வெள்ளி, மார்ச் 25, 2011

வந்துட்டான்யா வந்துட்டான்

அண்ணே வடிவேலு அண்ணே,
நீங்க நெஜத்தில கூட வட்டச்செயலாளர் வண்டு முருகன் மாதிரி நல்லா பேசுனிங்க அண்ணே, ஆனா எல்லோரும் நீங்க பொது மேடைல கூட காமெடி பண்றீங்கலோனு நினைக்க வச்சுட்டீங்க, உங்களுக்கு ஒரு சபாஷ். 

என்ன பண்றது, உங்களுக்கு தெரியலே வழக்கமா ஓவரா உதார் விட்டு, அவங்க கிட்டே  அடி வாங்குன மாதிரி நடிச்சிருக்கீங்க. ஆனா இந்த தடவை உங்கள பேச சொன்னவங்களே அடிக்க போறாங்க மாதிரி தெரியுது, நீங்க பாட்டுக்கு மன்னிசிக்குங்க ஐயா... மன்னிசிக்குங்க ஐயா... ன்னு சொல்லிட்டு ஒபாமா வரை போயிட்டீங்க. தமிழ்நாடு தங்காதண்ணே, தாங்காது, அவரு நேத்து கட்சி ஆரம்பிசாருன்னு சொல்றீங்க நீங்க எப்ப வந்தீங்கண்ணே, அரை மணி நேரம் முன்னாடியா? அரை மணி நேரம் முன்னாடி வந்த நீங்களே ஒபாமா மாதிரி பீல் பண்ணும் போது அவரு ஏன் முதலமைச்சர்ன்னு பீல் பண்ண கூடாது?

நீங்க பாட்டுக்கு சினிமால பேசுற மாதிரி முன்ன பின்ன யோசிக்காம பேசிட்டீங்களே அண்ணே, கொஞ்சம் நெனச்சி பார்தீங்களா, நாளைக்கே நம்ம ஆளு முதலமைச்சர் ஆகி, உங்களுக்கு சிறந்த நடிகர்ன்னு விருது குடுத்தா வேணமுணு சொள்ளுவீங்களா அண்ணே? அட அத விடுங்க மனோரமா அச்சீக்கு என்ன ஆச்சுன்னு கொஞ்சம் நெனச்சி பாருங்க, அது உங்களுக்கும் நடக்காதுன்னு என்ன நிச்சயம். உங்கள தூண்டி விட்டு, அவங்க போயிருவாங்க, நீங்க என்ன பண்ணுவீங்க, தேர்தல் முடியிர வரை  உங்கள அவங்க மைண்ட் –ல வச்சிருந்தா நீங்க அதிர்ஷ்டசாலி அண்ணே.

உங்களுக்கு ஆண்டவன் நல்ல வாழ்க்கை குடுத்துருக்காருண்ணே, நீங்க பாக்கியசாலி, உங்கள சின்னப்பிள்ளையிலிருந்து  பெரியவங்க வரைக்கும் ரசிக்கிறாங்க, நீங்க எது சொன்னாலும்  கேட்டு சிரிக்க தமிழ் நாடே காத்து கிடக்கு, உங்களுக்கு ஏன் இந்த வேலை. “விநாச காளே விபரீத புத்தி” அப்பிடினு சொல்லுவாங்க அண்ணே அப்பிடி தான் உங்க நெலமையும், கொஞ்சம் யோசிச்சு செஞ்சிருக்கலாம். ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுரா மாதிரி அப்பிடி பேசுனீங்க சினிமால இப்ப அதை செஞ்சு வேற பாக்குறீங்க உங்க தில்லே தில்லு.

யாராவது நீங்க தேர்தல் விதிமுறை-ய மீறி பேசிட்டீங்க அப்பிடினு கேஸ் குடுத்தா நாளைக்கு நீங்க உள்ள களி திங்கணும். உங்கள எத்தி விட்டவங்க வெளியில இருந்து ஆறுதல் மட்டும் தான் சொல்லுவாங்க. இது அவ்ங்களுக்கு பழக்கமானது தான். அதிக பட்சம் உங்கள தியாகின்னு சொல்லுவாங்க வேற எதுவும் செய்வாங்க அப்பிடினு நீங்க நினைச்சா நீங்க பாவம்.

 உங்களுக்கும் அவருக்கும் நூறு சண்டை இருந்திருக்கலாம் அண்ணா, ஆனா இது அதுக்கான மேடையும் இல்ல அதுக்கான சமயமும் இல்ல. உங்களுக்கு அவர் மேல கோவமிருந்தா அவர்கிட்டேயே நேரா பேசியிருக்கலாம் இல்ல கோர்ட்க்கு போயிருக்கலாம்?? ஆனா அத விட்டுட்டு இப்பிடி மூன்றாந்தரமா பேசுறது எப்பிடி அண்ணே, அவரு தண்ணி அடிச்சா என்ன இப்ப, தலைவரு இலவசம் குடுக்கிறது எல்லாம் அதுல வர்ற காசு தானே அண்ணே, அப்ப அவரு கூட மக்களுக்கு நல்லது தானே பண்றாரு. இதுல என்ன கெட்டுப்போச்சு. உங்க வீட்ல யாரும் குடிக்கிறது இல்லயா அண்ணே

கடைசியா  ஒண்ணு
வாத்தியார் பாட்டு
“நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்துக்கொள்ளுங்கள்” நல்லா கேட்டு பாருங்க.

அவங்க எல்லாம் அவங்க வேலையை பாக்குறாங்க நாம நம்ம வேலையை பாப்போம் அண்ணே நமக்கு எதுக்கு இந்த ஊரு பொல்லாப்பு. உங்கள பிடிச்சவங்களே, உங்கள திட்ட நீங்களே ஒரு காரணமா இருக்கலாமா? நீங்க திட்டும் போது கூட வழப்பழத்தில ஊசி ஏத்துர மாதிரி இருக்கணும் அண்ணே. இப்பிடி சீன் படம் பார்த்த மாதிரி அருவருப்பா இருக்க கூடாதுண்ணே. அப்பறம் உங்கள சினிமால பாக்க கூட அருவருப்பா இருக்கும் அண்ணே. இதை எல்லாம் கொஞ்சம் மனசில வச்சிக்கிட்டு பேசினா நல்லா இருக்கும்.

உங்களுக்கு இதை எல்லாம் படிக்கும் போது கோவம்  வரும் யார் நீ இதைல்லாம் சொல்றதுக்கு. ஒரே ஊர்கிக்காரரு அப்பிடின்னு ஒரு பாசத்தில சொல்லிட்டேன். எங்கப்பா சொல்லுவாரு “நீயா திருத்திக்கிற வரை எதுவும் தப்பு கெடையாது”-ன்னு. சொல்றத சொல்லிட்டேன் இனி உங்க இஷ்டம்.
உங்கள் நலம் விரும்பும் உங்கள் ரசிகன்.   

1 கருத்து:

Jayadev Das சொன்னது…

\\அவரு தண்ணி அடிச்சா என்ன இப்ப, தலைவரு இலவசம் குடுக்கிறது எல்லாம் அதுல வர்ற காசு தானே அண்ணே, அப்ப அவரு கூட மக்களுக்கு நல்லது தானே பண்றாரு. \\தண்ணி போடுவது தவறென்பது வடிவேலுக்குத் தெரிகிறது, அதே சமயம் அதை விற்பதே இந்த ஆட்சிதானே, அவர்களுக்கு ஆதாரவாக பிரச்சாரம் செய்யலாமா? மேலும் எம்.ஜி.ஆர். பாடல்கள் பலவற்றைப் பாடி அதெல்லாம் கலைஞருக்கே பொருந்தும் என்கிறார், ஆனால் எம்.ஜி.ஆர். மறையும் வரை கருணாநிதி எதிர்க் கட்சியாகத்தானே [எதிரிகளாகத் தானே] இருந்தார்? எம்.ஜி.ஆர். மலையாளி, கோமாளி நடிகர் என்றெல்லாம் வசை பாடியவர் தானே இந்த கருணாநிதி? இதுவாச்சும் பரவாயில்லை, முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் ஏதோ ஒரு பகுதியில் முஸ்லீம் மாதிரியே குல்லாய் ஒன்றை போட்டுக் கொண்டு நாகூர் ஹனீபா அல்லாவைப் பற்றி பாடிய பாடல் வரிகளை பாடி அதுவும் கருணாநிதிக்குப் பொருந்தும் என்று வேறு அடித்து விடுகிறார். இறைவனுக்கு இணை வைப்பது மாதிரி பாவம் வேறொன்றும் இல்லை என்று கருதும் முஸ்லீம்களை இது முகம் சுளிக்க வைக்கும் என்பது பாவம் இந்த சினிமாக் கோமாளிக்குத் தெரியவில்லை. வேறு யாராச்சும் முதல்வராக வந்தால் ஓடிப் போய் காலில் விழும் முதல் ஆசாமி இவராகத்தான் இருப்பார். ஹா..ஹா.ஹா..