திங்கள், ஆகஸ்ட் 22, 2011

என்னத்தை சொல்ல இங்கே எல்லாம் டிவோர்ஸ்க்கு பின்னாடி தான் மேரேஜாம்

கருத்தரங்கு

ஒருவரின் குழப்பம்
எல்லோரின் குழப்பமாய்
பெருகும் அரங்கு

சமரசம்

தனக்கு தான் பெரிய பங்கு
கிடைத்து இருக்கிறது என்று எல்லோரையும்
நம்ப வைக்கும் வித்தை

கண்ணீர்

ஆணின் பலத்தை வீழ்த்தும்
தாரத்தின் நீராதாரம்

அகராதி - (DICTIONARY)

மேரேஜ்க்கு பின் டிவோர்ஸ் வந்தால்
அது வாழ்க்கை
டிவோர்ஸ் பின் மேரேஜ் வந்தால்
அது தான் அகராதி

கருத்தரங்கு அறை 

எல்லோரும் பேசுவார்கள்
யாரையும் கவனிக்க மாட்டார்கள்
கடைசியில் எதையும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்

பரவசம் 

ஒரு உணர்வு
இனி உணரப்போவது
இதற்குமுன் உணர்ந்திராறது

பழைமை 

ஒரு புத்தகம்
எல்லோரும் போற்றுவார்
ஒருவரும் வாசித்து இருக்கமாட்டர்

அலுவலகம் 

உங்கள் பரபரப்பான
வாழ்க்கைக்கிடையே ஓய்வு
எடுக்கும் ஒரு இடம்

புன்னகை

ஒரு வளைவான ஆயுதம்
பல விஷயங்களை நேராக்கும்

கொட்டாவி

கல்யாணமான ஆண்கள்
வாய் திறக்க ஒரு காரணம்

சிகரெட் 

புகையிலை சுற்றப்பட்ட சிறுகாகிதம்
ஒரு பக்கம் நெருப்பு
இன்னொரு பக்கம் முட்டாள்

அணுகுண்டு 


ஒரு கண்டுபிடிப்பு
எல்லா கண்டுபிடிப்புகளையும்
பயன் இல்லாமல் செய்யும்

வேதாந்தி 

வாழுமட்டும் மௌனமாய்
இருந்து விட்டு
சாகும் போது பேச நினைப்பவன்

முதலாளி
நரகத்திற்கு போ
என்பதைக்கூட
பயணத்திற்கு தயாராக சொல்வது போல
சொல்பவர்

கருமி

சாகும் போது பணக்காரனாய்
சாவோம் என்று நம்பி
வாழும் போதெல்லாம்
ஏழையாய் வாழ்பவன்

விரிவுரை 

ஆசிரியரின் குறிப்பில் இருந்து
மாணவரின் குறிப்பிற்கு பாடங்களை
கடத்தும் ஒரு கலை
மூளைக்கு இங்கு வேலை இல்லை

குற்றவாளி 

எல்லோரும் போல
சாதாரணமாய் இருப்பான்
பிடிபடும் வரை

அரசியல்வாதி 

முதலில் உங்கள் கையை குலுக்குவார்
பிறகு உங்கள் நம்பிக்கையை




9 கருத்துகள்:

நிலாரசிகன் சொன்னது…

ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துகள்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் பாபு - அத்தனையும் நன்றாகத் தான் இருக்கிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Chitra சொன்னது…

புன்னகை குறித்த கவிதை, தனித்து நிற்கிறது. மிகவும் அருமை.

மகேந்திரன் சொன்னது…

வேதாந்தி கவிதை எனக்கு பிடித்தது.....

Mohamed Faaique சொன்னது…

எல்லா கவிதையும் நல்ல இருக்கு.. கொட்டாவி, குற்றவாளி;னு எல்லாமே சூப்பர்

குறையொன்றுமில்லை. சொன்னது…

எல்லாமே நல்லா இருக்கு.

Philosophy Prabhakaran சொன்னது…

கண்ணீர் பற்றிய கவிதை கலக்கல்...

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
கவிதை நடையில் வாழ்க்கைப் பாடத்தினை அருமையாக விளக்கியிருக்கிறீங்க.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

விரிவுரை மற்றும் சிகெரட் குறித்த கவிதகள் மனதில் நிற்கின்றன நண்பா.