ஒரு ஊருல அண்ணன், தம்பி ரெண்டு பேரு இருந்தாங்க ரெண்டும் சரியான வாலுங்க, அக்கம் பக்கத்துல ஏதாவது காணாம போனா அதுல இவங்க பங்கு இல்லாம இருக்காது, அதனால அவங்க அப்பா அம்மாக்கு ஒரே தலைவலி.
அந்த ஊருல ஒரு சாமியார் இருந்தாரு, அவரு இந்த மாதிரி வாலு பசங்கள எல்லாம் திருத்துராறுன்னு அவங்கம்மா அவரை போயி பார்த்தா ஏதாவது செய்வார்ன்னு அவர் கிட்ட போனாங்க.
அவரும் எல்லாத்தையும் கேட்டுட்டு மொதோ உங்க ரெண்டாவது பையனை அனுப்புங்க அப்பிடின்னு சொன்னார். அந்தம்மா பையனை கூப்பிட்டு கிட்டு ஆசிரமத்துக்கு போனாங்க.
"பையனை உள்ள விட்டுட்டு நீங்க வீட்டுக்கு போங்க" அப்பிடின்னு சாமியார் சொன்னாரு. அந்த ரூம்-ல கொஞ்ச நேரம் அமைதி, சாமியாரும் ஒண்ணும் பேசலை, பையனும் மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருந்தான். கொஞ்ச நேரம் கழிச்சி
"கடவுள் எங்கே?"ன்னு சாமியார் கேட்டார்
பையன் பதில் எதுவும் சொல்லல, சுத்தி பார்த்தான்
சாமியார் திருப்பி கேட்டார் "கடவுள் எங்கே?"ன்னு
இப்பயும் பையன் கிட்ட இருந்து பதில் இல்ல
மூணாவது தடவை கொஞ்சம் மிரட்டலா கேட்டார் "கடவுள் எங்கே?"ன்னு
பையன் எடுத்தான் ஓட்டம், நேரா வீட்டுக்கு போயி தான் நின்னான், அதுவும் அவங்க ஒளியிற இடம், அண்ணன் கேட்டான் "என்னடா ஆச்சு?" ன்னு
"நாம பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டு இருக்கோம்டா" தம்பி சொன்னான்
"ஒண்ணும் புரியல புரியிற சொல்லு" அண்ணன் கேட்டான்
தம்பி சொன்னான் "இல்ல கடவுளை காணோமாம், அதையும் நாம தான் எடுத்தோம்னு எல்லோரும் சந்தேகப்படுறாங்க"
நீதி
தவறான கோணத்தில் பார்க்கப்படும் பிரச்சனைகளுக்கு, தவறான தீர்வே கிடைக்கும்

13 கருத்துகள்:
எதிர்பாராத பதில்.
தலைப்பே என்னை இவ்வலைப்பக்கம் ஈர்த்தது.
அருமை
வலையமைப்பும் அழகு!
நகைச்சுவையாக நல்ல நீதி சொல்லியிருக்கிறீர்கள் நண்பா.
@முனைவர்.இரா.குணசீலன்
வருகைக்கு நன்றி குணசீலன். தொடர்ந்து வாருங்கள்.
யாதார்த்தமான நகைச்சுவையுணர்வுடன் கூடிய நீதிக்கதை...
அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.. நண்பரே...
@# கவிதை வீதி # சௌந்தர்
தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றி சௌந்தர்.
அருமையான நீதிக்கதை :)
@சிநேகிதன் அக்பர்
நன்றி நண்பரே
நல்ல கதை சாரி நீதி கதை
சிறிய ஆனால் நல்ல கதை
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி நண்பரே, தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள்.
நீதிய பாரடா...கொய்யாலே ஹிஹி
நல்லா இருக்கு
@மைந்தன் சிவா
நன்றி நண்பரே..
@FOOD
நன்றி சார்..
கருத்துரையிடுக