விதி 1:
வாழ்க்கை எப்போதும் சிறப்பானது இல்லை, முடிந்தவரை அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்
விதி 2:
உலகம் உங்கள் சுய மரியாதையை பற்றி கவலைப்படுவது இல்லை உங்களை பற்றி நீங்கள் அறியும் முன் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும்.
விதி 3:
நீங்கள் உங்கள் உயர் பள்ளி கல்வி முடித்தவுடன் ஆண்டுக்கு 60,000 சம்பாதிக்க முடியாது, நீங்கள் ஒரு காரும் போனும் சம்பாதிக்கும் வரை நீங்கள் ஒரு துணை தலைவராக கூட முடியாது.
விதி 4:
நீங்கள் உங்கள் ஆசிரியர் கடினமானவர் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு முதலாளி வரும் வரை காத்திருக்க.
விதி 5:
வாழ்க்கையில் திருப்பங்கள் வரலாம் அது உங்கள் கண்ணியத்தை கீழே தள்ளுவது போலும் இருக்கலாம், நம் மூதாதையர் அதை வாய்ப்பு என்றே அழைத்தனர்.
விதி 6:
இனி என்ன செய்வது என்று நீங்கள் குழம்புகிறீர்கள் என்றால், அது உங்கள் பெற்றோர்கள் தவறு இல்லை, எனவே உங்கள் தவறுகளை பற்றி புலம்ப தேவை இல்லை, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.
விதி 7:
உங்கள் பள்ளி வென்றவர்கள் தோல்வியாளர்களையும் கடந்து இருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் அப்படி இல்லை. சில பள்ளிகளில், அவர்கள் தோல்வியாளர்களை நீக்கி இருக்கலாம் மேலும் வெற்றியாளர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கி இருக்கலாம். இது நிஜ வாழ்க்கையில் நிகழுவதில்லை, எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது, அதை சரியாக பயன்படுத்தியவர்கள் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள், எனவே வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்
விதி 8:
வாழ்க்கை செமஸ்டர்கள் போல பிரிக்கப்பட்டுள்ளது அல்ல. இங்கு கோடை விடுமுறை இல்லை, வெகு சில முதலாளிகளே உங்களுக்கான நேரத்தை அறிய உதவி செய்கிறார்கள், அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
விதி 9:
அறிவார்ந்தவர்களோடு அன்பாய் இருங்கள். வாய்ப்புகள் நீங்கள் ஒருவரின் கீழ் பணிபுரியும் போது முடிந்து போகிறது.
விதி 10 :
வாழ்க்கை ஒரு தொலைக்காட்சி பெட்டி போல அல்ல உண்மையில் நாம் ஓய்வைப்பற்றி சிந்திக்காமல் உழைப்பை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டியிருக்கிறது
பின்குறிப்பு :
மேலே சொன்னது எல்லாம் நான் சொன்னது இல்லீங்க, பில்கேட்ஸ் சமீபத்தில் ஒரு பள்ளியில் ஆற்றிய உரை. பள்ளிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி பற்றி பேசி இருக்கிறார்.
எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை!
புதன், ஜூலை 20, 2011
செவ்வாய், ஜூலை 19, 2011
கல்யாண பரிசு
ஜனவரி 14,1997 மெரினா பீச் இரவு 8 மணி
"ஐ லவ் யு கல்பனா" சொன்ன சுந்தரை எரித்துவிடுவது போல் பார்த்தாள் கல்பனா
"இதுக்குதான் இத்தனை நாள் நல்லவன் மாதிரி என்கூட பழகுனியா?"
"எல்லோர் மாதிரி என்னையும் நினைச்சுடாதே கல்பனா, உண்மையிலேயே உன்னை கல்யாணம் செய்துக்க விரும்புறேன்"
"இனி என் மூஞ்சியிலேயே முழிக்காதே" சொன்ன கல்பனா திரும்பி பார்க்காம நடந்தாள்.
ஜனவரி 15,1997 தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் காலை 5 மணி
"ஏண்டா உங்கள மாதிரி ஆளுகளுக்கு வேற வேலையே இல்லையா? நல்ல நாளு அதுவுமா ஏண்டா இப்பிடி ஒரு வேலை பண்ணே?" கோவத்துடன் அருகே வந்த சப்-இன்ஸ்பெக்டர் பழநியை அலட்சியத்துடன் பார்த்தான் சுந்தர்
"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்ன இங்கயே கொன்னு பொதைக்கணும் போல இருக்கு... "
"அதை தானே ஸார் நான் செய்ய பார்த்தேன், நீங்க செஞ்ச சரி நான் செஞ்சா தப்பா?"
"எகத்தாளத்த பாரு உன்னை எல்லாம் கஞ்சா கேஸ்-ல உள்ள தூக்கி போட்ட தான் சரியா வருவே"
"ஸார்..."
சத்தம் கேட்டு திரும்பிய பழனி, வாசலில் கல்பனாவை பார்த்தார்
"என்னம்மா வேணும்"
"அவரு இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டாரு இந்த தடவை மன்னிச்சு விட்டுடுங்க ஸார் பிளீஸ்"
"சரிம்மா உன்னை பார்த்தா பாவமா இருக்கு, உனக்காக இந்த பயல வெளியே விடுறேன். இனி இந்த மாதிரி ஏதாவது பண்ணே உனக்கு வாழ்க்கை பூரா ஜெயிலு தான் ஞாபகம் வச்சுக்க. "
"இங்க ஒரு கையெழுத்து போட்டு கூட்டீட்டு போம்மா"
ஜனவரி 15,1997 சைதாபேட்டை காலை 7:00 மணி
"ஏண்டா இப்பிடி பண்ணினே?"
"பின்னே என்னை பார்க்காதேன்னு சொல்லிட்டு நீ போயிட்டே.... வலிக்குதுல"
"அதுக்காக யாராவது சாவாங்களா? இனிமே இப்பிடி எல்லாம் பண்ணாதே. ஐ டூ லவ் யுடா "
பிப்ரவரி 14, 1997 காலை 9 மணி
"வாங்க சார் இப்பதான் மணி உங்களுக்கு 8 ஆகுதோ?" செல்லமாய் குட்ட வந்த கல்பனாவை சமாளித்த சுந்தர்
"உனக்கு ஒரு கிஃப்ட் வாங்க போனேன் கடைக்காரன் கொஞ்சம் லேட் பண்ணீட்டான்"
"பொய் சொல்லாதேடா கடன்காரா"
"இன்னைக்கு பூரா என்கூட தான் இருக்கே"
"ஐயோ முடியாதுப்பா வீட்டுல திட்டுவாங்க"
ஏப்ரல் 1 , 2000 மெரினா பீச் பகல் 4 மணி
"சுந்தர் தயவு செய்து நான் சொல்லுறதை கேளு, எங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டேன்கிறாங்க."
"நீயோ இன்னும் வேலை தேடிக்கிட்டு இருக்கே, இந்த நிலைமையில நாம பிரியிறது தான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லதுன்னு தோணுது"
"நீயும் ஒரு நாள் பெரிய ஆளாய் வருவே, எனக்கு தெரியும் இது கொஞ்சம் கஷ்டம் தான், ஆனா வேற வழி இல்லை சுந்தர்"
"பேசி முடிச்சுட்டியா கல்பனா, இது தான் உனக்கு சந்தோசம்ன்னா இதை செய்ய நானும் தயார், நாம நண்பர்களாகவே பிரிஞ்சுடுவோம்"
ஜூன் 26, 2000 கலைஞர் திருமண மண்டபம் தேனாம்பேட்டை காலை 8 மணி
"முகூர்த்ததிற்கு நேரம் ஆச்சு பொண்ண கூட்டிக்கிட்டு வாங்க" பிரோகிதர் சொல்ல
மெல்ல மணமேடையில் வந்து அமர்ந்தாள் கல்பனா
"எப்பிடியோ நம்ம பொண்ணு மனசு மாறி கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டா, சந்தோஷமா இருக்கு கல்யாணி"
"ஆமாங்க..."
"கெட்டி மேளம் கெட்டி மேளம் ......"
ஜூன் 26, 2000 கல்பனா வீடு மாலை 7 மணி
"என்னாங்க சீக்கிரம் இந்த லிஸ்ட்-ல இருக்க சாமான் எல்லாம் வாங்கீட்டு வாங்க படபடத்தாள் கல்யாணி"
"கல்பனா நீங்க இந்த கிஃப்ட் எல்லாம் கொஞ்சம் பார்த்து எடுத்து வச்சுக்கமா அப்புறம் அதை காணோம் இதை காணோம் ன்னு சொல்லக்கூடாது"
"என்னங்க வாங்க கிஃப்ட் எல்லாம் பார்க்கலாம் - சங்கரை கூப்பிட்டு" கிஃப்ட் இருந்த அறைக்குள் நுழைந்தாள் கல்பனா
"இது லக்ஷ்மி குடுத்தது இது குமாரி குடுத்தது, நல்லா இருக்கு" சொல்லியபடி எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.
"இது ஏதோ வித்தியாசமா இருக்கு கல்பனா, புல்லா கண்ணாடியில ஷீல்ட் பண்ணி இருக்கு ஒரிஜினல் இதயம் மாதிரி இருக்கு கீழே சுந்தர்ன்னு போட்டு இருக்கு, யாரது கல்பனா" கேட்டு கொண்டு இருக்கும் போதே கண்ணாடி பேழை கீழே விழுந்து உடைந்தது. உள்ளே இருந்து கெட்ட வாடை.
ரத்தம் உறைந்த நிலையில் ஆம் அது சுந்தரின் உண்மையான இதயம்,
என்ன கதை படிச்சுட்டீங்களா?
இப்ப கேள்வி :
சுந்தர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை இது ஒரு கொலையா? சொல்லுங்க பார்க்கலாம்...

திங்கள், ஜூலை 18, 2011
மூன்றில் அடங்குகிறது என் வாழ்க்கை (தொடரும் பதிவு)
என்னை தொடர் பதிவு எழுத அழைத்த நண்பர் கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கு நன்றி. உங்கள் பதிவை தொடர்ந்து இந்த பதிவு ஆகவே கேள்விகள் உங்களுடையது பதில் என்னுடையது. தலைப்பை கூட அப்பிடியே வச்சுக்கிட்டேன் (என்ன ஒரு சோம்பேறித்தனம் மைண்ட் வாய்ஸ்)
1) நான் விருப்பும் மூன்று விஷயங்கள்...?
* நல்ல சாப்பாடு எனக்கு மட்டும் இல்லை உலகில் இருக்கும் எல்லா ஜீவனுக்கும் (இந்த நிமிடம் எத்தனை ஜீவன்களுக்கு உணவு கனவாய் இருக்கிறதோ)
* சுதந்திரம்
* நேர்மை/உண்மை
2) நான் விருப்பாத மூன்று விஷயங்கள்
* துரோகம்
* சமூக அக்கறை இன்மை (எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என இருப்பது)
* பொறாமை
3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்
* வாழ்க்கை - பயம் மட்டுமே நேரான வாழ்க்கை வாழ வைக்கும்
* நண்பர்கள் - எப்போதும் நண்பர்களாகவே இருக்க வேண்டுமே!!??
* ஒழுக்கம் - எப்போது எங்கே தவறும் யாருக்கும் தெரியாது, ஏன் என்றும் சில நேரம் தெரியாது
4) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?
* அஞ்சலி
* ஆயிரத்தில் ஒருவன் - பழையது
* நான் சிவப்பு மனிதன்
5) நான் விருப்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?
* சாரை காத்து வீசும் போது சாரை பார்த்து பேசும் போது சாரைப்பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே (வாகை சூட வா)
* அவனை பத்தி நான் பாட போறேன் (அவன் இவன்)
* திமு திமு தீம் தீம் தினம் அல்லாடும் மனம் (எங்கேயும் காதல்)
6) எனக்கு பிடித்த மூன்று உணவுகள்...?
* சூடாய் இட்லி + நெய்பொடி
* கருவாட்டு குழம்பு வித் ஃபுல் மீல்ஸ்
* சப்பாத்தி + உருளை குருமா
7) இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?
* சிகரட்
* வேலை
* நொறுக்கு தீனி (1 மணி நேரத்துக்கு ஒரு தடவை ஏதாவது உள்ள போயி கிட்டே இருக்கணும் ஹி ஹி ஹி)
8) கற்று கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்..?
* ரௌத்திரம்
* பொய் (உண்மை பேசியதால் நிறைய எதிரிகள் உண்டு)
* நல்லா எழுத
9) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்....?
* மன்னிப்பு
* பிச்சை - நான் மட்டும் அல்ல யாரும்
* அழுகை
10) நான் பெருமையாய் நினைக்கும் மூன்று ...?
* உயிர் நண்பர்கள் - துவண்ட போது எல்லாம் தோள் குடுத்தவர்கள், தவறுகளை சுட்டி காட்டி திருத்தியவர்கள்
* என் குடும்பம் - (எவ்வளவு அலும்பு பண்ணாலும் பொறுத்துக்கொள்கிறார்களே!!!)
*என் பணி
11) எனக்கு புரியாத மூன்று விஷயம்...?
* உலகம்
* பணம்
* மனிதம்
12) வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயம்...?
* ஒரு மரம் நட வேண்டும்
* ஒரு 100 பேருக்காவது ஒரு வேலை.
* உலகம் என் பெயர் சொல்ல வேண்டும் - காந்தி மாதிரி (என்ன ஒரு பேராசை ராஸ்கல்)
13) மறக்க முடியாத(கூடாத) மூன்று நண்பர்கள்...?
* என்னை பிளாக் எழுத தூண்டிய பதிவர்கள் பாமரன்/சேட்டைக்காரன்/சிபிசெந்தில்குமார்/ பிலோசபி பிரபாகரன் (என்னை பிறருக்கு அறிமுகம் செய்த நண்பர்) /நாஞ்சில் மனோ. இவர்களின் எழுத்துக்கள் என்னையும் எழுத தூண்டியது
* இந்த தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்த மேலும் என்னை வலைசரம் மூலம் பலருக்கும அறிமுகம் செய்த நண்பர் கவிதை வீதி சௌந்தர்
* என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் கருத்துக்களை சொல்லி தொடர்ந்து உற்சாகப்படுத்தும் நண்பர் நிரூபன் (நேற்று முன்தினம் என் பிளாகில் உள்ள குறைகளை சொல்லி திருத்த வைத்த பெருமையும் இவரை சேரும்)
14) இதை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..?
* பாலா பக்கங்கள் - பாலா
* என் ராஜபாட்டை - ராஜா
* மகேந்திரன்

வெள்ளி, ஜூலை 15, 2011
நீங்கள் உங்கள் மதிப்பை எப்போதும் இழப்பது இல்லை.
சுப்பு, பேராசிரியர் மாணவர்கள் முன்னே நின்று கொண்டு இருந்தார். ஒரு ஆயிரம் ரூபாய் தாளை காட்டி
"இதன் மதிப்பு என்ன?" கேட்டார் சுப்பு
"ஆயிரம் ரூபாய், எந்த கடையில் சென்று கொடுத்தாலும் ஆயிரம் ரூபாய்க்கான பொருளை வாங்கலாம்" - மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்
"சரியாய் சொன்னீர்கள்" என்று சொல்லிவிட்டு அந்த ஆயிரம் ரூபாயை கசக்கினார், பிறகு "இதன் மதிப்பு என்ன?" திரும்பவும் கேட்டார்.
"அதே ஆயிரம் தான்" மாணவர்கள் சொன்னார்கள்
கீழே போட்டு மிதித்தார், மீண்டும் கைகளால் நன்கு உருட்டி எடுத்தார்
"இப்போது ?" திரும்ப கேட்டார்
"இப்போதும் இது ஆயிரம் ரூபாய் தான் இதன் மதிப்பில் மாற்றம் இல்லை" - மாணவர்கள் சொன்னார்கள்
இப்போது சுப்பு பேச துவங்கினார்
"இது தான் இன்றைய பாடம், நான் எவ்வளவு தான் கசக்கினாலும் இதன் மதிப்பு குறைவது இல்லை. அது போல் தான் நம் வாழ்க்கையும் நம் வாழ்வில் பல முறை, நாம் கசங்கியிருக்க, நாம் கைவிடப்பட்டது உள்ளது போல் உணர்கிறோம், சில சமயங்களில் நாம் எதற்கும் பயனற்ற ஜடம் போல உணர்கிறோம். நாம் செய்யும் முடிவுகள் நம்மை குப்பைமேட்டில் கூட தள்ளி விடலாம். எதற்கும் கலங்க வேண்டாம்.
எது எப்பிடி இருந்தாலும் நீங்கள் அந்த ஆயிரம் ரூபாய் போல உங்கள் மதிப்பை இழப்பது இல்லை. உங்களுடைய மதிப்பு எப்போதும் உங்களுடையதே. "

திங்கள், ஜூலை 11, 2011
கல்வி - அதிகாரவர்கத்தின் இன்னொரு வணிக வாய்ப்பு !!
இன்னைக்கு நம்மூர்ல சமச்சீர் கல்வி படுற பாடு எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம். இன்னைக்கு இந்தியாவின் சராசரி படிப்பறிவு சதவிகிதம் 74.04% (2011) ஆனா இது உலக சராசரியை (84%) விட குறைவு. இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களையும், வரைவுகளையும் நிறைவேற்றி உள்ளன.
கல்வி ஒரு அடிப்படை உரிமை எனவும் அறிவித்து உள்ளது இந்தியா அரசு ஆனாலும் இந்தியாவின் படிப்பறிவு மெதுவாகவே வளர்ந்து உள்ளது. அப்பிடின்னா எங்கயோ தப்பு இருக்கு, அது என்னான்னு பாக்குறதுக்கு முன்னாடி மத்திய அரசு என்ன மாதிரியான வரைவுகளுக்கு அனுமதி அளித்து இருக்குன்னு நாம தெரிஞ்சுக்கிறது அவசியம்.
2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச்சட்டம் அமுலுக்கு வந்தது, இதன் சிறப்பு அம்சம் என்னான்னா
1. 6 முதல் 14 வயதுவரை உள்ள எல்லா குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி
2. ஆரம்ப கல்வி முடியும் வரை எந்த குழந்தையையும் பள்ளியில் இருந்து நீக்க முடியாது
3. ஆண்டு இறுதி தேர்வில் வெற்றி பெறுதல் கட்டாயம் இல்லை (இது கொஞ்சம் எதிர் விளைவுகளை உருவாக்கும் அம்சம், எந்த புண்ணியவான் இதை சொன்னரோ)
4. பள்ளியில் சேர்க்கை பெறாத அல்லது பள்ளியில் சேர்ந்து இருந்தாலும் ஆரம்ப கல்வியை முடிக்காத 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை வயதுக்குரிய வகுப்பில் சேர்க்க வேண்டும். (இதுவும் ஒரு சர்ச்சைக்குரிய அம்சம் என்னான்னா நீங்க உங்க 11 வயது குழந்தையை நேரா ஆறாம் வகுப்பில் கொண்டு போயி சேர்க்கலாம்)
5. 14 வயதிற்கு மேலும் ஆரம்ப கல்வி முடிக்கவில்லை என்றால், ஆரம்பகல்வி முடியும் வரை கல்வி இலவசம்.
6. தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% ஒதுக்கீடு அளிக்கிறது.
7. திட்டத்திற்கான நிதிச்சுமை (56000 கோடி வருடத்திற்கு) மத்திய மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்
8 . பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் (குறைவாக உள்ள இடங்களில்) 3 ஆண்டுகளுக்குள் மேம்படுத்த வேண்டும் இல்லாயேல் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்
9. ஆசிரியர்கள் தகுந்த பட்டபடிப்புகள் முடித்து இருக்க வேண்டும் இல்லையேல் வேலையை இழக்க நேரிடும் இதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
நல்லா தானே இருக்கு, ஆனா ஏன் இது எல்லா எடத்துலயும் நடைமுறைக்கு வரலை என்ன சொல்லாறாங்க தெரியுமா
"மாநில அரசுகள் இந்த திட்டதிற்கான நிதி ஒதுக்கீடு செய்ய முன் வரவில்லை, எனவே இது மததி்ய அரசே ஏற்று நடத்த வேண்டிய கட்டாயம் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது."
"அரசின் கடமைகளை பிறர் தலையில் கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது" அப்பிடின்னு தனியார் பள்ளிகள் கூறிவிட்டன.
இதுல இருந்து என்ன தெரியவருதுன்னா எந்த ஒரு மசோதாவோ அல்லது திட்டமோ எந்த குழந்தையையும் பள்ளிக்கு வர வைக்காது எல்லோரும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும், எந்த திட்டமும் எல்லோருடைய பங்களிப்பும் சரியா இருந்தா மட்டுமே வெற்றியடையும்.
அப்ப ஏன் குழந்தைக்கு இலவச கல்வி கிடையாதான்னு கேக்குறீங்களா? இது அரசு பள்ளிகள்ல மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள்ல மட்டும் தான் செயல்படுத்த முடியும் போல இருக்கு. தனியார் பள்ளிகள்ல இது சாத்தியம் இல்லை. அப்புறம் நம்ம குழந்தைகளை அரசு பள்ளியில சேர்க்க நம்ம கௌரவம் இடம் தராது. சரி அதுக்காக தனியார் பள்ளியில இப்பிடி கொள்ளை அடிக்கிறாங்களே கேட்க யாருமே இல்லையான்னு கேக்குறீங்களா?
அதுக்கும் நீங்க தானே காரணம், எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை கந்து வட்டிக்கு வாங்கியாவது அந்த பள்ளிக்கூடத்தில ஏன் புள்ளையை சேர்த்தே தீருவேன்னு நிக்கிறீங்க. வசதியா இருக்கணும்ன்னா செலவு செஞ்சுதான் ஆகணும் ஒத்துக்கிறேன் ஆனா கல்வி ஹோட்டல் மாதிரி பஃப்பேன்னு சொல்லி சாப்பிடாத ஐட்டத்துக்கு எல்லாம் பில் போடுற மாதிரி அயிடக்கூடாதுல்ல.
ஏற்கனவே கல்வி கட்டண முறைப்படுத்துறோம்ன்னு தமிழக அரசு எடுத்த முயற்சிகள் என்ன ஆச்சு, எத்தனை பள்ளிகூடத்துல அந்த கட்டணம் வசூல் பண்ணாங்க? இன்னும் அதுக்கே நிறைய பள்ளிகள் ஒத்துக்கலையே அவங்க எப்பிடி இலவச கல்வி அப்பிடின்னா ஒத்துக்குவாங்க?
எல்லா தொழிலும் லாபமா நடக்கனும் தானே எல்லோரும் ஆசைபடுவாங்க கேக்குறீங்களா? அது கூட நியாயம் தான் ஆனா லாபம் மட்டுமே பிரதானம்ன்னு நினைச்சா வேற தொழில் பண்ணலாமே.
இன்னைக்கு தரமான கல்வி இந்தியால படிக்கணும்ன்னா குறைந்தபட்சம் ரூ 60,000 முதல் ரூ 75,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கிறது, சராசரியா மாதத்திற்கு ரூ 6,000 வரை. இது ஒண்ணும் டிகிரி படிக்க இல்லை ஒண்ணாம் வகுப்பு சேர்க்க ஆகும் செலவு மட்டுமே, அடுத்தடுத்த ஆண்டுகளில் இது குறையும் என்றாலும் குறைந்த பட்சம் 40,000 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. மாத வருமானம் 10,000 உள்ள குடும்பங்கள் மாதா மாதம் இவ்வளவு பணம் எங்கிருந்து செலவு செய்வார்கள்?
நான் எல்லாம் படிக்கும் போது எம்சிஏ-க்கு மூணு வருஷம் கட்டுனா பீஸ் ரூ 23,000 இன்னைக்கு ஒண்ணாம் கிளாஸ் சேர்க்க போன அதை விட ஜாஸ்தியா கேக்குறாங்களே என்னத்த சொல்ல. ரொம்ப வருசத்துக்கு முன்னாடியில பாஸு இப்பதான் ஒரு ஏழு வருசத்துக்கு முன்னாடி முடிச்சேன்.
அப்ப எங்க குழந்தைகள் தரமான கல்வி இலவசமா படிக்க வழியே இல்லையான்னு கேக்குறீங்களா? பள்ளிக்கூடம் எல்லாம் அரசுடைமை ஆனா மட்டும் தான் இது எல்லாம் சாத்தியம். எது எதுவோ அரசுடைமை ஆகுது இது ஆகாதா என்ன? அதுவும் இல்லாம இங்க இலவசமா குடுக்க வேண்டியது எல்லாம் குடுத்து முடிச்சாச்சுன்னு நினைக்கிறேன்.
அரசாங்கத்துக்கிட்ட எதிர்பாக்குறது எல்லாம் தரமான கல்வி, ஒரே மாதிரியான கல்வி அதுவும் நியாயமான கட்டணங்களில், எந்த அரசு இதை செய்யுமோ? இன்னொரு காமராஜர் வருவாரா?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)