வியாழன், ஆகஸ்ட் 11, 2011

இது மரண நீதி

ஒரு நாள் ஒரு கழுகு மரத்து மேல சும்மா உக்காந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்துச்சு

இதை பார்த்த சின்ன முயல் ஒண்ணு, 

"நானும் உங்களை மாதிரி சும்மா உக்கார முடியுமா?"

"என் முடியாது நீ வேணும்னா சும்மா உக்காரு"

தூரத்துல இருந்து பார்த்துக்கிட்டே இருந்த நரி டபக்குன்னு முயலை பிடிச்சு தின்னுடுச்சு

நீதி 1 :    நீங்கள் சும்மா உக்கார்ந்து இருக்கணும்ன்னா ரொம்ப உயரத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டும்

==================================================================

ஒரு குருவி வானத்தில பறந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரே குளிர் அதுவும் கடும் குளிர், கொஞ்ச நேரத்துக்கு மேல குருவியாலே தாக்கு பிடிக்க முடியல, கீழே விழுந்துடுச்சு. அது ஒரு பொட்டல் கொஞ்சம் மாடுகள் அங்கே இங்கே மேஞ்சுக்கிட்டு இருந்தது. குருவி கீழே விழுந்ததை பார்த்த ஒரு மாடு அது குளிர் தாங்க முடியாம தான் கீழே விழுந்துடுச்சுன்னு புரிஞ்சுக்கிடுச்சு.

அதுக்கு உதவலாம்ன்னு அந்த குருவி மேல கொஞ்சம் சாணி போட்டுச்சு, குருவிக்கு அது கொஞ்சம் குளிருக்கு கதகதப்பா இருந்துச்சா அது கொஞ்சம் கம்முனு  இருந்துச்சு, கோணஜா நேரம் கழிச்சு குளிர் சுத்தமா குறைஞ்சுடுச்சு

குருவி குஜால் ஆயிட்டு பாட ஆரம்பிச்சது அதை தூரத்துல இருந்து கேட்ட காட்டுப்பூனை சாணிகிட்ட வந்து பார்த்துச்சு, உள்ள இருந்து தான் சத்தம் வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை தோண்டி உள்ள இருந்த குருவியை பிடிச்சு தின்றுச்சு..

நீதி 1 :  நம் மீது சேற்றை வாரி எல்லாம் வீசுபவர்கள் நம் எதிரிகள் அல்லர் 

நீதி 2 :  நம்மை இக்கட்டில் இருந்து காப்பாற்றுபவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் அல்லர்

நீதி 3 : இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்


இன்று வலைச்சரத்தில் ஹோட்டல் எம விலாஸ் - சைவம்


10 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நீதிக்கதைகள் சூப்பர் மக்கா....!!!

chitra s சொன்னது…

ok ok superb

Unknown சொன்னது…

@chitra s
எங்கே உங்க ஹா ஹா ஹா காணோம்!!??

மகேந்திரன் சொன்னது…

சரியாச் சொன்னீங்க,
இக்கட்டான சூழ்நிலையில் மௌனமே
மிகச் சிறந்த ஆயுதம்.
நீதி சொல்லும் கதை.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாழ்க்கையை சொல்லும் அழகிய நீதி கதைகள்..

வாழ்த்துக்கள்..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளவேண்டிய நீதிகள்.

சொன்னவிதம் அருமை.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

கதைகளும் நீதிகளும் சூப்பர்

வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!

பெயரில்லா சொன்னது…

அருமையான நீதிகதை

Unknown சொன்னது…

எனக்கு பிடிச்சது சும்மா இருக்கணும்னா ரொம்ப உயரத்துல இருக்கணும். அதுவும் சரிதான்.

Muthumani சொன்னது…

முதல் கதை உண்மை.
இரண்டாவது அறிவுரை.
நன்றி.