டு தப்பிச்சுக்குறது என் பாலிசி

செங்கோவி சொன்னது…

4-க்கு பதில் : எந்தப் பொண்ணு? யாரு? நான் பார்க்கலியே..

கோகுல் சொன்னது…

நல்லா "அனுபவி"சிருப்பிங்க போல!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யோவ் என்ன எல்லாம் உம்ம அனுபவமா...???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அனாலும் மக்கா சும்மா சொல்லப்டாது செமையா சொம்பு நசுக்கப்பட்டு, பதிவு போட்டுருக்கீங்க எங்களுக்காக ஹி ஹி நன்றி...

ராஜ நடராஜன் சொன்னது…

ரொம்ப வில்லங்கமான பதிவு போல இருக்குதே!நாலே கேள்விதான் கேட்பாங்களாக்கும்?

சென்னை பித்தன் சொன்னது…

நல்ல ஆலோசனை!

Philosophy Prabhakaran சொன்னது…

தல... நான் இந்த மாதிரி ஒரு பதிவு எழுதலாம்ன்னு நினைச்சேன்... நீங்க முந்திட்டீங்க...

K.s.s.Rajh சொன்னது…

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.........

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?

அண்ணே பொண்டாட்டிங்க அடிக்கடி மாட்டுறதா?
இல்லே பொண்டாட்டிங்க கிட்ட அடிக்கடி மாட்டுற ஆளா...

ஹே...ஹே...

நிரூபன் சொன்னது…

ஐடியாக்கள் ஒவ்வொன்றுக்குமான ஆலோசனைகள் ஓக்கே...

ஆனால் நாம சொன்னா இந்தக் காலப் பொண்ணுங்க நம்பிடுவாங்களா என்பது டவுட்டு...

நிரூபன் சொன்னது…

சுவாரஸ்யமான பதிவு பாஸ்.

Unknown சொன்னது…

மாப்ள நல்லா சொல்லி இருக்கீங்க...முடிந்த வரை எதிர் கருத்துக்கள் வரும்போது...ஒருவர் பேசும்போது அடுத்தவர் அமைதி காத்தாலே பல விஷயங்கள் ஈசியா முடிஞ்சிடும்...இங்க யாரு முதல்ல அமைதியா இருக்கறதுன்னு தான் பிரச்சினையே...எங்க வீட்ல இதை முறையா செயல் படுதுரதால பிரச்னை தலை தூக்கறது இல்ல ஹிஹி!

பாலா சொன்னது…

காரியமா வீரியமா என்று வரும்போது காரியமே பெரியது ஆகிறது. காம்ரமைஸ் ஆவதே நல்ல வழி.

ராஜி சொன்னது…

அடி ரொம்ப பலம்தான் போல சகோ

Mathuran சொன்னது…

அனுபவ பதிவோ,, ஹ ஹா