ஒரு நாள் சுப்புவை கடைத்தெருவில் பார்த்த குப்பு,
"உங்க நண்பரை பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உங்களுக்கு தெரியுமா?" - கேட்டார்
"அவரை பத்தி சொல்றதுக்கு முன்னாடி, அந்த விஷயம் உண்மைன்னு உங்களுக்கு தெரியுமா?" சுப்பு கேட்டார்
"இல்லை, என் காதுல விழுந்துச்சு அதான் உங்க கிட்ட சொல்லாம்ன்னு..." இழுத்தார் குப்பு
சுப்பு கேட்டார் "அப்ப அது உண்மையான்னு உங்களுக்கு நிச்சயமா தெரியாது அப்பிடித்தானே"
"ஆமா" - இது குப்பு
"சரி நீங்க கேள்விப்பட்டது நல்ல விஷயமா?" சுப்பு கேட்டார்
"இல்லை, அது நல்ல விஷயம் இல்லை" குப்பு சொன்னார்
"அப்ப அவரைபத்தி ஒரு தப்பான விஷயம் என் கிட்ட சொல்ல வந்து இருக்கீங்க, ஆனா அது உண்மையான்னு தெரியாது அப்பிடித்தானே?" சுப்பு கேட்டார்
"ஆமா" இது குப்பு
"சரி இதால எனக்கு ஏதாவது பயன் இருக்கா?" சுப்பு கேட்டார்
"சரியா தெரியல" குப்பு சொன்னார்
"அப்ப நீங்க சொல்ல வந்தது ஒரு உண்மைன்னு தெரியாத, தப்பான விஷயம் அதுவுமில்லாம எனக்கு எதுவும் பயன் தராத விஷயத்தை என்கிட்ட எதுக்கு சொல்ல வந்தீங்க?" ன்னு சுப்பு கேட்டார்.
நீதி:
பிறருக்கு பயன் இல்லாததை பேசாதீர்கள், அவர்கள் நேரம் மட்டும் அல்ல உங்கள் நேரம் கூட விரயமாகலாம்.

8 கருத்துகள்:
நல்ல நீதி கதை
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி ராஜா
இந்த கதையை சாக்ரடீஸ் வாழ்வில் நடந்ததாக சொல்வார்கள். நமக்கு தேவையான மிக முக்கியமான கருத்துள்ள கதை இது. நன்றி.
@பாலா
நன்றி பாலா
நன்றி - கல்கண்டு லேனா தமிழ்வானன் என போட தேவை இல்லை,.. ஏன்னா அவர் கூட நன்றி 8ஆம் கிளாஸ் துணை தமிழ் பாடம் நு போடலை ஹா ஹா
சும்மா ஜோக்.. நல்லாருக்கு
@சி.பி.செந்தில்குமார்
நன்றி அண்ணே.. நான் கூட லேனா தமிழ்வாணன் மாதிரி எழுதுறேனா??
ஹா ஹா ஹா
ஊர் வம்பு பேசுவதினை நோக்காக கொண்டோருக்குச் சாட்டையால் அடிப்பது போன்ற உணர்வோடு ஒரு கதையினை வழங்கியிருக்கிறீங்க.
நாமும் நமது கடமைகளும் என்று இருக்கும் வரை எந்தவிதப் பிரச்சினைகளும் நம்மைச் சூழ்ந்து கொள்ளாது.
புறம்பேச்சு பேசிக்கொண்டு
பித்தம்பிடிச்சு அலைவோரை
சிண்டைப் பிடிக்கும் நீதிக்கதை
அருமை! அருமை!
அன்பன்
மகேந்திரன்
http://ilavenirkaalam.blogspot.com/
கருத்துரையிடுக