திங்கள், ஜூன் 06, 2011

காந்தி தேசமே

இன்னைக்கு நானும் ஒரு அரசியல் பதிவு எழுதணும்ன்னு ஒரு வெறியோட ஆஃபிஸ்க்கு வந்தேன் (நான் பதிவு போடுறது எல்லாம் அங்க இருந்து தான் ஹி ஹி ஹி) , வந்து என் டாஷ் போர்டை பார்த்தா நெறைய நண்பர்கள் ஏற்கனவே நிறைய பதிவுகளை போட்டு இண்ட்லி, தமிழ்மணம் எல்லாத்தையும் நிரப்பிட்டாங்க, எல்லாம் கடந்த இரண்டு நாளா நாட்டுல நடந்து கிட்டு இருக்க குழப்பங்கள்தான். 

ஆனா ஒவ்வொருத்தரும் அவங்க வசதிக்கு தகுந்த மாதிரி பதிவு போட்டு இருந்தது தான் எனக்கு ஒரே குழப்பம்,

ஒருத்தரு கருப்பு பணத்தை இந்தியாக்கு கொண்டு வர ஏரோப்ளேன் அனுப்ப சொல்லுறார்,

இன்னொருத்தர் காசு செல்லாதுன்னு சொல்லுங்க எல்லாம் இனி எலெக்ட்ரோனிக் டிரான்ஸ்பர் மட்டும் தான் அப்ப தான் ஊழலை ஒழிக்க முடியும்ன்னு சொல்லுறாரு


இன்னொருத்தரோ இது எல்லாம் புதுசா, இந்தியால இது இப்பதான் ஆரம்பிச்சு இருக்கா அப்பிடின்னு கேக்குறாரு

ஒரே ஒரு நண்பர் மட்டும் வயித்துல பாலை வார்த்து இருந்தாரு, அதுவும் இந்தியாவோட ஜாதகத்தை!!?? கணிச்சு 

ஆனா என் கேள்வி ஒண்ணே ஒண்ணு தான், ஏன் இந்தியால எந்த ஒரு நல்ல விசயத்தையும் சரியா செய்ய முடியுறதில்லை?
யாராவது செய்ய முன் வந்தாலும் அவரு மட்டும் யோக்கியனா அப்பிடின்னு அவங்க மேல சேத்த வாரி வீசுறது.

பாபா இல்ல ஹசாரே யாரா வேணா இருக்கட்டும்,  அவங்க மேலயும் தப்பும் இருக்கலாம் ஆனா அதை எல்லாம் சரி பண்ணனும்ன்னு  முன்னாடி வரப்போ நாட்டு மேல அக்கறை இருக்குறவங்க (அட உங்களாதாங்க சொன்னேன்) பின்னாடி நின்னாதானே எதையாவது செய்ய முடியும்.  அவங்க தப்பு செஞ்சு இருந்தாலும் அந்த சட்டமே அவங்களை தண்டிக்கும் இல்லையா?

எல்லாருக்கும் இந்த நாடு அமெரிக்கா மாதிரி வல்லரசு ஆகணும்ன்னு நினைப்பு இருக்கு, எதுக்கு சொகுசா வாழணும், எல்லோரும் நிறைய சம்பாதிக்கணும, சந்தோஷமா இருக்கணும்னு தானே, ஆனா உண்மையில என்ன நடக்குது பழைய படத்துல வர ஜமீன்தார் மாதிரி சிலர் மட்டும் பணம் சம்பாதிக்க, இன்னும் சிலரோ ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட சம்பாதிக்க முடியாத நிலை.  

செலவு செய்ய முடியாத அளவு பணம் சம்பாதிச்சாலும் இன்னும் சம்பாதிக்க சட்டத்தை வளைக்க துடிக்கிற கூட்டம், யார் என்ன செய்ய முடியும்னு நிணக்கிற தைரியம் எங்கே இருந்து வந்தது, நாம எல்லாத்தையும் சும்மா வேடிக்கை பார்த்தது தானே?   காசு குடுத்தா இந்தியால எது வேணா செயலாங்குற நிலைமை எப்பிடி வந்தது? நாம என்னைக்காவது யோசிச்சு பார்த்து இருப்போமா?

நமக்கு சாப்பிட சாப்பாடு இருக்கா, எவன் எக்கேடு கெட்டு போன நமக்கென்ன அப்பிடின்னு நாம சும்மா இருந்தது தானே? நம்ம எங்க இருந்து சட்டத்தை காப்பி பேஸ்ட் பண்ணுனோமோ அங்கே கூட இவ்வளவு தப்பு நடக்குறது இல்லையே ஏன்? அங்கே மக்கள் எப்பிடி இருந்தாலும் தலைமை சரியா இருக்கணும்னு நினைக்கிறாங்க,

ஆனா இங்க நிலைமை என்ன குறைஞ்சது 2 கேஸ் இருந்ததானே கவுன்சிலர் ஆக முடியுது, அப்ப எப்பிடி அவங்க நாட்டுக்கு நல்லது பண்ணுவாங்க, அப்பிடியே பண்ணுவாங்கன்னு நம்புனா நம்மள மாதிரி முட்டாள்கள் எந்த நாட்டிலயும் இருக்கமாட்டாங்க.   இங்க நாட்டை சுரண்ட கோடி பேர் இருக்காங்க, ஆனா காப்பாத்த ஆள் இல்லை, அப்ப்டிடியே யாராவது வந்தாலும் நீ மட்டும் ஏன்னா        

ஜனநாயகம், இந்த ஒரு  வார்த்தயை வச்சுக்கிட்டு அவன் அவன் பண்ற சேட்டை தாங்க முடியல,
"எகிப்தில் அல்லது துனீசியாவில் நடந்தது போல் இந்தியாவில் நடக்காதுன்னு" பிரதமர் சொன்னதோட அர்த்தம் இப்ப எல்லோருக்கும் புரிஞ்சு இருக்கும். ஒரு பத்தாயிரம் பேர் கூடுனதே அவங்களுக்கு பிடிக்கலயே, ஒரே நாள்ல வேலய காமிச்சுட்டாங்க.

ஏன்யா இப்பிடி பண்றீங்கன்னு கேட்டா "அவரு  உயிருக்கு ஆபத்து"ன்னு சலிக்காம பொய் சொல்லுது கவர்மெண்ட,  உயிருக்கு ஆபத்துன்னா பாதுகாப்பு குடுக்க வேண்டியது மட்டும் தானே அரசோடா பொறுப்பு, அவரு டெல்லியிலேயே இருக்க கூடாதுன்னு வெளியே அனுப்புனது எப்பிடிபட்ட மொள்ளமாரித்தனம.  இன்னும் கொஞ்ச நாள்ல அந்த கூட்டதில (ஹசாரே அண்ட் கோ) இருக்கிற எல்லாத்தையும் தீவிரவாதிகள் லிஸ்ட்ல செத்துருவாங்க போல இருக்கு. 

நாம என்ன பண்ணப்போறோம் வழக்கம் போல விரல் சூப்பிக்கிட்டே வேடிக்கை பார்க்கபோறோம், ஏன்னா ..........................
நீங்களே மிச்சத்தை உங்களுக்கு பிடிச்ச மாதிரி நிரப்பிக்குங்க..

10 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

உண்மையில் பாபா வின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது கண்டிக்கத்த செயல். அரசியல்வாதிகளையோ, அரசாங்கத்தையோ இக் காலத்தில் எதிர்க்கையில் அராஜகம் மூலம் யோக்கியனா எனும் வார்த்தைப் பிரயோகங்கள் முன் வைத்துப் போராட்டங்கள் தான் நசுக்கப்படும், இவற்றுக்கெல்லாம் ஒரே வழி,
நன்கு படித்த, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய, நேர்மையான இளைஞர்களின் பங்களிப்பு.

Unknown சொன்னது…

@நிரூபன்

நல்லா சொன்னீங்க சகோ.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆஃபீஸ் ஃபோன் நெம்பர் ப்ளீஸ் ஹி ஹி

Unknown சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்

ஆபீஸ் நம்பர் 442070972520 extn 1021 UK நம்பர் அண்ணே

Unknown சொன்னது…

மாப்ள வழக்கம்போல...ஹிஹி!

Unknown சொன்னது…

@விக்கி உலகம்

வருகைக்கு நன்றி விக்கி,

திருக்குறளை கூட இன்னும் சுருக்கமா சொல்லிட்டீங்க,
விக்கி எப்பவும் கிரேட்

உங்க கருத்தை நானும் வழிமொழிகிறேன் வேற வழி இல்லை.

இடுக்கண் வருங்கால் நகுக.

பெயரில்லா சொன்னது…

ஹஹா..இந்தியாவின் ஜாதகத்தை கணிச்சி..?!! கிண்டல் மாதிரி இருக்கு ம்..நடக்கட்டும்..நண்பர் தானே...;-))

பெயரில்லா சொன்னது…

அரசியல் பதிவு சூப்பர்..உரைநடை எழுத்து சரளமா வருது..கலக்குங்க பாஸ்

Unknown சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார் இது கிண்டல் இல்லை அண்ணே, அப்பிடி தெரிஞ்சா மன்னிச்சுடுங்க.

Unknown சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார்

//அரசியல் பதிவு சூப்பர்..உரைநடை எழுத்து சரளமா வருது..கலக்குங்க பாஸ்


எல்லாம் உங்க தயவு...