வியாழன், நவம்பர் 10, 2011

இது ஒரு காதல் கதை

அது ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதிவேகமாய் மோட்டார் பைக்கில் குமார் அவன் பின்னால் கவிதா அவன் காதலி  

"டேய் மெதுவா போ எனக்கு பயமா இருக்கு."  சற்று அதட்டலான குரலில் சொன்னாள் கவிதா

"100 கிமீ எல்லாம் ஒரு வேகமா? எல்லாம் ஒரு த்ரில் தான் கொஞ்சம் அனுபவி"  சொன்னபடியே இன்னும் வேகத்தை கூட்டினான் குமார்

"சொன்னா கேளு மெதுவா போ, எனக்கு பயமா இருக்கு" - இறுக்கி கட்டிக்கொண்டபடி சொல்லிக்கொண்டே வந்தாள்.    

கொஞ்ச நேரத்தில்

"செல்லம் இந்த ஹெல்மெட் இடைஞ்சலா இருக்கு. இதை கழட்டி நீ மாட்டிக்கவேன்"  வண்டியின் வேகத்தை குறைக்காமல் கவிதாவிடம் சொன்னான்.

"ஓட்டுறவங்க தானே ஹெல்மெட் போடணும்?"

"சொன்னா கேளு இந்த ஹெல்மெட்டை நீ மாட்டிக்க"

தொடர்ந்து குமார் வற்புறுத்தியதால் ஹெல்மெட்டை கழட்டி தன் தலையில் மாட்டிக்கொண்டாள் கவிதா

மறுநாள் காலை தினசரியில்

"தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள் ஆனது. வண்டியின் பிரேக் உடைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். பின்னால் அமர்ந்து இருந்த பெண் பலமான காயங்களுடன் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைக்குப்பின் கண் விழித்தார்."

உண்மையில், வண்டியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறை உணர்ந்தவுடனே அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன்னுடைய ஹெல்மெட்டை கழட்டி கவிதாவை மாட்டிக்கொள்ள வற்புறுத்தி இருக்கிறான் குமார்.       


 இது குடிக்காரர்களுக்கு மட்டும்

1.    நீங்க பாக்குற எல்லாமே கொஞ்சம் சிதறலா தெரியுதா அப்ப உங்க கிளாஸ் இருந்த சரக்கு தீர்ந்துடுச்சுன்னு அர்த்தம். அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகுங்க. 

2.    கால்ல ஏதோ சில்லுனு படுதா ஈரமா ஆகுதா அப்ப நீங்க கிளாஸை தலை கீழா வச்சு சரக்க ஊத்திக்கிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம். திருப்பி வைக்கணும்

3.    நீங்க பார்த்துக்கிட்டு இருக்கிற சுவத்துல நிறைய வெளிச்சமா இருக்கா? அப்ப நீங்க தரையில கிடக்கீங்கன்னு அர்த்தம்.

4.    தரை நழுவுற மாதிரி இருக்கா அப்ப உங்களை யாரோ தர தரன்னு வெளியே இழுத்துட்டு போறாங்கன்னு அர்த்தம்.

5.    நீங்க இருந்த ரூம் ஆடுற மாதிரி இருக்கா? உங்களை சுத்தி கொஞ்சம் பேரு வெள்ளை டிரெஸ் போட்டு இருக்காங்களா? அப்ப நீங்க ஆம்புலன்ஸ்-ல இருக்கீங்கன்னு அர்த்தம்.

மேலே சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குற அளவு மட்டும் குடிங்க. உங்களுக்கு நல்லது  இல்லாட்டி மேலே இருக்கிறது எல்லாம் நடக்கும். 

இன்றைய கடி 

"முடியாது என்கிற வார்த்தை என் அகராதியில் இல்லை" - நெப்போலியன்.
இப்ப சொல்லி என்ன ஆகப்போகுது, வாங்குறதுக்கு முன்னாடியே செக் பண்ணி வாங்கி இருக்கணும் 

இன்றைய சிந்தனை

1.    இதுவரை உங்களிடம் இல்லாத பொருள் வேண்டும் என்று நினைத்தால் இதுவரை நீங்கள் செய்யாத செயலை செய்யுங்கள் 

2.    வாழ்க்கை எங்கே உங்களை அழைத்துச்செல்கிறதோ அங்கெல்லாம் போகாதீர்கள், நீங்கள் போக விரும்பிய இடத்திற்கு வாழ்க்கையை அழைத்துச்செல்லுங்கள் 

இன்றைய லொள்ளு


18 கருத்துகள்:

ராஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராஜி சொன்னது…

வாழ்க்கை எங்கெல்லாம் அழைத்து செல்கிறதோ அங்கெல்லாம் போகாதீர்கள். நீங்கள் போக வேண்டிய இடத்துக்கு வாழ்க்கையை அழைத்து செல்லுங்கள்
>>>
வாழ்க்கைக்கு தேவையான புத்திமதி. பகிர்விற்கு நன்றி சகோ

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கதை செம டச்சிங்...

ஏதோ விழிப்புணர்வு கதைன்னு நினைச்சேன்...

கடைசியில் தன் காதலிக்காக தன் ஊயிரை ஈந்து அசத்தியிருக்கிறார் நாயகன்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நெப்போலியை வச்சே கடியா..!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்றை லொள்ளும் சூப்பருங்க...
எல்லாம் விவரமாத்தாங்க இருக்குங்க...

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான கதை
பின் குறிப்பு அதைவிட அருமை
தொடர வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் சொன்னது…

இந்த குடிகாரனுங்க மேட்டர்.. ஹீ.ஹீ

சக்தி கல்வி மையம் சொன்னது…

அந்த கதையின் முடிவு எதிர்ப பார்க்காதது..

மகேந்திரன் சொன்னது…

இன்றைய சிந்தனை மனத்தைக் கவர்ந்தது...
வாழ்வியல் தத்துவம்...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

கதையில் கடைசி பத்தி செம டச்.

M.R சொன்னது…

நிறைய விசயங்கள் ,அந்த சிந்தனை அருமை

கோகுல் சொன்னது…

கதை-நச்-இதுவல்லவோ காதல்!

குடிகாரர்களுக்கு மட்டும்-கலக்கல் யோசனைகள்,பின்பற்றினால் தேவலாம்

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாஸ்,
குறுங் கதை, அருமையாக இருக்கிறது.
காதலிக்காக தியாகம் செய்த இளைஞனின் நிலையினை அழகுறச் சொல்லி நிற்கிறது கதை!

நிரூபன் சொன்னது…

ஏனைய விடயங்களும் அசத்தல்.

முடியாது என்கிற வார்த்தையின் பின்னணி செம டச்சிங்.

K.s.s.Rajh சொன்னது…

மனதை வருடும் கவிதை பாஸ்...ஏனையை பகிர்வுகளும் அருமை

பெயரில்லா சொன்னது…

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

மாப்ள அந்த குடிகாரர் விஷயம் தூக்கல்ய்யா ஹிஹி!

N.H. Narasimma Prasad சொன்னது…

காதல் கதையும் அருமை, குடிகாரர்களுக்கான அறிவுரைகளும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.