திங்கள், ஜூன் 13, 2011

இதுவும் கடந்து போகும்

"இந்த உலகில் எல்லா சமயத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலையிலும் பொருந்தக்கூடிய மந்திரம் அல்லது கருத்து ஏதாவது உண்டா? இது எல்லா சந்தோஷ தருணங்களிலும், துக்க தருணங்களிலும், எல்லா வெற்றி மற்றும் தோல்வி தருணங்களிலும் பொதுவாக இருக்க வேண்டும்" அவையோரை பார்த்துக்கேட்டான் பாண்டியன்.

அவையில் இருந்த மந்திரிகளும், புத்திசாலிகளும் பதில் தேட ஆரம்பித்தனர், அவர்களால் முடியவில்லை. முடிவில் அந்த நாட்டில் வாழ்ந்து வரும் ஞானியிடம் கேட்பது என்று முடிவெடுத்து அவரிடம் சென்றனர். துறவியும் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்.

அதன்படி அந்த கேள்விக்கான விடையை ஒரு ஓலையில் எழுதி மோதிரத்திற்குள் வைத்து "உங்கள் கேள்விக்கான விடை இந்த மோதிரத்திற்குள் இருக்கிறது, இதை இப்போது பார்க்காதீர்கள் உங்களுக்கு எப்போது சமாளிக்க முடியாயத நிலை வருகிறதோ அப்போது இந்த ஓலையை எடுத்து படிக்க வேண்டும்" என்று சொன்னார் துறவி. அரசனும் அதற்கு ஒப்புக்கொண்டு, மோதிரத்தை கையில் அணிந்து கொண்டான்.

சில நாட்களில் எதிரிகள் படை எடுத்து வந்தனர், பாண்டியனும் தன் படைகளை கொண்டு எதிரிகளை எதிர் கொண்டார், இறுதியில் பாண்டியன் தோற்க நேர்ந்தது, உயிருக்கு அஞ்சி ஒரு பாழடைந்த குகைக்குள் ஒளிய வேண்டியது இருந்தது.
அப்போது பாண்டியனுக்கு மோதிரத்தின் நினைவு வந்தது, உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாய் மோதிரத்தை திறந்து ஓலையை படித்தார்.

"இதுவும் கடந்து போகும்" - உள்ளே எழுதி இருந்தது.

பாண்டியனின் மனதில் ஒரு ஒளி, நினைத்து பார்த்தான் "நேற்று வரை நான் ஒரு பேரரசன், இன்றோ நான் ஒரு கீழ் நிலையில் இருக்கிறேன்", மனதில் புது நம்பிக்கையுடன் மீண்டும் படை திரட்டி எதிரிகளை வெற்றி கொண்டான். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

ஊரே விழாக்கோலம் பூண்டது, மன்னரை வாழ்த்தி பாடிக்கொண்டு இருந்தனர், மன்னரும் மகிழ்ச்சியில் பூரித்துக்கொண்டு இருந்தார். திடீரென்று மோதிரத்தில் சூரிய ஒளி பட்டு அவரது முகத்தில் பட்டது. மீண்டும் அந்த ஓலையை எடுத்து படித்தார்.

"இதுவும் கடந்து போகும்" - பாண்டியனின் மனம் அமைதியில் உறைந்தது

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து விட்டான் என்பதை அவன் முகம் காட்டியது

நீதி :

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் இருபக்கங்கள், வரும் போகும் எதுவும் நிலையில்லை. நிலையாமை மட்டுமே இந்த உலகின் நியதி. மாற்றம் தவிர மற்றெல்லாம் மாறும், நாம் வெறும் சாட்சிகள் மட்டுமே, எனவே மாற்றங்களை உணருங்கள், புரிந்துகொள்ளுங்கள் இருக்கும் நிமிடங்களை மகிழ்ச்சியாக கழியுங்கள் ஏனெனில் இதுவும் கடந்து போகும்.


14 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

வெற்றி தோல்வி வாழ்க்கையின் இருபக்கங்கள்... நிச்சயமாக..

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With video

rajamelaiyur சொன்னது…

வெற்றி தோல்வி வாழ்க்கையின் இருபக்கங்கள்..///

மிகவும் உண்மையான வரிகள்

rajamelaiyur சொன்னது…

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

Unknown சொன்னது…

@♔ம.தி.சுதா♔

நன்றி சகோ..

Unknown சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி நண்பரே

Unknown சொன்னது…

ம்ம் கருத்து கலக்குது!!!ஹிஹி வாழ்த்துக்கள்!!

நிரூபன் சொன்னது…

வெற்றி தோல்வி பற்றிய தத்துவ விளக்கத்துடன் கூடிய கதை அருமை சகோ.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

m m ம் ம் ஓக்கே

Unknown சொன்னது…

@மைந்தன் சிவா

நன்றி சிவா

Unknown சொன்னது…

@நிரூபன்
நன்றி சகோ

Unknown சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்

அண்ணே வணக்கம், வந்ததுக்கு நன்றி, இனி டெய்லி வரப்போறதுக்கும் நன்றி

மாலதி சொன்னது…

ம்ம் கருத்து கலக்குது!!!

Unknown சொன்னது…

@மாலதி

நன்றி சகோ..