ஒரு நாள் இரண்டு பேரு குப்பு, சுப்பு மீன் புடிக்க போனாங்க, இதுல குப்பு புதுசா மீன் பிடிக்க வந்தவரு, சுப்பு மீன் பிடிக்கிறதுல கெட்டிக்காரரு. ரெண்டு பெரும் மீன் பிடிச்சுகிட்டு இருந்தாங்களா, சுப்பு பெரிய மீனா பிடிச்சு அவரு பெட்டியில வச்சுக்கிட்டு இருந்தாரு. அப்பதான் கவனிச்சாரு குப்பு பெருசா வர்ற மீன திரும்பவும் தண்ணிக்குள்ள போட்டு கிட்டு இருந்தாரு.
உடனே சுப்பு "என்னய்யா பண்ற பெரிய மீனெல்லாம் தூக்கி தண்ணிக்குள்ள போட்டு வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கே" அப்பிடின்னு குப்பு கிட்ட கேட்டாரு.
"என் கிட்ட இந்த மீன வறுக்குற அளவுக்கு பெரிய சட்டி இல்லை" அப்பிடின்னாரு குப்பு
இதை படிக்கும் போது குப்புவை நெனச்சி சிரிச்சிருப்போம், ஏன்னா அவருக்கு தெரியல அவருக்கு வேண்டியது கொஞ்சம் பெரிய சட்டின்னு
சில நேரங்கள்ல நாம கூட குப்பு மாதிரி பெரிய திட்டங்களை, பெரிய வாய்ப்புகளை, பெரிய கனவுகளை தூக்கி எறியிறோம், ஏன்னா நம்மால செய்ய முடியுமா அப்பிடிங்கற சந்தேகம் அல்லது எப்பிடி செய்யிறதுன்னு தெரியாம இருக்குறதுதான். சில சமயம் நாம அந்த வாய்ப்புகளை குறைந்த பட்ச முயற்சி கூட செய்ய தயங்குறோம்.
நாம சமாளிக்க முடியாத அளவு பிரச்சனை நமக்கு எப்பவும் வராது, அல்லது எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்க நமக்கு சக்தி இருக்கு.
நம்பிக்கையோட எந்த பிரச்சனையும் எதிர் கொண்டால், பாதி பிரச்சனைகள் குறைஞ்சுடும்.

14 கருத்துகள்:
தன்னம்பிக்கை வரிகள் சபாஷ்....
தேவையான சிந்தனை .,
@# கவிதை வீதி # சௌந்தர்
நன்றி சௌந்தர்..
@ஷர்புதீன்
நன்றி ஷர்புதீன்..
நகைச்சுவைக்குள் அழகிய சிந்தனை.
வலையமைப்பு இணையதளத்துக்கு இணையாகவுள்ளது அருமை
தன்னம்பிக்கையைக் கண்டால் தோல்வி பயந்தோடிவிடும் என்பதை அழகாகச் சொல்லியயிருக்கிறீர்கள்.
ஒவ்வோர் நாளும் வாழ்க்கைக்குத் தேவையான வித்தியாசமான தத்துவங்களை, குட்டிக் கதை வடிவில் அவிழ்த்து விடுகிறீர்கள் சகோ. அருமை
@முனைவர்.இரா.குணசீலன்
நன்றி நண்பரே
@நிரூபன்
நன்றி நிரூபன்
தொடர்ந்து நல்ல கருத்துகளை மட்டும் பகிர வேண்டும் என்பதே என் ஆசை, உங்கள் ஆதரவு இருக்கும் வரை எதையும் செய்ய முடியும் என்று நம்புகிறேன்
தன்னம்பிக்கை கதை சூப்பர்....!!!
@MANO நாஞ்சில் மனோ
நன்றி மனோ அண்ணே, எல்லாம் உங்க தயவு.
எளிய கதைக்குள் அருமையான கருத்து.
அன்புடையீர் தங்களின் வலைப்பதிவு மிகுந்த பரிசீலனைக்குப் பின், தரம்வாய்ந்த ஒன்று என்பதால் வலைச்சரம் தானியங்கி திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. தயையுடன் எமது இணையப்பட்டையை தங்களின் வலைத்தளத்தில் இணைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
வலைச்சரத்துடன் தங்கள் பதிவுகள் சிறப்புற வாழ்த்துக்கள்.
இங்ஙனம்,
வலைச்சரம் நிர்வாகக் குழு.
கருத்துரையிடுக