திங்கள், அக்டோபர் 03, 2011

பெத்தவங்களை கவனிக்காம இருந்தா இப்படித்தான்

"தம்பி இனி அந்த ராட்சஸி அதான் உங்கம்மா கூட வாழ முடியாதுடா விவாகரத்து கேட்டு கோர்ட்க்கு போறேன்"  வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கும் மகனிடம் சுப்பு போனில்

"அப்பா ஏன் என்னாச்சு,  இத்தனை வருஷம் சந்தோஷமா தான் இருந்தீங்க?" - அலறினான் மகன்

"இல்லப்பா என் மனசே சரியில்லை"

"அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதீங்க, சிங்கப்பூர்-ல இருக்க தங்கச்சிகிட்ட பேசுறேன்." - டொக் ஃபோன் கட்

அடுத்த கால்

"சுகந்தி அப்பா இப்ப ஃபோன் பண்ணியிருந்தாரு விவாகரத்து வாங்கப்போறாராம், என்ன செய்யுறதுன்னு தெரியல"

"என்ன அண்ணே சொல்ற இத்தனை வயசுக்கு மேல அப்பாவுக்கு ஏன் புத்தி இப்பிடி ஆயுடுச்சு. நாம இங்க இருந்து எதுவும் செய்ய முடியாது, எப்டியாவது ஒரு 10 - 15 நாள் லீவு போட்டுட்டு அண்ணி குழந்தைகளை கூட்டிக்கிட்டு ஊருக்கு வரப்பாரு, நானும் அவரோட வந்துடுறேன் நேர்-ல பேசலாம். அப்பா கிட்ட சொல்லிடுறேன்" - டொக்

அடுத்த கால்

"அப்பா அண்ணன் ஃபோன் பண்ணி இருந்தான் ரொம்ப கஷ்டமா இருக்குப்பா"

"என்னம்மா பண்ணுறது இனி இவ கூட வாழ முடியாது அதான்"

"இல்லப்பா நாங்க லீவு போட்டு கெளம்புறோம் ஊருக்கு நாங்க வர்ற வரை எதுவும் பண்ண வேண்டாம்" - டொக்

சுப்பு மெல்ல திரும்பி மனைவியிடம் "செல்லம் உன் பிரச்சனை இப்ப சால்வ் ஆயுடுச்சு, ரொம்ப வருஷம் ஊரு பக்கம் வராத நம்ம ரெண்டு பசங்களும் தீபாவளிக்கு  ஊருக்கு வர்றாங்க!!"  

போங்கயா ஊருக்கு போயி பெத்தவங்களை பாருங்க இந்த தீபாவளிக்காவது!!

இன்றைய சிந்தனை


1.    உங்களுடைய செயல்கள் பிறரின் கனவுகளுக்கு / கற்றுக்கொள்வதற்கு / செயலை செய்வதற்கு தூண்டுகோலாய் இருந்தால் நீங்கள் தலைவர்

2.    எந்த செயலை துவங்கும் முன்னே நிஜம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுவதும் முடிக்கும் போது நன்றி சொல்லுவதும் நீங்கள் தலைவர் என்பதை பிறருக்கு உணர்த்தும்

3.    செய்து கொண்டே இருந்தாலும் செய்ய ஏதாவது மிச்சம் வைத்து இருப்பவன் அடிமை  எதுவும் செய்யாவிட்டாலும் செய்ய எதுவும் மிச்சம் வைத்து இருக்காதவன் தலைவன்

4.     தானாய் சிந்திப்பவன் எப்போதும் தலைவனாய் இருக்கிறான்

5.    தோற்றுவிடுவோம் என்று பயந்து கொண்டு இருப்பதால் தான் இன்னும் நான் தொண்டனாகவே இருக்கிறேன்






இன்றைய லொள்ளு


ஸ்டார்ட் ம்யூசிக் நௌ


15 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஒரு நல்ல நகைச்சுவைப் பதிவு..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இப்படி மிரட்டல் விடுத்தால் தான் அப்படியாவது பெற்றோரை பார்க்க மனம் வருகிறது வெளிநாடு வாழ்பவர்களுக்கு....



அழகான குட்டி கதை

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்றைய சிந்தனைகளுக்கும் ஒரு சல்யூட்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முன்பு நான் மும்பையில் இருந்து ஊர் போக லேட்டானால் எங்கப்பா அம்மாவுக்கு சீரியஸ்ன்னு சொல்லி லெட்டர் போட்டு என்னை வரவைப்பார், அப்பா மறைந்துவிட்டார், அம்மா தனியாக....எங்கள் வாழ்க்கை இன்னும் மாறவில்லை!!!!

மகேந்திரன் சொன்னது…

இன்றைய சிந்தனைகள் நல்லா இருக்கு நண்பரே...

நிரூபன் சொன்னது…

பெற்றவர்களுடனும், பிள்ளைகளுடனும் புரிந்துணர்வின்மையால் ஏற்படும் விளைவுதனை முதலாவது சம்பவம் சொல்லி நிற்கிறது.

நல்ல பகிர்வு.

இன்றைய சிந்தனை மனதிற்கு நம்பிக்கை கொடுக்கிறது.

இன்றைய லொள்ளு ஐயோ..முடியலைப்பா..

இம்புட்டுப் பேரும் சேர்ந்து ஊதினால் எப்பூடித் தாங்குறது?

SURYAJEEVA சொன்னது…

படிக்கும் பொழுதே தெரிந்து விட்டது முடிவு... வேறு ஏதாவது யோசித்திருந்தா நன்றாக இருந்திருக்கும்... இந்த வயசில விவாகரத்து சாத்தியமில்லை என்பதால் முதலிலேயே முடிவை தெரிந்து கொண்டேன்...

பெயரில்லா சொன்னது…

இன்றைய சிந்தனை அருமை ..நண்பரே...

கோகுல் சொன்னது…

கலக்கல் குட்டிக்கதை,

தானே சிந்தித்த எங்கள் தானைத்தலைவன்
வாழ்க!

செங்கோவி சொன்னது…

நல்ல கதை...கருத்து.


அவங்க ஊருக்கு வந்தப்புறம் நைனாவை நையப்புடைக்கலியா?

உணவு உலகம் சொன்னது…

இப்படில்லாம் சொல்லித்தான் வரவழைக்க வேண்டியுள்ளது, பாவம் அந்த பெற்றோர்.

அம்பாளடியாள் சொன்னது…

அழகிய சிந்தனைகளுடன் கூடிய சிந்திக்கவேண்டிய பகிர்வு அருமை!...
வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள்
என் தளத்திற்கும் .ஒரு பாடல்வரி காத்திருக்கின்றது .பிடித்தால் ஓட்டுப்
பட்டையை மறந்திராதீர்கள் .

அமைதி அப்பா சொன்னது…

பெற்றோரின் நினைவை பண்டிகைக் காலத்தில் வரவழைத்து விட்டீர்கள்.
நன்றி.

***************
எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!

இப்படி சொன்னா எப்படி?!

நன்றி.

Shrek சொன்னது…

i've already read this post somewhere a long time ago.

are you the same person? republishing it? or just a copy /paste post?

Unknown சொன்னது…

@Shrek Can you share the URL where you read it? so everybody will know about it