சில நாவல்கள் புகழ் பெற்ற எழுத்தாளர்களால் எழுதப்பட்டு இருந்தும் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைக்கொண்டு இருக்கிறது என்று அரசும் மக்களும் நினைத்ததால் தடை செய்யப்பட்டன, அவற்றுள் சில இங்கே
1.Brave New World by Aldous Huxley
சுருக்கம்: இது 1931 ல் எழுதப்பட்டது, ஒரு வருடத்திற்கு பின்னர் 1932 இல் வெளியிடப்பட்டது. தொழில்மயமாக்கல் காலம் தான் கருப்பொருள், ஹக்ஸ்லி தொழில்மாயமாக்கலால் ஏற்படும் பேரழிவு விளைவு மற்றும் சமூகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விரிவாக சொல்லி இருந்தார்
ஏன் தடை செய்யப்பட்டது: முதலில் இந்த நாவல் அயர்லேண்ட்டில் தடை செய்யப்பட்டது குழந்தை பிறப்பை பற்றிய எதிர்மறை கருத்துக்கள் இடம் பெற்று இருந்ததால் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இது அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது, இது எதிர்மறை விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதால் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
2. The Grapes of Wrath by John Steinbeck
சுருக்கம்: 1939 இல் வெளியிடப்பட்டது ஸ்டெயின்பெக்கின் புலிட்ஃஜர் பரிசு பெற்ற நாவல், கிராமப்புற ஏழை பெருமந்த விளைவுகளை பற்றிய கதை. வறட்சி, பொருளாதார காரணங்களால், மற்றும் விவசாய துறையில் மாற்றங்கள் எப்படி மக்களை ஊருக்கு வெளியே விரட்டி அடிக்கப்பட்டனர் என்பதையும், அவர்கள் தங்களுக்கான வேலை மற்றும் நிலத்தை தேடியதை பற்றி விரிவாய் சொல்லி இருக்கிறார் ஸ்டெயின்பெக்கின்.
ஏன் தடை செய்யப்பட்டது? இலக்கிய உலகில் சிறந்த நாவலாய் இருந்த போதிலும், அதை பகிரங்கமாக அமெரிக்க தடை செய்தது மற்றும் பொது மக்கள் ஒட்டுமொத்தமாக அந்த நாவலை எரித்தனர். ஏழ்மை பற்றிய ஸ்டெயின்பெக்கின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அது அவர்களை மேலும் அதிர்ச்சியையே உருவாக்கி இருந்தது. அந்த கருத்துக்களை எல்லாம் நீக்கி மீண்டும் இன்னொரு பதிப்பு மேற்கொள்ளப்பட்டது.
3. Tropic of Cancer by Henry Miller
சுருக்கம்: 1934 இல் வெளியிடப்பட்டது, இந்த கதையின் ஆசிரியர் மில்லர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து எழுதி இருந்தார். தான் நண்பர்களும், உடன் வேலை செய்பவர்களும் எப்படி தன்னை கையாண்டார்கள் என்பதை விரிவாக வியல்க்கி இருந்தார்.
இதில் வெளிநாட்டில் வாழும் ஒரு அமெரிக்க குடிமகனின் நிலையை விளக்கி இருந்தார்
ஏன் தடை செய்யப்பட்டது? பாலுறவு பற்றி மில்லர் எழுதி இருந்தது சற்று முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் இது தடை செய்யப்பட்டது
4. Slaughterhouse-Five by Kurt Vonnegut
சுருக்கம்: 1969 இல் வெளியிடப்பட்டது, ஜெர்மானிய படைகளிடம் மாட்டிக்கொண்ட ஒரு போர் குற்றவாளியை பற்றிய கதை. அவர் சிறையில் செய்யப்பட்ட கொடுமையை விரிவாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ஏன் தடை செய்யப்பட்டது? போர் குற்றம் பற்றி எழுதப்பட்டு இருந்ததால் தடை செய்யப்பட்டது.
5. The Satanic Verses by Salman Rushdie
சுருக்கம்: 1988 இல் வெளியிடப்பட்டது, இந்த நாவல் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு புல பெயர்ந்த இந்தியரின் கதை. ஒரு விமான விபத்தில் இருந்து தப்பிய ஒரு நடிகரும், இன்னொரு சாமானிய மனிதரும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள முடிந்தது என்பதை பற்றிய நாவல்.
ஏன் தடை செய்யப்பட்டது? இந்த நாவலில் சில இடங்களில் இஸ்லாம் சமயம் பற்றிய அவதூறு கருத்துக்கள் இருந்தது. வெனிசுலா நாட்டில் இந்த நாவலை படிப்பவர்களுக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது, ஜப்பானில் அபராதம் விதிக்கப்பட்டது. அமெரிக்காவும் இந்த நாவலை தடை செய்தது.
மேலே சொல்லப்பட்டுள்ளது ஒரு துளி, இன்னும் இது போல் இன்னும் நிறைய நாவல்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டு இருக்கிறது. நேரம் கிடைக்கையில் அதையும் எழுதுகிறேன்.
இன்றைய சிந்தனை
1. வலி தவிர்க்க முடியாதது என்றாலும் அனுபவிப்பது நம் விருப்பம் மட்டுமே
2. உலகின் சிறந்த வலிநிவாரணி தாயின் முத்தம், இதற்கு இணையான மருந்து இன்னும் கண்டுபிடக்கப்படவில்லை
3. தைரியத்தை வளர்க்க சிறந்த வழி வலி.
இன்றைய லொள்ளு
15 கருத்துகள்:
நாவல்கள் பற்றி அறிந்து கொண்டேன் நன்றி மாப்ளே!
புதிய தகவலுக்கு நன்றி மக்கா....!!!
அம்மாவின் முத்தத்திற்கு ஈடேது...!!!
இவ்வளவு இருக்கா ?
நூல்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்...
மற்றும் இன்றைய சிந்தனையும் லொள்ளும் அழகு..
நாவல் தடை செய்யப்படாமல் சக்கை போடு போட்டு இருந்தா அவரோட தலையை சீவியிருவாங்களா?
நம்ம தளத்தில்:
போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)
தடை செய்யப்பட்ட நூல்கள் பற்றிய நல்ல பகிர்வு.
தடை செய்யப்பட நூல்களைப்பற்றி அறிமுகமம்.புதிய முயற்சி,தொடருங்கள்!
நூல்கள் அறிமுகம் செய்யும்போதே தடைசெய்யப்பட்டது
என்றென்னும் பொது கொஞ்சம் வேதனையாத்தான் இருக்குது...
கண்ணால பார்த்து கேட்டுபோகாததா படிச்சி பார்த்து கேட்டுட போறாங்க ...
அருமையான அறிமுகங்கள் நண்பரே...
யோவ் லொள்ளு பெரியவங்க சமாச்சாரம் மாதிரி தெரியுது...
தடை செய்யப்பட்ட நாவல்கள் பற்றி அருமையான பகிர்வு
வித்தியாசமான செய்தியுடன்.. அருமையான பதிவு..
தேடிப்பிடித்து எழுதி இருக்கிறீர்கள். அருமை. மேலும் எதிர்பார்க்கிறேன்.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
கருத்துரையிடுக