புதன், ஜூன் 15, 2011

வாழ்க்கை ...

"ஆ ஆஆ ஆஆஆ"  கத்தினான் மலையில் ஏறிக்கொண்டு இருந்த 10 வயது சிறுவன் ரமேஷ், கால் வழியில் இருந்த பாறையில் இடித்ததில் லேசாக வடிந்து கொண்டு இருந்தது. மலையின் முகட்டில் இருந்து  "ஆ ஆஆ ஆஆஆ"  யென வந்த சத்தம் அவனுக்கு வியப்பையும் பயத்தையும் கொடுத்தது.

"யார் நீ?" ரமேஷ் கேட்டான்

"யார் நீ?"  திரும்பவும் அவனுக்கே கேட்டது

கோபத்தில் "நீ ஒரு கோழை" ரமேஷ் கத்தினான்

"நீ ஒரு கோழை" திரும்பவும் கேட்டது

இதை கவனித்த சுப்பு, ரமேஷின் தந்தை கேட்டார்  "ரமேஷ் என்ன ஆச்சு?" 

ரமேஷும் நடந்ததை சொன்னான், அதை கேட்ட சுப்பு சிரித்துக்கொண்டே "இப்ப கவனி" என்று சொல்லிவிட்டு மலை பக்கம் திரும்பி 

"உன்னை நான் வணங்குகிறேன்" சுப்பு சொன்னார்

"உன்னை நான் வணங்குகிறேன்" மலை திருப்பி சொன்னது

"நீ ஒரு வித்தகன்" சுப்பு சொன்னார்

"நீ ஒரு வித்தகன்"  திருப்பி கேட்டது

ரமேஷுக்கோ ஒரே ஆச்சரியம் ஆனா அவனுக்கு புரியல

சுப்பு விளக்க ஆரம்பிச்சார்

"இதுக்கு பேரு எதிரொலி, நாம பேசுறது அந்த மலையில பட்டு திரும்ப நமக்கே கேட்கும்.    இது மாதிரி தான் நம்ம வாழ்க்கையும், நம்முடைய செயல்களின் எதிரொலி. உன் மேல் எல்லோரும் அன்பாய் இருக்கணும்ன்னா நீ எல்லோர் மேலயும் அன்பாய் இரு. நீ எல்லோரையும் பாராட்டுனா எல்லோரும் உன்னை பாராட்டுவாங்க."

நீதி  :
வாழ்க்கை நீ என்ன கொடுத்தாயோ அதை அது திருப்பி கொடுக்கும்.

13 கருத்துகள்:

Unknown சொன்னது…

தத்துவம்டா சாமியோவ்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உண்மைதான் விதைப்பதுதானே முளைக்கும்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தமிழ்மணத்தில் இணைத்து விட்டு ஓட்டு போட்டாச்சி

Unknown சொன்னது…

@மைந்தன் சிவா

நன்றி சிவா

Unknown சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி சௌந்தர்
காலையில் இருந்தே தமிழ்மணம் மக்கர் செஞ்சுகிட்டு இருக்கு யாருக்கும் ஓட்டு போட முடியல.

சென்னை பித்தன் சொன்னது…

உண்மை!நாம் செய்வது எறி வளை போல் திரும்பி வரத்தான் செய்யும்!

Unknown சொன்னது…

@சென்னை பித்தன்

நன்றி அய்யா..

நிரூபன் சொன்னது…

எதிரொலியினை உதாரணப்படுத்தி அருமையான தத்துவத்தினைப் பகிர்ந்துள்ளீர்கள்..

பகிர்விற்கு நன்றி சகோ.

ராஜி சொன்னது…

வாழ்க்கை நீ என்ன கொடுத்தாயோ அதையே அது திருப்பிக் கொடுக்கும்.
>> மிகச்சரியான வரிகள் சகோ. இதை நாம் உணர்ந்தால் வீடிலும், வெளியிலும்,நாட்டிலும் பிரச்சனைகள் எழும்ப வாய்ப்பே இல்லை. உணர்வோமா நாம்?!

Unknown சொன்னது…

@நிரூபன்

நன்றி சகோ..

Unknown சொன்னது…

@ராஜி

வருகைக்கு நன்றி சகோ..

கருத்துக்கும் நன்றி.

rajamelaiyur சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
rajamelaiyur சொன்னது…

இன்று எனது வலையில்
அவன்-இவன் திரைவிமர்சனம்