வெள்ளி, செப்டம்பர் 16, 2011

அணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி

வணக்கம் உறவுகளே,

இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி)  .  தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் நம்ம நண்பர் சக பதிவர் கூடல் பாலா (தொடர்புக்கு +919940771407) அவர்களும் உண்ணாவிரதம் இருக்கிறார், அவருக்கு ஆதரவாக சக பதிவர்களும், பிளாக், ட்விட்டர், ஃபோன் என தங்களால் இயன்ற வழியில் ஆதரவும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நானும் இப்ப அந்த ஜோதியில ஐக்கியம் ஆயிட்டேனே

இங்கே போராடும் மக்களுக்கு ஆதரவாக நிறைய கட்சிகள் ஆதரவு குரல்களும் எழுப்பி உள்ளன. மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பல தலைவர்களும் போராட்டத்திற்கு வரக்கூடும் என்று எதிர் பார்க்கிறோம்.  இதில் சில பல உள்குத்துகளும் உண்டு, ஆளும் கட்சிக்கு தலைவலி  கொடுக்கவேண்டும்.. (வேண்டாம் நமக்கு அரசியல் எஸ்கேப்) 

சரி விசயத்துக்கு வருகிறேன்.

இன்னைக்கு நாம் நாட்டின் மின் தேவை 568 பில்லியன் கிலோ வாட்ஸ்.  இவ்வளவு கரெண்ட் எதுக்குன்னு மலைக்காதீங்க, எல்லாத்துக்கும் நாம தான் காரணம். என்ன புரியலையா  அதை கடைசி சொல்லுறேன்

தற்போதைய கணக்குப்படி மின்சாரம்

அனல் மின்நிலையங்கள் மூலம் 65.34%
நீர்மின் நிலையங்கள் மூலம்    21.53%
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள்  மூலம் 10.42%
(காற்று/எரிவாயு/சூரிய சக்தி)
அணு மின் நிலையங்கள் மூலம் 2.70%  நமக்கு கிடைக்குது

அப்ப கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு US$ 3.5 பில்லியன் எதுக்கு செலவு பண்ணனும் அப்பிடின்னு நீங்க கேக்குறது புரியுது. இன்னும் பத்து முதல் 15 வருடங்களுக்குக்குள் இப்போது இருக்கும் நிலக்கரியில 90% பயன்படுத்தப்பட்டுவிடும், இதனால் அனல் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்த வேண்டிய நிலைமை வரும். அப்போ அந்த 65% மின்சாரத்துக்கு என்ன பண்றது காத்தும் / தண்ணியும் கேரண்டீ இல்லை. மழை / காத்து இருக்குறப்பதான் இது சரியா வரும் மத்த நேரங்கள்-ல மின் உற்பத்தி பண்ண முடியாது  மழை ஒரு மூணு மாசம் நல்லா பெய்யும் காத்து கூட அப்பிடித்தான்.

இந்த நிலையில அணு மின்நிலையங்கள் குறைந்த செலவில் அதிக மின் உற்பத்திக்கு கை குடுக்கும்.   அதுக்கு தான் இப்ப இருந்தே தயாராகுறோம் அப்பிடின்னு அரசு சொல்லுது. அவங்க என்ன காரணம் சொல்லுறாங்கன்னா வருஷம் பூராவுமா சுனாமியும் நிலநடுக்கமும் வருது, எப்பாயாவது தானே வருது அதை எல்லாம் தாங்கக்கூடிய அளவுல இந்த மின்னிலையம் கட்டியிருக்கோம் பயப்படாதீங்க (அச்சம் தேவை இல்லை - முதல்வர் அறிவிப்பு)  . இதுக்கு முன்னாடி 2006 சுனாமி வந்த்தப்ப கல்பாக்கம் பத்திரமா தானே இருந்துச்சு? அப்பிடினும் கேக்குறாங்க அரசு தரப்புல.

அதை விட இன்னொண்ணு என்னான முக்கவாசி பணத்தையும் ஏற்கனவே செலவு (ஏப்பம்) பண்ணிட்டோம் ஏற்கனவே 100 மெகாவாட்  மின்சார உற்பத்தி நடந்துகிட்டு இருக்கு இப்ப நிப்பாட்டுனா முதலுக்கே மோசம் வந்துடும்ன்னு சொல்றாங்க அரசு தரப்புல. 

அதெல்லாம் சரி தான் அதுக்காக எப்பிடி உயிரை பணயம் வைக்கிறதுன்னு கேக்குறீங்களா?  நம்ம இஞ்சீனியருங்க அழகு தெரியாதா எங்களுக்கு ஒரு வேலை பார்த்துட்டு நிறைய வேலை முடிச்சுட்டோம்ன்னு ரிபோர்ட் குடுத்துவாங்க.  பாவம் அமைச்சருங்க, முதல்அமைச்சருங்க அவங்க ரிப்போர்ட்டை நம்பி எதையாவது சொல்லிடுவாங்க பின்னாடி ஏதாவது ஆச்சுன்னா அவஸ்தைப்படப்போறது எங்க புள்ள குட்டீங்க தானே ஏற்கனவே போபால் மக்கள் பட்ட அவஸ்தை இன்னைக்கு வரைக்கும் அவங்க வாரிசுகள் படுற அவஸ்த்தையை நாங்க மறக்கலைன்னு நீங்க சொல்லுறது எனக்கு புரியுது.  அதுவும் ஞாயம் தான்.

என்ன பண்றது இதுக்கு பின்னாடி இருக்குற அரசியல் உலக அரசியல், என்னான இந்த அணு உலை கழிவுகள் கொட்ட ஒரு எடம் வேணுமே  அவங்களுக்கு ஏற்கனவே வேண்டிய அளவு அவங்க நாட்டுல கொட்டி முடிஞ்சாச்சு.  அதனால நம்ம ஊரை அதுக்கு ஒரு குப்பைத்தொட்டி மாதிரி பயன்படுத்திக்கலாம்ன்னு நினைக்கிறாங்க அதனால தானோ இதுக்கு மட்டும் எவ்வளவு வேணா செலவு செய்யவும் தயாரா இருக்காங்களோன்னு ஒரு சின்ன சந்தேகம்..

சரி நாம எப்பிடி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருவது, நாம போயி உண்ணாவிரதம் இருக்கலாம் அவங்களோட சேர்ந்து ஆனா பிரச்சனை தீர்ந்துடுமா என்ன?  தீராதுன்னே தோணுது.   எப்பிடியும் சமாதானம் பேச வருவாங்க அது கூட ஆபத்து இல்லை, நமக்குள்ளேயே யாராவது கருப்பு ஆடு இருந்தா இன்னும் ஆபத்து. அவங்க விலை போயிட்டா போராட்டம் பிசுபிசுத்து போயிடுமே..   ஆனா இந்த போராட்டம் இதுக்கு முன்னாடி நடந்த மாதிரி இல்லாம வெற்றி மட்டும் அடையணும்ன்னு ஆசைப்படுறேன்.    

என்ன செயாலாம்ன்னு யோசிச்சேன்,  ஏன்னா இன்னைக்கு தனி நபர் மின் நுகர்வு இந்தியால தான் ஒரு ஆளு 704 கிலோ வாட்ஸ்ன்னு ஒரு ஆய்வு சொல்லுது.  நம்ம தேவைகளை கொஞ்சம் குறைச்சுக்கிட்டா உற்பத்தி பண்ண வேண்டிய நிர்பந்தமும் குறைஞ்சுடுமே.  தேவை இருந்தாத்தானே உற்பத்தி தேவை இல்லையினா என்ன பண்ணுவாங்க அதை பத்திரமா சேமிச்சும் வைக்க முடியாதே. அப்ப தேவையை குறைச்சுட்டா, சரி எப்பிடி எல்லாம் குறைக்கலாம் கீழே இருக்குற மாதிரி சில விஷயங்களை தவிர்த்தாலே மின் தேவையை குறைக்கலாம் ஏதோ நம்மால முடிஞ்சது

1.    காலையில எந்திருச்சு  கீசர் (Geyser) போட்டு திரும்ப தூங்கப்போறது.  1 மணி நேரம் கழிச்சு எந்திரிக்கும் போது அதுவே ஆஃப் ஆகி இருக்கும். அரை மணி நேரம் போட்டாலே தேவையான அளவு  சூடு கெடைச்சுடும் (சென்னை மக்கள் மன்னிக்கவும்) 

2.    முழிச்சிக்கிட்டு இருக்குற நேரம் எல்லாம் டி‌வி பாக்கணும்னு நினைக்கிறது

3.     பகல்-ல கூட பல்பு போட்டு விட்டு இருக்குறது

4.    நைட் 8 மணிக்கு மேலே எல்லா கடைகளையும் அடைச்சுடணும் இல்லை பெரிய பெரிய லைட் மட்டுமாவது அணைச்சுடனும்

5.    வீட்டுல இருக்குற மிக்ஸி கிரைண்டர் எல்லாம் எடுத்துவிட்டுட்டு அம்மிக்கல்லுக்கு மாறுனா உங்க வீட்டுக்காரம்மா (நீங்க கூட) சிலிம் ஆகுறது கன்பர்ம்

6 .     சாயந்தரம் ஒரு ரெண்டு மணி நேரம் பக்கத்துல இருக்க கோயிலுக்கோ / பார்க்குகோ நடந்து போயிட்டு வரலாம் அந்த ரெண்டு மணி நேரம் உங்க வீட்டு மின்சாரமும் குறையும், உடம்புல இருக்குற சுகரும் குறையும்

இன்னும் நாம நெனச்சா எதுவேணா செய்யலாம்... உங்களுக்கு தோணுனதை கமெண்ட்-ல போட்ட நெறையா பேருக்கு பயன் உள்ளதா இருக்கும்..

இந்த அவலம் வேண்டாமே  நமக்கு - சிந்திப்போமா ??







15 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான பதிவும் ஐடியாவும் சூப்பரா இருக்குங்கோ..!!!

பெயரில்லா சொன்னது…

நண்பரே உங்கள் பதிவு மிகவும் அருமை. ஆனால் அணு உலை கழிவுகளை கொட்டுவதற்கான குப்பை கூடம் நாம் என்பதில் ஒரு சிறு கருத்தை நான் முன் வைக்கிறேன். எந்த ஒரு நாட்டிலும் இருந்து அணு உலை கழிவுகள் இந்தியாவிற்குள் வந்தது இல்லை வரப்போவதும் இல்லை. அந்த கழிவு என்ற வார்த்தைக்கு பதிலாக அணு உலையில் பயன்படுத்தி மிஞ்சிய எரிபொருள் என்று நாம் சொன்னால் சாலவும் பொருந்தும். ஏனென்றால் இந்த மிஞ்சிய எரிபொருளை அடுத்த கட்ட அணு சக்திக்கு நாம் எரிபொருளாக பயன் படுத்த முடியும் என்று ஆய்வுகள் அறிவிக்கிறது. அணு சக்தியை ஆக்க பூர்வ வழிகளில் பயன்படுத்த மட்டுமே நம் நாடு உறுதி பூண்டுள்ளது என்பதை நாம் மனதில் கொண்டாலே போதும் .. தங்களுக்கு என் பாராட்டுகள்

Unknown சொன்னது…

@பெயரில்லா

நன்றி நண்பரே!!

மிச்சம் என்பது கழிவு தானே?

நாம் என்ன ரோட்டோரத்தில் வடை கடையா போட்டு இருக்கோம் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மறுமுறை பயன்படுத்த ??

ஏற்கனவே இப்பிடித்தான் ரிட்டயர் ஆனா போர் கப்பல், போர் விமானம் எல்லாம் நம்ம தலையில கட்டி இருக்காங்களே?

இன்னும் எத்தனை நாள் இப்படியே செகண்ட் ஹான்ட்-ஆகவே இருக்கிறது?

மகேந்திரன் சொன்னது…

கூடங்குளம் மூடும்வரை
போராட்டம் தணியோம்

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.

கோகுல் சொன்னது…

தங்கள் பங்களிப்புக்கு நன்றி நண்பரே!

Thennavan சொன்னது…

//
பெயரில்லா பெயரில்லா கூறியது...

அணு சக்தியை ஆக்க பூர்வ வழிகளில் பயன்படுத்த மட்டுமே நம் நாடு உறுதி பூண்டுள்ளது என்பதை நாம் மனதில் கொண்டாலே போதும் ..//

நாட்டை அடமானம் வைக்கின்ற அரசியல்வாதிகளிடம் இந்த கொள்கையை எதிர்பார்க்க முடியுமா ?

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தேவையான நேரத்தில் தேவையான பதிவு.....

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

என் வலையில்:

சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை

M.R சொன்னது…

வித்தியாசமாக சிந்தித்து உள்ளீர்கள் நண்பரே

கண்டிப்பாக மின் உபயோகம் குறைக்க வேண்டும்

N.H. Narasimma Prasad சொன்னது…

நல்ல ஒரு பொதுநலப் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

kobiraj சொன்னது…

மிகவும் அவசியமான பதிவு .ஓட்டு போட்டாச்சு .இதை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,

வீக்கெண்ட் பிசியாகிட்டேன்.
அதான் வர முடியலை.
கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்தேன்.


தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

நிரூபன் சொன்னது…

காத்திரமான பதிவினைத் தந்திருக்கிறீங்க நண்பா.

தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தின் அளவு,

அணு உலைகள் மூலம் ஏற்படும் விளைவுகள் என நல்லதோர் அலசல்...

அடுத்த பதிவிலிருந்து வழமையான கமெண்ட் போர்மிற்கு திரும்புகிறேன்.

பெயரில்லா சொன்னது…

நமக்குதான் கூழ்க்கும் ஆசை மிசைக்கும் ஆசையச்சே!