வியாழன், மார்ச் 31, 2011

நான் ரெடி நீங்க ரெடியா

நான் ரெடி நீங்க ரெடியா என கட்டை விரலை உயர்த்திகாட்டும் வயிற்றில் உள்ள சிசு

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டொன்னா சேயர் (வயது 29) இவரது கணவர் சீமன் பிஸ்கோ டொன்னா சேயர் கர்ப்பமாக இருந்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கபட்டது ஸ்கேனில் வளரும் சிசுவை பர்ஹ்த போது தன் தலை மிகவும் சிறியதாகவும் வளர்ச்சியுறாத நிலையிலும் காணப்பட்டது அதற்கு டாக்டர்கள் தேவையான மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.

சில வாரங்கள் கழித்து மீண்டும் டொன்னா பரிசோதனைக்கு சென்ற போது அதே நிலைமையே மிண்டும் நீடித்தது இதனால் தம்பதியனர் மிகவும் வருத்தம் அடைந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் டொன்னா பரிசோதனைக்கு சென்றார். ஸ்கேன் எடுத்து பார்த்த போது அவரது வயிற்றில் வளரும் அதில் 6 மாதமான அந்த பிஞ்சுக்குழந்தையின் வளர்ச்சி குறிப்பிடதக்க முன்னேற்ரம் அடைந்து இருந்தது மேலும் அந்த சிசுவின் கட்டை விரல் உயர்த்திக்காட்டியப்படி வெற்றியின் அடையாள சின்னமாக இருந்தது ஸ்கேன் படத்தில் தெரியவந்தது.



இதை பார்த்த டாகடர்களும் பெற்றோர்களும் ஆச்சரியம் அடைந்தனர். நான் ரெடி நீங்க ரெடியா என்பது போல் அந்த குழந்தை கட்டைவிரலை உயர்த்தி இருந்தது.

சூரியனை சுற்றி சூழ்ந்த பாம்பு உருவம்

விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வுகளை அடிக்கடி தனது செயற்கைகோள்கள் உதவியுடன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புகைப்படமாக வெளியிட்டு வருகிறது.


தற்போது, நாசாவின் சூரியமண்டலத்தை ஆய்வு செய்யும் ஆய்வகமான எஸ்.டி.ஒ. ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், சூரியனின் தென்பகுதியில் சூரிய இழை போன்று கிட்டத்தட்ட 4 இலட்சத்து 35 ஆயிரம் மைல்கள் தூரம் சூரியனை சூழ்ந்து ஒளிகற்றை ஒன்று காணப்படுகிறது. இந்த தொலைவானது பூமியில் இருந்து நிலவிற்கு உண்டான தூரத்தை விட இரு மடங்கு ஆகும்.

இது சூரியனை விட அதிக அடர்த்தியான நிறத்தினை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு சூரியனை ஒரு பாம்பு சூழ்ந்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அடர்த்தி கொண்ட சூரிய இழைகளில் வாயுக்கள் உள்ளன.

இது சூரியனின் வெளி வளிமண்டலம் என அழைக்கப்படும் கரோனா என்ற பகுதியில் இருந்து உருவாகிறது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி, இந்த புதிய இழை சூரிய புயலை தோற்றுவிக்கும் பலம் வாய்ந்தது அல்லது அது சூரியனுடனேயே மறுபடியும் ஒன்று சேர்ந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

புதன், மார்ச் 30, 2011

மிஸ்டர் எக்ஸ்

டாக்டர்            :     உங்களுக்கு மூளையில கட்டி வந்திருக்கு
மிஸ்டர் எக்ஸ் :     உங்கள எப்பிடி புகழுறதேன்னு தெரியலே
டாக்டர்            :     நான்  என்ன சொன்னேனு புரிஞ்சதா?
மிஸ்டர் எக்ஸ் :      நீங்களாவது எனக்கு மூளை இருக்குனு ஒத்துக்கிட்டீங்களே

டீச்சர் :    தம்பி 5 கூட்டல் 4 எவ்வளவு
மிஸ்டர் எக்ஸ் :  ஒன்பது
டீச்சர் : அப்பிடின்னா 4 கூட்டல் 5 எவ்வளவு
மிஸ்டர் எக்ஸ் : உல்டாவா கேட்டா எனக்கு தெரியாதா?!! ஆறு !!!

மிஸ்டர் எக்ஸ் : ஸார், என் பையனுக்கு விட்டமின் மாத்திரை வேணும்
அவர்             : என்ன விட்டமின் ஸார் ஏ,பி,சி யா ??
மிஸ்டர் எக்ஸ் : எதுனா குடுங்க என் பையனுக்கு ஏ,பி,சி எல்லாம் தெரியாது

நண்பர் : என்ன நண்பா நான் குடுத்த CD எப்பிடி
மிஸ்டர் எக்ஸ்: என்ன பெரிய சி‌டி குடுத்த, பயங்கரமான படம்னு பார்த்த ஒண்ணுமே வரலேயே
நண்பர்: எந்த சி‌டி-ய  எடுத்துட்டு போனே
மிஸ்டர் எக்ஸ் : "ஹெட் க்ளினர்"

மிஸ்டர் எக்ஸ் :(அழுது கொண்டே) எங்கம்மா செத்துபோயிடங்காண்ணு டாக்டர் சொல்லிட்டார்
நண்பர்:    அழதீங்க, எல்லாம் கொஞ்ச நாள்ல சரியா போயிரும்
மிஸ்டர் எக்ஸ் :(சத்தமாக அழுகிறார்)
நண்பர் : என்னாச்சு
மிஸ்டர் எக்ஸ்: என் தங்கச்சி ஃபோன் பண்ணா
நண்பர்: என்னவாம்
மிஸ்டர் எக்ஸ் : அவங்க அம்மாவும் செத்து போயிட்டாங்களாம்

உடன் பணியாற்றுபவர்: என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்,  லிப்ட்-ல வரும் போது கரண்ட் கட் ஆயிருச்சு அதன் 4 மணி நேரம் லேட்
மிஸ்டர் எக்ஸ் : பரவால்ல எனக்கு கூட அப்பிடித்தான் எஸ்காலடோர்ல வரும் போது கரண்ட் கட் 3 மணி நேரம் லேட்

கீதா

நாம் ஏன் பகவத் கீதையை படிக்க வேண்டும், நமக்கு சமஸ்கிருதம் தெரியாதே!! இருந்தும் படிப்பதன் அவசியம் என்ன வந்தது. கீழே வரும அழகிய கதையை படியுங்கள்

ஒரு ஊரில் ஒரு சிறுவன், அவனுக்கு பொழுதுபோக்கு அவனுடைய தாத்தாவுடன் தான், தாத்தா எப்போதும் கீதை படித்துக்கொண்டு இருப்பார். ஒரு முறை சிறுவன் தாத்தாவிடம் கேட்டான் நான் கீதையை படித்து பார்த்தேன், எனக்கு புரியவில்லை அதனால் நான் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.  புத்தகத்தை முடியவுடன் மறந்து விடுகிறேன். புரியாததை படிப்பதில் என்ன பிரயோஜனம் என்று  கேட்டான்.

தாத்தா அவனை தன் அருகே அழைத்து வாஞ்சையுடன் தலையை வருடி கொடுத்தார். பின் அவனிடம் ஒரு கரிச்சட்டியை கொடுத்து அருகிலிருக்கும் ஆற்றுக்கு சென்று நீர் எடுத்து வர சொன்னார் சிறுவனும் ஆற்றுக்கு போய் நீர் எடுத்துக்கொண்டு வந்தான் ஆனால் வீட்டிற்கு வரும் முன்னே நீரெல்லாம் சட்டியிலிருந்த ஓட்டை வழியாக ஒழுகி விட்டது.  வெறும் சட்டியோடு வந்த சிறுவனை மறுபடியும் முயற்சி செய்ய சொன்னார் தாத்தா. சிறுவன் மீண்டும்   முயற்சித்தான் ஆனாலும் மறு முறையும் நீரில்லை.

சில முறை முயற்சித்து விட்டு இனிமேல் முடியாது முயற்சிப்பது வீண் என்று சொன்னான், இப்போது தாத்தா சொன்னார் எனக்கு நீர் எடுத்து வருவது முக்கியமில்லை அதை விட முக்கியம் இன்னொன்று இருக்கிறது இப்போது அந்த  கொஞ்சம் பார் என்றார்  அப்போதுதான் சிறுவனும் கவனித்தான் அந்த சட்டியில் இருந்து கரி அழுக்கு எல்லாம் போய் சுத்தமாக இருந்தது.  இது தான் நான் உனக்கு சொல்ல வந்தது, கீதை உனக்கு புரிய வில்லை என்றாலும் நீ நினைவில் வைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நீ உள்ளும் புறமும்   தூய்மை அடைகிறாய். அதுதான் கீதையின் சிறப்பு, மனித   குலத்துக்கு கிருஷ்ணன் குடுத்த பாடம்.

இது உங்களுக்கு பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு சொல்லவும்

திங்கள், மார்ச் 28, 2011

18+ வயது வந்தோருக்கு மட்டும்

தேர்தல் நெருங்கிவிட்டது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள். வேட்பு மனு தாக்கலும் தமிழகத்தில் முடிந்து விட்டது.  நாம் செய்ய வேண்டியது, நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று சரி பார்துக்கொள்ளுங்கள்.  http://www.elections.tn.gov.in/eroll/


பிறகு உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை தேடி எடுத்துக்கொள்ளுங்கள், அது இல்லாதவர்கள் ஓட்டு ஸ்லிப் எடுத்துக்கொள்ளவும்.  இந்த முறை தேர்தல் ஆணையம் ஓட்டு ஸ்லிப் கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார்கள் அதை அத்தாட்சியாக எடுதுக் செல்லாம்.


பெரும்பாலானவர்களுக்கு யாருக்கும் ஓட்டுப் போடுவதில் விருப்பம் இல்லை போலும். அதனால் 49ஓ படிவத்தை பயன்படுத்தப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இது பல தவறான செயல்கள் தொடர்வதற்கும் நல்ல விஷயங்கள் நடக்காமலே போவதற்கும் தான் வழிவகுக்கும் என்பது என் அபிப்ராயம்.


49ஓ படிவம் பயன்படுத்த நினைப்பதற்கு காரணம், அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வேட்பாளர்களின் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே. ஆனால், இவர்களை தவிர்த்து எல்லாத் தொகுதியிலுமே பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் சுயேட்சையாக களத்தில் இருப்பார்கள்.


அவர்களில் நிச்சயம் ஒருவராவது நாம் எதிர்பார்க்கும் தகுதியுடன் இருப்பார். அதாவது, நன்கு படித்தவராகவும், அந்த பகுதியின் மக்கள் நலனிலும் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டவராகவும், எளிமையானவராகவும், எளிதில் சந்தித்து நமது தேவைகளை பூர்த்தி செய்ய கூடியவராகவும் இருப்பார். அவருக்கு உங்கள் வாக்கை பதிவு செய்யலாமே.

நீங்கள் ஒரு சுயேட்சைக்கு வாக்களிப்பதன் மூலம் அவருக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று மட்டும் காட்டுவதில்லை, களத்தில் நிற்கும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் உங்கள் வாக்கை பதிவு செய்திருக்கிறீர்கள் என காட்ட முடியும்.

அதன் மூலம் வரும்காலத்தில் அரசியல் கட்சிகளும் தற்போது அதிக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரைப் போன்ற தகுதியில் இருப்பவருக்கு வாய்ப்பளிக்க முன்வருவார்கள். இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்ல, அவ்வாறு செய்வதன் மூலம் மேலும் பல நல்லவர்கள், அதாவது நாம் எதிர்பார்ப்பது போன்ற தகுதி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் மூலம் இந்த தேசத்தின் தலை எழுத்தையே மாற்ற முடியும்.

அதை விட்டு 49ஓ படிவம் பயன்படுத்தி ஒட்டு மொத்தமாக வாக்களிப்பதை புறக்கணித்தால் நம் விருப்பம் என்ன என்பதை எப்படி உணர்த்த முடியும்? நாம் எது போன்ற வேட்பாளரை விரும்புகிறோம் என்பதை எப்படி வெளிப்படுத்த முடியும்?.

ஆகவே, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்கும் எதாவது ஒரு வேட்பாளருக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயகக் கடமையை செய்யுங்கள். 49ஓ படிவம் பயன்படுத்துவதற்கு முன் நன்றாக யோசியுங்கள். முடிந்தால் தவிர்க்கப் பாருங்கள்.

ஊழல்

ஊழல் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று நூறு முன்னணி உலக நிறுவனங்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது.



அரசியல்வாதிகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் இடையே அதிகரிக்கும் நெருக்கமானது நாட்டுக்கு பல பில்லியன் டாலர்கள் வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக கேபிஎம்ஜி என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

"நாளாந்த தேவைகளுக்காக சிறிய அளவில் லஞ்சம் கொடுப்பது என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது" என்று கூறும் கேபிஎம்ஜியின் அறிக்கை அதே நேரம் பல பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய ஊழல்களும் தற்போது சகஜமாகிவருவதாகத் தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு, ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை போன்ற துறைகளில் ஊழல் அதிக அளவு இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்றும் இதன் காரணமாக வெளிநாட்டு நேரடி முதலீடு குறையவும் வாய்ப்புள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.


செய் எதுவும் செய்

நாமெல்லாம் தேநீர் பை போன்றவர்கள்,
ஏனெனில் சூடு நீரில் மூழ்கடிக்கப்படும் போது
அதன் திடம்  முழுமையாய் தெரியும்,
அது போலே துன்பங்கள் உங்களை அழுத்தும் போது
நீங்கள் கடவுளின் பிரியமான தேநீர் கோப்பை
என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

கடவுள் வாக்களிக்கவில்லை
உங்களுக்கான வானம் எப்போதும் தெளிவாய்
மேகமில்லா சூரியன்
துன்பன்மில்லா இன்பம்
வலியில்லா அமைதி

மாறாக

உங்களுக்குரிய வலிமை
வேலை செய்பவர்களுக்கு ஓய்வு
வழிக்கான ஒளி
பெரிய கருணை
சாகாத அன்பு

கடவுள் நாளை உன்னிடம் என்ன கேட்பார்
என்ன கனவு கண்டாய் என்றா?
என்ன நினைத்தாய் என்றா?
என்ன திட்டம் போட்டாய் என்றா?
என்ன அடைந்தாய் என்றா?

இல்லை நண்பா
என்ன செய்தாய் என்று மட்டுமே

இந்த உலகம் அபாயகரமாக மாறியது யாரால்
பிறருக்கு துன்பம் செய்பவராலா?
இல்லை இல்லவே இல்லை
ஆனால் செய்பவரை கண்டும் ஒன்றும் செய்யாமல்
இருப்பவரால் மட்டுமே

எனவே செய் நல்லது மட்டுமல்ல
தீயதை பொசுக்கும் எதுவும் செய்

வெள்ளி, மார்ச் 25, 2011

தேர்தல் வருது

இந்தா வருது அந்தா வருதுன்னு தேர்தல் கிட்டே வந்துருச்சி. எல்லோரும் கெளம்பீட்டாங்க அவங்க அவங்க படையோட. ஆனாலும் துரதிஷ்டம் யாரை விட்டது. (நான் மக்களைச் சொன்னேன்). இந்த தடவையும் இலவசம்-ன்னு பெரிய லிஸ்ட் எல்லா பக்கமிருந்தும்.

வீடு மட்டும் இருந்தா போதும் போல இருக்கு பொண்ணு வீட்டு சீதனம் மாதிரி மிக்ஸி, கிரைண்டர்-ல இருந்து பண்டம் பாத்திரம் வரை கவர்மெண்ட் கொடுக்குமாம்.

கொல்லையில போக யார் காச எடுத்து யாருக்கு குடுக்க போறீங்க. வருஷம் பூரா நாக்கு தள்ளி ஒரு நாளைக்கு 12 / 14 மணிநேரம் வேலை பார்த்து வர்ற சம்பளத்தில கரெக்ட்-அ வரி கட்டி (கள்ள கணக்கு கட்ட முடியாது முதலாளி விட மாட்டாரு, ஏன்னா நான் கட்டாலேன்ன அவருக்கு ஆப்பு) கையும் வாயும் பத்தாம வாழ்ந்து கிட்டு இருக்கோமே நம்மள மாதிரி மாச சம்பளக்காரங்க காச எடுத்து இந்த இலவசம் எல்லாம் செய்ய போறாங்க. இது வரைக்கும் இப்பிடிதான் செஞ்சாங்க. இனிமேயும் இப்பிடிதான்.

சரி குடுக்கிறது தான் குடுக்கிறாங்க கொஞ்சம் வித்தியாசமா குடுக்கிறங்களா? எல்லார் வீட்டிலேயும் இருக்கிறது தானே

கீழே இருக்கிற மாதிரி

    * இலவச கல்வி - எது வேண்டுமானாலும் படிக்கலாம் (எம்‌பி‌பி‌எஸ் / பி‌எல்/எம்‌பி‌ஏ/எம்‌சி‌ஏ/பி.எச்‌டி)
    * கட்டாய கல்வி இளநிலை பட்ட பதிப்பு வரை
    * கட்டாய தொழில் பயிற்சி
    * தொழில் தொடங்க சுலப வட்டி இல்லா கடன் திட்டம்
    * ஏற்றுமதிக்கு 100% வரி திரும்ப பெரும் சலுகை
    * பெட்ரோல்-க்கு மறைமுக வரி சலுகை அதாவது 10% முதல் 20% வருமான வரி விலக்கு (வீட்டு வாடகை படி மாதிரி)
    * 60 வயசுக்கு மேலே எல்லோருக்கும் பென்ஷன் மாதம் ரூ3000 முதல் ரூ 5000 வரை ஊருக்கு ஊரு மாறும் (இலவச பாங்க் அக்கவுண்ட் அக்கவுண்ட் இல்லாதவங்களுக்கு)
    * 27 வயது வரை வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு உதவித்தொகை ரூ 2000

இப்பிடி புதுமை-யா எதுனா குடுத்தா மாச சம்பளகாரங்க ஓட்டு பூராம் அள்ளிரலாம்

வந்துட்டான்யா வந்துட்டான்

அண்ணே வடிவேலு அண்ணே,
நீங்க நெஜத்தில கூட வட்டச்செயலாளர் வண்டு முருகன் மாதிரி நல்லா பேசுனிங்க அண்ணே, ஆனா எல்லோரும் நீங்க பொது மேடைல கூட காமெடி பண்றீங்கலோனு நினைக்க வச்சுட்டீங்க, உங்களுக்கு ஒரு சபாஷ். 

என்ன பண்றது, உங்களுக்கு தெரியலே வழக்கமா ஓவரா உதார் விட்டு, அவங்க கிட்டே  அடி வாங்குன மாதிரி நடிச்சிருக்கீங்க. ஆனா இந்த தடவை உங்கள பேச சொன்னவங்களே அடிக்க போறாங்க மாதிரி தெரியுது, நீங்க பாட்டுக்கு மன்னிசிக்குங்க ஐயா... மன்னிசிக்குங்க ஐயா... ன்னு சொல்லிட்டு ஒபாமா வரை போயிட்டீங்க. தமிழ்நாடு தங்காதண்ணே, தாங்காது, அவரு நேத்து கட்சி ஆரம்பிசாருன்னு சொல்றீங்க நீங்க எப்ப வந்தீங்கண்ணே, அரை மணி நேரம் முன்னாடியா? அரை மணி நேரம் முன்னாடி வந்த நீங்களே ஒபாமா மாதிரி பீல் பண்ணும் போது அவரு ஏன் முதலமைச்சர்ன்னு பீல் பண்ண கூடாது?

நீங்க பாட்டுக்கு சினிமால பேசுற மாதிரி முன்ன பின்ன யோசிக்காம பேசிட்டீங்களே அண்ணே, கொஞ்சம் நெனச்சி பார்தீங்களா, நாளைக்கே நம்ம ஆளு முதலமைச்சர் ஆகி, உங்களுக்கு சிறந்த நடிகர்ன்னு விருது குடுத்தா வேணமுணு சொள்ளுவீங்களா அண்ணே? அட அத விடுங்க மனோரமா அச்சீக்கு என்ன ஆச்சுன்னு கொஞ்சம் நெனச்சி பாருங்க, அது உங்களுக்கும் நடக்காதுன்னு என்ன நிச்சயம். உங்கள தூண்டி விட்டு, அவங்க போயிருவாங்க, நீங்க என்ன பண்ணுவீங்க, தேர்தல் முடியிர வரை  உங்கள அவங்க மைண்ட் –ல வச்சிருந்தா நீங்க அதிர்ஷ்டசாலி அண்ணே.

உங்களுக்கு ஆண்டவன் நல்ல வாழ்க்கை குடுத்துருக்காருண்ணே, நீங்க பாக்கியசாலி, உங்கள சின்னப்பிள்ளையிலிருந்து  பெரியவங்க வரைக்கும் ரசிக்கிறாங்க, நீங்க எது சொன்னாலும்  கேட்டு சிரிக்க தமிழ் நாடே காத்து கிடக்கு, உங்களுக்கு ஏன் இந்த வேலை. “விநாச காளே விபரீத புத்தி” அப்பிடினு சொல்லுவாங்க அண்ணே அப்பிடி தான் உங்க நெலமையும், கொஞ்சம் யோசிச்சு செஞ்சிருக்கலாம். ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுரா மாதிரி அப்பிடி பேசுனீங்க சினிமால இப்ப அதை செஞ்சு வேற பாக்குறீங்க உங்க தில்லே தில்லு.

யாராவது நீங்க தேர்தல் விதிமுறை-ய மீறி பேசிட்டீங்க அப்பிடினு கேஸ் குடுத்தா நாளைக்கு நீங்க உள்ள களி திங்கணும். உங்கள எத்தி விட்டவங்க வெளியில இருந்து ஆறுதல் மட்டும் தான் சொல்லுவாங்க. இது அவ்ங்களுக்கு பழக்கமானது தான். அதிக பட்சம் உங்கள தியாகின்னு சொல்லுவாங்க வேற எதுவும் செய்வாங்க அப்பிடினு நீங்க நினைச்சா நீங்க பாவம்.

 உங்களுக்கும் அவருக்கும் நூறு சண்டை இருந்திருக்கலாம் அண்ணா, ஆனா இது அதுக்கான மேடையும் இல்ல அதுக்கான சமயமும் இல்ல. உங்களுக்கு அவர் மேல கோவமிருந்தா அவர்கிட்டேயே நேரா பேசியிருக்கலாம் இல்ல கோர்ட்க்கு போயிருக்கலாம்?? ஆனா அத விட்டுட்டு இப்பிடி மூன்றாந்தரமா பேசுறது எப்பிடி அண்ணே, அவரு தண்ணி அடிச்சா என்ன இப்ப, தலைவரு இலவசம் குடுக்கிறது எல்லாம் அதுல வர்ற காசு தானே அண்ணே, அப்ப அவரு கூட மக்களுக்கு நல்லது தானே பண்றாரு. இதுல என்ன கெட்டுப்போச்சு. உங்க வீட்ல யாரும் குடிக்கிறது இல்லயா அண்ணே

கடைசியா  ஒண்ணு
வாத்தியார் பாட்டு
“நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்துக்கொள்ளுங்கள்” நல்லா கேட்டு பாருங்க.

அவங்க எல்லாம் அவங்க வேலையை பாக்குறாங்க நாம நம்ம வேலையை பாப்போம் அண்ணே நமக்கு எதுக்கு இந்த ஊரு பொல்லாப்பு. உங்கள பிடிச்சவங்களே, உங்கள திட்ட நீங்களே ஒரு காரணமா இருக்கலாமா? நீங்க திட்டும் போது கூட வழப்பழத்தில ஊசி ஏத்துர மாதிரி இருக்கணும் அண்ணே. இப்பிடி சீன் படம் பார்த்த மாதிரி அருவருப்பா இருக்க கூடாதுண்ணே. அப்பறம் உங்கள சினிமால பாக்க கூட அருவருப்பா இருக்கும் அண்ணே. இதை எல்லாம் கொஞ்சம் மனசில வச்சிக்கிட்டு பேசினா நல்லா இருக்கும்.

உங்களுக்கு இதை எல்லாம் படிக்கும் போது கோவம்  வரும் யார் நீ இதைல்லாம் சொல்றதுக்கு. ஒரே ஊர்கிக்காரரு அப்பிடின்னு ஒரு பாசத்தில சொல்லிட்டேன். எங்கப்பா சொல்லுவாரு “நீயா திருத்திக்கிற வரை எதுவும் தப்பு கெடையாது”-ன்னு. சொல்றத சொல்லிட்டேன் இனி உங்க இஷ்டம்.
உங்கள் நலம் விரும்பும் உங்கள் ரசிகன்.   

வியாழன், மார்ச் 24, 2011

லஞ்சம் தவிர்!!!

நம்ம “தெரியாது  சாமி” பிரதமர் புதுசா ஏதோ ஒரு ஒப்பந்தத்தில கையெழுத்து போட்டு இருக்காராம்.

அது என்னான,

எங்க நாட்டுல இனிமே ஊழல் அப்பிடினு ஒரு வார்த்தை கூட இருக்காது. யாராவது செய்யனுமினு நினைச்சா புருட சாரி கருட புராணதில வர்ற தண்டனை எல்லாம் கொடுப்போமுன்னு சொல்லியிருக்காரு.

அவரு அப்பிடிதான் காமெடி பண்ணுவாரு, ஆனா யாரும் கண்டுகிட மாட்டாங்க, ஏன்னா சொல்லக்கூடாது, 

அரசியல்ல இதெல்லாம் சகஜம். சரி அவரு கையெழுத்து போட்டாரு,  என்ன பண்ண சொல்லேர்ன்னு கேக்குறீங்களா? கீழே லிங்க் இருக்கு கொஞ்சம் படிச்சு பாருங்க, புடிச்சிருந்தா உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் சொல்லுங்க. இப்ப நான் சொன்ன மாதிரி.