செவ்வாய், ஜூன் 14, 2011

இது தாண்டா இந்தியா

1)    லோக்பால் மசோதாவை பலவீனப்படுத்த முயற்சி: அமைச்சர்கள் மீது அன்னா ஹசாரே புகார் 

இப்பிடி சின்ன பிள்ளை மாதிரி புகார் பண்ண கூடாது. அவங்க என்ன அவங்களாவா செய்யுறாங்க, எல்லாம் சொல்லி குடுக்குறாங்க இவங்க பேசுறாங்க. இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா, உங்க பேரனுக்கு பேரன் வந்தாலும லோக்பால் வராது. 

2)     கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: ராம்தேவ்

அது சரி இதையாவது தொடர்ந்து செய்வீங்களா? இல்ல இது கூட உங்க உண்ணாவிரதம் மாதிரி பாதியில முடிச்சுடுவீங்களா? 


3)    கடந்த 12 ஆண்டாக பென்ஷன் பெற, கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்து வருகிறேன். கடைசி காலத்தில் அரசு கொடுக்கும் பணத்தை         வாங்கி சாப்பிட விரும்பவில்லை. சுதந்திர போராட்ட தியாகி என்பதை பதிவு செய்வே, இத்தனை ஆண்டாக நடையாய் நடக்கிறேன்.

    தியாகி பட்டதையும் தியாகம் பண்ண சொல்றாங்களோ? இல்ல உங்களுக்கு குடுக்குற பணத்தில ஒரு வருஷம் இந்தியாக்கே பட்ஜெட் போடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கங்களோ என்னவோ?  

4)     270 பக்க 2ஜி ஊழல் அறிக்கை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்தார்.
   
    அவங்க ரொம்ப பிசி 270 பக்கம் படிக்க முடியாது, சுருக்கமா சுருக்குன்னு 10 வரியில் குடுங்க 

5)     சிண்டு முடியும் பத்திரிகைகள்: கருணாநிதி 
   
    இது என்ன மானம் கெட்ட பொழப்பு, இனிமே யாராவது புதுசா சிண்டு முடிஞ்சு விடணுமா? ஏற்கனவே உள்குத்து இருக்கிறனால தானே உங்க பொண்ணு உள்ள இருக்கு. கொஞ்ச நாள் வாய மூடிக்கிட்டு இருந்தா வெளிய விட்டுடுவாங்க  

6)     கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் - பிரணாப் நம்பிக்கை 

    என்ன நடவடிக்கைன்னு கொஞ்சம் சொன்ன தேவலை?, இதுவரைக்கும் எடுத்த நடவடிக்கை!!?? தான் பாபா வரை வந்து நிக்குது, இன்னும் இப்பிடி பேசிக்கிட்டு இருந்தா நானும் வர வேண்டி இருக்கும்   

7)     பிரம்மபுத்ரா நதி நீர் மடை மாற்றம் செய்யப்படுவது குறித்து, சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும்,'' என, வெளியுறவுத் துறை         அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

    விளக்கம் கேட்டு கிட்டே இருங்க, ஒரு நாளு மொத்தமா தண்ணியே வராம போகப்போகுது.   அது சரி காவேரிய மறந்துட்டீங்களே


8)    இந்தாண்டு அரிசி உற்பத்தி 10 கோடி டன்னை தாண்டும்,'' என, விவசாயத் துறை செயலர் தெரிவித்துள்ளார்

    அதனால எல்லோருக்கும் இலவச அரிசி குடுக்கப்போறீங்களா, இல்ல அரிசி விலை கிலோ 10  ஆயிடுமா?    எப்பிடியும் குடௌன்ல அடுக்கி வச்சி எலி திங்க போகுது.

9)    பன்மு‌‌க கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ 7ஆயிரம் கோடி செலவில் கங்கை நதியை தூய்மைபடுத்த உலக வங்கியுடன் ஒப்பந்தம்

    இதுல எத்தனை கோடி நீங்க கங்கையை சுத்தம் பண்ண எடுத்துக்குவீங்க?

   
10)    கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
   
    இன்னும் எத்தனை வருஷம் தள்ளி போடுவீங்க பாஸு சீக்கிரம் சொல்லுங்க. 

5 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சுவாரஸ்யமான கேள்விகள்..
கிண்டலான பதில்கள்...

ரசித்தேன்...

Unknown சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி சௌந்தர். எங்க ரெண்டு மூணு நாளா உங்களை காணோம்

Unknown சொன்னது…

ஹிஹி ஏன் யா இப்பிடி கெளம்பீட்டீங்க??

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பார்றா.. பய புள்ள ஜி கே லைனுக்கு போயிடுச்சு

நிரூபன் சொன்னது…

ஒவ்வோர் அரசியல் பஞ்ச் வசனங்களின் கீழும் உங்களின் நச்சென்ற, யதார்த்தமும் காமெடியும் கலந்த குறிப்புக்களை ரசித்தேன் சகோ.