இன்றைய சூழ்நிலையில் சாதாரணமாகி விட்ட இன்னொரு நிகழ்வு விவாகரத்து. கடந்த மூன்று மாதங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 667. இது தமிழகத்தின் எண்ணிக்கை மட்டுமே. இது அதற்கு முந்தைய மூன்று மாதங்களை கணக்கில் கொள்ளும்போது 17% அதிகம் என்று புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது ஏன் இன்று தினசரி நிகழ்வாக மாறியது? இது ஒரு மடத்தனம் என்பது ஏன் சிலருக்கு புரியவில்லை என்று இது வரை எனக்கும் புரியவில்லை.
1. தவறாக புரிந்து கொள்ளல்
2. தற்பெருமை
3. தொடர்பு இன்மை
4. விட்டுக்கொடுத்தல் இல்லாமை
இந்த நான்கும் முக்கிய காரணிகளாக நிபுணர்களால் சொல்லப்படுகிறது. ஆனாலும் இவை எல்லாம் தவிர்க்க வேண்டியவை அல்லது எந்த ஒரு பிரச்சனைகள் வரும் போதும் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்காமல் கொஞ்சம் நிதானித்து யாருக்கும் பிரச்சனை இல்லாத ஒரு முடிவை எடுப்பதே சிறந்தது.
இன்று பெண்களும் நிறைய படிக்கிறாங்க, வேலைக்கு போறாங்க. அவங்க முடிவை அவங்க எடுக்கணும்ன்னு நினைக்கிறாங்க. அதுல எந்த தப்பும் இல்லை ஆனா நான் முடிவு எடுத்துட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்னு அடம் பிடிக்கும் போது தான் பிரச்சனைகள் ஆரம்பம் ஆகுது.
இதுக்கு பெண்கள் மட்டும் காரணமா இல்ல, 90% ஆண்கள் தான் எப்பிடின்னா வீட்டு பொம்பளை என்ன முடிவு எடுத்தாலும் முடிவு எடுக்குறது இருக்கட்டும், ஏங்க இப்பிடி பண்ண நல்லா இருக்கும்ன்னு ஆரம்பிக்கும் போதே உனக்கு ஒண்ணும் தெரியாது சும்மா இருன்னு சொல்லுற ஆண்கள் தான் அதிகம். சில வீடுகளில் இது மாத்தியும் நடக்கும், வீட்டம்மா பேச்சுக்கு மறு பேச்சு பேசாத ஆண்களும் உண்டு.
இது கொஞ்சம் கொஞ்சமா பெருசாகி இனி உன் கூட இருந்து அழுதுகிட்டே வாழுறத விட தனியா போயிட்டா நிம்மதியா இருப்பேன்னு நினைக்கிற அளவு ரெண்டு பேரும் முடிவு பண்ணி வர இடம் தான் விவாகரத்து. ஆனா அதோட எல்லாம் முடிஞ்சு போயிடுதா? இல்லை அடுத்து வருகிற பிரச்சனைகள் அதிகம். அதிலும் முக்கியமானது குழந்தைகளின் எதிர்காலம். அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
குழந்தைக்கு தந்தை அல்லது தாயின் மேல் ஒட்டுதல் (பாசம்) அதிகம் இருக்கும் தனியாய் அவர்களை பராமரிப்பது அவ்வளவு எளிது அல்ல, பெண் வேலைக்கு போகிறவர் என்றால் அவருடைய பணத்தேவைகளை அவரால் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதுவே ஒரு வேலைக்கு செல்ல முடியாத பெண் என்றால் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு தந்தைக்கு உரித்தாகிறது.
ஒன்று தந்தை குழந்தையை தான் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் அதாவது குழந்தை தந்தையுடன் இருக்கும் அதை பராமரிக்கும் பொறுப்பு தந்தைக்கு. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் கொஞ்சம் எளிது, பெரியவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் குழந்தையை பராமரிப்பதும், கண்காணிப்பதும் கடினம். குறைந்த பட்ச அன்பாவது கிடைக்குமா என்பது சந்தேகமே
இல்லை குழந்தை தாயுடன் இருக்கும் அது பெரியவர் (18 வயது) ஆகும் வரை அதன் எல்லா தேவைகளுக்கும் தந்தை பணம் வழங்க வேண்டும். தந்தை பணம் வழங்க முடியாத சூழலில் அந்த பெண்ணும் குழந்தையும் எதிர் பார்த்து இருப்பது அவளுடைய பெற்றோரையும், சகோதரர்களையும் ஆரம்பத்தில் அவர்கள் ஆதரவு அளித்தாலும் அதை தொடர்ந்து செய்வார்களா தெரியாது, அவர்கள் சுமை என்று நினைத்து விட்டால், அவர்களின் நிலைமை கவலைக்கிடம் தானே!!??
இது மட்டும் அல்லாமல் சமூக ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியது இருக்கிறது, எந்த ஒரு சுப காரியங்களிலும் முன் நின்று செய்ய முடியாமல் போகிறது. இவ்வளவு பிரச்சனைகளையும் ஆராயாமல் அவசரத்தில் முடிவெடுத்து விட்டு பின் வருந்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இவ்வளவும் தெரிந்து இருந்தும் இன்னும் நீதிமன்றங்களை நோக்கி போவோர் கூட்டம் இன்னும் குறையவில்லை.
இதுக்கு யாராவது புதுசா சட்டம் கொண்டு வந்தா தேவலை, குழந்தை இல்லையா விவாகரத்து கிடையாது அப்புறம் விவாகரத்துக்கு குறைந்த பட்ச வயது 55 அப்பதான் இது எல்லாம் குறையும். இல்லாட்டி ஒரு நாளைக்கு நடக்குற கல்யாணங்களின் எண்ணிக்கையை விட விவாகரத்துக்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும் நிலைமையும் ஒரு நாள் வரும்.
ரொம்ப சீரியசா பேசிட்டேனோ சரி கொஞ்சம் சிரிக்கலாம்
ஒரு நீதிபதி விவாகரத்து தொடர்பாக ஒரு பெண்ணுடன் நேர்காணல் நடத்திக்கொண்டு இருந்தார்
"உங்க வீட்டை பத்தி கொஞ்சம் சொல்றீங்களா?"
அவள் பதிலளித்தாள் "நான்கு ஏக்கர் நிலத்தில நடுவுல எங்க வீடு இருக்கு அப்புறம் வீட்டை சுத்தி நிறைய தோப்பு இருக்கு"
"இல்லை, நான் உங்க குடும்பத்தை பத்தி கேட்டேன்"
"எனக்கு ஒரு மாமியார் மாமனார் இருக்காங்க, அப்புறம் 2 நாத்தனார் ஒரு கொளுந்தனார் எல்லோரும் ஊருல இருக்காங்க.. "
"இல்லைம்மா உங்க குடும்ப வாழ்க்கையில ஏதாவது பிரச்சனை இருந்துச்சா?"
"ஆமாம், என் மகன் மற்றும் மகள் எப்ப பார்த்தாலும் ஒரு வாக்மேன்-ஐ காதுல வச்சுக்கிட்டு நான் சொல்ற எதையும் கேட்கிறது இல்லை"
"தயவு செய்து..." அவர், மீண்டும் முயற்சித்தார்
"மேடம், உங்கள் கணவர் எப்போதாவது உங்களை அடிச்சு இருக்காரா?"
"ஆமாம்," அவர், பதிலளித்தாள்
"எப்ப"
"ஒரு வாரத்துக்கு இரண்டு முறை பற்றி அவர் எனக்கு முன்னாடி எழுந்தா அடிச்சு எழுப்புவாரு."
இறுதியாக, வெறுப்பில், நீதிபதி, கேட்டது
"அம்மா, ஏன் நீங்கள் ஒரு விவாகரத்து விரும்புகிறீர்கள்?"
"ஓ, எனக்கு விவாகரத்து வேண்டாம்," அவள் பதிலளித்தாள்.
"நான் எப்பயும் விவாகரத்து பண்ணனும் ஆசைபட்டது கிடையாது. என் கணவர் இல்லை, அவருக்கு தான் விவாகரத்து வேணும்னு கூட்டிக்கிட்டு வந்தாரு ஏன்னா அவரால என் கிட்ட பேச முடியல்லைங்க்கிறார்! "
டிஸ்கி : இது சும்மா ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது, என்னடா இவன் எப்பயும் பொம்பளைகளை தப்பா பேசுறான்னு நெனைச்சுடாதீங்க.. உங்க கருதுக்களையும் கொஞ்சம் பதிங்க படிக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் உங்க கிட்ட இருந்தும் தெரிஞ்சுகிடட்டும்.
எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை!
வெள்ளி, ஜூலை 08, 2011
வியாழன், ஜூலை 07, 2011
ஆண்மை தவறேல்
கல்யாணி தன் கணவருடன் அவசரமாக அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டு இருந்தாள். அது ஒரு சிறிய மருத்துவமனை, ஆனால் எப்போதும் பரப்பாக இருக்கும். டாக்டர். சுப்பு IN என்று இருந்ததை பார்த்து கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. தன் பெயரை வரவேற்பறையில் இருந்த நர்சிடம் பதிந்து விட்டு டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் அமர்ந்தாள்.
கல்யாணி 26 வயது, கையில் ஒண்ணரை வயது மகள். வீட்டில் வேறு யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து இருக்கிறார்கள். யாரும் வீட்டிற்கு திரும்பி வருவதற்குள் வீட்டிற்கு போக வேண்டும் என்ற பதற்றம் வேறு எல்லாமும் சேர்ந்து முகம் வேர்த்து கிடத்தது.
அவர்கள் முறை வந்ததும் உள்ளே சென்றாள்.
"சொல்லும்மா என்ன பிரச்சனை"
"நீங்க எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணனும் டாக்டர்"
"சொல்லும்மா நிச்சயமா என்னால முடிஞ்சதை பண்றேன்"
"எனக்கு ரெண்டாவதா குழந்தை உண்டாயிருக்கு டாக்டர், அபார்ஷன் பண்ணனும்"
"ஏம்மா வீட்டில ஏதாவது பிரச்சனையா?"
"அது வந்து டாக்டர் ஏற்கனவே ஒரு பொண்ணு அதுவும் ஒண்ணரை வயசு தான் ஆகுது, இதை பார்த்துக்கவே கொஞ்சம் கஷ்டமா இருக்கு, அதுவும் இல்லாம ரெண்டாவதும் பொண்ணா பொறந்துட்டா இன்னும் பிரச்சனை ஆயிடும் ஸார், எங்க மாமியாரை கன்வின்ஷ் பண்றது கஷ்டம் டாக்டர். உங்களை தான் மலை போல நம்பி இருக்கோம்"
கொஞ்ச நேரம் அமைதி
"சரிம்மா உனக்கு இன்னொரு வழி சொல்றேன் கேப்பியா? "
இருவருக்கும் உள்ளூர சந்தோஷம், டாக்டர் அபார்ஷன் பண்ண ஒத்துகிட்டார்ன்னு.
"ரெண்டு கொழந்தயையும் பார்த்துக்க முடியாதுன்னு நீ சொன்னதால, உன் கையில இருக்க கொழந்தையை கொன்னுடு. அப்புறம் உன் பிரச்சனை தீர்ந்துடும் அதுவும் இல்லாம அடுத்து பொறக்கபோறது பையனா இருந்துட்டா உங்க மாமியார் சந்தோஷப்படுவாங்களே?"
கொஞ்சம் அதிர்ச்சியான கல்யாணி
"அது எப்பிடி டாக்டர் பெத்த புள்ளைய என் கையால கொல்றது, என் மனசு என்ன கல்லுன்னு நெனைச்சுட்டீங்களா?"
"எப்பிடியும் நீ ஒரு பிள்ளயை கொல்லனும்ன்னு தான் இங்க வந்து இருக்க, அது எந்த பிள்ளையாய் இருந்தா என்ன?"
"இல்ல டாக்டர் அது மட்டும் என்னால முடியாது",
"கையில இருந்தா மட்டும் இல்ல வயித்தில இருந்தாலும் அதுவும் குழந்தைன்னு புரிஞ்சுக்கிட்டேன் டாக்டர். இனி இப்பிடி ஒரு முடிவு எப்பவும் எடுக்க மாட்டேன். ரொம்ப நன்றி டாக்டர்" சந்தோசமாய் சொன்னார் கல்யாணியின் கணவர்.
மனதில் இருந்த பாரம் இறங்கியது போல இருந்தது கல்யாணிக்கு, சந்தோசத்துடன் வேகநடை போட்டாள் வீடு நோக்கி.

புதன், ஜூலை 06, 2011
அச்சம் தவிர்
ஒரு நாளு சாத்தானுக்கு பணக்கஷ்டம் அங்கயும் விலைவாசி எல்லாம் எறிப்போச்சு, சாத்தானுக்கு அதுக்கு கீழே வேலை பாக்குறவங்களுக்கு சம்பளம் குடுக்க காசு பத்தலை. அதனால வாழ்க்கையே வெறுத்துப்போய் இனி இந்த வேலையை செய்யுறது இல்லைன்னு முடிவு பண்ணிச்சு. அதனால தான் கிட்ட இருக்க பொருளையெல்லாம் விக்கலாம்ன்னு சந்தைக்கு போச்சு.
சந்தையில எல்லா பொருளுக்கும் ஒரு விலை போட்டு பரப்பி வச்சுச்சி
விலைபட்டியல் கீழே இருக்குற மாதிரி
வன்மம் ரூ. 500.00
பகைமை ரூ. 520.00
பொறாமை ரூ. 530.00
காழ்ப்புணர்ச்சி ரூ. 575.00
வஞ்சம் ரூ. 700.00
******** ரூ.100000.00
நெறைய பேரு பார்த்துக்கிட்டே போனாங்க, ஒருத்தரும் வாங்குரா மாதிரி தெரியல
கீழே 50% தள்ளுபடி (selected items) ன்னு வேற எழுதி வச்சுச்சு, அதை பார்த்த ஒருத்தரு கிட்ட வந்து சாத்தான் கிட்ட எல்லா பொருளும் சீப்பா தான் இருக்கு, ஆனா கடைசியா ஒரு ஒண்ணு பேரு இல்லாம இருக்கே அதுவும் இல்லாம விலையும் ஜாஸ்தியா இருக்கே அப்பிடி என்ன அது
அதுவா, அதுக்கு பேரு அதைரியம், இது தான் நான் பயன்படுத்துறதுல ரொம்ப வலிமையான ஆயுதம். மத்த எதுவும் சிலர் கிட்ட எடு படாம போயிடும் ஆனா எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவங்க தைரியத்தை கெடுத்து விட்டுட்டா அந்த ஆளு அவ்வளவு தான், அப்பறம் என் விருப்பப்படி அவங்கள என்னால ஆட்டி வைக்க முடியும்.
எல்லோருடைய பக்கத்துலையும் இதை நான் வச்சு இருப்பேன், ஆனா ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும் இது என்னோட வேலைன்னு..

செவ்வாய், ஜூலை 05, 2011
விவேகம் பழகு..
அது ஒரு வெயில் கால பகல் பொழுது, சுப்பு பாதையோர மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டு இருந்தார். வயதும், தொடர்ந்து நடந்து வந்த களைப்பும், அவர் கையில் இருந்த மூட்டையும் அவரை அயர வைத்தது. இன்னும் 5 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் அவர் வீட்டுக்கு, அடுத்த பஸ் வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்
யாராவது அந்த வழியாக வரமாட்டார்களா என ரோட்டை பார்த்த படி இருந்தார். சிறிது நேரத்தில் ஒரு மோட்டோர் பைக்கில் ஒரு இளைஞர் வருவதை பார்த்தார். அந்த வண்டியை நிறுத்தி
"தம்பி நீங்க வல்லக்கோட்டை பக்கமா போறீங்களா?" சுப்பு கேட்டார்
"ஆமா" அந்த இளைஞன் கூறினான்
"நீங்க தப்பா நினைக்கலைனா இந்த மூட்டையை உங்க வண்டியில வச்சு வல்லக்கோட்டை வரை எடுத்துக்கிட்டு போகமுடியுமா?"
"நான் எடுத்துட்டு போயிடுவேன் ஆனா..." இழுத்தான் அந்த இளைஞன்
"என்ன ஆனா?" சுப்பு கேட்டார்
"இல்லை நான் வல்லக்கோட்டை தாண்டி போகணும். வண்டியில நான் 10 நிமிசத்துல போயிடுவேன், நீங்க நடந்து வரணும்ன்னா இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். நான் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கணும். அது முடியாதே?" அந்த இளைஞன் சொல்ல,
"சரி தம்பி நீங்க வேணா போங்க, நானே எடுத்துக்கிட்டு வர்றேன். ஒண்ணும் பிரச்சனை இல்லை. " சுப்பு சொன்னார்
அந்த இளைஞனும் புறப்பட்டான்
கொஞ்ச தூரம் போனதும், அவன் உள்ளுணர்வு சொன்னது "என்ன ஒரு முட்டாள் நீயி? அந்த மூட்டையில ஏதாவது விலை மதிப்பிலாத பொருள் இருந்தா அப்பிடியே அமுக்கியிருக்கலாமே?"
அவனும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு வண்டிய திருப்பி எடுத்துக்கிட்டு வந்தான்
"ஐயா பெரியவரே உங்கள பாக்க பாவமா இருக்கு உங்க மூட்டையை குடுங்க, நான் எடுத்துட்டு போறேன் நீங்க வந்து வாங்கிக்குங்க"
கொஞ்ச நேரம் யோசித்த சுப்பு
"இல்ல தம்பி, இந்த மூட்டையை நானே தூக்கிக்கிட்டு வர்றேன் ஒண்ணும் பிரச்சனை இல்லை"
"ஏன் என்னாச்சு?" இளைஞன் கேட்க
"இல்லை உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை" சுப்பு சொன்னார்.
"ஏன் ஏன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லாம போச்சுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" - இளைஞன் கேட்க
"எந்த உள்ளுணர்வு உங்களுக்கு இந்த மூட்டையில ஏதாவது இருக்குமோன்னு நினைக்க வைச்சதோ, அதே உள்ளுணர்வு தான் உங்க மேல சந்தேகபடவும் சொலுச்சு" சுப்பு நிதானமாக சொன்னார்.
நீதி
அந்நியரை நம்பும் முன் நிதானமாக யோசியுங்கள்

திங்கள், ஜூலை 04, 2011
பேராசை குருடாக்கும்
ஒரு ஊர்ல ஒரு திருடன் இருந்தான் பேரு ஆறுமுகம், ஒரு நாள் அந்த ஊர்ல சந்தை கூடுச்சு. வித விதமான பாத்திரங்கள், பண்டங்கள், வித்தியாசமான உணவு பொருட்கள். எல்லாம் ரொம்ப பிசியா வியாபாரம் பண்ணிகிட்டு இருந்தாங்க.
ஆறுமுகம் அந்த சந்தையை சுத்தி வந்தான் எந்த பொருளும் அவனுக்கு சந்தோஷம் தரலை ஏன்னா எல்லாம் சின்ன சின்னதா இருந்துச்சு. எதையாவது பெருசா அடிக்கணும்ன்னு யோசிச்சுகிட்டே வந்தான். சந்தைக்கு நடுவில ஒரு ஆளு தங்கம் வெள்ளி நகை எல்லாம் வச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. தங்கநகை எல்லாம் மேஜை மேல பரப்பி இருந்தது
தங்கத்தை பார்த்த உடனே ஆறுமுகத்துக்கு எதுவும் ஓடலை, அவன் மனசு பூரம் அந்த தங்கநகை வந்துட்டு போச்சு,
"இங்க இருக்க நகையை கொள்ளை அடிச்சா" அப்பிடின்னு நினைச்சான்.
"நான் கூட இந்த ஊர்ல ஒரு பெரிய பணக்காரன் ஆய்டுவேன், அப்புறம் பெருசா வீடு கட்டீரலாம். வேலைக்கு நெறைய பேரு வச்சுக்கிடலாம். நல்ல உடை, நல்ல சாப்பாடு சாப்பிடலாம்" இப்பிடி எல்லாம் அவன் மனசுல பேராசை உண்டாச்சு. உடனே அந்த கடையில இருந்த நகையை எடுத்துக்கிட்டு எடுத்தான் ஒரு ஓட்டம்.
"திருடன் திருடன் பிடிங்க, என் கடையில இருந்து நகையை திருடிக்கிட்டு போறான்" கடைக்காரர் கத்த ஆரம்பிச்சாரு.
கொஞ்ச நேரத்தில ஆறுமுகம் அங்கிருந்த மக்கள் கிட்ட மாட்டிக்கிட்டான். அவனை அந்த ஊரில் இருந்த பஞ்சாயத்தார் முன்னாடி கொண்டு போயி நிறுத்துனாங்க.
பஞ்சாயத்து தலைவர் கேட்டாரு
"ஏன்யா இவ்வளவு கூட்டதில எப்பிடிய திருடனும்ன்னு தோணுச்சு, எல்லோரும் பாக்குறாங்கன்னு உனக்கு தெரியலையா"?
தலையை தொங்கப் போட்டுக்கொண்ட ஆறுமுகம்,
"ஐயா என்னை மன்னிச்சுடுங்க, என்னோட ஆசை என் கண்ணை மறைச்சுடுச்சு, நகையை பாத்ததுக்கு அப்பறம் அங்க இருந்த யாரும் என் கண்ணுக்கு தெரியலை நகை மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது"

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)