வெள்ளி, செப்டம்பர் 09, 2011

குப்பைத்தொட்டி - மெட்ராஸ் ஸ்டேட் டூ தமிழ்நாடு

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மதராசு மாகாணம் என்ற பெயர் மதராசு மாநிலம் என்று மாற்றம் கண்டது, தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தது.
1953-இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது.

1956இல்  மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அந்த பெயர் மாற்றப்படவில்லை ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்"  என்றும், தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்றும் வழக்கத்தில் இருந்தது.   இன்னும் வட இந்தியாவில் மதராசி என்ற சொல் இன்றும் வழக்கத்தில் உள்ளது, அவர்களுக்கு தென் இந்தியாவில் இருந்து வரும் எல்லோருமே மதராசிகள் தான்.

"சென்னை ராஜ்ஜியம்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் சங்கரலிங்கனார் 1957-ல் உண்ணா விரதம் இருந்தார்.  இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 63.

விருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது.   இந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.

"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது" என்று அவர் பதில் அளித்தார்.

மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார். 

"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே"  என்று அண்ணா கூறினார். 

"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார். 

நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.

அவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 78-வது நாளில் (அக்டோபர் 13, 1957) அவர் மரணம் அடைந்தார். இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது.

தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின. இதன் பிறகு, தமிழில் "தமிழ்நாடு" என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.

இதுபற்றிய அறிவிப்பை 24-2-1961-ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார். அதில்

"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் "மெட்ராஸ்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம். இனி தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்று எழுதுவதற்கு பதிலாக, "தமிழ்நாடு" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், "மெட்ராஸ்" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் "தமிழ்நாடு சட்டசபை, "தமிழ்நாடு சர்க்கார்" என்று குறிப்பிடப்படும். எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். 

"இப்படி இரண்டு விதமாக பெயர் இருக்கலாமா?" என்று பலருக்கு சந்தேகம் ஏற்படலாம். ஜெர்மனியை எடுத்துக்கொள்ளுங்கள். உலகில், "ஜெர்மனி" என்றால்தான் தெரியும். ஆனால் ஜெர்மானியர்கள் தங்கள் தேசத்தை "டூஷ் லேண்ட்" என்றுதான் அவர்கள் மொழியில் கூறுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏதாவது குறைவு வந்துவிட்டதா? வெளி உலகில், "ஜெர்மனி" என்று சொல்லக்கூடாது என்று அவர்கள் தடுக்கவில்லை. அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, "சென்னை ராஜ்ஜியம்" என்பது "தமிழ்நாடு" என்று மாற்றப்படுகிறது.

இவ்வாறு சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.

எனினும், ஆங்கிலத்திலும் "TAMILNADU" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அந்த கோரிக்கை அப்போது ஏற்கப்படவில்லை.  பிறகு அதுவும் ஏற்கப்பட்டு இப்போது ஆங்கிலத்திலும் TAMILNADU  என்றே எழுதப்படுகிறது.


இன்றைய லொள்ளு

வியாழன், செப்டம்பர் 08, 2011

நல்லா போடுறாங்கயா நங்கூரம்

ஒரு நாளு மூணு அரசியல்வாதிங்க (யார் பேரு வேணா வச்சுக்குங்க) கார்ல போகும் போது  ஒரு விபத்துல மாட்டிக்கிட்டாங்க. மூணு பேரும் செத்தும் போயிட்டாங்க, நேரா எமலோகம் எமன் அவங்களை பார்த்த உடனே

"மொதோ ரெண்டு பேரையும் சொர்க்கத்துக்கும், கடைசியா இருந்த வயசான ஆளை நரகத்துக்கும் அனுப்புங்க" அப்பிடின்னாரு

நரகத்துக்கு போக சொன்னவருக்கு கடுப்பு,

"இது அநியாயம் எமா, எங்களை விசாரிக்காம நீ பாட்டுக்கு என்னை நரகத்துக்கும் அவங்கள  சொர்க்கத்துக்கும் போகச்சொல்லுற. நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா, ஏன்னா நாங்க மூணு பேரும் ஒரே மாதிரி லஞ்சம் வாங்கி இருக்கோம், மக்களை ஏமாத்தி நிறைய கொள்ளை அடிச்சு இருக்கோம், கொள்ளை அடிச்ச பணம் வெளிநாட்டுல பதுக்கி வச்சு இருக்கோம்.  நான் மட்டும் ஏன் நரகத்துக்கு போகணும்?"

"சரி நான் போட்டி வைக்கிறேன் பாஸ் பண்ணுறவாங்க எல்லாம் சொர்க்கத்துக்கு மத்தவங்க எல்லாம் நரகத்துக்கு சரியா?"

மூணு பேரும் ஒத்துக்கிட்டாங்க

மொதோ ஆளைப்பார்த்து "நான் சொல்லுறதை இங்கிலீஷ்-ல ஸ்பெல்லிங் சொல்லணும்,  INDIA - ஸ்பெல்லிங் சொல்லு?"
அவர் சரியா சொல்லீட்டாரு

ரெண்டாவது ஆளை பார்த்து "ENGLAND ஸ்பெல்லிங் சொல்லு? "
அவரும் சொல்லிட்டாரு

கடைசியா நம்ம பெரியவரை பார்த்து "SRILANKA ஸ்பெல்லிங் சொல்லு"

"இது அநியாயம் எனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியாது தமிழ்-ல ஏதாவது கேளுங்க சொல்லுறேன்!!"  அப்பிடின்னாரு பெருசு

"சரி தமிழ்-ல கேள்வி சரியா சொல்லீட்டா சொர்க்கம் இல்ல நரகம்"

"நான் சொல்லுறதை பேப்பர்-ல எழுதுங்க"

மொதோ ஆளை பார்த்து "நாய் லொள் லொள் என குலைக்கும்"   மொதோ ஆளு சரியா எழுதி குடுத்தாறு

ரெண்டாவது ஆளை பார்த்து "ஆடு மே மே என கத்தும்" அவரும் சரியா எழுதி குடுத்துட்டாரு

கடைசியா இவரை பார்த்து "இருபத்தி நாலாம் புலிகேசியின் இருபத்தி இரண்டு திட்டங்களில் இரண்டு சோடை போனாலும் பரவாயில்லை இருக்கும் இருபது சரியாய் இருக்கிறது"

கொஞ்சம் கஷ்டம் ஆனா அவரால சரியா எழுத முடியலை.

"எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் குடுங்க எமா, எனக்கு தமிழ் தெரியும் நான் நிறைய வரலாற்று இலக்கியம் எழுதி இருக்கேன் அதனால வரலாறு சம்மந்தமா ஏதாவது கேளுங்க சரியா சொல்லுறேன்" அப்பிடின்னாரு பெருசு.

எமனும் மனசு மாறி சரி அப்பிடின்னு ஒத்துக்கிட்டாரு

"இந்தியாக்கு சுதந்திரம் எப்ப கெடைச்சது?" மொதோ ஆளைப்பார்த்து கேட்டாரு

"1947" - அப்பிடின்னாரு மொதோ ஆளு

"இந்திய சுதந்திரப்போர்-ல இறந்தவங்க எண்ணிக்கை எவ்வளவு?" ரெண்டாவது ஆளைப்பார்த்து கேட்டாரு

"ஏதாவது சாய்ஸ் கெடைக்குமா? ரெண்டாவது ஆளு கேட்டாரு.

"அ) 1,00,000 ஆ) 2,00,000 இ) 3,00,000 மூணு ஆப்ஷன் குடுத்தாரு எமன்

"2,00,000"  - அப்டின்னாரு ரெண்டாவது ஆளு அவரும் பாஸ்

இப்ப நம்ம ஆளைப்பார்த்து

"இந்த 2,00,000 பேர்-ல ஒரு 100 பேரு ஊரு அட்ரஸ் சொல்லுங்க" அப்பிடின்னாரு எமன்

சொல்லத்தெரியல பெருசுக்கு, தோல்விய ஒப்புக்கிட்டு "சரி நான் நரகத்துக்கே போறேன்" அப்பிடின்னு புறப்பட்டாரு பெருசு..

நீதி :  நிர்வாகம் உங்களை பழிதீர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நீங்கள் தப்பிக்க வழி இல்லை



இன்றைய தத்துவம்

சில பூக்கள் வெயிலில் மலரும்
சில பூக்கள் நிழலில் மலரும்
கடவுளுக்கு தெரியும் எது
உங்களுக்கான இடம் அங்கேயே
நீங்கள் இருக்கிறீர்கள்
எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாய் இருங்கள் 


சிலரை மாற்ற வேண்டுமா நீங்கள் மாறுங்கள்
ஒரே சூரியன் தான்
வெண்ணையை உருக வைக்கும்
களிமண்ணை இறுக வைக்கும்

வெள்ளம் வரும் போது
மீனுக்கு எறும்பு உணவு
வெள்ளம் வற்றினால்
மீன் எறும்புக்கு உணவு
எல்லாம் காலம்
செய்யும் மாயம்
எல்லோருக்கும் ஒரு
காலம் உண்டு



இன்றைய லொள்ளு - தொழில்நுட்ப வளர்ச்சி 



திங்கள், செப்டம்பர் 05, 2011

சர்வம் பல்ப்மயம் - இது எங்க ஏரியா

ஒரு நாளு பாத்திரம் விளக்கிக்கிட்டு இருந்த அம்மாவை பார்த்து பொண்ணு கேட்டா
"ஏம்மா  உங்களுக்கு அங்க அங்க வெள்ளை முடி இருக்கு?"
அதுக்கு அம்மா
"நீ எப்ப எல்லாம் என்ன கஷ்டப்படுத்துற மாதிரி குறும்பு பண்ணுறியோ அப்ப எல்லாம் அம்மாக்கு ஒரு வெள்ளைமுடி வளரும்"
கொஞ்ச நேரம் பொண்ணு யோசிச்சா அப்புறமா
"அப்ப ஏன் பாட்டிக்கு தலைமுடி எல்லாம் வெள்ளையா இருக்கு, நீ ரொம்ப கஷ்டப்படுத்துட்டீயா?"

*************************************************************************************************************************
ஒரு நாளு ஒரு டீச்சர் ஸ்கூல்-ல சுறா மீன் பத்தி கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தாங்க அப்ப
"சுறா மீன் பெருசா இருந்தாலும் ஒரு மனுசனை முழுசா முழுங்க முடியாது, ஏன்னா அதுக்கு தொண்டை சிறுசு"
நடுவில புகுந்த ஒரு பொண்ணு
"இல்ல மிஸ் போன வாரம் பேப்பர்-ல போட்டு இருந்தான், சுறா ஒரு ஆளை முழுங்கிடுச்சுன்னு"
"நான் தான் சொல்லுறேன்-ல அதுக்கு எல்லாம் சாத்தியமே இல்லை, சுறாவால மனுசனை முழுங்க முடியாது" - திரும்ப சொன்னாங்க டீச்சர்
"சரி நான் சொர்க்கத்துக்கு போனதுக்கு அப்புறம் அவர்கிட்டயே கேட்டு தெரிஞ்சுகிறேன்" - அப்பிடின்னா பொண்ணு
"அந்த ஆள் நரகத்துக்கு போயிருந்தா?" டீச்சர் கேட்டாங்க
"அப்ப நீங்க கேட்டு எனக்கு சொல்லுங்க" அப்பிடினுச்சாம் பொண்ணு

*************************************************************************************************************************
ஒரு நாள் ஸ்கூல்-ல டூர் கூட்டிக்கிட்டு போனாங்க, போன எடத்துல மத்தியானம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க அது பஃபே சிஸ்டம், ஒரு டீச்சர் என்ன பண்ணாங்க மொதோ இருந்த ஆப்பிள் தட்டுல "எல்லோரும் ஒன்று மட்டும் எடுத்துக்கொள்ளவும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்" அப்பிடின்னு ஒரு பேப்பர்-ல எழுதி வச்சாங்க.

கடைசியா சாக்லேட் தட்டு இருந்த்தது,   அதுல ஒரு குட்டி பையன் "இங்க எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க கடவுள் ஆப்பிள் தட்டை கவனிச்சுக்கிட்டு இருக்காரு!!" அப்பிடின்னு எழுதி வச்சுட்டு போயிட்டான்

*************************************************************************************************************************

அவர் : நல்ல வக்கீலுக்கும் சிறந்த வக்கீலுக்கும் என்ன வித்தியாசம்?
இவர் : தெரியலயே!!
அவர் : நல்ல வக்கீலுக்கு சட்டம் நல்லா தெரியும், சிறந்த வக்கீலுக்கோ எல்லா நீதிபதிகளையும் நல்லா தெரியும்

*************************************************************************************************************************

ஒரு நாளு ஒரு அழகான காலேஜ் பொண்ணு, புரொஃபசர் ரூமுக்கு வந்துச்சு

"நான் எக்ஸாம்-ல பாஸ் பண்ணனும் சார், நான் எதுவேணுமினாலும் செய்யிறதுக்கு தயாரா இருக்கேன், மிச்சம் உங்க கையில தான் இருக்கு"

"அப்பிடியா, எது வேணுமின்னாலும் செய்வீயா"?

"ஆமா சார்!!"

"அப்ப புஸ்தகத்தை எடுத்து படி"

*************************************************************************************************************************

ஒரு நாளு ஒரு வீட்டுக்காரம்மா காலையில எந்திரிச்ச உடனே
"என்னங்க இன்னைக்கு ஒரு கனவு நீங்க எனக்கு ஒரு வைர மாலை பரிசா குடுக்குற மாதிரி, இதுக்கு என்ன அர்த்தம்"

"மனச போட்டு குழப்பிக்காதே, இதுக்கு பதில் சாயந்தரம் தெரியும்" அப்பிடின்னு சொல்லிட்டு வீட்டுக்காரரு வேலைக்கு போயிட்டாரு.

சாயந்தரம் வீட்டுக்காரரு கையில ஒரு கிஃப்ட் பார்சல், ஆர்வமா அந்தம்மா தொறந்து பார்த்தாங்க, அதுல
"கனவுகளும் அதன் பலன்களும்" புத்தகம்..

சனி, செப்டம்பர் 03, 2011

வாய்க்கொழுப்புன்னா இது தானா அண்ணே !!?

குப்புவோட வீட்டுக்காரம்மா முட்டை பொரியல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க,  திடீர்ன்னு சமையல் கட்டுல நுழைஞ்ச சுப்பு

"பார்த்து பார்த்து, கொஞ்சம் எண்ணை நிறையா ஊத்து, வெங்காயம் கருகுது பாரு இன்னும் கொஞ்சம் எண்ணை ஊத்து. கொஞ்சம் கிளறி விடு. உனக்கு என்ன காதே கேக்காதா அங்க பாரு முட்டை ஆங்கங்க கெட்டியா இருக்கு பாரு அதையெல்லாம் உடைச்சிவிடு. என்ன பண்றே உப்பு போடலை கொஞ்சம் நிறையா போடு, இல்லாட்டி வாயிலேயே வைக்க முடியாது.. "  முட்டை பொரியிறத விட ரொம்ப பொரிஞ்சாறு..   

"இப்ப என்ன ஆச்சுன்னு இப்பிடி வாய் மூடாம கத்திக்கிட்டு இருக்கீங்க, கொஞ்ச நேரம் சும்மா இருங்க எனக்கு முட்டை  பொரியல் பண்ண தெரியாதுன்னு நெனச்சீங்களா?"

"ஒண்ணும் இல்ல நான் கார் ஓட்டும் பொது நீ என்ன செய்யிறயோ அதை தான் நான் இப்ப செஞ்சு காட்டினேன்" அப்பிடின்னாரு சிரிச்சுக்கிட்டே

========================================================================

ஒரு நாளு சுப்பு ரோட்டுல நடந்து போய்க்கிட்டு இருந்தாரு,

"நில், இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் தலை மேல் செங்கல் விழுந்து இறந்து போவாய்" - எங்கோ இருந்து வந்த குரலைக்கேட்டு அங்கேயே நின்றார்

அது போலவே ஒரு செங்கல் அவர் முன் விழுந்தது

கொஞ்ச தூரம் நடந்தார் திரும்பவும்

"நில், இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் மேல் ஒரு கார் இடித்து இறந்து போவாய்"  அங்கேயே நின்றார் சுப்பு

சொன்னது போலவே ஒரு கார் அவரை கடந்து சென்றது

"யார் நீ? எங்கிருந்து  பேசுகிறாய்?" சுப்பு கேட்டார்

"நான் உன் காவல் தெய்வம் உனக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் உன்னை எச்சரித்து காபாற்றவே இருக்கிறேன்"

"இப்ப எல்லாம் காப்பத்துன நீ என் கல்யாணதப்ப எங்கே இருந்தே ஏன் என்னை எச்சரிக்காம போனே?"

"அப்போதும் நான் இப்பிடி தான் கத்துனேன், ஆனா உனக்கு தான் காது கேக்கலை"

========================================================================

சுப்பு காதுல மாட்டுற ஹியரிங் எய்ட் வாங்கணும்ன்னு கடைக்கு வந்தாறு

"ஹியரிங் எய்ட் எவ்வளவுப்பா?"

"பத்தாயிரம் ரூவா ஸார்" கடையில இருந்த பையன் சொன்னான்

"ஒண்ணும் கேக்கலை"

பையன் கொஞ்சம் சத்தமா "பத்தாயிரம் ரூவா ஸார்"

"கொஞ்சம் கம்மியா கெடைக்குமா?"

"சரி ஒரு நூறு ரூவா குடுங்க"

பையன் ஒரு ஹியரிங் எய்ட் மாதிரியே ஒண்ண எடுத்துட்டு வந்து "இதை காதுல மாட்டுங்க அப்புறம் இதை பேன்ட்-ல வைங்க"

"இது நல்லா வேலை செய்யுமா?" சுப்பு கேட்டாரு

"இது வேலையே செய்யாது, ஆனா இத பாக்குறவங்க  உங்ககிட்ட கொஞ்சம் சத்தமா பேசுவாங்க உங்களுக்கு கேக்கும்"  அப்பிடின்னான் கொஞ்சம் சத்தமா..

========================================================================

ஒரு நாளு ஒரு ட்ராஃபிக் போலீஸ் ஒரு மறைவான எடத்துல இருந்து போற வர்ற வண்டிய எல்லாம் நோட் பண்ணிக்கிட்டே இருந்தாரு, எவனாவது ஓவர் ஸ்பீட்-ல போன, ட்ராஃபிக் ரூல்ஸ்-ஐ வயலேட் பண்ண நிறைய காசு பாக்கலாம்ன்னு ஒரு நப்பாசை

அன்னைக்கு அவருக்கு கெட்ட நேரம் எல்லோரும் சரியா வண்டி ஒட்டிக்கிட்டு போனாங்க. போலீஸ்க்கு குழப்பம், இங்க நம்ம   மறைஞ்சி தானே நின்னுக்கிட்டு இருக்கோம் எப்பிடி எல்லோரும் சரியா வண்டி ஒட்டுராங்களே அப்பிடின்னு

ஒரு மணி நேரம் ஆச்சு ரெண்டு மணி நேரம் ஆச்சு ஹுகூம் ஒரு கேஸ் கூட மாட்டுற மாதிரி தெரியல, ஏதோ தப்பு நடக்குதுன்னு மட்டும் தெரிஞ்சது, சரி என்னானு பாக்கலாம்ன்னு வெளியே வந்தாரு. வந்தவருக்கு அதிர்ச்சி 300 அடிக்கு முன்னாடி
" ட்ராஃபிக் போலீஸ் உஷார் " ன்னு போர்டு வச்சுக்கிட்டு ஒரு பையன் நின்னுக்கிட்டு இருந்தான், அந்தப்பக்கம் பார்த்தா இன்னொரு பையன் "செய்த உதவிக்கு உங்களால் முடிந்த்தது" அப்பிடின்னு ஒரு போர்டோட அவன் காலுக்கு கீழே ஒரு பை நிறைய சில்லறை..

எப்பூடி!!??
========================================================================

நல்ல குழந்தை தான் வீட்டிலும்,
நல்ல மனைவி பக்கத்து வீட்டிலும்
இருக்கிறார்கள் என்று நினைப்பது
ஆணின் மனம்

========================================================================

எந்த ஒரு ஆணும்
தாய் நினைப்பது போல அழகாய் இருக்க வேண்டும்
பிள்ளை நினைப்பது போலே பணக்காரனாய் இருக்க வேண்டும்
பெண்டாட்டி நினைப்பது போலே ஒரு சின்ன வீடாவது இருக்க வேண்டும்
என்று நினைக்கிறான் ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை
என்பதை நினைக்க மறக்கிறான்
========================================================================

நீ அசிங்கமாய் இருக்கிறாய் என்று யாராவது சொன்னால்
பரவாயில்லை கவலைபடாதீர்கள்
நீ முட்டாள் என்று யாராவது சொன்னால்
பரவாயில்லை கவலைபடாதீர்கள்
நீ அறிவாளி என்று யாராவது சொன்னால்
அறைந்துவிடுங்கள்,  கேலி செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

குப்பைத்தொட்டி - தனி தெலுங்கானா போராட்டம்

தனி தெலுங்கானா போராட்டம்  

இந்தியாவின் விடுதலைக்குப்பின் இந்தியாவின் பல்வேறு மாகாணங்கள் சிறு சிறு அரசர்களின் ஆட்சியில் இருந்தது அதில் ஒன்று  ஐதராபாத்.  ஐதராபாத்தின் நிசாம் தன்னாட்சியை தொடர விரும்பினார். ஆனால் ஐதராபாத்தில் இருந்த இந்துக்கள் எல்லாம் இந்தியாவுடன் இணைவதையே விரும்பினர். அப்போதைய கணக்கின் படி இந்துக்கள் அதிகம் இருந்தனர்  (93% சதவீதம்). அவர்கள் எல்லாம் சேர்ந்து "JOIN INDIA"  என்ற இயக்கம் தொடங்கி நிசாமிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது இருந்த காங்கிரஸ் தலைவர்களும், கம்யூனிஸ்ட்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாய் இருந்தனர். ஆனால் நிசாம் அவர்களை ஒடுக்க தன் படையின் துணையோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். 

புதிதாக அமைந்த இந்திய அரசு செப்டம்பர் 17,1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கையை நிசாமிற்கு எதிராக துவங்கியது.  திரு J. N. சௌதாரி தலைமையில் ஐதராபாத நகருக்குள் புகுந்த இந்தியா இராணுவம் நிசாமின் படைகளை துவம்சம் செய்தது, இதன் மூலம் ஐதராபாத் நாடு இந்தியா வசம் ஆனது.

கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951வரை தொடர்ந்தது. இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமஸ்தானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்ச் காலனி ஏனாமிலும் இருந்தன.  இவை எல்லாம் ஒன்று சேர்த்து "விசாலஆந்திரா" என்பதே அவர்களின் கனவாக இருந்தது.  இறுதியில் பொட்டி ஸ்ரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராஸ் மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது. டிசம்பர் 1953இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை ஏற்படுத்தினார்.

உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது.அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர்1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு,நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு ஒன்றை அளித்தது. இந்த உடன்படிக்கையின் படி தெலுங்கானா பகுதியில் உள்ள அடிலாபாத், நிஜாமாபாத், மேடக், கரீம்நகர், வாரங்கல், கம்மம், நலகொண்டா, மகபூப்நகர் மற்றும் ஹைதராபாத் ஆந்திராவுடன் இணையும், மேலும் ஹைதராபாத் தலைநகர் ஆக்கப்படும் என்றும் ஆந்திரா இனி ஆந்திர பிரதேசம் என்று அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, மேலும் தெலுங்கானா பகுதிக்கான கவுன்சில் ஒன்று அமைக்கப்படும், அது தெலுங்கானா பகுதியில் வளர்ச்சிப்பணிகளை அல்லது திட்டங்களை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. 

தனி தெலுங்கானாவுக்கான போராட்டம்

1956ஆம் ஆண்டின் பெருந்தகையாளர் உடன்பாட்டின்படி தெலுங்கானாவிற்கு உரிய பகிர்வுகள் மற்றும் உறுதிகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். தெலுங்கானா மற்றும் ஜெய் ஆந்திரா இந்த இரண்டு இயக்கங்களும் 1969 முதல் 1972 வரை ஆந்திராவை ஸ்தம்பிக்க வைத்த போரட்டங்கள், சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவே பரவி தெலுங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர்.இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.

ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரஸ் தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும், கட்சி தலைமைக்கு (இந்திரா காந்தி) தனி தெலுங்கானாவில் விருப்பம் இல்லை என உணர்ந்தார், இதை தொடர்ந்து அப்போதைய முதல்வர் பிரம்மானந்த ரெட்டி  ராஜினாமா செய்ய செப்டம்பர் 1971 இல் P.V. நரசிம்ம ராவ் முதல்வர் ஆனார், தெலுங்கானா பிரஜா சமிதி கட்சி உறுப்பினர்கள்  தமது கொள்கைகளைக் கைவிட்டு காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.

1972 இல் துவங்கிய ஜெய் ஆந்திரா போராட்டம் இன்னொரு மிகப்பெரிய போராட்டமாக பார்க்கப்படுகிறது,  முல்கிகள் (தெலுங்கானா பகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள்) மட்டுமே தெலுங்கானா பகுதியில் மற்றும் ஹைதராபாத் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடங்கப்பட்ட போராட்டம். இதை எதிர்த்து மாநில அரசு உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது, அந்த வழக்கை விசாரித்த 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முல்கி சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பெயல் செய்த இந்த வழக்க்கின் தீர்ப்பு உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராய் வந்தது, 3 அக்டோபர் 1972 இல் வெளியான தீர்ப்பு ஆந்திரா அரசியலில் புயலை கிளப்பியது.

பிற பகுதியை சேர்ந்த ஆந்திர மக்கள் தலைநகரில் தங்களின் உரிமை இழந்து விட்டதாய் நினைத்தனர், இதை தொடர்ந்து வன்முறை நிகழ்வுகளும் தொடர்ந்தன, எனவே ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமுலுக்கு வந்தது.   அதன் பிறகு மெல்ல மெல்ல சகஜ நிலை திரும்பியதும் 1973இல் குடியரசு தலைவர் ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் அரிதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது, திரு. சென்னா ரெட்டி அவர்கள் ஆறாவது முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்ற பின் தனி தெலுங்கானா இனி ஒரு பிரச்சனையாய் இருக்காது என்று அறிவித்தார், அதன் விளைவு கட்சியில் அவருக்கு எதிரான உள்ளடி வேலைகள் நடக்க துவங்கின, விளைவு 1980 இல் ராஜினாமா செய்தார், அதன் பின் T. அஞ்சனையா முதல்வர் ஆனார் ஆனால் அவரும் 1 வருடம் 4 மாதங்களில் பதவியை இழந்தார், அதன் பின் பொறுப்புக்கு வந்த பவனம் வெங்கட்ராமன் மீண்டும் பதவியை இழக்க நேர்ந்தது, அதன் பின் ஸ்ரீ கே. விஜய பாஸ்கர ரெட்டி முதல்வர் ஆனார், அதாவது 4 ஆண்டுகளுக்குள் 4 முதல்வர்கள் மாறும் ஒரு மோசமான சூழ்நிலை நிலவியது ஆந்திராவில். 

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தெலுங்கு தேசம் என்ற கட்சியை துவங்கி ஆட்சியை கைப்பற்றினார் திரு N. T. ராமா ராவ்.  அவருடைய அரசும் தந்திரமாக கலைக்கப்பட்டது, இருந்தாலும் மறு முறையும் வென்று முதல்வர் ஆனார் NTR. ஆனால் அடுத்த முறை அவர் கொண்டு வந்த சில சட்டங்கள் மக்கள் விரும்பாத காரணத்தினால் 1989இல் காங்கிரஸ்க்கு வாக்களித்து மீண்டும் சென்னா ரெட்டி முதல்வர் ஆனார்.  பிறகு உட்கட்சி பூசலால் சென்னா ரெட்டிக்கு பதில் ஜனார்த்தன ரெட்டி முதல்வர் ஆனார், பின் அவரும் ராஜினாமா செய்தார் பின் விஜய பாஸ்கர ரெட்டி  முதல்வர் ஆனார். இதை கண்ட மக்கள் வெறுப்படைந்து மீண்டும் அடுத்த தேர்தலில் 1994 தெலுங்கு தேசத்திற்கு வாக்களித்து என்‌டி‌ஆர் முதல்வர் ஆனார், அடுத்த தேர்தலிலும் 1999இல் தெலுங்கு தேசம் வெற்றி பெற்று  சந்திரா பாபு நாயுடு முதல்வரானார்.   பின் 2004-இல் YSR என்று அழைக்கப்படும் ஒய்‌. எஸ். ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.     

இருபது ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த இயக்கத்திற்கு 1990களில் பாரதிய சனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலுங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்து புத்துயிர் ஊட்டியது.ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பினால் அதனை நிறைவேற்றமுடியவில்லை.காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலுங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர். அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி(TRS)என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் டி‌ஆர்‌எஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின. மைய அரசின் பொது குறைந்த திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.அவ்வுறுதியின் அடிப்படையில் டி‌ஆர்‌எஸ்-ம்  கூட்டணி அரசில் பங்கேற்றது. இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் டி‌ஆர்‌எஸ் கூட்டணியிலிருந்து விலகியது.

காங்கிரசு அரசிற்கு தெலுங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது. மார்ச் 2008இல் அனைத்து டி‌ஆர்‌எஸ் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர். ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் டி‌ஆர்‌எஸ் தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏழையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டையும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.

இதனிடையே தெலுங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலுங்கானா பிரஜா கட்சியை துவக்கினார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும் தெலுங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.

2009 பொதுத் தேர்தல்களின் போது டி‌ஆர்‌எஸ் மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர். புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியும் தெலுங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர்.நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தனர்.  இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தன;மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது.முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

டிசம்பர் 2009: டி‌ஆர்‌எஸ் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் (KCR)தமது கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார்.அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் மீண்டும் எழுந்துள்ளது. டிசம்பர் 2009, 10-ஆம் நாளன்று, இந்திய மைய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று அறிவித்தது. இதற்கான அறிவிப்பை மைய உள் துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அதே நாளில் வெளியிட்டார்.

இன்னும் குப்பையை கிளறுவோம் - அடுத்த வெள்ளிக்கிழமை