செவ்வாய், அக்டோபர் 18, 2011

சந்தோஷமா இருக்கணுமா?

உண்மையான சந்தோசம் விலை மதிக்க முடியாதது,  குறுகிய மனம் இருந்தால் அதை நம்மால் அனுபவிக்க முடியாது. பிறரின் பொய் நன்னடத்தையற்ற தன்மை நம் சந்தோஷத்தை பரிதாபம் ஆக்கிவிடக்கூடியது. நீண்ட நாள் சந்தோஷமாய் வாழ வேண்டும் என்ற நினைப்பு பிறரின் செய்கைகளால் சலித்துப்போகும் ஆபத்துக்கள் உண்டு. பொய்கள் சுயநலங்கள் நிரம்பிய ஒரு சமூகத்தில் வாழ்வது அவ்வளவு சுலபம் இல்லை.  ஆனாலும் வாழவேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு.

நாம சிலருக்கு முக்கியமானவங்களா இருக்கோம், சிலர் நமக்கு முக்கியமானவங்களா இருக்காங்க. நமக்கு  தெரிஞ்சவங்களோட சந்தோஷமும் துக்கமும் நம்மள அதிகம் பாதிக்கும்.  அடுத்தவங்க சந்தோசத்துக்கு நாம உத்திரவாதம் தர முடியாட்டியும், அவங்களோட துக்கத்துக்கு நாம காரணம் இல்லாம இருந்துக்கலாம் இல்லையா. நம்மள சுத்தி இருக்குறவங்க சந்தோஷமா இருந்தாலே நாமளும் சந்தோஷமா இருக்கலாம்.    

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ",  "சாரி தெரியாம நடந்துடுச்சு" , "இதெல்லாம் இங்கே சகஜம்"   இங்கே சொன்னது மாதிரி இன்னும் நிறைய இருக்கு. எல்லாம் தப்பு நடந்த பின்னாடி அதை சமாளிக்க சொல்லுற வாசகங்கள்.  எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு தாக்கம் இருக்கலாம்.

ஒரு மனுசனோட தாக்கத்திற்கு உட்படாதவங்க யாரும் இருக்க முடியாது அது நல்ல விஷயமாகவும் இருக்கலாம், இல்லை கெட்ட விஷயமாகவும் இருக்கலாம். ஆனா எல்லோரும் நான் நல்லவன்ன்னு காட்டிக்கிறதுக்கு நிறைய மெனேக்கெடுறாங்க ஆனா அது ரொம்ப நாள்  நிலைக்காது நிஜமாவே நல்லவங்களா இல்லாட்டி. எப்பயுமே ஒரு காரியம் நடந்தா அதுல இருக்க உண்மையை அலசி அதை மட்டும் எடுத்துக்கணும், ஏன்னா பொய்யில் மூழ்கி வாழ முயற்சி பண்ணுவதை விட வேறு பெரிய வதை வாழ்க்கையில் கிடையாது.

வாழ்க்கையில் நம்ம சந்தோஷம் நாம் எவ்வளவு உண்மையா இருக்கோங்கிறதை பொறுத்து தான் இருக்கும். பொய் தனிப்பட்ட உறவுகளிலும் சமூக உறவுகளிலும் ஒரு பெரிய புயலை வீசவே செய்கிறது. உலகில் நடந்த பெரிய யுத்தங்கள் இது போன்ற பொய்களால் தூண்டப்படவை தான்.  இதை கண்டு கொள்ளும் அறிவே நம்மை துன்பங்களில் இருந்து மீட்க்கும்

எல்லோரும் என்ன யோக்கியங்களான்னு கேக்குறவன் எப்பயுமே ஒரு யோக்கியனா இருக்க முடியாது. விளம்பரம் இல்லாமல் நாம் செய்யும் எந்த ஒரு நல்ல செயலும் கவனிக்கப்படுவதில்லைங்குறதால நாம நல்லது செய்யாம இருக்க வேணாமே? அட்லீஸ்ட் நமக்கு தெரிஞ்சவங்களுக்காவது முடிஞ்ச நல்லது செய்யலாமே?

எந்த ஒரு பொருள் மேலயும் பிறருக்கு இருக்கும் உரிமையை நாம மதிக்காத போது அந்த பொருள் மேல அவருக்கு இருக்குற உரிமை ஆபத்துக்குள்ளாகுதே. உறவுகள்ல பரஸ்பர நம்பிக்கை ரொம்ப அவசியம் அந்த நம்பிக்கை கெட்டுப்போகாதவரை அந்த உறவில் சந்தோஷம் இருக்கும், எப்ப குடுத்த வார்த்தையை காப்பாத்த முடியாம போகுதோ (என்ன காரணம் வேணுமின்னா இருக்கலாம்) அந்த உறவில் இருக்கும் சந்தோஷம் செத்துப்போகும், அது எப்படிப்பட்ட உறவாய் இருந்தாலும்.

உங்களால செய்ய முடியிற விஷயங்களை மட்டும் செஞ்சு தாரேன்னு ஒத்துக்கோங்க மத்த எதையும் ஒத்துக்காதீங்க, முடியாதுன்னு மறுத்துடுங்க. சொன்ன வார்த்தையை காப்பத்துறவங்க தான் கோபுரம் மதிக்கப்படுறாங்க மத்தவங்க எல்லாம் குப்பை மாதிரி. ஒரு தடவை வார்த்தை தவறிட்டா அந்த வாய்ப்பை இன்னொரு முறை நமக்கு கிடைக்கும்ன்னு சொல்லறதுக்கு இல்லை.

எல்லா கடமையும் சரியா செஞ்சா சந்தோஷம் உங்ககிட்டயே இருக்கும், நாம பொறக்கும் போதே நம்ம கிட்ட இருக்கிறது பெத்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை.  அதுக்கப்பறம் மற்றவர்கள், நண்பர்கள், சமுதாயம் உலகம் எல்லாமே நம்ம கடமை ஜாஸ்தி ஆயிக்கிட்டே தான் போகுது.

குழந்தையின் அற்ப முயற்சியும், புதுசா வேலைக்கு சேர்ந்தவங்க ஆலோசனையும் சட்டென புறக்கணிக்கப்படுவதும் கண்டு கொள்ளப்படாமல் போவதும் இயல்பே அதற்கும் காரணங்கள் இருக்கலாம் சரியான திட்டமிடப்படாமல் இருந்து இருக்கலாம்,  அதுவே வேறுபட்ட நியாயங்களாக உருவெடுக்கும் "என்னை கேட்டு தான் பெத்தீங்களா?"  போன்ற வெடிக்கும் நியாயங்களாக அவை மாறிவிடும அபாயம் உண்டு.  சின்ன விஷயமா இருந்தாலும் ஒரு ஊக்கம் குடுத்தா அவங்க தவறுகளை மென்மையா சுட்டிக்காட்டுனா அந்த உறவில் சந்தோஷம் இருக்கும்.

அதே மாதிரி தான்  உழைப்பும், எல்லா நேரத்திலயும் இனிமையாய் இருப்பது இல்லை ஆனாலும் சலிப்புடன் சோம்பேறிகளாய் வாழ்வதை விட உழைக்கிறது சந்தோஷம். சுறுசுறுப்பாக இல்லாதவர்கள் அதிக வேலையை சுற்றி இருப்பவர்கள் மேல் திணித்து விடுகிறார்கள். சோம்பேறிகளுடன் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம் அவங்க நம்மளையும் சோர்வடைய வச்சுடுவாங்க, முடிஞ்சா அந்த மாதிரி ஆளுங்களோட வேலை செய்யாம இருக்குறது உத்தமம்.

நம்ம பிரச்சனையை நாம் உற்று பார்க்க தவறும் போது, நமக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் பயனற்றே போகும். எனவே பிரச்சனைகள் என்று வரும் போது கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, உண்மையான நிலையினை பிரித்து பார்க்க ஆரம்பித்தால் எந்த பிரச்சனையும் எளிதில் தீர்க்க முடியும்.

எந்த ஒரு விஷயத்தையும் யார் சொன்னாலும் அதில் இருக்கும் உண்மை பொய்களை கண்டுபிடிக்க தெரிஞ்சுக்கணும், நம்ம கிட்ட சொல்லுறவாங்க சரியான்னு அவங்களுக்கே  தெரியாம நம்மகிட்ட சொல்லலாம். சிலர் தங்களோட சுயநலத்துக்கு பொய்யான தகவல்களை பரப்பிடுறாங்க.  அதோட விளைவுகளை பத்தி அவங்க கவலைப்படுறது இல்லை. நம்ம காதுக்கு வர்ற தகவல்களை எல்லாம் அப்பிடியே எடுத்துக்க ஆரம்பிச்சோம்னா நம்மள அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.

வாக்கையில முன்னேறி இருக்கிறவங்களை பாருங்க எப்பவும் அவங்க படிக்கிறதை நிப்பாட்ட மாட்டாங்க, இதுக்கு மேல படிக்கிறதுக்கு ஒண்ணும் இல்லைன்னு நினைக்கிறவங்க அதுக்கு மேல முன்னேறாம போயிடுவாங்க. படிக்கிறத படிக்கிறதோட நிப்பாட்டமா அதை தொடர்ந்து பயன் படுத்தவும் செய்யணும் அப்ப தான் படிப்பும் பலன் தரும்.

கடைசியா

மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யக்கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்களோ அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்யாதீர்கள். பிறர் எப்படி உங்களை நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்விதமே நீங்கள் பிறரை நடத்துங்கள்.  தகுதியான செயல்கள் செய்வது மட்டுமே நமக்கு மகிழ்ச்சியை தரும், எந்த செயல் நமக்கு மகிழ்ச்சியை தரும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் 

இன்றைய லொள்ளு


17 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

கற்றால் மட்டும் போதாது கசடற கற்க வேண்டும், அதன் படி நிற்க வேண்டும்... முயற்சித்து பாருங்களேன்

K.s.s.Rajh சொன்னது…

சந்தோசமாக படித்தேன் நல்ல விடயங்களைச்சொல்லியிருக்கீங்க பாஸ் பாராட்டுக்கள்

அம்பலத்தார் சொன்னது…

உபயோகமான விசயங்களாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்

rajamelaiyur சொன்னது…

photo super

rajamelaiyur சொன்னது…

நல்ல கருத்து

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்ல பகிர்வு. அருமை


நட்புடன்,
http://tamilvaasi.blogspot.com/

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான கருத்துகளை அள்ளி தெளிச்சிருக்கீங்க மக்கா சந்தோசம்...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எல்லாத்திலேயும் ஓட்டு குத்தியாச்சு...

கோகுல் சொன்னது…

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு!

நினைவுக்கு வந்துச்சுங்க!

//
நிச்சயம் சந்தோசமா இருப்போம்!

Philosophy Prabhakaran சொன்னது…

இது நல்ல டைமிங்கான பதிவு...

Dr. Butti Paul (Real Santhanam Fanz) சொன்னது…

மனதை அமைதிபடுத்தும் ஒரு இடுகை, நன்றி பாஸ்..

M.R சொன்னது…

நல்ல விசயம் பகிர்ந்துள்ளீர்கள் நண்பரே

நன்றி பகிர்வுக்கு

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

ஒன்று நினைவுக்கு வருகிறது
You must know
when to say no
and how to say no

Unknown சொன்னது…

மாப்ள அருமையான தகவல்கள்
பகிர்வுக்கு நன்றி!

குறையொன்றுமில்லை. சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. ரொம்ப நல்லா இருக்கு.

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

நல்லதோர் கட்டுரைப் பகிர்வு,
வாழ்வில் எத்தகைய வழிகளினூடே நாம் மகிழ்ச்சியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதனை விளக்கி நிற்கும் பதிவு.

லொள்ளு கலக்கல் பாஸ்...