இன்றைய கவிதை
புல்வெளியில் நடக்கும் போது
முள் குத்தியது நெஞ்சில்
என்ன செய்வேன்
மூச்சில் அடிக்கிறது புயல்
கண்ணிலோ பெருமழை
நெஞ்சில் எரிமலை
பூமியின் சுழற்சி கால்களில்
என் பிரியமானவளுடன்
சிறு சண்டை வரும் போதெல்லாம்
எல்லாம் பஞ்ச பூதங்களையும்
ஒரு சேர அனுபவிக்கிறேன்
முகத்தில் கீறி இருந்தாலும்
நொந்து போயிருக்க மாட்டேன்
மனதில் அல்லவா கீறி விட்டாள்
என் மீதான
அவள் காதலை
அவளுக்கு உணர்த்தும்
இனி வரும்
நாளெல்லாம்
இன்றைய சிந்தனை
1. இன்றைய நாம் நேற்றைய எண்ணங்களின் மிச்சம், நல்ல நாளை இன்றைய நல்ல எண்ணங்கள் மூலமே
2. விழித்து இருக்கும் போது நீங்கள் செய்த தவறுகளை எண்ணி பாருங்கள் உறக்கத்தில் இருக்கும் போது பிறருடைய தவறுகளை எண்ணி பார்க்கலாம்
3. வாழ்க்கை எளிமையானது ஆனால் எளிதானது அல்ல
4. நாம் பிறக்கும் போது உடன் வந்தது ஈரம், நிர்வாணம் மற்றும் பசி
5. நாம் வாழும் வாழ்க்கை முள் செடியின் மேல் இருக்கும் தேனை நக்குவது போல் தான் பல சமயம் இருக்கிறது
6. எங்கே மகிழ்ச்சி என்று தேடிக்கொண்டு இருந்தால் உங்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது
7. செல்வம் இல்லாமல் போகலாம் ஆனால் வாழ்க்கை இருக்கும்
8. எல்லோர் வாழ்விலும் சொல்லமுடியாத ஒரு ரகசியம், மாற்றமுடியாத ஒரு பிழை, அடைய முடியாத ஒரு கனவு, மறக்க முடியாத ஒரு காதல் இருக்கும்.
9. வாழ்க்கை புத்தகத்தில் கேள்விகள் மட்டுமே உண்டு பதில் இருப்பதில்லை
10. வாழ்க்கையில் வெற்றி பெற நிறைய வேலை செய்யணும், நிறைய விளையாடணும் அப்பறம் வாயை மூடிக்கிட்டு இருக்கோணும்.
இன்றைய லொள்ளு
16 கருத்துகள்:
சூப்பர்...
/////
என் பிரியமானவளுடன்
சிறு சண்டை வரும் போதெல்லாம்
எல்லாம் பஞ்ச பூதங்களையும்
ஒரு சேர அனுபவிக்கிறேன்
///////
காதலுக்குள் சிறு சண்டையென்றாலும் இப்படித்தான்...
எதார்த்தமான வரிகள்...
//////////
/////
விழித்து இருக்கும் போது நீங்கள் செய்த தவறுகளை எண்ணி பாருங்கள் உறக்கத்தில் இருக்கும் போது பிறருடைய தவறுகளை எண்ணி பார்க்கலாம்
//////
அழகிய சிந்தனை..
தன்னுடைய தவறுகளை உடனே சரிசெய்து விட்டால் உலகில் எல்லாம் சரியாகிவிடும்....
வித்தியாசமான சிந்தனையில் ஒரு கவிதை.. அருமை..
லொள்ளு சூப்பர்..
கவிதை அருமை
வித்தியாசமான சிந்தனை துளிகள்
சூப்பர் கவிதை அருமை நண்பா
வாயை மூடிகிட்டு இருக்கணும்//
ஹா ஹா ஹா ஹா இதுதான் சூப்பர் ஹா ஹா ஹா ஹா...
கவிதை அருமை மக்கா...!!!
உணர்வுத் தவிப்பின்
கண்ணாடிக் கவிதை
அருமை.
இன்றைய சிந்தனைகள் நல்லா இருக்கு நண்பரே.
இனிய இரவு வணக்கம் பாஸ்,
மனதில் வலியைத் தாங்கி,
காதலின் மகிமையினை உணர்ந்து கொண்ட ஜீவனின் உணர்வுகளைக் கவிதை சொல்லி நிற்கிறது.
இன்றைய சிந்தனை கலக்கல் பாஸ்.
லொள்ளும் அசத்தல்..
குடியிருக்கும் அறையை தானே கீற முடியும்.. அதாவது பிராண்ட முடியும்
கடைசியா சொன்னிங்க பாருங்க!அப்படி யாரும் இருந்துட்டா பிரச்சனையே இருக்கிறது போங்க!
என்ன வாழ்கையில் சுவாரஸ்யம் கொஞ்சம் கொறஞ்சு போய்டும்.
இன்றைய * நல்லாயிருந்தது நண்பரே...
பத்தாவது சிந்தனை சூப்பர்.
அந்த பூதம் சண்டை போட்டால் பஞ்ச பூதமா... ம்ம்ம் கலக்குங்க...
லொள்ளு படம் சூப்பர்.
கவிதைகள் இன்னும் மெருகேற வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக